கொரானா பல பேருக்கு பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பலருக்கு கொடுமையின் உச்சம். சிலருக்கு மன உளைச்சலின் உச்சம். இன்னும் சிலருக்கு மிகக் கடுமையான தனிமை. தினசரி செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் தரும் மன அழுத்தம். வாழ்க்கையின் நிலையற்ற தன்மை. சரக்கு கிடைக்காமல் உடல் மனம் நொந்தவர்கள். மிக நெருக்கமானவர்களை கொரானா பைசாச வைரஸுக்கு பலி கொடுத்த கொடுமை, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நடை. அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சாகசம். அரசியல்வாதிகளின் நிதமொரு பொய். உலக சுகாதார நிறுவனத்தின் நாளொரு அறிக்கை. விளக்கேற்றி, கைத்தட்டி, கொரானாவை விரட்ட சொன்ன நாட்டின் தலைவன். கேள்வி மட்டுமே கேட்கும் எதிர்கட்சிகள். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கொரானாவை பயனடுத்தி அடித்த