Jump to ratings and reviews
Rate this book
Rate this book
ஆன்மிக ஞானத்தைப் பெற இமயமலைச் சராலுக்குத்தான் செல்ல வேண்டுமா? துறவறம் ஏற்பதற்குத் தவசியாகத் தனிமையைத்தான் நாட வேண்டுமா? மனநிம்மதியைப் பெறுவதற்கு புனிதப் பயணங்களைத்தான் மேற்கொள்ள வேண்டுமா? இவை ஒன்றையும் செய்யாமல், கடந்த ஆறு மாத காலமாக ஒரு துறவியாக மனநிறைவையும், மனநிம்மதியையும் நான் பெற்றுள்ளேன். ஒரு சரித்திரப் புதினம் குறிப்பாகப் பல்லவர்களைப் பற்றி ஒரு வரலாற்றுப் புதினத்தை எழுதினால் போதும். ஒரு மனிதன் பண்பட்டுவிடுவான். வாழ்க்கையில் உள்ள நெளிவு சுளிவுகளை அறிந்து, நமது வாழ்க்கை எவ்வளவு அநித்யமானது என்பதைப் புரிந்து கொண்டு, தனது ஓட்டினுள் ஒடுங்கும் ஆமையைப் போன்று தனது இந்திரியங்களைச் சுருக்கிக் கொண்டு, பற்றற்ற வாழ்க்கையில் நிலைத்திருபĮ

832 pages, Kindle Edition

First published July 1, 2019

10 people are currently reading
27 people want to read

About the author

டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.

குமுதத்தில் மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதியிருக்கிறார்.

தற்போது கல்கியில் கூடலழகி என்கிற சரிந்திர தொடரை எழுதிவருகிறார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
38 (73%)
4 stars
10 (19%)
3 stars
3 (5%)
2 stars
0 (0%)
1 star
1 (1%)
Displaying 1 of 1 review
1 review
October 19, 2024
அத்தி வரதரை வேண்டுகிறேன்

என் வயது 58 என் பெயர் சிவக்குமார் என் வாழ்நாளில் நிறைய புத்தகங்களை படித்து இருக்கிறேன் ஆனால் என்னை இந்த தொகுப்பு நேரடியாக என்னை உணர செய்தது எனது வாழ்நாளில் அத்தி வரதரை வருகிறேன் தரிசிக்க முடியாமல் போனதற்காக உளமாற வருந்துகிறேன் அடுத்த ஜென்மத்தில் அந்த பாக்கியத்தை பெற அவரை வேண்டுகிறேன்
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.