என்னுரை ------------------- எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது. எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் கல்கி, குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு உணர்ச்சிக் கோலம் .. அந்த உணர்ச்சிகளின் தொகுப்புக்கு ' வயசுக் கோளாறு' என்று தலைப்பிட்டுள்ளேன். இது 'வயசுக் கோளாறு - நாகேந்திர பாரதியின் கவிதைகள் - தொகுப்பு 50'. உங்களின் கருத்துக்களை எனது knbharathi@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் நன்றி.வணக்கம் நாகேந்திர பாரதி