சமகால அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை சிறார்களுக்குப் புரியும் வகையில் எளிய முறையில் கதைகளின் வாயிலாக அவர்களின் மனத்தில் விதைப்பது, எதிர்காலத்தில் அவர்களுடைய தெளிவான அரசியல் பார்வைக்கு வழிகோலும் என்கிற என்னுடைய எண்ணத்தில் வெளிப்பாடே என்னுடைய இச்சிறு முயற்சி. அனைவரின் அன்புக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! அன்புடன் ஹமீதா ஹாய் சுட்டீஸ், எல்லோரும் ஸ்கூலுக்கு போகாம லாக்டவுனை நல்லா என்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்க. என்னுடைய லாக்டவுன் அனுபவங்களை பூனைப் பார்வையில் பகிர்ந்துக்க வந்திருக்கேன். படிச்சிட்டு உங்களோட கருத்துகளை சொன்னா, நாம அப்பப்போ தொடர்ந்து சந்திக்கலாம்! - இப்படிக்கு உங்கள் அன்பு ப்ரௌனி