தமிழின் ஒப்பற்ற கவிஞர் மகாகவி சுப்ரமணியபாரதி. விடுதலைப்போராட்ட வீரர். பெண்விடுதலைக்காகவும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் தன் கவிதைகளிலும் பாடல்களிலும் புரட்சி முழக்கமிட்டவர். பாரதியாரின் கவிதைகள், பாடல்கள், சுயசரிதை, கண்ணன் பாட்டு, குயி்ல்பாட்டு, பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட அவரது அனைத்துப் படைப்புகளும் முழுவதுமாக தொகுக்கப்பட்டு வாசிப்புக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.