Jump to ratings and reviews
Rate this book

குருதிப்புனல்

Rate this book
மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழுந்த பரபரப்புகளும் கண்டனங்களும் இன்று சரித்திரமாகிவிட்டன. சாகித்ய அகடமி பரிசு பெற்ற இ.பாவின் இந்நாவல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பானது என்பது இதன் இன்னொரு சிறப்பு.

184 pages, Paperback

First published January 1, 2006

67 people are currently reading
1006 people want to read

About the author

Indira Parthasarathy

37 books74 followers
Indira Parthasarathy (commonly known as Ee. Paa.) is the pen name of R. Parthasarathy. Born on July 10, 1930 in Chennai in a traditional Iyengar family. He has received Indian government's Padma Shri award for the year 2010. He has written several short stories, plays and novels in Tamil that have been translated in several Indian and world languages.

He has carved a special niche for himself in Tamil literature - his characters, mostly urban intellectuals, speak very openly and analyze deeply what others say. Most of his novels are set in Delhi, where he lived during his working years, or in the Srirangam area of Tamil Nadu, where he spent his childhood. Some of his novels, such as "Kuruthi Punal" intermingle these two milieus.
He has won several awards including the Sangeeth Natak Academy, Sahitya Academy and Saraswathi Samman Award. He is the only Tamil writer to have won both the Sangeeth Natak and Sahitya Academy Award.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
160 (31%)
4 stars
186 (37%)
3 stars
127 (25%)
2 stars
23 (4%)
1 star
6 (1%)
Displaying 1 - 30 of 40 reviews
Profile Image for Avanthika.
145 reviews853 followers
June 12, 2015
தமிழ்நாட்டில் கம்யுனிசம் என்கிற கடல் அளவு கான்செப்ட் இரண்டு இட்லியோடு முடிந்துவிடுகிறது.
மிக நேர்த்தியான நுட்பத்தோடு ஒரு கிராமத்தின் வாழ்வியலையும், டெல்லி போன்று பெருநகரத்தில் இருந்து இங்கு வந்து கம்யுனிசத்தின் பிடியில் அகப்பட்ட இரண்டு இளைஞர்களின் வாழ்க்கை சூழலையும் விவரிக்கின்றது குருதிப்புனல்.
மேல்தட்டு எஜமானின் சிரம் உயருமே ஆனால், அவனிடத்தில் கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளியின் சிரம் தாழும். அன்றாட உணவுக்கு அல்லாடும் விவசாயிகளின் போராட்டத்தை தட்டி கேட்க ஒவ்வொருமுறையும் சே-குவாராவை எதிர்ப்பார்த்திருப்பது இயலாத ஒன்று. நம்மில் ஒருவர் சத்ரியகுலத்தை வேரறுத்து ரத்தக்குளத்தில் குளித்த அந்தணன் பரசுராமனாய் மாறினாலே போதும். இந்த one -liner கொண்டு கம்யுனிசம் படைக்கப்பட்டுள்ளது.
சாஹித்ய அகாடமி விருது பெற்று, அன்றைய கம்யுனிஸ்டுகள் எதிரில் சவாலாய் நின்ற இந்த படைப்பு முற்றுபுள்ளியின்றி தொடரும் விதத்தில் நின்றிருப்பது கம்யுனிசத்தின் எதார்த்தத்தின் உச்சகட்டம். என்றேனும் ஒரு நாள் நமக்கருகே, நம்மில் ஒருவரால் இந்த சூழல்களை சந்திக்க நேரிடலாம். :)
Profile Image for Vivek KuRa.
279 reviews51 followers
March 28, 2023
1968ல் நடந்த கீழ்வெண்மணி படுகொலையை பின்புலமாக கொண்டு புனையப்பட்ட ஒரு புதினம். இந்த புதினத்தை தழுவி "கண் சிவந்தால் மண் சிவக்கும் " என்ற திரைப்படம் வந்ததை பலரும் அறியலாம் .தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள நிலக்கிழார்களின் ஆண்டான் அடிமை முறையையும் , சாதிய அடக்குமுறைகளையும், அதனை எதிர்ப்போர்களின் மீது பிரயோகிக்கப்பட்ட கொடுமையான வன்முறையை வெகுஜன மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விமர்சித்ததில் இந்நூலுக்கு ஒரு பங்கு உண்டு . இது தவிர ராமையாவின் குடிசை என்ற ஆவணப்படமும் , பல நூல்களும் இச்சம்பவத்தை பேசுகின்றன.

நீங்காத வடுவை ஏற்படுத்திய இக்கொடிய சம்பவத்தின் தீவிரத்தன்மையை, இந்நூல் கலை உரிமம் என்கின்ற பேரில் நீர்த்துப்போக வைத்துவிட்டதோ என்கின்ற ஐய்யமே இந்நூலை படித்துமுடித்த எனக்கு ஏற்பட்டது.

நிகழ்வின் பின்புலனை பற்றிய விரிவான ஒரு பகுப்பாய்வாக இந்நூல் இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன் . மாறாக , அவை முக்கிய கதாபாத்திரங்களின் மனோ பகுப்பாய்வாகவே இருந்தது. கதாபாத்திரங்களின் அரசியல் , உளவியல் மற்றும் புரட்சி பற்றிய சம்பாஷணைகளும் , விவாதங்களும் சிந்திக்க வைத்தாலும் , அவை ஒரு கோர்வையாக இல்லாததினாலும் , அவையாவும் ஒலிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆங்கில உரையாடல்களாக இருப்பது எரிச்சல். யதார்த்தவாதத்துக்காக சேர்க்கப்பட்ட இழிச்சொற்கள் மற்றும் வசைகளையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஆசிரியரின் சித்தாந்த புரிதலில் பெரும்பாலும் எனக்கு உடன்பாடு இருந்தலும் , சில நேரங்களில் அவரின் நகர்புற மனநிலை திருத்தல்வாதத்தில் உடன்பாடு இல்லை.

குருதிப்புனலில் சில குறை நிறைகள் இருந்தாலும், பலராலும் அறியப்படாத நம் வரலாற்றின் இருண்ட அத்தியாயத்தினை மக்களின் பிரக்ஞைக்கு கொணர்ந்த ஒரு முக்கிய படைப்பே.
Profile Image for Karthick.
369 reviews121 followers
February 14, 2016
"Kilvenmani massacre"

அதிகாரத்தில் இருப்பவர்கள் வீசுகிற ரொட்டித்துண்டுக்காக, புத்தியை விபச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்டவன் என்றும் தாழ்த்தப்பட்டவனாகவே இருக்கிறான்.

"பேயரசு செய்தால் அங்கு பிணம் தின்னும் சாத்திரங்கள்"
Profile Image for இரா  ஏழுமலை .
136 reviews8 followers
June 3, 2023
இவ்வளவு செயற்கையான ஒரு நாவலை நான் இதுவரை படித்தது இல்லை . சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் என்பதால் எடுத்தேன் பெரும் ஏமாற்றம்.. கதாபாத்திரங்கள் ஆங்கிலத்தில் உரையாடும் இடங்கள் வாசிப்பிற்கு முட்டுக்கட்டையாகவும் எரிச்சலையும் தருகிறது .

கம்யூனிசம் எத்தனை மகத்தான சித்தாந்தங்களை முன் வைத்தாலும் இறுதியில் அழிவின் புதைமேட்டில் தான் நிற்கும் கடந்த நூற்றாண்டின் தோற்றுப்போன ஒரு சித்தாந்தம் அதையே ரஷ்யாவில் பார்த்தோம்.
Profile Image for Yadhu Nandhan.
257 reviews
June 9, 2022
கதை எழுதப்பட்ட காலத்திலான எதார்த்தமான அரசியல் நிலையை எந்தவித சார்பும் இன்றி நேர்மையாக படம் பிடித்து காட்டுகிறது இந்த புத்தகம்.

இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான் என் சொந்த ஊரான தஞ்சையில் இப்படி ஒரு கோரச் சம்பவம் நடந்து இருப்பதை பற்றி அறிந்துகொண்டேன்.

இந்தக் கதையில் ஏற்படும் நிகழ்வுகளும் ஏற்படும் தடைகளும் புரட்சியை உருவாக்க முனையும் எந்த ஒரு சமூகமும் சந்திக்கும் இன்னல்கள் எனும் உண்மையை மறுக்க முடியாத கனத்த நெஞ்சோடு முடிகிறது இந்த புத்தகம்.
Profile Image for Shishir Chaudhary.
254 reviews27 followers
November 13, 2013
I read the English translation published by Sahitya Akademi. While it was badly edited, it touched the core of a sceptical reader inside me. Absolutely brilliant, an edge-of-the-seat thriller and a hard-hitting story intelligently written - this is a book that has set me off to explore more Tamil books. It is based on a true carnage of 1967 in which 42 Harijans were burnt to death in a landlord-peasant clash. This is a sad book. An extremely sad one that, when it ends, will make you want to jump through the pages to the time and place and support Gopal, one of the protagonists. This book will make you question the importance of revolutions, and their position vis-a-vis struggles. It will make you ponder over the individuality associated with social movements, that every revolution has its seeds in the self-interest of the sufferers. And whether revolutions, and struggles, are really inevitable?

Indira Parthasarathy, at the same time, shows immense narrative talent throughout the book which reaches a crescendo in the last couple of pages. Take this, for instance - "Death cries rent the air like a protest finally voiced" or this - "Revolution shall never cease to be. If it ceases, it ceases to be a revolution." Even the tagline is a strong statement, and a tribute, in itself - 'Story of a revolt against oppression' when it is actually the other way round.

Totally worthy of the Sahitya Akademi Award that it won. I just wish it to have been edited better.
42 reviews5 followers
April 13, 2019
உரிமையை கூட சலுகையாய்ப் பெற வேண்டிய நிலையில் நம் மக்கள் சிலர் இருப்பதன் வலி சொல்லில் அடங்காதது. இப்பெல்லாம் யாருங்க? எனும் ஒற்றை முகமூடியில் இன்னும் ஒளிந்துகொண்டிருக்கிறது கீழ்மை. கீழ்வெண்மணிப் படுகொலைகளை நீதி / அரசியல் / அதிகாரம் மறைக்கலாம் மறக்கலாம்.
வரலாற்றில் அதை இலக்கியம் மூலம் பதிவு செய்திருக்கிறார் இ.பா.
Profile Image for Sugan.
144 reviews38 followers
July 16, 2018
Born in 1980's my understanding of Tamil Nadu politics starts from the Dravidian movement. This book acts like a window to see what was part of Tamil Nadu like in the 1960's. And the book is based on a real incident the Kilvenmani massacre. Sweet and short read to understand the life of a common man in a Tamil village in the 1960's. I would recommend all my friends to read it.
Profile Image for Naren.
75 reviews1 follower
Read
March 22, 2023
எக்காலத்துக்கும் ஒத்துப்போகும் அரசியல் கருத்து கதைசொல்லும் களத்தில் சிறப்பாக பிணைந்துள்ளது
இ. பா 🛐💥
Profile Image for Ragupathy Thangavel.
2 reviews1 follower
July 14, 2018
நூல்: குருதிப்புனல்

ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி (இ.பா )

எனக்கு இ.பாவின் முதல் அறிமுகம் இந்நூலின் வழி. சாகித்ய அகாடமி மற்றும் சங்கீத் நாடக் அகாடமி விருதுகள் வாங்கிய ஒரே தமிழ் எழுத்தாளர். இவரது எழுத்து நடை வெளிப்படையானது . எதார்த்த மனிதர்களின் கலந்துரையாடல் (beep words கூட) அப்படியே இருக்கும் எழுத்து வடிவில்.

கதையின் கரு:

1. கீழ்வெண்மணி உண்மைத் துயரச்சம்பவமும் அதன்பின் இருந்த சாதிய அரசியலும்.
2. கூலித்தொழிலாளிகளின் போராட்டமும், ஆதிக்கச் சாதியினர் குடிக்கத் துடித்த ஏழைகளின் குருதியும்.

காலம்:

1968. திராவிட சிந்தனை மேலோங்கி, தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த வேளை. மார்க்சிச கம்யூனிச சிந்தனைகளும் பரவலாக மக்களுக்கு தெரிந்த காலம்.

கதைக்களம்:

கீழ்வெண்மணி. ஒருங்கிணைந்த தஞ்சை (இன்றைய நாகை) மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் தேவூரருகிலிருக்கும் சிற்றூர். அக்காலத்தில் பெருநிலம் கொண்ட நாயக்கர்களிடம் , கூலி வேலைச் செய்தும் பண்ணையாட்களாயும் இருந்த பள்ளர், பறையர் & சக்கிலிய மக்களின் உழைப்பை துச்சமென நினைத்து அடிமைகளாய் நடத்தியத்தன் விளைவு அவர்களின் உரிமை போராட்டமாய் வெடித்தது. இதற்கான தீப்பொறி கம்யூனிசம் பேசியவர்களிடமிருந்து வந்ததென்பதை மறுக்க முடியாது.

படிக்கத் தூண்டிய நிகழ்வு:

கடந்த ஆண்டு கீழ்வெண்மணி நினைவேந்தல் குறித்த நாளேடு செய்தி "ஒருபடி நெல்லும் மார்க்சிசமும் 44 பேரை தீக்கிரையாக்கிவிட்டன."
நிச்சயமாக இது கூலிக்கான கொலையல்ல சாதியத்தின் குரூர முகமென அனைவரும் அறிந்தபின்னும், ஊடகப் பிரதி இப்படியா உருப்பெருற்றுள்ளது?? அதுகுறித்த உணர்வு பூர்வமான உண்மையறியும் என் தேடலில் கிடைத்த நூல்.

கதைமாந்தர்கள் :

சிவா ,கோபால் , ராமைய்யா (காம்ரேடு), கண்ணையா நாயுடு, வடிவேலு , கிருஷ்ணஸ்வாமி நாயுடு, திருமலை, பங்கஜம், பாப்பாத்தி, கனகசபை, கட்டையன், பழனி , சுந்தரவதனம் (காம்ரேடு வக்கீல்),அம்மாசி மற்றும் பலர்.

நூலின் பாதிப்பு:

இ.பா, வெண்மணி நிகழ்வினால் மன உளைச்சலில் இருந்திருக்க வேண்டும். அதன் தாக்கம் தான் தன்னை வம்படியாய் "சிவா" எனும் கதாபாத்திரத்துக்குள் புகுத்தி, மற்ற கதை மாந்தர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். கதையில் தான் ஒரு கெஸ்ட் ரோல் என்பதை மறந்து, போராளியாய் மாறிப்போவதும், சிலர் நிதானமிழந்த வேளைகளில் "இப்படியல்லவா தலைவன் செயல்பட்டிருக்கவேண்டும்" என உதாரண புருஷனாய் சிவாவின் கதாபாத்திரம்.

மனிதம் மரிக்கும் வேளைகளில் அனைவரும் உணர்ச்சியின் பின்னால் செல்வோம். ஆனால் உணர்வு சமன்பாடின்மையே வன்முறையின் திறவுகோல் என்பது நிதர்சன உண்மை.

கண்ணையா நாயுடு, சாதிசகதியில் ஊறி வெள்ளாடை உடுத்திய பெரியமனிதர் (பணம் மற்றும் நிலத்தளவில்). "ஏண்டா பறப்பயலும் பள்ளப்பயலும் சேர்ந்து ஒரு கள்ளப்பய (ராமைய்யா) பேச்சகேட்டு ஆடுறீங்களா?? நாயுடுவா பொறந்து பாப்பாத்திய கூட்டிட்டு ஓடிப்போனவனுக்கு பொறந்த பய நீயெல்லாம் என்முன்னால பேசுறியா??" போன்ற அவரின் வசையாடல், பொருத்தாளரா சமமின்மையை தாண்டி சாதிய குரூர மனப்பான்மையின் வெளிப்பாடு.

இன்றும் சில கண்ணையா நாயுடுக்களை கடந்து போகிறோம். ஏன், சில சமயம் நாமும் அவராய் வாழ்ந்து போகிறோம். என்ன ஒரு வித்தியாசமெனில் அவரவர் சாதியிலிருந்து ஏறு இறங்கு வரிசை மட்டுமே.

சில கீழ்வரிசை சாதிய நண்பர்கள் நம் வீட்டுக்கு வெளியேவும், சில மேல்வரிசை சாதிய நண்பர்களின் வீட்டுக்கு வெளியே நாமும்.

ராமைய்யாவின் கம்யூனிச அறிவு அரைகுறையானாலும், அதன் வழி ஒரு பெரும் புரட்சியை கொண்டு வந்து கம்யூனிசமே சிறந்தது என பேசவைக்க முயலும் அவரின் சுயநலம்.
இது ஒருபுறம் இருக்க, ரஸ்யா போன்ற நாடுகளில் எழுந்த புரட்சி நம் நாட்டு மக்களிடம் ஏற்படாமல் போனதன் உண்மை சாதிய குருதி பாயும் மனித கட்டமைப்பே.

உலகம் குறித்த பல கேள்வி. வாழ்வின் நோக்கம் தேடி கிராமம் போகும் கோபால் "கிஸான்" புரட்சியில் தீப்பொறி. அவ்வபோது வழிமாறிய தடுமாற்றம் தலைவனாய் இருப்பவனுக்கு அழகல்ல.

நான் சில காரணங்களுக்காக கட்டையன், பழனி , வடிவேலு , பாப்பாத்தி, பங்கஜம், திருமலை குறித்து பேசாமல் விடுகிறேன். நீங்களே படித்து அவர்களின் நிலை என்னவென்று உணருங்கள்.

ஆதிக்க குரூரம் கொண்ட நில உரிமையாளர்கள், அவர்கள் கொட்டம் அடக்க "கிஸான்" போராட்டம் தொடங்கிய கம்யூனிஸ்ட், அதன் நெருக்கடியில் எது நம் வாழ்க்கை என வாழும் ஏழை குடியானவர்கள் இவர்களின் உளவியல் வெளிப்பாடாய் இந்த நாவல்.

எது எப்படியோ வெந்து மடிந்தது 44 சுத்தமான மனித உயிர்கள். அப்பழுக்கு கொண்ட மனித உயிர்கள் சில அழுது தீர்த்தன; சில சிரித்து மகிழ்ந்தன.

பலருக்கு வாழ்க்கையின் தேடல் இருப்பவனின் நிழலில் வளரும் செடி. சிலருக்கு சுயமாய் வளர வேண்டும் என்ற வெறி.

44 பேரின் குருதி கலந்த புனல் (ஓடை) அரசியல் பகடைக்கும் அதிகார ஆசைக்கும் கிடைத்த கேவலமான வெற்றி. அதன் வெளிப்பாடாய் கண்ணையா நாயுடு (நிஜக்கதையில் கோபாலகிருஷ்ண நாயுடு) விடுதலைக்கு உயர்நீதி மன்றம் தந்த தீர்ப்பு "கார், நிலம், வீடு வைத்திருக்கும் ஒரு மிராசுதார் தானே இறங்கி வந்து குடிசையை கொளுத்தினார் என்பதை நம்ப முடியவில்லை" மனுநீதி சோழன் ஊரில் நீதி தப்பாகுமா???

இந்த இரத்த வாடையில் சாதியம் அதிகம். கூடவே நீதியும் நிதியும் சேர்ந்து கொண்டன.

ஏன் படிக்க வேண்டும்:

உங்கள் ஆழ் மனதில் ஒருதுளி அளவேனும் சாதிய சிந்தனை இல்லாமல் வாழும் உத்தமரா ?? அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லையென வாய் வார்த்தையில் உலக நடிப்பு நடித்து வாழும் பச்சோந்தியா?? என்ற சுயபரிசோதனைக்கு!!!

நான் முதல் ரகமா இரண்டாம் ரகமா என்ற கேள்வி வைப்பதை தவிர்க்கவும்.
Profile Image for Rvs.
5 reviews1 follower
January 14, 2021
இபா காவிரியாள் என்று எனக்கு இதுவரை தெரியாது. ”எனக்கு சொந்த ஊர் கும்பகோணம்” என்று அவர் எழுதியிருக்கும் “குருதிப்புனல்” முன்னுரையில் படித்தபோது நம்மூர் பக்கத்து எழுத்தாளர் என்ற ஒரு கூடுதல் ஈர்ப்பு எனக்குள் வந்தது உண்மைதான். கீழ்வெண்மணி சம்பவங்கள் அவருக்குள் ஏற்படுத்திய சலனங்கள்தான் ”குருதிப்புனல்”லின் மையக் கரு. வரிக்கு வரி அரசியலும் ஜாதியும் மானாவாரியாக இழுக்கப்பட்டு அடிபடுகிறது.

டெல்லியிலிருந்து திருவாரூர் பக்கம் வந்த இரு இளைஞர்கள் சிவா மற்றும் கோபால் கதையை ஒவ்வொரு கட்டத்திலும் நகர்த்துகிறார்கள். கிராமம் என்றிருந்தால் ஒரு பண்ணையார் இருக்கவேண்டும் அவருக்கு சில அடிபொடிகள் மற்றும் அடியாள்கள் மற்றும் அவர் மேய சில பெண்கள் என்று வழக்கமான ஒரு கிராமத்து நாவல் போர்வையில் இருக்கும் புரட்சிகரமான கருத்துகள் அடங்கிய கதை. நான் இங்கே கதையை எழுதப்போவதில்லை.

ஒரு அரசியல்வாதியின் பெயர் நாக்கோ. (உங்களுக்கு இந்தப் பெயர் வேறு யாரையோ நினைவூட்டினால் கம்பெனி பொறுப்பல்ல. இது 1975ல் எழுதப்பட்ட நாவல். :-) ). இதென்ன நாக்கோ? என்றால் அவர் கொடுக்கும் காரணம் சுவாரஸ்யமாக இருக்கிறது. நா என்றால் நாக்குதான். கோ என்றால் அரசன். நாக்கோ என்றால் திருநாவுக்கரசனாம். தூள் கிளப்புகிறார்.

அரசியல் ஜனங்களை கெடுக்கவில்லை. ஜனங்கள்தான் அரசியலைக் கெடுத்துவிட்டார்கள் என்று எழுதுகிறார். நாவல் முழுக்க கதைமாந்தர்கள் ஜாதி பெயரைச் சொல்லித் திட்டிக்கொள்வது வந்தாலும் கதையின் ஓட்டத்திற்கு அது தேவைப்படுவதால் வலிந்து திணிக்கப்பட்டது போலில்லை.

கதையில் பெரிய வர்ணனைகள் எதுவுமில்லை. ஆனால் ஆங்காங்கே சுருக்சுருக்கென்ற வரிகள் சாட்டையைச் சுழற்றுகின்றன. சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது கன பொருத்தம்! <3

(1) ‘ வெற்றி அடையும் பக்கம் சாய்வதோ , இல்லாவிட்டால் , செய்கை என்று வரும்போது அலிகளாக இருந்து விடுவதோதான் இந்நாட்டு இன்டெலக்சுவல்களுடைய கொள்கைத் தர்மமாக இருந்து வந்திருக்கிறது ’ இது சரித்திரம் கூறும் உண்மை .

(2) எந்தவிதமான துன்பம் ஏற்பட்டாலும் , அத்துன்பத்தைப் போக்க முயலாமல் , அந்தத் துன்பத்துக்குக் காரணம் கண்டுபிடித்துத் திருப்தி அடைந்துவிடுகிற மனப்பான்மை நம் இரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது .

(3) அந்தந்தப் பிரச்னைக்கு ஓர் தாற்காலிகத் தீர்வு இருந்தால் போதுமானது என்று நினைக்கும் மக்கள் நிறைந்த இந்நாட்டில் புரட்சி ஏற்படுவது சாத்தியமா ?

இன்னும் நிறைய ஹைலைட் செய்யலாம். புத்தகம் வாங்கிப் படித்து இன்புறுங்கள். 2021ல் எனது புத்தகம் படிக்கும் பழக்கம் மீண்டும் முழுவீச்சு அடைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியே! மூன்று நாள்களில் இரண்டு புத்தகங்கள் முடிந்திருக்கிறது. KindleUnlimitedனால் இது இலகுவாகச் சாத்தியமாகிறது. இவ்வருட இறுதிக்குள் ஐம்பது புத்தகங்கள் வாசிக்க லட்சியம். பார்க்கலாம்! <3

#இந்திரா_பார்த்தசாரதி
#குருதிப்புனல்
#கிழக்கு_பதிப்பகம்
Profile Image for Priyanga Thamizhini.
6 reviews10 followers
September 24, 2020
சுதந்திர தினம் அடுத்து, இந்நாவலைப் படித்தது சிறப்பு.
அடிக்கடி எண்ணிக்கொள்வதுண்டு,
"சுதந்திரம் கிடைத்துவிட்டதா?".
"இல்லை" என்ற எண்ணத்தின் சான்றாக இப்படைப்பு! 'உண்மைச் சம்பவத்தைத் தழுவியது' என்று முன்னுரையே முணுமுணுக்க வைக்கும் நாவல். தன் படைப்பு 'சாகித்ய அகாதெமி பரிசு' பெற்றது, அக்காலத்தில் எழுந்த மார்க்ஸிய கம்யூனிஸ்டின் கிளர்ச்சியினாலோ என்ற கவிஞரின் சந்தேகம் தவிடுபொடியாகிவிட்டது!!!!
ஏட்டுப்படிப்பும் கவைக்குதவாத கற்பனைகளுமே கொண்ட இரு நகரவாசிகள், சாதிய வெறிகொண்ட நாயுடுவின் அட்டூழியங்களைக் களைத்தெறிய, கம்யூனிஸ்ட் காம்ரேட் ராமய்யாவுடன் இணைந்து நடத்தும் ஓர் கிராமத்துப் புரட்சியே கதைக்களம். கல்வியில் ஆரம்பித்து, அரசியல் களம் இறங்கி, கம்யூனிச புரட்சிப் பேசி, ஆங்காங்கே நகர வாழ்க்கையின் அவலங்களையும் கையாண்டிருப்பது அருமை.
கோபத்தின் காரணமாக தனிப்பட்ட பலவீனத்தின் அடிமைத்தனம், சாதிவெறியின் சூதுபொருகளாகப் பெண்டிரை அசுரவதம் செய்திருக்கிறது.
குருதி ஓடும் தசைகளின் கூடுகளுக்கிடையே என்ன பேதம்???
என்பது என் கூற்று.

'சாதிகள் இல்லையடி பாப்பா!' என்று எம் முண்டாசு கவி சொன்னதன் அர்த்தமும் ஆழமும் புரிகிறது.
செய்யும் தொழிலின் செல்வபலங்கொண்டு பிரித்த பிரிவு, பின்னாலே 'சாதி'யெனும் பெயரிலே நடத்தும் பயங்கரம். 'காசுள்ள திமிறு' என்ற வசவுக்கும் 'காசு ஒன்னுத்துக்கித்தானே மதிப்பு' என்ற ஏழையின் அலுப்புக்கும் சொந்தக்காரர்களின் மூர்க்கத்தின் உச்சாணிக்கொம்பே சாதிவெறி.
வெள்ளைக்காரனின் சட்டங்களை மாற்றாது, நம் கீழ்த்தட்டு மக்களை ஆட்(ண்)டுவிக்கும் அரசையும் அரசியலையுங்கூட விடாது கருப்பாக துரத்தும் சாதி.

கல்வியறிவு புகுத்தினால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்பியது பயனில்லை. 'கல்வி கொடுக்காது அரசியல் தலைவர்கள் எங்கே நியாயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? அடிமை அரசியல் எவ்வாறு உடைப்படும்?' என்ற கேள்விகள் தூரயெறியப்பட்டு கற்றவனும் கையாளும் சாதி அரசியல். அறக்கல்வி அளிக்காது அரைக்கல்வி அளித்த அவலம். சாதி களையெடுக்கக் கம்யூனிசம் பேசும் புரட்சி, "சாமானியனும் புரட்சி செய்ய வேண்டும் என்பதே!" ஆனால், அச்சாமானியனுக்கோ புரட்சி என்பது அன்றாடத்தேவையில், இன்னும் மேலே சென்றால் அவன் குடும்பத்துக்குத் தீவாளிப் புத்தாடை வாங்குவதில் அடங்கிவிடுகிறது.

கல்வி கற்பது, கற்பவனுக்குத் தாக்கம் ஏற்படுத்தினாலே அன்றி படித்துவிட்டு நாற்காலிப் புரட்சி செய்யும் அரசியல், துப்பாக்கிக்குண்டுகளுக்குத் தொண்டர்களைத் தாரைவார்த்து, மாலைகளுக்கு மட்டுமே கழுத்தை நீட்டுபவனை சாதிய சட்டம் இயற்றவைக்கும்!
- தமிழினி(Priyanga)
1 review1 follower
February 1, 2016
இந்திரா பார்த்தசாரதி எழுதிய நான் வாசித்த முதல் நாவல் இதுவே. என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு கிராமத்தின் சாதி பிரச்சணையை கருவாக கொண்ட கதையமைப்பு.

நகரத்தில் வாழும் நன்கு பயின்ற இரு இளைஞர்களின் சொற்றொடற்கள் போலவும் சிந்தனைகள் போலவும் பல சிந்தனை பரிமாற்றங்களை உரையாடல்கள் மூலமும் முன் நிறுத்தியுள்ளது இந்நாவல்.

உண்மைச் சம்பவமான அந்த சாதிக் கொடுமையை மனித நேயமற்ற ஒரு ஆண்மையற்ற குரங்கின் நாகரிகமற்ற செயலை அடிப்படையாக கொண்டுள்ள கதை. அக்கதையை இவ்வுலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய ஓர் உன்னதமான படைப்பு. சமூகத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவினரின் அழுகை கோபம் வெட்கம் என்று பல இண்ணல்களை எடுத்திறைக்கிறது. அக்காலக் கட்டத்தில் இருந்த தமிழக அரசியல் நிலைமை நிறையவே தயிரமாகவே விமர்சனப் படுத்தியுள்ளது.
Profile Image for Sabari.
32 reviews9 followers
October 21, 2018
‘என்னை விட ஒசத்தின்னு ஒருத்தன் சொன்னான்னா அதெ எதிர்கிறேன்க்கிறதுக்காக என்கிட்ட பரம்பரை பரம்பரையா வேலை செய்துகிட்டு வர்ற பயலுகளை சிம்மாசனத்திலே உக்காத்தி வைக்கணுமா? நல்லா இருக்குய்யா உங்க நியாயம்.’

மேலே குறிப்பிட்ட முரண் தான் இந்த நாவல். திராவிட அரசியல் 60 வருஷம் நாட்டை ஆண்டும் ஏன் சாதி முழுசா ஒழியலைன்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இந்த நாவலை படிக்க வேண்டும். மேம்போக்கா பார்த்த வெறும் ஒரு வர்க்கப் பிரச்சினை, பண்ணையார் தொழிலாளி பிரச்சினைன்னு தோணும் ஆனா, அதுக்குள்ள இருக்கற சாதியப் பிரச்சினை, அரசியல், மக்களோட உளவியல், தலைவனை கடவுளா பாக்குறது. ஒரு படி மேல போயி வில்லனோட மன நிலை, அதுக்கான காரணம், அவனோட வக்கிர புத்தி எல்லாத்தையும் இந்த நாவல் அலசி ஆராயும். ஒரு கிளாசிக்.
24 reviews1 follower
September 22, 2019
Though an inspiration from the "Kilvenmani massacre" I couldn't go beyond the fictional character and understand the pain of the people whose lives were taken. The novel totally diverted from the real problem and explored it from a very different perspective which I am not able to relate to. Probably my mistake to expect more, but still this hasn't been to the expectation I had for this book.

I am still wondering why this was awarded the Sahitya Akademi Award.
Profile Image for Elayaraja Subramanian.
129 reviews8 followers
March 22, 2021
தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கிய 44 உயிர்களை தீக்கிரையாக்கிய கீழ்வெண்மணி படுகொலையினை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் நாவல்.

டெல்லியில் தன்னோடு சிறுவயது முதலே படித்து வளர்ந்த உற்ற தோழன் கோபாலைத் தேடிக் கொண்டு தஞ்சாவூர் அருகே இருக்கும் கிராமத்திற்கு வருகிறான் சிவா. டெல்லியை விட்டு அந்த கிராமத்திற்கு வந்த இரண்டு வருடங்களில் ஓரிரு முறை மட்டுமே கடிதம் போட்டிருக்கிறான் கோபால். கோபாலுக்கு சொந்த ஊர் கும்பகோணம் அருகே சிறு கிராமம். நாயுடு சமூகத்தை சேர்ந்த கோபாலின் தந்தை அவரோடு கல்லூரியில் படித்த பிராமண பெண்ணை அழைத்துக் கொண்டு கிராமத்தை விட்டு வெளியேறி டெல்லியில் தங்கிவிட்டார். அப்பா அம்மா இருவரும் இறந்த பிறகு யாருமே அறிமுகமில்லாத அந்த கிராமத்தில் வந்து தங்கிவிடுகிறான் கோபால். அந்த கிராமத்தையும் கிராமத்து மக்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கும் நிலவுடமையாளர் கண்ணையா நாயுடுவிற்கு தலைவலியாக இருக்கின்றன மக்களின் சிந்தனையை மாற்றியிருக்கும் கம்யூனிசமும் அதை முன்னின்று நடத்திவரும் ராமய்யா, டாக்டர் கனகசபை போன்றோரும். வழக்கமான கூலியை கொஞ்சம் உயர்த்தி தரச் சொல்லி பண்ணையாட்கள் கேட்பது மட்டுமல்ல நாயுடுவின் பிரச்சனை. குனிந்து கும்பிடு போட்டு கொடுப்பதை வாங்கிச் செல்லும் அடிமைகள் எதிர்த்து குரல் கொடுப்பதே அவரது தலையாய பிரச்சனை. ராமய்யாவோடு தங்கி இருக்கும் கோபாலும் அவனை தேடிக் கொண்டு அந்த கிராமத்திற்கு வரும் சிவாவும் கண்ணையா நாயுடுவிற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்கிறார்கள்.

கீழ்வெண்மணி சம்பவம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்ததால், திமுக அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் காட்டமான விமர்சனத்தை வைக்கிறது நாவல். அந்த விமர்சனத்தோடு கிட்டத்தட்ட நானும் ஒன்றுபடுகிறேன். 44 உயிர்களை , பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமே, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர எப்படி திமுக அரசு தவறியது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இக்கொடூர சம்பவத்தை நிகழ்த்திய, முதல் குற்றவாளியாய் வழக்கில் சேர்க்கப்பட்ட கோபாலகிருஷ்ண நாயுடுவையும் அவரோடு சேர்ந்த மற்ற 22 குற்றவாளிகளையும் விடுதலை செய்வதற்கு உயர்நீதி மன்ற நீதிபதிகள் சொன்ன காரணம் : “இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள். முதலாவது குற்றவாளி கார் ஒன்றைச் சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்? இவர்கள் தாங்களே சம்பவ இடத்துக்கு நடந்துவந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பதை நம்புவதற்கு சிரமமாக உள்ளது!”

வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்பதற்கு கொஞ்சமும் சளைக்காதது இந்த தீர்ப்பு. இப்படி ஒரு தீர்ப்பை வழங்கிட சட்டம் பயின்று பல வருட அனுபவம் பெற்று நீதிபதி பதவிக்கு வந்திருக்கிறார்கள் என்பது சிரிப்பை வரவழைக்கிறது.

ஊரையே கைப்பிடிக்குள் வைத்து ஆட்டிப்படைக்கும் பண்ணையாரை ஹீரோ எதிர்த்து சண்டையிடும் பழைய திரைப்படங்களை தொலைக்காட்சிகளில் பார்த்திட்ட போது அவை வெறும் திரைப்படங்கள் என்ற அளவிலேயே எனக்கு தோன்றின. ஆனால் கீழ்வெண்மணி சம்பவம் குறித்தும் அதை தொடர்ந்து பண்ணையார்கள் விவசாய கூலிகள் மீது அக்காலத்தில் நிகழ்த்திய கொடுமைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கும் போதும் அவை வெறும் திரைப்படங்களாக மட்டும் தோன்றவில்லை. கதாநாயக பிம்பத்தை உயர்த்திப் பிடித்திடும் வெகுஜன திரைப்படங்களாக அவை இருந்த போதிலும், ஏதோ ஒருவிதத்தில் திரைப்படங்கள் அவற்றை மீண்டும் மீண்டும் பேசியிருக்கின்றன.

நாவலில் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் கோபால், சிவா இருவரும் பிராமண சமூகத்தை சார்ந்தவர்களாக இருப்பது கொஞ்சம் போல் உறுத்தியது. அதனாலேயே திமுக அரசையும் திராவிட கொள்கைகளையும் விமர்சித்திடும் போது நாவலின் நோக்கம் மீது கேள்வி எழும்புகிறது.
Profile Image for Loganathan Balamurugan.
15 reviews
January 19, 2021
குருதிப்புனல்..
இந்த நாவலுக்காகத் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்குச் சாகித்திய அகாதமி விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகவைத்துப் புனையப்பட்ட கதை இந்தக் குருதிப்புனல் நாவல்..
தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழவெண்மணி என்னும் கிராமத்தில் விவசாயிகளுக்கு நேர்ந்த அதிபயங்கரக் கொடுமையை இந்த நாவலில் எடுத்துரைத்திருப்பார் எழுத்தாளர்.

அந்தக் காலகட்டத்தில் மிராசுதார்களுக்கும் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கும் இருந்த வேறுபாட்டைக் கலைநயத்துடன் சொல்லியிருப்பார் எழுத்தாளர்த் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்கள்.

தில்லியில் படித்த இளைங்கன் ஒருவன்
கிராமத்தில் தன் நண்பனைச் சந்திக்க வருகிறான். சிவாவிக்குத் திருவாரூரில் தெரிந்தவர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. ஏனெனில் அவனுக்குத் தெரிந்த ஒரே நபர் அவனுடையநண்பன் (கோபால்). கோபாலும் தஞ்சாவூர்ப் பக்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வசித்துவந்தான்.

கோபால் மக்களோடு இனைந்து அவர்களை அரிந்து, புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்று எண்ணி அவர்களுடன் திருவாரூர் என்னும் ஊரில் இருந்து ஒரு கிராமத்தில் (கீழையூர்) வந்து தங்கிவிட்டான்.

கோபாலும் சிவாவும் தில்லியில் ஒன்றாகப் படித்தவர்கள். கோபால் சமூக இயலில் மருத்துவர் பட்டம் பெற்று வேலையிலிருந்தான். அவன் படிக்கும் போதே தாய் மற்றும் தந்தை அவனைவிட்டுப் பிறிந்ததுவிட்டனர். கோபால் தான் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலையை விட்டுவிட்டுக் கிராமத்தில் திருவாரூர்ப் பக்கம் கீழையூர் வந்துதங்கிவிட்டான்.

சிவா கிராமத்துக்கு வர முக்கியக் காரணம் கோபால் எழுதிய ஒரே ஒரு கடிதம் தான். கோபால் திருவாரூர்க்கு வந்தவுடன் அவனுக்கு அறிமுகம் ஆன நபர் (ராமையா) அவர் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ஒரு போராளி(கம்யூனிஸ்ட்) அநீதிகளைக் கண்டு குரல் கொடுப்பவர்.

எழுத்தாளர்ச் சிறுபான்மையின மக்களுக்கும் மேல் குடி மக்களுக்கும் இருந்த வேறுபாட்டை அழகாகவும் மிகவும் கவனத்துடன் தன் எழுத்து வடிவில் கொடுத்திருப்பார்.

மேல் குடி மக்களின் பிரதிநிதியாக்கக் கண்ணையா நாயுடு மற்றும் அவரது நண்பருமானத் திருமலை நாயுடு ஒருமுக்கிய கதாபாத்திரத்தில் வளம் வருகிறார்கள்.

இதைத் தவிர்த்துப் பல கதாபாத்திரங்கள் இக்கதையில் வளம் வந்தார்கள். (வடிவேலு) கண்ணையா நாயுடுவின் தந்தைக்கும் அவரது வப்பாட்டியிக்கும் பிறந்தவர். (கனகசபை) இவர் ஒரு மருத்துவர் தேவூரில் வசிப்பவர் இவர் ராமய்யாவுக்கு மற்றும் கோபால், சிவாவுக்கு ஒரு நல் நண்பரும் கூட.

பழனி, பாப்பாத்தி, கட்டையன் இவர்கள் சிறுபான்மையின மக்களைச் சேர்ந்தவர்கள்.

ஒரு தனி நபர் கண்ணையா நாயுடு எப்படி இந்தக் கிராமத்தைத் தன் கைக் குல் வைத்திருந்தார். மக்கள் எப்படி கோபால், ராமய்யாவுடன் இனைந்து போராடினார்கள் என்பதை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்திருப்பார் எழுத்தாளர்.

கண்ணையா நாயுடுவுக்கு வெற்றிக் கிட்டியதா? அல்லது அவரை எதிர்த்துக் குரல் கொடுத்துப் போராடிய மக்களுக்கு வெற்றிக் கிட்டியதா? படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

பாலமுருகன்.லோ
41 reviews
January 23, 2017
The writing style is unique because of how it intertwines the inner dialogues and the external conversations of the key characters. The inner dialogues are not trite but very realistic portrayals of how human beings think, weigh options and analyse situations. The effect of standing out of oneself and looking in is brought about to great effect.

However, the novel fails in character development. While it is a narration of events and individual thoughts at each individual incident, we do not necessarily understand why the characters behave in a particular manner. Or what influences in their lives makes them gravitate towards certain solutions.

For someone wanting to acquaint themselves with rural Tamil Nadu, it is interesting provided they already know the basics.
1 review
August 4, 2020
The book is based upon the keezhvenmani massacre. At first, the book seemed to portray incidents that one would find in modern Tamil cinema, but given the fact that the book was published in the 70's, the reverse might be true. Modern Tamil cinema may have been inspired by works similar to Kuruthipunal. And the local slangs were quite difficult to follow. This might be because this is second ever Tamil novel. But the book picked up pace and I really enjoyed the way the author describes a character's thought process. That was something that really stood out. But I would have more liked the book if it had been from the perspective of characters like ammavaasi or paapathi, rather than from the perspective of Gopal and Siva.
Profile Image for Murugesan A.
25 reviews5 followers
March 4, 2021
சாதிய கட்டமைப்புக்குள்ளான ஒரு ஊரில் உள்ள ஒரு உயர்சாதி தலைவனுக்கும், படித்த ஒரு இளைஞனுக்கும் ஏற்படும் மோதலில் என்ன நிகழ்கிறது என்பது பற்றி எழுத்தாளர் கற்பனைக் கதையை எழுதாமல் இயற்கையாய் என்ன நிகழுமோ ( முன்னால் நிகழ்ந்ததோ) திறம்பட கூறியிருக்கிறார்... முற்கால சாதிய கட்டமைப்புகளுக்கு உண்டான ஒரு உலகத்தை குறித்து தெரிந்துகொள்ள ஒரு நல்ல நூல்.
Profile Image for Praveen.
86 reviews5 followers
June 17, 2020
Importance of education. Proper education and maturity would certainly bring justice. Revolution should takes place with propper leadership and leaders. One cannot do with excitement and emotion.
Lateral thinking is must.
Profile Image for N S MUTHU.
51 reviews7 followers
April 26, 2024
கீழ்வெண்மணி படுகொலையை மையமாக கொண்டு புனையப்பட்ட நாவல். இந்நூலில் கதாபாத்திரங்களுக்கு இடையேயான உரையாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தது. எனினும் புத்தகத்தை படித்து முடிக்கும் போது, இப்புத்தகம் தன் மைய கருவிலிருந்து விலகி இருப்பதாகவே தோன்றுகிறது.
Profile Image for Saravanan.
356 reviews20 followers
July 16, 2018
ஆமாம், பேச்சு வழக்கில் தமிழை தவறாகத் தான் பேசுகிறோம். அதற்காக புத்தகத்தில் அப்படியே பயன்படுத்துவதால் கொஞ்சம் தமிழ் தெரிந்தவர்களும், தமிழ் கற்பவர்களும் படித்தால் பேச்சு வழக்கு தமிழை சரியான தமிழ் என்று எண்ணிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. புத்தகங்கள் காலத்தால் அழியாதவை. பிழை இல்லா தமிழை பயன்படுத்தியிருக்கலாம்.

சொல்லாத விரும்பாத வார்த்தை(கள்) பல இடங்களில், ஆங்கில நாவல்களில் படிக்கும் போது வராத பாதிப்பு தமிழில் படிக்கும் போது வருகிறது. அப்படி வெளிப்படையாக பயன் படுத்துவதால் என்ன பலன் என்று தெரியவில்லை. அந்த காலங்களில் சாதிகளினால் நடந்த பல கொடூரக் கொலைகள் இந்த தலைமுறைக்கு(என்னையும் சேர்த்து) தெரிவதில்லை. அப்படி ஒரு குறிப்பிட்ட சாதியினால் நடந்த ஒரு கொடூரங்களை தொட்டு செல்கிறது.
10 reviews
October 18, 2018
enakey theriyamal,entha oru nanbar pakirvum indri intha book nan padithen. sirsila muranpadugal irunthum ennai konja matriya novel ithu..
30 reviews
March 14, 2021
A thoughtful read on the oppression of the people in the name of caste detailed on the background of kelvenmani massacre.
Profile Image for Swami Nathan.
98 reviews2 followers
April 12, 2021
Astounded that this work is so relatable even now [ written in 1975] and shame that nothing much has changed in the society
Profile Image for Hema.
40 reviews6 followers
September 17, 2020
குருதிப்புனல், இந்திரா பார்த்தசாரதி, 1970 (4/5)

கீழ்வெண்மணி படுகொலையின் பின் உள்ள சாதி மற்றும் அரசியலை நாவல் வடிவாகச் சொல்லும் புத்தகம்.

அந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர், தன்னையே சிவா என்ற ஒரு கதாபாத்திரத்திற்குள் புகுத்தி, ஒரு தலைவனும் ஆகியுள்ளதாக தோன்றுகிறது. இந்த நாவலின் சிறப்பும் சரிவும் அதுவே.

சிறப்பு- அக்கிராமத்தில் நடக்கும் கொடுமைகள் எவ்வாறு ஆயிரம் மைல் தொலைவில் உள்ள ஒருவனையும் பாதிக்கத்தக்கது என்பதை நிரூபித்தது. (வாசகர்களாகிய நாமும், அவனளவு இல்லாவிடினும் சிறிதளவு சீற்றமாவது கொண்டிருப்போம்).

சரிவு- பாதிக்கப்படவுள்ள ஒருவனின் மனநிலையிலிருந்து சொல்லியிருந்தால் கதைக்கு இன்னும் ஆழம் கிடைத்திருக்கும்.

கூலி என்ற வார்த்தைக்குள் இருக்கும் வாழ்க்கை, அடிமைத்தனம், நிரந்திரமின்மை, அவர்கள் சந்திக்கும் தினசரி அவமானங்கள், கொடூரங்கள் எல்லாம் கிராமத்தில் நடக்கும் அன்றாடப் பிரச்சினைகள் என்று நாம் எண்ணுவது எவ்வளவு கொடியது என்பதை புரிய வைக்கும் நாவல்.

மிராசி முறை, அதன் முதலாளித்துவம், அது காட்டும் அதிகாரம், பாகுபாடு, கர்வம், காழ்ப்புணர்வு என எல்லாவற்றையும் உருவப்படுத்தி நாயுடுவாக ஆக்கியுள்ளார். அவர் பெயர் வந்தாலே எரிச்சல் வருமளவு கொடுமைக்காரர். தன்மேல் உள்ள குறையைத் தீர்க்க அவர் ஊரை எவ்வாறு பலி கொடுக்கிறார் என்பதே மூலக்கதை.

பண்ணையார்-தொழிலாளர்களுக்கு இடையில் காம்ரேட், கோபால் எங்கு வந்து எவ்வாறு கம்யூனிசத்தை இணைகின்றனர் என்பதற்கு தெளிவு இல்லை.

ஏன் தலைவனின் கொள்கை சீராக இருக்க வேண்டும், தொண்டன் ஏன் தலைவன் வார்த்தையை பின்பற்றுவதில்லை, கோபத்தில் எல்லோரும் தலைவனாக முடியாது, என பல வாழ்க்கை உளவியலை எடுத்துரைக்கிறது.

சாதியும் கம்யூனிசமும் எதிர்கோணங்கள் என்று எண்ணலாமா, நாயுடு போன்றோர் நிஜத்தில் உள்ளனரா, போலிஸ் யாருக்காக வேலை செய்பவர் என்று நகர்புற வாசிகளை சிந்திக்க வைக்கும்.

'பட்டினிக்குத் தெரிந்த ஒரே தர்க்கம் இதுதான்' என்ற வரி மிகவும் பாதித்தது.
Displaying 1 - 30 of 40 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.