நீரோடு செல்கின்ற ஓடம்.. சிலநேரம் அலையில்லாத ஆற்று நீரில் போகும்... சிலநேரம் சுழலில் மாட்டிக் கொள்ளும்.. சிலநேரம் கடும் பாறை அதன் பாதையில் குறுக்கிடும்.. அனைத்தையும் தாண்டி அது கரை சேர வேண்டும்..நீரோடு செல்கின்ற ஓடத்துக்கு நியாயங்களை யாராலும் சொல்ல இயலாது.. வாழக்கை என்பது அழகான நீரோட்டம் போன்றது.. நீரோடு செல்கின்ற ஓடம் போல வாழ்வின் போக்கில் வாழ்ந்து பாருங்கள்.. நிச்சயமாக ஒருநாள் கரை சேர்வீர்கள்..