“தமிழக வரலாற்றில் அறுந்து கிடக்கும் சங்கிலிகள் ” என்ற தலைப்பில் இப்போது வெளிவந்துள்ள இந்த நூல் 21-1-1998 புதுவையில் பாண்டிச்சேரி மொழியியல் பண்டாட்டு நிறுவனத்தில் நிகழ்த்தப்பெற்ற ஒரு சிறப்புரையின் மறுவடிவம் . உலக வரலாற்றுடனும் , உலக நாடுகளுடனும் , தமிழக வரலாறும் , இந்திய வரலாறும் பின்னிப் பிணைந்து நிற்கின்றன. உலக மொழிகள் பலவற்றோடு ஏதாவது ஒரு வகையில் தமிழ் தொடர்பு கொண்டிருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றுக்கு உரிய ஆவணங்கள் உலகமெங்கும் பரந்து கிடக்கின்றன. தொல்லியல் துறையின் துணை இந்த ஆய்வுகளுக்கு மிக இன்றியமையாதது. உலக நாடுகள் இத்தகைய பண்டாட்டு வரலாற்றாய்வின் இன்றியமையாமையை உணர்ந்து பரந்த நோக்கோடு ஒருங்கிணைந்து திட்டமிட்டுப் பணிசெ