ஐம்பெரும் காப்பியங்கள் தமிழர்களாகிய நமக்கு நன்கு பரிட்சயம் ஆனது தான். காரணம், பள்ளிக்காலம் தொட்டே அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்தே வந்திருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சம் இதன் கதைகள் தெரிந்திருந்த போதிலும் நம்மில் எத்தனைப் பேருக்கு இதன் முழுக்கதையும் தெரியும் என்றால் வெகுசிலரே ஆம் என்று சொல்ல முடியும். ஆனால் வாய்ப்பும் நேரமும் கிடைத்தால் ஒருமுறை அத்தனை பேருக்கும் தமிழின் தனிசிறப்பு மிக்க இக்காப்பியங்களைப் படித்துவிடும் ஆசை உள்ளத்தே ஊடோடிக்கொண்டிருக்கும். இதில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் இயற்கையாகவே மனதில் மலர்ந்திருக்கும். அப்படி எனக்கும் இருந்தது. அந்த ஆர்வமே என்னைக் காப்பியங்களைப் படிக்கத்தூண்டியது.