Jump to ratings and reviews
Rate this book
Rate this book
இதோ... அத்திமலைத்தேவனின் இறுதி பாகத்திற்கு வந்துவிட்டோம். கடந்த 2018 ஜூன் மாதம், அத்திமலைத்தேவன் என்கிற சரித்திரப் புதினத்தைத் துவங்கினேன். முதல் பாகம் அக்டோபர் 2018 மத்தியில் வெளிவந்தது. சரியாக 2019 இறுதியில் ஐந்தாம் பாகத்துடன் புதினத்தை நிறைவு செய்கிறேன். இன்னமும் எழுதிக்கொண்டே போகலாம்... நான் சேகரித்துள்ள தகவல்களைக் கொண்டு பன்னிரண்டு பாகங்கள் வரை எழுதலாம். ஆனால், ‘ஐந்தோடு நிறுத்திக்கொள்' என்று அத்திமலைத்தேவனே உத்தரவு போட்டுவிட்டதால், இதையே இறுதி பாகமாகக் கொள்ளுகிறேன்.

கடந்த ஒரு வருடத்தில் நான் எங்கு சென்றாலும் அத்திமலைத்தேவனைப் பற்றி மட்டுமேதான் பேச்சு! பத்திரிகை விமர்சனங்கள், கலந்தாய்வுகள், twitter, முகநூல் கருத்துகள் என்று அத்திமலைத்தேவனைப் பா&

775 pages, Kindle Edition

First published December 1, 2019

4 people are currently reading
25 people want to read

About the author

டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.

குமுதத்தில் மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதியிருக்கிறார்.

தற்போது கல்கியில் கூடலழகி என்கிற சரிந்திர தொடரை எழுதிவருகிறார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
49 (85%)
4 stars
5 (8%)
3 stars
0 (0%)
2 stars
2 (3%)
1 star
1 (1%)
Displaying 1 - 3 of 3 reviews
69 reviews1 follower
August 26, 2021
A very Wonderful South Indian History.

The Author has taken very painful efforts to search the History of South India, and showed a note on The Whole Indian History by The Athimalai Thevan.

This is a Treasure for all the Generations to understand the History of Hinduism and The History of India.

Thank you so much Mr Kalachakkaram Narasimah and the publisher Vanathi Publishers

Hearty Congratulations both of you.

1 review
January 22, 2023
Excellent

The narration of the story is beautiful and I am proud that when atimalai devan came out of the water body i was able to see him.
A way of thinking of making the lord as a hero and one thousand five hundred years revolving around him with so many kings to very ordinary people.
Excellent way of presentation.
Thanks a lot
Profile Image for Pawankumar.
28 reviews
February 11, 2022
நான்காம் பாகத்தில் ஆதித்திய கரிகாலன் பதுக்கி வைக்கும் அத்திமலையானின் தேவ உடும்பர மூர்த்தம் இந்த பாகத்தின் இறுதியில் கிடைத்துவிடுகிறது.
அத்திமலையானின் சிலையை மறைத்து வைத்த ஆதித்திய கரிகாலன் அஸ்வமேத யாகம் செய்து சோழ மன்னனாகும் முன்பாகவே கொல்லப்படுகிறான். அதன் பிறகு அவன் ரகசியமாக கொடுத்த உத்ரோதயம் அத்திமலை பெருந்தேவிக்கு பார்த்திப பல்லவன் கல்பலதாவால் கொடுக்கப்படுகிறது. அதை கொடுத்து பின்பு பல்லவதை விட்டு போகும் பொழுது இருவரும் கொல்லப்படுகின்றனர். அதன் பின் பதவிக்கும் வரும் உத்தமச்சோழர் 15 ஆண்டு ஆட்சி செய்துவிட்டு இருக்கிறார். அதன் பிறகு அருண்மொழி என்னும் ராஜராஜ சோழன் அரசனாகிறான். அரசன் ஆனாலும் அக்கா குந்தவையின் வழிகாட்டலால் காஞ்சிக்கு சோழபுரம் என்று பெயர் மாற்றுகிறான். தளிக்குளத்தார் ஆலயத்தை அகற்றி பிரதீஸ்வரம் ஆலயம் எழுப்புகிறான். ஆலயத்தில் கருவூர் தேவர் சோழ கிருமி என்னும் அந்த கரிய உருவத்தை காண்கிறார். அதை பற்றி அருண்மொழியிடம் எச்சரிக்கிறார். ஆனால் அருண்மொழியும் குந்தவையும் அதை அலட்சியம் செய்கின்றனர். அதன் பின்பு ராஜராஜ சோழன் மரணப்படுக்கையில் ராஜேந்திர சோழனிடன் சோழ கிருமி பற்றி கூறி தளிக்குளத்தார் ஆலயத்தை மீண்டும் எழுப்பவும் அத்திமலையனை கண்டுபிடிக்கவும் கேட்கிறார்.

ஆனால் ராஜேந்திர சோழன் காலத்திலும் அத்திமலையன் சிலை கிடைக்கவில்லை. அதன் பின்பு ராமானுஜருக்கு பானை மலையில் காட்சி தரும் அத்திவரதர் அப்போதும் தன்னை வெளிப்படுத்தவில்லை. பிறகு நிறைய கால மாற்றமும் ஆட்சி மாற்றமும் அடைந்து கிபி 1710 யில் அத்திமலைத் தேவன் அத்திமலையை அடைகிறான். பாதுகாப்பு நடவடிக்கையாக தேவ உடும்பர மூர்த்தம் காஞ்சிபுர ஆலயத்தில் குளத்தில் பத்திரப்படுத்த படுகிறது.

கிபி 550ல் சிம்மவர்மனின் காலத்தில் அத்திமலையை விட்டு வெளியேறிய அத்திவரதர் கிபி 1710ல் மீண்டும் தன் இருப்பிடத்தை அடைகிறார். அன்றிலிருந்து 40 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தேவ உடும்பர அத்திமலையான் மூர்த்தம் எடுக்கப்பட்டு ஆராதிக்கப்பட்டு மீண்டும் வைக்கப்படுகிறது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு அத்திவரதர் வெளிப்பட்டார். அடுத்து 2059யில் வெளிப்படுவார்.

சாணக்கியன் தொடங்கி, சந்திரகுப்தன், அசோகன், சமுத்திர குப்தன், புலிவேமு, திரிலோச்சனா பல்லவன், இளந்தரையன், கரிகாலன், சிம்மவர்மன், சிம்மவிஷ்ணு, நந்திவர்மன், அபராஜிதயன், உதயசந்திரன், ஆதித்தய சோழன், பரந்தகன், சுந்தரன், ஆதித்ய கரிகாலன், ராஜராஜ சோழன், ராஜேந்திரன், அநபாயன் என்று பல மன்னர்கள் அத்திமலை தேவ உடும்பரத்தை காக்கவும் கைப்பற்றவும் முயன்ற ஒரு நல்ல வரலாற்று புதினத்தை வாசித்த நிறைவு கிடைக்கிறது.
இதுவரை இல்லாத அளவு பல்லவர்களின் வரலாற்றை மிகவும் ஆழமாக எழுதியுள்ளார் ஆசிரியர். சோழமும் பாண்டியமும் தான் தமிழர் சரித்திரம் என்பதை தாண்டி மிக தொண்மையான பல்லவர் சரித்திரத்தை வாசித்தது ஒரு நல்ல அனுபவமாக உள்ளது.
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.