சுகமான வாழ்வுக்கான பொருள் தேடலில் ஓடி, எல்லாம் முடிந்து நிமிர்ந்து பார்க்கும் போது, வாழ நம்மிடம் வாழ்க்கை இருப்பதில்லை
வீணை மீட்ட நேரம் கிடைக்கும் போது, தந்தி அறுந்த வீணையுடன் நிற்கும் நிலை தான் இது
அப்படிப்பட்டவர்களின் வாழ்வு, என்றும் “மீட்டாத வீணை"யாகவே முடிந்து விடுகிறது
அப்படி ஒரு படிப்பினையை, அழகான ஒரு தம்பதியின் வாழ்வில் இழையோடும், இயல்பான காதலைச் சொல்லும் இந்த கதை மூலம் பதிவு செய்திருக்கிறேன்
வாசித்து உங்கள் கருத்தை பகிருங்கள். நன்றி வெறும் 35 பக்கங்கள் மட்டுமே கொண்ட, 20 நிமிடத்திற்குள் வாசிக்க கூடிய கதை இது
இந்த குறுநாவலை, 2020ம் வருடத்தின் Amazon "Pen To Publish" போட்டிக்கு சமர்ப்பித்து இருக்கிறேன்
கதையை வாசித்து முடித்ததும், கடைசி பக்கத்தை நகர்த்தினால், அங்கு Star Rating Options கொடுக்கப்பட்டிருக்கும், Rating கொடுத்ததும், Review Option Open ஆகும்.
அங்கு நீங்கள் "மீட்டாத வீணை" குறுநாவலை பற்றிய உங்கள் விமர்சனத்தை Englishல் கொடுக்கலாம், தமிழ் Reviews சிஸ்டம் ஏற்பதில்லை. மிக்க நன்றி
என்றும் நட்புடன், சஹானா கோவிந்த் editor@sahanamag.com
- “அபூர்வ ராகம்” என்ற சஹானாவின் நாவல், பிரபல வார இதழான கண்மணி இதழ் நடத்திய நாவல் போட்டியில் வெற்றி பெற்று, ரூபாய் முப்பதாயிரம் பரிசுத் தொகை வென்றது. அதோடு, செப்டம்பர் 25, 2019 தேதியிட்ட கண்மணி இதழில் அந்த நாவல் வெளியானது
- 2018 செப்டம்பரில், Newstn.in என்ற இணைய இதழில், சஹானாவின் ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை வெளியானது
- 2016ம் ஆண்டு மங்கையர் மலர் நடத்திய "ஜெய்ஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி"யில், சஹானாவின் "இரண்டாவது அத்தியாயம்" என்ற சிறுகதை பரிசு பெற்றது
- அதே ஆண்டு "தமிழ் வலைப்பதிவர் குழுமம்" நடத்திய சிறுகதை போட்டியில் சஹானாவின் சிறுகதை பரிசு பெற்றது
- 2013ம் வருடம், மார்ச் மாதம் தினகரன் நாளிதழின் இணைப்பு இதழான "வசந்தம்" இதழில், "இணையத்தில் கலக்கிய இலக்கிய பெண்கள்" என்ற கட்டுரையில், சஹானாவின் பெயரும் இடம் பெற்று இருந்தது
- 2011ல் "நேசம் பவுண்டேசன்” நடத்திய கேன்சர் விழிப்புணர்வு சிறுகதைப் போட்டியில் சஹானாவின் சிறுகதை முதல் பரிசு பெற்றது
- அது மட்டுமின்றி, சஹானாவின் சிறுகதைகள் பல "வல்லமை", "அதீதம்", "திண்ணை" போன்ற இணைய பத்திரிக்கைகளின் புத்தாண்டு / பொங்கல் / தீபாவளி சிறப்பிதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன
- யூத் விகடன் இணைய இதழில், சஹானாவின் கவிதைகள் சில வெளியாகியுள்ளன
- இரண்டரை லட்சத்திற்கு மேல் ஹிட்கள் பெற்றுள்ள சஹானாவின் “அப்பாவி தங்கமணி” என்ற பெயர் கொண்ட எனது வலைப்பூவில் (BLOG - not available to public view now), சஹானா எழுதிய தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள், நகைச்சுவை பதிவுகள், கட்டுரைகள் என 200க்கும் மேற்பட்ட பதிவுகள், பலரால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்பட்டு, சஹானாவிற்கென ஒரு வாசகர் வட்டத்தையும், எழுத்துலக நட்புகளையும் பெற்றுத் தந்தது
Though able to understand where the end will leads to it was good to read for the entire length of novel. Por of people assume things based on what they read in internet