கதைகள் மனதில் உள்ள இறுக்கங்களை குறைத்து படிப்பவர்களை வேறு ஒரு உலகத்திற்கு சிறிது நேரத்திற்கு எடுத்துச்செல்பவை. இந்த புத்தகத்தில் நான்கு குறுங்கதைகள் அடங்கியுள்ளன. 01. வசந்தத்தை நோக்கி வசதியான குடும்பத்தில் பிறந்த அகிலன், ஒரு மீனவ பெண்ணை விரும்புகிறான். இளம் வயதின் உந்துதல் அவனுடைய சிந்தனையை தடம் புரள செய்கிறது. கடைசியில் என்ன தான் நடந்தது? 02. ராகங்கள் பதினாறு - உருவான வரலாறு ஒரு மேடை பாடகன், பிரபல பாடகர் மறைந்த சோகத்தில் தனது வாழ்க்கை பயணத்தை தொடர தயங்குகிறான். அவனுடைய நண்பர்கள் அவனுக்கு உறுதுணையாக இருந்து அவனை வழி நடத்துகிறார்கள். 03. நினைக்கத்தெரிந்த மனமே திக்குத்தெரியாத நிலையில் தாய் தந்தையை இழந்து தவிக்கும் அய்யாவு ஒரு பெரியவர