A collection of short-stories by tamil writer Dilip Kumar. Dilip Kumar whose mother tongue is Gujarathi has been writing in Tamil for the past 35 years. The stories included in this collection were previously published in Kanaiyazhii, India Today, Dhinamani and Kalachuvadu among other tamil literary magazines.
Writer Asokamitran describes his writing as follows
திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவருடையது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.
Dilip Kumar, whose mother tongue is Gujarathi, is a well-known short story writer and editor in Tamil with several awards to his credit. He is a Chennai-based bookshop owner. He has published three short-story collections and a critical work on Late Mouni, a pioneer of Tamil short stories. He has also translated poems, short stories, and other texts from Hindi, Gujarathi, and English into Tamil. He has edited a volume of Contemporary Tamil Short Fiction (in English) published in 1999. More recently, he has completed editing a huge volume of Tamil short stories—entitled 100 Years of Tamil Short Stories—translated into English to be published by Westland Ltd. His stories have been translated into Malayalam, Kannada, Telugu, Bengali, Gujarati, Hindi, English, French, Czech, and German. He has given talks on contemporary Tamil literature at the Universities of California and Chicago, and Yale, as well as at INALCO, France. He has also served as a jury member of the panel for the prestigious Crossword National Award for best translation and for the Sahithya Akademi translation awards.
திலீப்குமாரின் 'கடவு' என்னும் சிறுகதைத்தொகுப்பில் உள்ள பல கதைகள், சென்னை வாழ் குஜராத்தியர்களை கதைமாந்தர்களாக கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் இக்கதைகள் இடம்பெயர்ந்து வாழும் ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வைப் பற்றி பேசினாலும், கதையினூடே வரும் உரையாடல்கள் அகவாழ்க்கையை நோக்கி விரிவடையும் பொது, கதை அது நடைபெரும் வாழ்விடங்களிருந்து வெளியேறி அனைவருக்கும் பொதுவான ஒரு இலக்கியத்தன்மையை அடைந்துவிடுகிறது. இத்தொகுப்பின் பல்வேறு கதைகள். புறவயத்தில் கீழ் மத்திய மக்களின் வறுமையை கதைக்களமாகவும், பேசுபொருளாகவும் கொண்டிருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் வாழ்வின் உள்ளீடற்ற தன்மை, காலமும் மனிதனும் ஒன்றோடொன்று மோதி மீறியும் மாறியும் வீழ்ந்தும் உருமாறுகிற விளையாட்டு, வாழ்வின் நிச்சயமற்ற தன்மை, மரணத்தின் அருகாமையும் தொலைவும் மனத்தில் ஏற்படுத்தும் சஞ்சலம் என பலவகையான தத்துவ விவரணைகளை உள்ளடக்கியிருப்பதால், இத்தொகுப்பு வாசகனிடம் ஒரு ஆழ்ந்த வாசிப்பை கோரும் இலக்கிய பிரதியாக உயர்ந்து நிற்கிறது. 'நிகழ மறுத்த அற்புதம்' எனும் தலைப்புடைய கதையில் 25 வருட மணவாழ்வின் வெறுமை தாங்காது, தனிமை வேண்டி வெளியேற முனையும் பெண்ணிடம் அவளின் கணவன் மன்றாடும் உரையாடல்கள், நாம் நம்முடைய எல்லா செயல்களுக்கும் அதற்கான காரணங்களையம் நியாப்படுத்தல்களையும், நாம் கற்பனை (அல்லது உற்பத்தி) செய்துகொண்டிருப்பதையும், அக்காரணங்கள் இல்லாமலும் நாம் அதே செயல்களை செய்துகொண்டிருப்பதற்கான சாத்தியப்பாடும், வாசகனை திடுக்கிடச் செய்கிறது. காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டதா மனித மனம், அல்லது மனித மனத்திற்கு அப்பாற்பட்டதா காரண காரியங்கள் என்றொரு குழப்பமும் தெளிவுமற்ற ஒருவித பார்வை வாசகனை மேலும் சிந்திக்க தூண்டி அவனுக்கான விடையை அவனே பெற்றுக்கொள்ள வேண்டுகிறது. நன்மை - தீமை, மகிழ்ச்சி - துன்பம் என இருமைகளை தாண்டி, எல்லாம் சேர்ந்த கலவைதான் வாழ்க்கை என்ற புள்ளியும், விளைவின்பால் பிடிப்பின்றி தொடர்ந்த செயல்பாடுகளுக்கும், வாழ்வின் நோக்கமென தொடர்கின்ற செயல்பாடுகளுக்கும் இடையே ஒருவித சமநிலையை எட்டும் தருணமும் வாசகனுக்கு ஒரு புது பார்வையை அளிக்கிறது. ஒரு கதையில் வரும் பெண், நிலைக்கண்ணாடியில் தன் முழு உருவத்தை 20-30 வருட இடைவெளிக்கப்புறம் எதேச்சையாக பார்க்க நேரும் போது அடையும் திகைப்பு, பல கதைகளில் வாசகனுக்கும் ஏற்படுகிறது.
தமிழ் இலக்கியச் சூழலில் மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பு. வேறுபட்ட கதைக்களம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் முற்றிலும் வேறுபட்ட கதை சொல்லல் முறை. தமிழ் இலக்கிய வாசகர்கள் தவறவிடக்கூடாத புத்தகம்
கடவு சிறுகதையின் “அவளும் பேதையாக சிறுமியாக பெதும்பையாக மங்கையாக அறிவையாக இருந்தே பாட்டியானாள்” எனும் வரி கங்குப் பாட்டியை வெறும் சாகக்கிடக்கும் ஒரு பாட்டி என்பதைத் தாண்டிய அவள் வாழ்வைப் பற்றி எண்ண வைக்கிறது. டேக்சாவைப் பற்றிப் பேசிய அடுத்த நொடியே இந்து மதத்தையும் ஆன்மாவையும் பற்றிப் பேசும் பாட்டி எதுவுமே புனிதமானது இல்லை என்று சொல்லி நவீனத்தின் உச்சத்திலும் நம் மனதிலும் அமர்கிறாள்.
கடவு, கடிதம், நிகழ மறுத்த அற்புதம், முதுமைக் கோளம், ஐந்து ரூபாயும் அழுக்குச்சட்டைக் காரரும் ஆகிய ஐந்து கதைகளுமே முதுமையைப் பேசுகின்றன. அது வைகறை நேரத்து இருளுள் முதல் கீற்று வருவதைப் போல் தெரியாமல் வருகிறது என்கிறார் திலீப்குமார். வயோதிகத்தின் தனிமையை எதனாலும் நிரப்ப முடியாது அன்பால் கூட நிரப்ப முடியாது என்று திரு ஜேம்ஸ் சொல்கிறார். ஆனால் அவரது தனிமையை இறுதியில் திருமதி ஜேம்ஸே நிரப்புகிறார். கங்குப் பாட்டியின் தனிமையைக்கூட தெருப்பெண்கள் நிரப்பி விடுகிறார்கள். மிட்டு மாமாவின் தனிமையை மட்டுமே யாராலும் நிரப்ப முடியவில்லை. ஆனால் யாரேனும் எதுவேனும் அதை நிரப்புவார்கள் என்றே நம்புகிறேன்.
மனம் எனும் தோணி பற்றி…. எனும் கதையை மிகச்சிறப்பான ஒன்றாய்ப் பார்க்கிறேன். அந்தக் கதையையும் கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தில் தோன்றிய தமிழை என் கவிதைகள் ஒன்றும் செய்துவிடாது எனும் வரியையும் ரோசாப்பூ மட்டுமில்லை புளியோதரை கொடுத்து கூட காதலைச் சொல்லலாம் என்பதையும் இரசித்தேன்.
ஒரு பூனையின் வருகை போல் மௌனமாய் நகர்ந்த அக்கிராமத்தில் பூனை சொல்லும் செய்தி நம்மை ஒரு நொடி நகர விடாமல் செய்கிறது .
வெட்ட வெட்ட வளரும் மூங்கில் குருத்து போன்ற தன் கணவனின் நினைவுகள் வறட்டு நிலத்தில் கூட வளரும் மூங்கிலைப்போல் அவர்கள் வறுமைக்கு மத்தியிலும் தவறாது குருத்து வைத்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தான் அந்த அம்மா அதைச் சாப்பிடுவாள் என்றால் அது எத்தனைப் பெரும் நினைவுகளைத் தாங்கியதாய் இருக்கும்? ஆயினும் அந்த நினைவுகளில் சிலவற்றைக்கூட நம்மிடம் பகிர்வதற்கு வறுமை அவளுக்கு இடம்தரவே இல்லை. கதை நாயகனை மட்டுமில்லை அவன் தம்பியை அவனோடு பணியாற்றுபவர்களை அந்தக் கல்லூரி மாணவர்களை என பலரையும் சேர்த்தே துரத்துகிறது வறுமை.
மனிதன் தீயாலும் பனிக்கட்டியாலும் ஆனவனாக இருக்க வேண்டும் என்ற வரியே விவரித்துவிடுகிறது தோழர் கேவை. படித்து முடித்தும் அவர் மட்டும் அவிழாத புதிர் போலவே மனதில் நிற்கிறார்.
இன்றைய காலக்கட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு இடையில் தடம் கதையைப் படிப்பதென்பது மனதில் ஒரு பாறையைத் தூக்கி வைத்தது போல் உள்ளது. வாழ்க்கையின் நிலையின்மையை விட மரணத்தின் நிலையின்மை பெரியது, வாழ்க்கை என்பது செயல்களின் நிறைவும் விளைவுகளின் வெறுமையும் எனும் வரிகள் சிந்திக்கச் செய்கின்றன.
நிலை எனும் கதையை இரண்டு முறை படித்துவிட்டேன் ஆயினும் இன்னும் அதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். நினைவுகள் அர்த்தமற்றவை, காலத்தைச் சக்கையாய் உறிஞ்சிவிடும் உருவமற்ற பிணங்கள் எனும் வரிகள் தான் கதையின் சாரமாய் இருக்குமென்று நினைக்கிறேன்.
மொத்தத்தில் எல்லாக் கதைகளும் முதுமையையும் வறுமையையும் வாழ்வின் மீதான பார்வையையும் பற்றிப் பேசுகின்றன. ஆயினும் தீர்வு, அக்கிராமத்தில் பூனை ஆக���ய கதைகள் இந்த வகைமைகளுக்குள் வராமல் தனித்து நிற்கின்றன. மனதிலும்.
திலீப்குமாரின் கதைகள் ஒரு பக்கமிருந்தாலும் அவர் கவிதைகள் என்னை ���ிகவும் ஈர்த்தன.
This entire review has been hidden because of spoilers.
Dilip Kumar does a wonderful job in this collection of short stories. His characterization of people from a neutral point of view, is a gem to read. His stories have interesting premises that we could easily relate to. Overall it was a delightful read. I am looking forward to read some of his other works.