Jump to ratings and reviews
Rate this book

அப்பாஸ்பாய் தோப்பு [Appasbai Thoppu]

Rate this book
இடத்தையும் இருப்பினையும் பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் எல்லோருக்கும் நினைவுகளின் வழியே சொல்வதற்கு நிரம்பக் கதைகள் உள்ளன.

இயல்பிலேயே கதை சொல்லியான "அர்ஷியா"அவர்களின் கூர்மையான அவதானிப்பு தனித்துவம் மிக்கது.'அப்பாஸ்பாய் தோப்பு' என்று சொன்னால் ஒரு குட்டி தமிழ்நாட்டைப் பார்க்கலாம் அல்லது தேசிய ஒருமைப்பாட்டின் இதயத்தைக் காணலாம்.அப்படி மக்களால் பார்க்கப்படும் 'தோப்பு' பிற்காலத்தில் என்னவானது என்பது தான் கதையின் உச்சம்.

- ந . முருகேசபாண்டியன்

292 pages, Paperback

Published January 1, 2011

Loading...
Loading...

About the author

எஸ். அர்ஷியா (பிறப்பு: ஏப்ரல் 14, 1959 இறப்பு: ஏப்ரல் 7,2018) ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை இசுமாயில்புரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சையத் உசேன் பாஷா. பொருளியல் முதுகலைப் பட்டதாரியான இவர் தராசு வார இதழில் செய்தியாளராகப் பணியாற்றினார். பின்னர் புதிய காற்று எனும் இலக்கிய இதழுக்குப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். கணையாழி, செம்மலர், தாமரை போன்ற இதழ்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர் ஆனந்த விகடன், குமுதம் கல்கி, அமுதசுரபி ஆகிய இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "ஏழரைப்பங்காளி வகையறா" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2010ஆம் ஆண்டுக்கான அழகிய நாயகி அம்மாள் விருதும் இந்தப்புதினத்துக்கு வழங்கப்பட்டது. இவரது இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி மதுரையின் சமகால அரசியலும் பெருவணிகமான ரியல் எஸ்டேட் தொழிலும் கைகோர்க்கும்புள்ளிப்பற்றிப் பேசும் முக்கிய நாவலாகும். அப்பாஸ்பாய்தோப்பு மதுரை வைகைதென்கரையில் உள்ள மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நாவல். கரும்பலகை நாவல் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சனைகளை பேசும் நல்லதொரு நாவலாகும்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
1 (33%)
3 stars
1 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.