இந்தப் புதினம் ஒரு காதல் கதை, குடும்பக் கதை என்பதைத் தவிர ஒரு குற்றக் கதையும் கூட. இதில் கொலை, கொள்ளை,வழிப்பறி எதுவும் கிடையாது.ஆனாலும் இது குற்றக் கதை. சந்துரு ஒரு பி ஆர் ஓ. அவனுக்கு முன்னால் மூன்று சவால்கள்.சரிந்து கொண்டிருக்கும் நடிகை அமிர்தாவின் மார்க்கெட்டை சரி செய்ய வேண்டும்.ஒரு பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆபாசப் புகைப்படங்கள் அவளுடையவை அல்ல என்று நிரூபித்தாக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மூன்றே மாதங்களில் ஒரு லட்சம் ரூபாயைச் சம்பாதித்து சத்யாவைக் கைப்பிடித்தாக வேண்டும். ஒற்றைப் புள்ளியில் அவன் சவால்களைச் சந்திக்கும் சாகசம், இந்தக் கதை. -எஸ் குமார் writetokumar2012@gmail.com