இந்த கதை நடந்தது ஆயிரத்து தொளாயிறத்து எண்பாதாம் வருடம். அதை நினைவில் கொண்டால்தான், பல விஷயங்கள், சரியாக இருக்கும். உதரணமாக தங்கம் விலையும் மூவாயிரம் ரூபா கடனை திருப்பி கொடுக்க முடியாமல் சுஷ்மிதா தவித்த தவிப்பும் புரியும். மூவாயிரம் பெரிய தொகையாக அன்று இருந்தது. இன்று அதெல்லாம் சுணடைக்காய் விஷயமாகி போய் விட்டது. மெட்றாஸ் ஹைகோர்ட் அந்த நாளில் இருபத்தி நான்கு ஜஸ்டிஸ்களை கொண்டாதாக இருந்தது. ஹைகோர்ட் பிராக்டீஸில் இருந்த வக்கீல்கள் சுமார் இருநூறு பேர்தான். எல்லாரையும் எல்லாருக்கும் தெரியும். ஒரு குடும்பம் போல இருந்தது. அதனால்தான் ரவிசங்கரின் சொந்த விஷயம் ஜஸ்டிஸுக்கு தெரிந்து விட்டது. அவன் மேல் அக்கறை இருந்ததால்தான் கூப்பிட்டு விசாரித்தார்.