அனைவருக்கும் வணக்கம்."காதல் பூக்கும் தருணம்" கடந்த செப்டம்பர் மாதம் 2020-ஆம் ஆண்டு, "கண்மணி" வார இதழில் பிரசுரமானது.கதையைப் பற்றி:------------------------------உதவி என்பது எப்பொழுதுமே எல்லைக்கு உட்பட்டது. ‘ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்’ என்பது பழமொழி! ‘காதல் பூக்கும் தருணம்’ கதையில், நாயகியின் தந்தை சுந்தரேசன், தனது ஒன்றுவிட்ட அக்கா வள்ளியின் இக்கட்டான நிலையில் உதவி செய்கிறார்.சற்று அதிகமாகவும் செய்து விடுகிறார் எனலாம். வள்ளிக்கு அது உதவியாக மட்டும் இல்லாமல், அவரை சோம்பேறி என்ற எல்லைக்கு எளிதாகத் தள்ளிவிடுகிறது. உழைப்பின் அருமையை மறந்துவிட்டவர்கள், தங்களுக்குக் கிடைக்கும் பணம் போதாமல், மேலும் மேலும் பணத்தின் மீது பேராசை கொள்கிறார்கள்.