மஹாபாரதம் நாம எல்லாருமே மறக்க முடியாத, மறுக்க முடியாத காவியம். Family sentiment, காதல், சண்டை, சூழ்ச்சி, திரில்லர், போர், ஹீரோயிசம்னு எல்லா விஷயங்களும் அடங்கின அந்த காவியத்த, 1980-கள்ல மெட்ராஸ் (குறிப்பா வடசென்னை) குப்பத்துல நடக்குற மாதிரியான ஒரு Spoof முயற்சிதான் இந்த "பாரத் சைக்கிள் கடை". திருதிருராஷ்டிரன் தொடங்கி சகுனி வரைக்கும் எல்லா கேரக்டர்ஸும் இதுல குப்பத்து வாசிகளா, "தாதா"க்களா, அடியாட்களா, மெட்றாஸ் பாஷை பேசிட்டு உலவுற கதைக்களம் தான் இது. கிட்டத்தட்ட மெட்றாஸ் பாஷை, அதனோட கலாச்சாரம் பத்தின research, மஹாபாரதம் பத்தின ஆய்வுனு ரெண்டையும் கலந்து காமிக்கற ஒரு சிறிய முயற்சி..!!