உலகமே கைக்குள் ஒரு செல்போனாக சுருங்கிவிட்ட, எல்லாவற்றையும் ஒரு “ட்வீட்”ஆக கடந்து செல்லும் இயந்திரமயமாகிவிட்ட, இந்த காலகட்டத்தில் சிறுகதைகளைப் படிக்கக்கூட இப்போதெல்லாம் நேரமின்றிப் போய்விட்டது.
சிறுகதைகள் குறுங்கதைகளாக மாறி இப்போது ஓரிரு நிமிடங்களில் படிக்கக்கூடிய 100 வார்த்தை கதைகளாக சுருங்கி வலம் வரத் தொடங்கிவிட்டன. இதுவும் இலக்கியத்தின் ஒரு பரிணாம வளர்ச்சியே. இதைப்போன்ற Ficlet, Drabbles ஆகிய எழுத்திலக்கிய வகைகள் ஆங்கிலத்தில் பிரபலம்.
தமிழில், முதல் முறையாக 100 வார்த்தை கதைகளை அச்சு வடிவில் பிரபலப்படுத்தும் முயற்சியே இந்நூல். சரியாக 100 வார்த்தைகளில் கதை சொல்ல முயல்வதால், வர்ணனைகள், விளக்கங்கள் இல்லாமலும், பாத்திரங்களின் குணாதிசயங்களும், சில கதைகளின் பின்னணியும், சில கதைகளின் முடிவும் படிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடும் விதமாகவும் அமைந்திருக்கும்.
முதல்முதலாக மாம்ஸ்ப்ரெஸ்ஸோ தளத்தில் வாரப்போட்டிகளுக்காக எழுத ஆரம்பித்த 100 வார்த்தை கதைகள், சிறுதுளி பெருவெள்ளமாகி நூறைத் தொட்டு, ஒரு தொகுப்பாக இன்று உங்கள் கைகளில், ஆதரவை எதிர்நோக்கி.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி படிக்கும் வகையில் அமைந்துள்ளன இப்புத்தகத்தில் உள்ள கதைகள். சமூக கருத்துக்கள் வெளிப்படும் வகையில் கதைகளின் கருவை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
An excellent and quick read. 100 100 worded stories. The book is well suited for all readers. It is hard not to be reminded of our younger days - when our grandmothers share a story of their own. The stories used to have a varied theme much like how it is in this book. Sivaguru has shown his versatility in choosing different genres. The stories are wonderfully crafted and thought-provoking. How apt the book cover is!
Appreciate the author's courage to explore an unknown territory for his first book— hopefully, many more to come.
குட்டி கதைகள் மிகவும் நன்றாக உள்ளது. உங்களின் அறிமுகமும் 100 வார்த்தைகளில் இருந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டேன். சூழல், கைபேசியும் அம்மாவும், மதிப்பு, ஓர் இரவு, தாய்மொழி மற்றும் காத்திருபின் முடிவு கதைகள் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. 100 வார்த்தைகளில் சரியாக கதை எழுதுவது சவாலான விஷயம். வாழ்த்துகள்.