இந்நூல் இரசாயன மருந்துகளில் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கும் விதமாக, நோய்களிருந்து விடுபடுவது, பாமர மக்களுக்கும் பயன்படும் விதமாக கடைகளிலும், மருந்து கடைகளிலும் கிடைக்கும் மருந்தைக் கொண்டு நோயைக் குணமாக்கும் முறையை இந்நூல் ஆசிரியர் விளக்கியுள்ளார். நவீன ஆங்கில மருந்துகள் பயன்படுத்தும்போது மூலிகை மருந்துகள் எடுக்கக்கூடாது என்ற தவறான கருத்து நம்மிடையே நிலவி வருகிறது. பிற நோய்களுக்கான ஆங்கில மருந்துகள் உட்கொள்பவரும் இந்த மருந்துகளை அதனுடன் உட்கொள்ளலாம். இதனால் எந்தவிதமான எதிர்மறை விளைவுகளும் ஏற்படாது. மூலிகை மருந்துகள் ஒரு நோய்க்காக உண்ணும்போது நமக்கே தெரியாமல் இன்னொரு நோயைக் குணமாக்கும்.