Jump to ratings and reviews
Rate this book

ஜே ஜே சில குறிப்புகள்

Rate this book
மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொண்ட எனக்கு, தங்களை என்னில் இனங்கண்டுகொள்ளும் மற்றவர்களின் தொடர்புகள் வாய்த்தவண்ணம் இருக்கின்றன. என்னைப் போலவே நான் சந்தித்தவர்களும் ‘இப்போது என்னைப் பிடித்துக்கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக் கொள்வேன்’ என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடிநிலைகளில் ஒரே திராவகம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

230 pages, Paperback

First published January 1, 1981

119 people are currently reading
1889 people want to read

About the author

Sundara Ramaswamy

61 books217 followers
Sundara Ramaswamy (1931–2005), fondly known as "Su.Ra" in literary circles, was one of the exponents of Tamil modern literature. He edited and published a literary magazine called Kalachuvadu. He wrote poetry under the penname "Pasuvayya". His novels are Oru Puliya Marathin Kathai (The Story of a Tamarind Tree), J.J Silakuripukal (J.J: Some Jottings, tr, A.R Venkadachalapathy, Katha, 2004) and Kuzhanthaikal, Penkal, Aankal (Children, Women, Men).
Ramaswamy was born on 30 May 1931, in Thazhuviya MahadevarKovil,[1] a village in Nagercoil). At 20, he began his literary career, translating Thakazhi Sivasankara Pillai's Malayalam novel, Thottiyude Makan into Tamil and writing his first short story, "Muthalum Mudivum", which he published in Pudimaipithan Ninaivu Malar.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
283 (44%)
4 stars
211 (32%)
3 stars
96 (15%)
2 stars
27 (4%)
1 star
23 (3%)
Displaying 1 - 30 of 66 reviews
Profile Image for Girish.
1,153 reviews260 followers
January 14, 2021
What is a book and it's words meant to do? What does departing from convention mean? In the words of the author - there are no such things as paths. Where your footsteps tread on you create a new path.

“பாதைகள் என்று எதுவுமில்லை. உன் காலடிச் சுவடே உன் பாதையை உருவாக்குகிறது”

This is more a debate than a story, a conflict of idealogies in the meaning of truth in literature. Of course it is not done openly but through a modernist fiction.

We have a malayalam author JJ on whose death an author who is also his fan tries to put together his ideas. The first half of the book is about people in JJ's life and anecdotes that explain the person and his ideas. Through the various characters including the author's own dad and sister - he places multiple ideas.

It is as if we have a ventriliquist dummy in JJ. The second half is the journal entries of JJ - a melange of ideas. Some beautiful, some incisive and some that enlighten.

It also features all the major writers of the time like Camus (there are 9 different ways we pronounce his name in India it seems), Dostoyevsky, Borgues and others. Referencing their writing in context of, among other things, not appreciating the Indian writers and writing.


"காஃப்கா என்கிறோம். சிமோன் த பூவா என்கிறோம். போர்ஹே என்கிறோம். குட்டிக்கிருஷ்ண மாராரைத் தெரியாது என்கிறோம். கோபாலகிருஷ்ண அடிகாவைத் தெரியாது என்கிறோம். எப்படி இருக்கிறது கதை?"

"வர்ணத்தை வீசிவிட்ட ஓவியன் இங்கு வார்த்தைகளால் வரைகிறான்.”

“ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும். சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி.”

"நீ ஏற்கலாம். அல்லது மறுக்கலாம். அது உன் பார்வையைப் பொறுத்தது. சரியைச் சொல்வது அல்ல, என் மனம் சரியென்று நம்புவதைச் சொல்லிவிடுவது. இதுதான் எழுத்தின் அடிப்படை.”


Thoroughly enjoyed it. Hopefully will re-read this again some years later!
Profile Image for Nandakishore Mridula.
1,348 reviews2,696 followers
February 3, 2019
ഒട്ടുമിക്ക നോവലുകളും മനുഷ്യകഥാനുഗായികളാണ്. അവ വ്യക്തികളുടെ ജീവിതങ്ങളേയും, അവയിലെ സങ്കടങ്ങളേയും സന്തോഷങ്ങളേയും സന്ദേഹങ്ങളേയും ചുറ്റിപ്പറ്റി നീങ്ങുന്നു. ഗ്രന്ഥകർത്താവിന്റെ ആശയങ്ങൾ പലപ്പോഴും കഥയുടെ അടിയൊഴുക്കായി പ്രവർത്തിക്കാറുണ്ടെങ്കിലും, മുൻതൂക്കം വികാരങ്ങൾക്കും ജീവിത സമസ്യകൾക്കും തന്നെയായിരിക്കും.

ഇതിനു വിപരീതമായി, ആശയാനുവർത്തികളായ നോവലുകളുണ്ട് (noveI of ideas). ഇവയിൽ കഥാപാത്രങ്ങളെക്കാൾ പ്രാധാന്യം അവർ പ്രതിനിധീകരിക്കുന്ന ആശയങ്ങൾക്കാണ്. അനുവാചകന് ഒരു തത്ത്വശ്ശാസ്ത്ര ഗ്രന്ഥം വായിച്ച പ്രതീതി കിട്ടും, ഈ ജനുസ്സിലൊരെണ്ണം വായിച്ചു തീർക്കുമ്പോൾ. എന്നാൽ അവിദഗ്ദ്ധമായ കരങ്ങളിൽ novel of ideas വെറും വാചാടോപമായി മാറുന്നതും കാണാം.

പ്രശസ്ത തമിഴ് കവിയും നോവലിസ്റ്റുമായ സുന്ദരരാമസ്വാമിയുടെ "ജേ. ജേ: ചില കുറിപ്പുകൾ" ആശയങ്ങളുടെ നോവലാണ്. എഴുത്തുകാരുടെ ലോകത്ത് കൂട്ടം തെറ്റി മേയുന്ന, മലയാളി എഴുത്തുകാരനായ "ജെ. ജെ" എന്ന ജോസഫ് ജെയിംസിനേയും അയാളുടെ ആരാധകനായ തമിഴ് എഴുത്തുകാരൻ ബാലുവിനേയും ചുറ്റിപ്പറ്റി നീങ്ങുന്ന ഈ കഥ സാഹിത്യം ആത്യന്തികമായി എന്താണ് സർഗ്ഗസൃഷ്ടി എന്ന കാതലായ പ്രശ്നത്തിലേക്കു വിരൽ ചൂണ്ടുന്നു.

രണ്ടു ഭാഗങ്ങളായാണ് ഈ നോവൽ രചിക്കപ്പെട്ടിരിക്കുന്നത്. ആദ്യഭാഗത്ത് ജോസഫ് ജെയിംസിനെക്കുറിച്ചുള്ള ആഖ്യാതാവിന്റെ അനുഭവങ്ങളും, അയാളുടെ ജീവിതത്തിൽ പ്രാധാന്യം നേടിയ മറ്റു വ്യക്തികളുടെ ഓർമ്മകളും: രണ്ടാം ഭാഗത്തിൽ, ജെ. ജെ യുടെ തന്നെ ഡയറിയിൽ നിന്നും തിരഞ്ഞെടുത്ത കുറിപ്പുകൾ. ഒരു യഥാർത്ഥ എഴുത്തുകാരന്റെ ജീവചരിത്രമെന്ന് തോന്നിപ്പിക്കുമാറ് എഴുതിയ ഈ പുസ്തകത്തിൽ, ജെ. ജെ യുടെ പ്രധാന കൃതികളും അനുബന്ധമായി ചേർത്തിട്ടുണ്ട്.

നോവൽ തുടങ്ങുന്നത് ഇങ്ങനെയാണ്:
ജോസഫ് ജെയിംസ് 1960 ജനുവരി 5-ാം തിയതി 39 -ാമത്തെ വയസ്സിൽ മരിച്ചു. ആൽബർട്ട് കമ്യു അപകടത്തിൽ മരണപ്പെട്ടതിന്റെ പിറ്റേന്ന്.
ഗ്രന്ഥകർത്താവ് ആരംഭത്തിൽത്തന്നെ തന്റെ കഥാപാത്രത്തെ കൃത്യമായി കാലത്തിൽ ബന്ധിക്കുന്നു. കാല്‌പനികതയുടെ അവസാനം: ആധുനികതയുടെ ആരംഭം. ഇത് ഒന്നുകൂടി അരക്കിട്ടുറപ്പിക്കാൻ തമിഴിലെ ഏതാണ്ട് അരഡസൻ എഴുത്തുകാരുടെ പേരുകൾ കൂടി ഉദ്ധരിക്കുന്നുണ്ട് ശ്രീ രാമസ്വാമി.

ഈ കഥ നമ്മളോടു പറയുന്നത് രോഗിയായ ബാലുവാണ്. അയാൾ ജെ. ജെ എന്ന ധിക്കാരിയുടെ സാഹിത്യവുമായി പ്രണയത്തിലാണ്: ഇതുപോലുള്ള എഴുത്തുകാർ എന്തുകൊണ്ടു തമിഴിലുണ്ടാകുന്നില്ല എന്നു വേവലാതിപ്പെടുന്നവനാണ്. എന്നാൽ തന്റെ ആരാധനാപാത്രത്തെ ഒരിക്കൽ ഒരുനോക്കു കാണാനും, ഒന്നിടപഴകാനും മാത്രമേ ബാലുവിനു കഴിയുന്നുള്ളൂ: കോട്ടയത്തെ ഒരു സാഹിത്യ സമ്മേളനത്തിൽ വച്ച്. രണ്ടാമതൊരു അവസരം ഒത്തുവരുമ്പോഴേക്കും മരണം ജെ. ജെ യെ അപഹരിക്കുന്നു.

ജെ. ജെ യുടെ സുഹൃത്തുക്കളുമായി ബാലു നടത്തുന്ന കൂടിക്കാഴ്ചകളിൽ നിന്നാണ് പിന്നെ അയാളെക്കുറിച്ചുള്ള ചിത്രം ഉരുത്തിരിയുന്നത്. ജെ. ജെ മുൻപേ പറന്ന പക്ഷിയാണ്. ബാലുവിന്റെ വാക്യങ്ങളിൽ:
ഉണ്മയെ അന്വേഷിച്ചു പോകുന്നവന് ദു:ഖം തന്നെയാണ് സമ്മാനമായി എപ്പോഴും ലഭിച്ചിട്ടുള്ളത്. അവഗണനകൾ, ഇച്ഛാഭംഗങ്ങൾ, ആട്ടിത്തുരത്തലുകൾ, അവമാനപ്പെടുത്തലുകൾ ഇവ ഇങ്ങനെ ആയിരിക്കുമ്പോൾ - എത്ര വേദനയാകട്ടെ - എത്ര സങ്കടമാകട്ടെ - ചില പറവകൾ സൂര്യനു നേരെ പറക്കുന്നതിനെപ്പറ്റി എന്തു പറയാൻ? രാപ്പകൽ ഒഴിവില്ലാതെ, ഇളവില്ലാതെ അവ പറന്നു കൊണ്ടിരിക്കുന്നു. മുമ്പേ പോയ പറവകൾ കരിഞ്ഞു വീഴുന്നത് കണ്ണാൽ കണ്ടിട്ടും കൂടുതൽ വേഗത്തിൽ പറക്കുന്നു. പറക്കലേ കരിയുന്നതിനാണ് എന്ന അനുഭൂതിയിൽ ചിറകടിക്കുന്നു. കരിഞ്ഞ ഉടലുകൾ മണ്ണിൽ വന്നുവീഴുമ്പോൾ പുരപ്പുറത്തെ കോഴികൾ ചിരിച്ചേക്കും. കാക്കകൾ ചിരിച്ചേക്കും. തെല്ല് ക്രൂരമായ കൊടുമയായ ചിരിതന്നെ. അവയുടെ മുന്നിൽവച്ച് അപ്പോഴും സൂര്യനെനോക്കി പറക്കാൻ പുറപ്പെടുന്ന പറവകളുടെ ചിറകടിതന്നെയാണ് ആ ചിരികൾക്കുള്ള ഉത്തരം.
സാഹിത്യലോകത്തെ നാട്യങ്ങളേയും പൊള്ളത്തരങ്ങളേയും ഉൾക്കൊള്ളാൻ കഴിയാത്ത സത്യസന്ധമായ സർഗ്ഗാത്മകതയാണ് ജെ. ജെ യുടെ ശത്രു. അയാളുടെ കഴിവുകളെ മനസ്സില്ലാമനസ്സോടെ അംഗീകരിക്കുമ്പോഴും ഈ ഉണ്മയുടെ വെള്ളിവെളിച്ചത്തെ ഒരുപോലെ ഭയക്കുന്നുണ്ട് കാല്പനിക കഥാകാരനായ തൃശ്ശൂർ ഗോപാലൻ നായരും, പുരോഗമന സാഹിത്യകാരനായ മുല്ലക്കൽ മാധവൻ നായരും.

ഒടുവിൽ ജെ. ജെ പങ്കെടുക്കേണ്ടിയിരുന്ന ചെന്നൈയിലെ ഒരു സമ്മേളനത്തിൽ ബാലു എത്തിച്ചേരുമ്പോൾ അയാൾ കരൾവീക്കം മൂലം അത്യാസന്നനിലയിൽ കിടപ്പിലാണെന്നു മനസ്സിലാക്കുന്നു: അതേ സമ്മേളനത്തിൽ വച്ചു തന്നെ, തലേന്നും പിറ്റേന്നുമായി, കമ്യുവിന്റേയും ജെ. ജെ യുടേയും മരണവാർത്തയെത്തുന്നു. ബാലുവിന്റെ നിർബ്ബന്ധത്താൽ ജെ. ജെ യെക്കുറിച്ച് സമ്മേളനം അനുശോചനം രേഖപ്പെടുത്തുന്നു: എന്നാൽ അത് പറയുന്നതോ, അയാളെക്കുറിച്ച് യാതൊരു വിവരവുമില്ലാത്ത തമിഴ് കഥാകൃത്ത് "ശിട്ടുക്കുരുവി" എന്ന രാധാഭാസ്കരൻ! തനിക്ക് പരിചയമുള്ള പത്രത്തിൽ ജെ. ജെ യെപ്പറ്റി ഒരു കുറിപ്പിടാനുള്ള ബാലുവിന്റെ ശ്രമം ''ജേ. ജേ" എന്നത് "ചേ. ചേ" എന്ന് തമിഴ് രീതിയിലെഴുതണമെന്ന പത്രാധിപരുടെ കടുംപിടുത്തം മൂലം അലസിപ്പോകുന്നതോടെ തമിഴിൽ തന്റെ ആരാധനാമൂർത്തിയെ പരിചയപ്പെടുത്താനുള്ള അയാളുടെ ശ്രമങ്ങൾ തൽക്കാലം അവസാനിക്കയാണ്. പിന്നെ ബാക്കിയാവുന്നതാണീ പുസ്തകം.

* * *

സാധാരണ ആഖ്യായികകൾ പോലെ അലസ വായനയ്ക്കുതകുന്ന ഒരു പുസ്തകമല്ലിത്. ജെ. ജെ യിലൂടെ ഗ്രന്ഥകാരൻ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നത് അസ്തിത്വത്തിന്റെ തീവ്രദു:ഖത്തിൽ വേവുന്ന, പ്രവാചക തുല്യനായ ഒരു കഥാപാത്രത്തെയാണ്. (അയാളുടെ ആശാരിപ്പണിയും മീൻപിടുത്തവും ക്രിസ്തുവിലേക്കുള്ള നേരിട്ടുള്ള സൂചകങ്ങളാണ്.) ആ കണ്ണുകളിലൂടെ നോക്കുമ്പോൾ ലോകം പലപ്പോഴും ഒരസംബന്ധനാടകമാകുന്നു. മലയാള-തമിഴ് സാഹിത്യലോകത്തെ കപടക്കസർത്തുകൾ കോമാളിക്കളികളാകുന്നു (ചിരിക്കാൻ ഒരുപാടു വകയുണ്ട്, ഈ നോവലിൽ). എന��നാൽ ഈ അർത്ഥശൂന്യതയിലും എവിടെയോ ഒരു നിഷ്കളങ്കതയുടെ കണ്ണുനീർത്തുള്ളി തുളുമ്പി നിൽക്കുന്നു.

അതിഗംഭീരമായ രചന - ആറ്റൂർ രവിവർമ്മയുടെ വ��വർത്തനവും ഏറെ ഹൃദ്യം.
Profile Image for Kavitha Sivakumar.
353 reviews60 followers
March 1, 2021
Yet another one of a kind book. Though I started reading this book in January 2019 after getting this book as Santa gift, and thoroughly enjoyed reading it, for some reason I was unable to pickup until this month.

This is a bit weird book. Sometimes reading about the circumstances that made the author write a book helps in understanding the book better. I learned that JJ was not a real person. Since I knew it, whenever I read about author’s proclamation of being die-hard fan of JJ, I felt a little unrealistic/fake.

However, the concept and the execution of the book hooked me. It discuss about the authors, their ideologies, their perceptions of how a writing should be, the hypocrisies of some authors, etc. Also, the second part of the book is excerpts from JJ's diary. This is where my conflict is. Knowing there is no such person, these jottings are essentially the author's own point of view. Though I like JJ's aka author's ideology, the conflict just prevented me from enjoying it in full.
Profile Image for P..
528 reviews124 followers
April 12, 2020
தமிழ் இலக்கியத்தில் classic புதினங்களைப் புரட்டினால், அவை பெரும்பாலும் உயர்சாதியினரின் குடும்பக்கதைகளாகவோ அல்லது பத்திரிக்கைகளில் வந்த தொடர்கதைகளாகவோ தான் இருக்கின்றன (அரிதான விதிவிலக்குகள் உண்டு). பொழுதுபோக்கிற்கு ஏற்றவையாக இவை இருந்தாலும், புதினம் என்று அழைக்கப்படுவதற்கான கூறுகளும் புதினங்கள் ஏற்படுத்தும் நிறைவும் இக்கதைகளில் இல்லை. அக்கூறுகளுக்கு உட்படும் புதினங்கள் பெரும்பாலும் 90களின் ஆரம்பத்தில் வரத்தொடங்கின.

இந்த தொடர்கதைகள் ஏற்படுத்திய அறிவுத் தேக்கநிலையில், 1981ல் இப்புதினம் வெளி வந்தபோது ஓர் புதுமை மிளிறும் முக்கியமான படைப்பாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். நவீனத் தமிழ் இலக்கியத்தின் முதல் ஒழுங்கான புதினம் இதுவா? தெரியவில்லை. ஆனால், புளியமரத்தின் கதையில் நெருடிய தொடர்கதைத்தன்மை ஜேஜேவில் இல்லாதிருப்பது ஆசுவாசமளிக்கிறது.

ஜேஜேவின் இறந்த நாள் தொட்டுத் தொடங்கும் கதை இரு பாகங்கள் கொண்டது. முதல் பாகம், ஜேஜேவின் எழுத்தால் தீவிரமாகக் கவரப்பட்ட பாலு எனும் இளம் எழுத்தாளன் ஜேஜேவின் வாழ்வைப் பற்றியும் அவன் இயங்கிய சூழலைப் பற்றியும் அவனின் தத்துவங்களைப் பற்றியும் எழுதும் குறிப்புகள். ஜேஜேவைப் பற்றி மட்டும் அல்லாது, தமிழ் இலக்கியச்சூழல் பற்றியும் பாலுவின் வாழ்க்கையைப் பற்றியும் குறிப்புகள் இடம்பெறுகிறது. இரண்டாம் பகுதி, ஜேஜேவின் நாட்குறிப்புகள்.

குறிப்புகளின் மூலம் ஜேஜேவின் மொத்த வாழ்வையும் கலையையும் உணர்த்த முற்பட்ட இப்புதினத்தின் நோக்கம் மிகவும் கவர்ச்சியானது. இந்தியாவில் பிறமொழி இலக்கியப் பரிச்சயத்தின் முக்கியத்துவமும் தமிழ் மற்றும் மலையாள இலக்கிய உலகங்களின் நிலைகள் பற்றிய விவாதங்களும் நிறைந்துள்ளது. எதிர்பாராத அளவு நகைச்சுவையும் உண்டு.

முதல் 50 பக்கங்கள் உற்சாகமாகத் தொடங்கினாலும், சிறிது சிறிதாக இக்கதையில் நான் ஆர்வமிழந்தேன். குறிப்பாக, இரண்டாம் பாகத்தில். தத்துவம் தத்துவம் தத்துவம் என்று வியாக்கியானங்கள் சிதறிக் கிடக்கும் இப்புதினம் தன் தத்துவ பாரத்திற்கு ஈடுகொடுக்கப் போதுமான ஈரம் இல்லாமல் தன் அழுத்தத்திற்கே இரையாகிறது.

ஜேஜேவின் வாழ்வில் அவனுடைய முழுமுதற் தேடல் "உண்மை"யைப் பற்றி. இவ்வாறு உண்மையைத் தேடி அறிவதற்கு அவன் பல தத்துவ நூல்களின் உதவியை நாடுகிறான். மேலோட்டமாக சில சுவாரஸ்யமான விவாதங்களை முன்வைக்கிறான். சமூகத்தைப் பற்றி வளவளவென போய்க்கொண்டே இருக்கிறான். இவ்வாறான இவன் தேடலில் மேற்கத்திய சிந்தனைகளை உச்சமாகக் கருதி விவாதிக்காமல் அவன் ஏற்றுக்கொள்வது மிகப்பெரும் நெருடல். மனித சமூகம், குறிப்பாக இந்திய சமூகம் குறித்த சிந்தனைகளில் ஆழ்ந்திருப்பவனுக்கு, அச்சமூகத்தின் ஒற்றை மாபெரும் பிரச்சனையான சாதியைப் பற்றி ஒரு கருத்தும் எழாதது அவன் மொத்த அறிவாளித்தனத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. சாதி மட்டுமல்லாமல், ஆண்−பெண் ஏற்றத்தாழ்வும் அவனுக்குப் பெரிதாகப் படவில்லை. ஆணாதிக்கத்தையும் ஏற்றத்தாழ்வால் இயங்கும் ஒரு சமூகத்தையும் ஒரு அசைக்கமுடியா உண்மையாக ஏற்றுக் கொண்டு அவற்றின் மீது ஒரு கேள்வியைக் கூட தொடுக்காது, மனித மனத்தின் ஆழம், உயர்ந்த உண்மை அது இது எனப் பிதற்றுபவனை நாம் ஏன் ஒரு பொருட்டாகக் கொள்ள வேண்டும்? இக்கதையில் வரும் எவரும் தங்கள் சாதியின் மூலம் அடைந்திருக்கும் உயர்ந்த சமூக அந்தஸ்தை ஒரு போதும் ஒத்துக்கொள்ளாமல், சாதி எனும் ஒன்று இருப்பதைப் பற்றிய சிறிய அளவு ஞானம் கூட இல்லாமல் இயங்கிக்கொண்டிருப்பது அசட்டுத்தனமாக உள்ளது.

பாலு தன்னை ஜேஜேவின் பிரதியாக எண்ணி அவன் எழுத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் கொள்ளும் பரவசம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆனால் இந்த உறவு வளர்ச்சி பெறாமல் பாதி வெந்த நிலையிலேயே நின்று விடுகிறது.

முதற்பகுதியில் ஜேஜேவைப் பற்றி எழுப்பப்படும் பிரம்மாண்டமான பிம்பம், இரண்டாம் பகுதியில் அவன் நாட்குறிப்பைப் படிக்கும் போது நொறுங்குகிறது.
அதன் தட்டையான சிறப்பற்ற நிலை பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. கால்பந்தாட்டக்காரன், தச்சுவேலை தெரிந்தவன், அப்பட்டமான உண்மையை எல்லா சூழல்களிலும் உரைப்பவன் என பல பரிணாமங்கள் இருப்பினும், முதல் பகுதியின் ஜேஜேவைப் பற்றிய வர்ணிப்பிலிருந்து இரண்டாம் பகுதியில் ஜேஜேவின் நேரடியான எழுத்திற்குத் தாவும் போது, வர்ணிப்பு நிஜத்தின் நிழலாக இல்லாமல் நிஜத்தின் மிகைப்படுத்தலாக சுருங்கி ஏமாற்றுகிறது.

இக்குறைகள் இருப்பினும், சரிசமமாக இல்லாவிட்டாலும், ஜேஜே தமிழ் புதினங்களில் முக்கியமான முயற்சிகளில் ஒன்று. தொடர்கதைகளில் தேங்கிக் கிடந்த நம் இலக்கியம் அடைந்த முக்கியமான முன்னேற்றங்களில் முதன்மையானது ஜேஜே. அப்போதுள்ள தமிழ் இலக்கியத்தின் நேர்மையான விமர்சனம், இலக்கிய கோஷ்டி மோதல்களைப் பற்றிய நக்கல், தீவிரமான தத்துவ விசாரங்கள், பொதுவான கதைகளிலிருந்து விலகி, புதுமையாக ஒரு எழுத்தாளனின் வாழ்வு மூலம் நம் நாட்டின் அறிவுச்சூழலை ஆராயும் தைரியமான கதைக்கரு− குறைகளை மீறி ரசிக்க இந்நூல் கொடுக்கும் காரணங்கள் பல.
Profile Image for Gowtham.
249 reviews46 followers
March 26, 2022
என்னோடைய 24 வயதில் ஜே ஜெ சில குறிப்புகளை படித்திருக்கிறேன்,(Ageism என்று கருத வேண்டாம்) எத்தனை பொருத்தமான எழுத்து, தேடல் நிறைந்த மனிதனை தூண்டிவிடும் எழுது. நீட்சேவை படித்த போது கிடைத்த அக கிளர்ச்சிக்கு சற்றும் குறைவில்லாமல் ஜே ஜே வின் டைரி குறிப்புகளை படிக்கும்போதும் கிடைக்கிறது. எதன் மீதும் பிடிப்பற்ற சுதந்திர நிலையை இந்த 20களில் தான் அடைகிறோம். கேள்வி ஞானத்தின் உச்சம், துரு துருப்பின் உச்சம் என்றால் இந்த 20கள் தான். (சுகுமாரனும் அவரது 24 வயதில் தான் இந்நூலை படித்திருக்கிறார். )
இந்த சமூகம் அதன் மதப்பீடுகளால் நம்மை வளைக்க பார்க்கும், சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும், தனிமனித அபிலாஷைகளை பிடுங்கி எரிய முயற்சிக்கும். எதற்கும் நம்மை ஒப்புவிக்க கூடாது. சுயத்தின் மீதான உறுதி வேண்டும். அத்தனை தத்துவங்களையும் கோட்பாடுகளையும் அறிந்து வைத்திருக்கவேண்டும். தேடல் தீராமல் அலையவேண்டும். வாழ்வு முழுதும் எதையேனும் ஒன்றை தேடிக்கொண்டே திரிய வேண்டும். அறிவின் மீது நாட்டம் வேண்டும் .
என் அத்தனை மதிப்பீடுகளையும் ஜே ஜே உறுதியாக்கியுள்ளார். வாழும் வரை உடன் பயணிக்க போகிறது இந்த புத்தகம். என்னளவில் நவீனத்தின் உச்சமாக இந்த நூலை சொல்வேன் .
நீட்சேவை நினைவூட்டிய சுந்தர ராமசாமிக்கு நன்றி.


THE BEST
Profile Image for Marudhamuthu.
68 reviews12 followers
September 25, 2022
புரிந்து கொண்டேனா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம் இந்த நாவல் என் வாழ���நாள் முழுதும் என்னுடன் பயணிக்க போகிறது.
Profile Image for Sankara.
28 reviews21 followers
November 4, 2012
தமிழின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று. அறிவுத் தேடல்களின், ரசனைகளின், இலக்கிய வெளிப்பாடுகளின் தடத்தில் நின்று வாழ்க்கையின் பொருள் என்ன என்று சிந்திக்கத் தூண்டும் படைப்பு. சுந்தர ராமசாமி எல்லா தலைமுறை இலக்கிய வாசகர்களையும் வசீகரிப்பார் என்பதைப் பறைசாற்றும் ஒரு படைப்பு.
Profile Image for Dhulkarnain.
80 reviews2 followers
September 4, 2024
என்னை இந்த நாவல் பெரிதாக ஈர்க்கவில்லை. ஜே.ஜே என்ற கதாபாத்திரத்தைப் பற்றி பாலு கட்டமைக்கின்ற பிம்பமும் , ஜே.ஜேவின் நாட்குறிப்பில் சொல்லப்பட்டிருக்கின்ற விஷயங்களும் எதையோ பெரிதாக சொல்லவருவதுபோல் உருப்பெற்று இறுதியில் மேம்போக்காக முடிவு பெறுவதாகவே என்னால் பல இடங்களில் உணரமுடிந்தது.
Profile Image for Saravana.
23 reviews6 followers
April 6, 2019
'JJ-Sila kuripugal' starts as a tamil writer's obsession with a fictitious malayalam writer 'J.J'. But soon the reader will realise that the book is not about JJ at all. JJ is a tool that the author uses to explore a wide range of philosophical themes, emotions and experiences.

Pretense - This is one of the themes that recur at many places in the book. Balu talk about his childhood with his sister where they pretended a wooden doll to be a baby and took care of it. He also talks about pretending to hear his father's encounter with JJ as if it were the first time while his father pretended to tell as if it were the first time Balu hearing it. Pretense is powerful. It lets you put a curtain on the truth. Have we not pretended to get angry with our loved ones, only to seek more love and affection? Have we not pretended pain when a child hits us to induce empathy in it? Truth can be boring and sometimes painful. Take JJ for example, he had a spy glass to explore everything around him. Be it his mother or his lover, he scrutinized everything seeking truth in it. It only brought him misery. JJ was aware of it. He says 'what is the point of truth if you have lost everything in life?' in his diary. Yet he refuses to change his mind. This stark contrast between Balu and JJ is striking. May be Balu is pretending to be obsessed with JJ without even realising it! But that is not the point. Truth is nothing. What you believe to be truth is everything!

The spectrum of emotions that the book unleashes upon you can not be articulated by words. Still, I want to try and put it into words. One of the emotions that the author explores through JJ is the restlessness of a troubled mind. The inability and helplessness to cope with the randomness and uncertainty of life can make an atheist cower before god. Again, JJ is too adamant to do so. He doesn't want answers and hence he rejects the two possibilities that there is or isn't a god! Believing or rejecting god would mean that he has reached a conclusion and JJ knows very well that the conclusion does not make any sense if you try to build reasoning and arguments upon it. So JJ wants to believe in two other posibilities: 1. There might be god. 2. There might not be god. This lets him conveniently avoid reaching a conclusion and keep looking forever. Even this did not let JJ make peace. He fails constantly in his quest for trying to grab onto something in life. He sees only a dark future ahead. I should remind you that he feels all these while he has a loving wife and a beautiful child. :(

While these emotions make you rage within yourself, there is a certain calming tone in the narrative. The author describes the sunrise as the blood that oozes out of your finger nails. JJ is surrounded by people who really care about him-Aravindaksha Menon, for example. How many people do we have in life who cares about our philosophical struggles and how they might affect our personal life?

This mixture of emotions is sprinkled throughout the book. In the end, it leaves you with a raging calmness and you start searching why.
Profile Image for Vignesh Vijay.
2 reviews12 followers
August 25, 2017
*Not a review but my kuripugal*

This book has been with me for many years now, i have tried reading two times before but couldn't complete it, at one point i even felt it's not for me... But when I happen to read it now, I felt its greatness and insights... now I feel I should read it once in a while on the years to come... Of the few books I read this will be special...
Profile Image for Balaji M.
220 reviews14 followers
September 3, 2021
"ஜேஜே சில குறிப்புகள்" - சுந்தர ராமசாமி
**************************************

1981இல் முதல் பதிப்பு கண்ட புனைவு நாவல். ஜே ஜே என்ற கற்பனை எழுத்தாளனை உருவகித்து, அவனைப் பற்றிய குறிப்புகளாக பாலு என்பவரின் பார்வையில் எழுதப்பட்ட புனைவு நாவல்.
கேரளத்தில் இப்படி ஓரு எழுத்தாளர் உண்மையில் வாழ்ந்து முடித்திருப்பானோ என என்னும் அளவுக்கு தத்ரூபமாக புனையப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகளாக எழுதப்பட்டுள்ளது.

எழுத்தாளனின் வறுமை, சுயமரியாதை, அறச்சீற்றம், போன்ற அவனது நிலையினையும், அதனை தத்துவார்த்தங்களால் வகைப்படுத்தியும் எழுதியிருக்கிறார், திரு சுந்தர ராமசாமி. ஓவியர் பாஸ்கரன் என்பவரின் ஓவியங்களும் ஆங்காங்கே பதிக்கப்பட்டுள்ளது.

அந்த காலத்தில் புதுவிதமான இலக்கிய நடைக்கு வழி கோலிட்ட புதினம். இந்நாவலில் ஆழமான கருத்துக்களும் சித்தாந்தங்களும் விளக்கப்பட்டிருப்பதால், சற்றே ஆசுவாசம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது நமக்கு. ஆனால், எழுத்தாளர்களின் பார்வையில் இந்நாவல் சுவாரசியமானதாகவும், நல்லதொரு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய படைப்பாகவும் இருக்கலாம்.
இப்போது இல்லை என்றாலும் சில காலம் கழித்து படித்தால் ஓரளவிற்கு புரியலாம் நமக்கு. ஆனால் ஒன்று, அக்கால எழுத்தாளர்கள் பட்ட கஷ்டங்களை பட்டவர்த்தனமாக சொல்கிறது இப்புத்தகம்.


புத்தகத்திலிருந்து....

"மிகத் தெளிவான சந்தோஷம், ஓய்வு நிலையில் பெறக்கூடியது. கடல், அருவி, பள்ளத்தாக்குகள் இவை தரும் அந்த சந்தோஷம்"

"ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க, அது-அதற்கான இடைவெளிகள் வேண்டும். சில சமயம் காலத்தின் இடைவெளி., சில சமயம் தூரத்தின் இடைவெளி."

"ஆழ்ந்த வாசிப்பில் ஈடுபடுகிறவர்கள் தலை நிமிர்ந்து பார்க்கும் போது அவன் காட்சிக்கு புலனாக வேண்டியது மரங்களும் செடி கொடிகளும்"

"விளையாட்டுகளில் தோல்வி என்பது தோல்வியும் அல்ல; வெற்றி என்பது வெற்றியும் அல்ல;
விளையாட்டே ஒரு வெற்றி. தீவிரமாக, ஆத்மார்த்தமாக தன்னை மறந்து விளையாட வேண்டும். இவர்களுக்கு, உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வாழ்க்கை போலத்தான் விளையாட்டுகளும். ஒரு போட்டியில் தோற்று விட்டால், பாதர் கண்டபடி திட்டுகிறார். நான் சரியாக ஆடவில்லை என்கிறார். நேற்று அவர் சொன்னதில் உண்மை உண்டு. தோற்க நேற்று நான் ஆசைப்பட்டேன். இவர்கள் கொண்டாடும் வெற்றிமீது நான் வெறுப்படைகிறேன்"

"எனக்கு என்ன வேண்டும்? ஒருநாள் உணவுக்கு ஒரு பணம். மேனன் எப்போதும் அவருக்கு துணி எடுக்கும்போது எனக்கும் சேர்த்து எடுத்து விடுகிறார். எளிய சந்தோஷமான சூழ்நிலை வேண்டும். காலில்லாத ஒரு நார் கட்டில். ஒரு தலையணை. நீச்சலடித்து குளிக்க நதி. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நூல்நிலையம். ஆத்மார்த்தமான ஒன்றிரண்டு நண்பர்கள். கூராக எழுதும் ஒரு பேனா. இதற்குமேல் வருடத்திற்கு 1000 மைல் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் சுற்ற முடிந்தால், அது கடவுள் தந்த விசேஷ போனஸ்"

"சகல துன்பங்களையும் தன்னுடையதாக பார்ப்பது; தனது துன்பங்களை தன்னுடையவையாக அல்லாமற் பார்ப்பது. இவ்வளவுதான் விஷயம். சகல மேன்மைகளும் இதிலிருந்துதான் கொப்பளிக்கின்றன"
Profile Image for Sidharthan.
330 reviews1 follower
December 28, 2020
Being touted as one of the modern classics of Tamil literature, I had some expectations for this book. I had been warned that it might not be great, but the promise of the first few pages made me set my doubts aside. Of course, it didn't live up to this promise and I eventually ended up being disappointed.

The first thing that struck me was how interestingly this novel was structured. We are introduced to the character J.J. through the recollections of the writer and how J.J's writings impacted him. It soon follows the writer as he finds more things about J.J. through various people who knew him. Through this all, Sundara Ramasamy puts forth his own discourse about the times this was set in and discusses the eternal question - the meaning of life. It was a new way of structuring the writing and lived up to the idea of being post-modern.

In the second part, we leave this roundabout way and we get the direct diary entries of J.J. himself. I found the second part more palatable mainly because the philosophy was broken down into tiny nugget sized entries making it easier to read. The first part, although it began well, soon devolved into too many anecdotes and digressions through which the main idea seemed lost. I remember in particular this chapter where J.J. has an argument with another writer, but at the same time we also learn of a failed love affair and of his feelings towards charity. There are some thoughts of his professor who is ostensibly recollecting all this to the writer also thrown in for good measure. It just felt like too much and would have worked better if it had been spread more.

And the character of J.J. doesn't come across as being someone particularly likeable. It felt a little irritating to see him being so celebrated continuously and not be called out for some of his transgressions. I could see how this book was reflective of and perhaps shaped some of the cishet men of those times. I think the persona of J.J. was seen as goals for any artist or thinker. His character is glorified enough for it to have an impact.

Overall though, this is an interesting book worth a read.
Profile Image for Swami Nathan.
98 reviews2 followers
June 5, 2022
ஜே ஜே சில குறிப்புகள்
தமிழ் அறிவுஜீவி வாசகனாக அறியப்படவேண்டுமெனில், படித்திருக்க வேண்டிய ஒரு படைப்பு. பாரதி பாஸ்கர் கூறியதைப்போல, ஒரு புத்தகமே வாசகனை எந்த கதவுவரை உள்ளே விட வேண்டுமென தீர்மானிக்கின்றது. சில புத்தகம் அர்ச்சனை தட்டு விற்கும் கடை வரையே என்னை அனுமதித்து இருக்கின்றன. சில, கர்பகிரஹம் வரை. என்னங்க எப்படி இருந்தாலும் நாங்களும் பக்தர்கள் தானே!!
படிப்பதற்கும், உள்வாங்குவதற்கும் மிக மிக கடினமான ஒரு படைப்பு (பின்ன, ஜெயமோகனே சிலாகிக்கும் ஆள் என்றால் சும்மாவா) 200 பக்கங்களில் இத்தனை குழப்பத்தை எப்படி ஏற்படுத்த முடியும்? அதுவும் ஒரு பெரிய ஆளுமையான பாத்திரமோ, ஆழமான களமோ இல்லாமல்.

ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, சமூகத்தோடு ஓட்ட முடியாமல் கேள்வி கேட்டபடி வாழ்க்கை என்ற மிக மோசமான செக்கில் இழுபட்டு இளவயதில் மரணிக்கும் (விடுதலை னு வேணா வச்சிக்கலாமா) பாரதி போன்ற (அப்படி சொன்னா தப்பா?) ஜே ஜே என்பவனின் மூலம், நம் முன்னே கொட்டப்படும் கேள்விகள்… கடந்து போவதும், ஏமாற்றி போவதும், மூழ்கி போவதும், முக்தி பெறுவதும்….. வாசக வரம் அல்லது சாபம்…
Profile Image for Sangamithra.
58 reviews26 followers
April 18, 2022
பாரதியைப் போல தன் 39 ஆவது வயதில் மறைந்த ஜோசப் ஜேம்ஸ் என்னும் கற்பனையான மலையாள கலைஞனை, எழுத்தாளனை, விமர்சகனை, ஒரு தத்துவ ஞானியை தமிழுக்கு அறிமுகம் செய்வதே இப்புத்தகத்தின் கதைக்களம்.

முதலில் இந்தப் புத்தகத்தைப் படிக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் எதேச்சையாக புரட்டியபோது படித்த இரண்டு பக்கங்கள் முழு புத்தகத்தையும் வாசித்துவிட தூண்டிவிட்டன. உறுபசி நாவலின் விமர்சனத்தில் சொல்லியிருந்தேன் “சிந்தனா அவஸ்தை” எனக்கான சொல் என்று. இப்புத்தகம் முழுமையும் அப்படிப்பட்ட சிந்தனா அவஸ்தைகளால் நிரம்பியது தான். இப்புத்தகம் எனக்கானது. எனக்கான கண்ணாடி.

யாரெல்லாம் படிக்கலாம்?

நீங்கள் கனவுகளுக்குச் (முழுமையான வடிவம் பெற்று இருந்தாலும் இல்லை என்றாலும்) சொந்தக்காரராக இருந்தால்,
நீங்கள் விசித்திரப் பிறவி என்று பெயர் பெற்று இருந்தால்,
உங்களைப் புரிந்து கொண்டவர்கள் அல்லது புரிந்துகொள்ள முயற்சி செய்பவர்கள் சொற்பமான அளவிலேயோ / யாரும் இல்லாமலேயோ இருந்தால்,
புத்தகங்களோ, பயணங்களோ, தனிமையோ உற்ற நண்பராக இருந்தால்,
உண்மையான உணர்வுகளை முதன்மைப்படுத்துபவராய் இருந்தால்,
எப்போதும் ஏதாவது சிந்தித்துக் கொண்டே இருந்தால்,
உங்களுக்கு நீங்களே தத்துவங்களை உருவாக்கியும் ஒரு சமயம் அதை சரி என்றும், மறு சமயம் அது தவறு என்றும் மூளைக்குள் பெரும் போராட்டங்களை உருவாக்குபவராய் இருந்தால்,
உங்கள் மிதமிஞ்சிய அறிவினாலேயே நீங்கள் முடிவெடுக்க தடுமாறுவதும், தெளிவில்லாத மனநிலையில் இருப்பதும், இரவு தூங்க முடியாமல் ஆழ்ந்த யோசனையிலேயே இருப்பதுமாய் இருந்தால் அப்படியே எழுந்து அமர்ந்து நைட் லேம்பை ஆன் செய்து இப்புத்தகத்தை வாசித்து விடுங்கள்.
இப்புத்தகத்தில் எந்த விடையும் கிடைக்காது. இது ஒரு கண்ணாடி. தெளிவில்லாத மங்கலான கண்ணாடி. ஆசிரியர் அவர்கள் ஜே. ஜே – வை அறிமுகப்படுத்துவதாய் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். நான் இப்புத்தகத்தை பெரும் மகிழ்ச்சியுடன், ஆவலுடன் பரிந்துரைப்பதற்கு காரணம் உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த. இங்கு நீங்கள் தான் ஜே. ஜே.

இது புதுமையான வடிவம் கொண்ட புதினம். கதை சொல்லும் விதத்தாலேயே பக்கங்கள் வேக வேகமாக நகர்ந்தன. சிரிப்பை வரவழைக்கும் நையாண்டி வசனங்களும் உள்ளன.

மறைக்கப்படக்கூடாத உண்மை என்று என் உள்மனது சொல்வதால் இங்கு பகிர்கிறேன். ஜே. ஜே உண்மையான நபர் என்றே நான் நம்பி இருந்தேன் படித்த போதும், படித்து முடித்த பிறகும். ஐ அம் பீலிங் இக்நோரன்ட்.
Profile Image for Anbu.
86 reviews22 followers
August 9, 2011
This book JJ sila Kurippugal (JJ, Some Jottings), is one of most celebrated novels in Tamil literature. From what I know, this is the first ever post-modernist tamil novel.

It destroys all the formats of novel writing. Part one is like prologue for the part 2. As per the novel, the narrator Balu, a tamil writer, wanted to translate the diary notes, of a modernist Malayalam writer Joseph Joice (JJ),he was able to procure. Whole first part is about how Balu knows about JJ and who are all he met for writing the book about him. The second part is the translation of Diary Notes of JJ.

While reading the book, you would never think it's a fiction. It is so real that many still arguing the narrator Balu is none but the author,Sundara Ramasami, himself, and the JJ is actually the famous malayalam writer, CJ Thomas. I am not sure how much of it is true.

But one thing is sure, this book definitely destroys all the things you would think of a novel and makes you wonder whether a novel can be written like this also. A great work. Now I could realise why Sandara ramasami is considered as a master of modern tamil writings and why this book is being referred as a milestone in changing the style of tamil writing in many ways.
Profile Image for Bharathy.
5 reviews2 followers
October 16, 2012
சுந்தர ராமசாமி இந்த உண்மையான வாழ்க்கைக் கூறுகளை அங்கதமாக மறு அமைப்புசெய்திருக்கிறார். அதுவே அவரது படைப்பூக்கம். அதன் வழியாக தமிழ்பண்பாட்டுச் சூழல் மீதான விமரிசனமாக இந்நாவலை உருவாக்குகிறார். உண்மையான வாழ்க்கையை திரிபுபடுத்தி எழுதுவது, அங்கதம், சிதறுண்ட வடிவம் ஆகியவை காரணமாக தமிழில் பின் நவீனத்துவ எழுதுமுறையின் முதல் உதாரணமாக விளங்குகிறது ஜே.ஜே.சிலகுறிப்புகள். அது நவீனத்துவத்தின் உச்சம். கடைசிப்படி. ஆகவே இயல்பாக பின் நவீனத்துவ எழுத்தின் முதல் படியும் கூட. - எழுத்தாளர் ஜெயமோகன்.
Profile Image for Krishnan Raghavan.
9 reviews
January 17, 2019
One has to read and re-read Sundhara Ramasamy’s J. J. Sila kurippugal
If someone is looking for a conventional story, they will be disappointed. But if you’re are game to read an explosion of thoughts, this is great
Sample- மன மாற்றம் நிகழாத தலைமை, நேற்றய சரித்திரக் கொடுமைகளை அம்பலப்படுத்தி, அதன் மூலமே நற்பெயர் பெற்று அதே கொடுமையை இன்று செய்து , பதவியை உறிஞ்ஞிக்கொண்டு கிடக்கும்
It is relevant and contemporary
Profile Image for Meenakshi.
19 reviews15 followers
May 9, 2013
முதலில் எழுத்து நடை கடினமாக இருந்தாலும் படிக்க படிக்க எளிதாகிவிட்டது. நான் படிக்கும் சு. ரா. வின் முதல் புதினம். அல்பர் காம்யு மற்றும் இருத்தலியல் அறிமுகம் இந்த புத்தகத்தின் வழியாக கிடைத்தது. முப்பது வருடங்களுக்கு முன்பு வெளிவந்தாலும் இன்றைய நவீன வாழ்வுமுறையை சுட்டிக்காட்டும் புத்தகம்.
Profile Image for Vairamayil.
Author 0 books22 followers
May 28, 2022
It’s an experience! On of the best I’ve read so far. Topics that was discussed on the novel amazes me. The way he broke the regular pattern of a novel, made me a bit boring on the beginning but that kept me going after few pages.
192 reviews9 followers
December 30, 2020
A very unique style of writing...

A very good conversation between the left and right writers...
Profile Image for Praveen.
3 reviews1 follower
Read
January 17, 2024
I have watched a compelling documentary on Su Ra in YouTube as well as I have read an interview of Su Ra in a book form, both of which I think have spoilt the reading experience of this book for me. The ideas Su Ra expressed in his interviews were interesting and honest. For example, Su Ra says he was heavily influenced by Marxism in his early stages, but then he dint think even it is an ideal solution to address all the problems of the society because people hide behind the façade of these ideologies. Su Ra is also an ardent and opiniated individual when it comes to what is literature. He dints like any popular writers of his time; he believed Kalki's work did not have any serious literary value nor does it help in improving the society. All these themes recur throughout the novel in the first part. What is being then produced in the novel is a confused rambling of these ideologies than a story which comes together as a whole. I am saying this after finishing the 1st part of the novel. I have after careful thought finally decided to skip the 2nd part which majorly covers JJs journal. I found his interviews and the documentary more compelling than this book. What is interesting about the novel is that it is a critique of Tamil society although it is set in Kerala as told by SuRa himself. Every society can be critiqued but the book dint work for me because I dint find any elements within the book which makes for a compelling story. Maybe SuRa's experience of lack of meaning within the society have not inspired him enough to write a compelling story.
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books173 followers
December 31, 2023
#238
Book 79 of 2023- ஜே.ஜே: சில குறிப்புகள்
Author- சுந்தர ராமசாமி

“ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும்.சில சமயம் காலத்தின் இடைவெளி.சில சமயம் தூரத்தின் இடைவெளி.”

ஜே.ஜே என அழைக்கப்படும் ஜோசப் ஜேம்ஸ் என்பவர் ஒரு புரட்சி எழுத்தாளர். புரட்சி எழுத்தாளர்களின் ஆசானாகவே இவர் போற்றப்படுகிறார்.மலையாள இலக்கியத்தை உலக இலக்கியத்தின் தரத்திற்கே உயர்த்தியவர்.ஆங்கிலத்தில் இவர் எழுதியிருந்தால் இவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்றெல்லாம் இவரை இலக்கிய உலகில் போற்றுகிறார்கள்.

உலகம் ஸ்தம்பிக்கிறது, முன்னேறுகிறது, பின்வாங்குகிறது, எல்லாமே தளராத தன்முனைப்பு முன்மொழிவுகளால்.இதை ஆழமாக உணர்ந்து தன் கருத்துக்களை முன் வைக்கிறார் ஜே.ஜே. இவரைப் மற்ற ஏன் இலக்கிய உலகமும்,தமிழ் வாசகர்களும் அறிய வேண்டும் என்று தொடங்குகிறது இந்த புத்தகம். சிந்திக்கும் மனிதனுக்கு பாஷை உண்டு. உண்மையின் பாஷை இது. ஜே.ஜே அதைத் தேடியவன்’ என்கிறார் சுந்தர ராமசாமி.

இதை படிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலே இது நாவலா,கட்டுரையா என்ற சந்தேகம் எழுந்தது.அப்படியே படிக்காமல் மூடிவைத்துவிடலாமா என்றெல்லாம் தோன்றியது..ஆனாலும் ஒரு curiosity,இது ஏன் இலக்கிய உலகில் கொண்டாடப் படுகிறது! இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னும் ஏன் இந்த புத்தகம் இவ்வளவு பேசப்படுகிறது என்பதை அறிந்துக் கொள்ளவே தொடர்ந்து படித்தேன்.
கதையை முன்னிறுத்தி விரிவடைவது தான் நாவல் என்றில்லாமல் மனிதர்கள்,அவர்களின் எண்ண ஓட்டங்கள்,கருத்துகள் அவற்றை முன்னிறுத்தியே நகர்கிறது இந்த நூல். ஒரு அறிவார்ந்த தேடல் நம்முள் இது ஏற்படுத்தும்.

முதல் பாகத்தில் ஆசிரியரின் பார்வையில் ஜே.ஜே. இரண்டாம் பாகத்தில் ஜே.ஜே வின் டைரி குறிப்புகள். “புரியாத எழுத்தில் இரண்டு விதம். ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக்கூடியது. மற்றொன்று ஆர்வம் ஏற்படுத்தக்கூடியது. ஜேஜே இரண்டாவது வகையைச் சார்ந்தவன்”. இந்த புத்தகம் படிக்க படிக்க படிப்படியாகத் தான் நம்மால் புரிந்துக் கொள்ள முடியும். நிறைய யோசிக்கச் செய்யும் இந்த புத்தகம்.

உண்மையைக் காண தைரியமில்லாதவன் X உண்மையைத் தேடுபவன்-இந்த இரண்டு வகை தான் மனிதர்கள்! உண்மையை உண்மையாய் தைரியமாய் தேடியவன் தான் ஜே.ஜே!
Profile Image for Sivasankaran.
60 reviews9 followers
July 23, 2021
ஜே.ஜே: சில குறிப்புகள்
சுந்தர ராமசாமி
காலச்சுவடு பதிப்பகம்

ஜே.ஜே பயணம் கொள்ளும் இலையினைப் போல நிறைய ததத்துவங்கள், இதனிலுள்ள முரண்பாடுகள் என சாகும் தருவாய் வரை நிறைய பேசிக் கொண்டே வருகிறான். ஜே.ஜேயும், ஆல்பர்ட் காம்யூவும் மிக நெருக்கமான ஒரு உறவில் இருந்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது. உறவு என்று வரும் போது வார்த்தைகளினால் ஏற்படுகின்ற ஸ்பரிசம் பின்னாளில் ஆல்பர்ட் காம்யூவின் எழுத்துக்களை விட்டு நீங்க முடியாத ஒரு தன்மையை ஜே.ஜே அதீதமாய் உணர்ந்து என்னையும் ஒரு வழி ஆக்கிவிட்டான்.

நல்ல வேளை என்னால் ஜே.ஜேவின் கதைகளை படிக்கமுடியவில்லை மாறாய் ஜே.ஜேயைப் பற்றி பிறர் கூறிவது, இவன் எழுதி வைத்த நாட்குறிப்பு என தான் படிக்க முடிந்தது. இதை ஒரு வகையில் துளியளவு நன்மையென கருத முற்பட்டாலும், கடலளவு மனதில் எதிர்பார்ப்பினை தூண்டிவிட்டது; ஜே.ஜேவின் கதைகளை நோக்கி. இதனை உணர்ச்சிமுனைப்பில் படித்து வந்தால் மனம் ஒரு வித பித்த நிலையை அடையும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனெனில், ஆல்பர்ட் காம்யூவின்
' அந்நியன் ' நாவல் கொடுத்த பாதிப்பு பல வருடங்கள் கடந்தும் இன்னும் என்னைவிட்டு நீங்காது இருக்கிறது. அந்நியன் படித்த ஒவ்வொருவரும் உணர்வது, " இந்த புவி நிறைய மனிதர்களை சுமந்து கொண்டு தினந்தினம் சுழல்கிறது. அதில், நம்மை போல அந்நியன் இருக்கின்றானா, இல்லை அந்தியமாக உணரப்படுவது மனிதர்கள் கொண்டுள்ள தருக்க நிலைக்கு எதிரானவையா? என பல கேள்விகளோடு தான் அலைந்து திரிய வேண்டி வரும். இந்த ஜே.ஜேவை, அந்த மெர்சால்ட் உடன் ஒப்பிட முடியாது.

மெர்சால்ட், தன் நிலையை நன்கு உணர்ந்தவன, இதனால் தான் மரணம் நெருங்கும் தருவாயிலும் சாதாரண மனநிலையில் கடந்து இன்னும் நம்மை ஆட்டிபடைக்கிறான்.
ஜே.ஜே, ஒரு ஓவியன், ஒரு எழுத்தாளன், ஒரு வகையில் ஆளுமையும் கூட, இளமை பருவத்திலே குழப்ப நிலையை நோக்கி கேள்விகளாய் எழுப்பி, எழுப்பி ஒரு சர்ரியல் ஓவியமாக நடமாடுகிறான்.

ஜே.ஜேவை, ஒரு சர்ரியல் ஓவியமாக கருதலாம் என்னு நான் சொல்ல காரணம்; இவன் காரணங்களால் ஆனவனல்ல, கேள்விகளால் ஆனவன். இவனை ஓவியங்களில் இருந்து எழுத்தை நோக்கி பயணம் புரிய வைத்த பேராசிரியர்க்கே இவனை பற்றி கவலைகள் தான் நிரம்பி வழிந்த வண்ணம் இருக்கிறது. ஆக, எனக்கும் கூட, சில கவலைகள் உள்ளன்.
" காலத்தின் கதியில் மிக மோசமான கட்டத்தில் வந்து சேர்ந்திருக்கிறேன். இயந்திரங்களால் பிழியப்பட்டு, கனவுகள் வெளியே வழிந்து போனதில் இறுகிப்போன சக்கை மனங்கள். என்னால் இவர்களுடன் உறவாட முடியாது. கொஞ்சம் கனவுகள்; கொஞ்சம் அசட்டுத்தனம்; ஏதோ கொஞ்சம் புத்தி. இப்படி இருந்தால் தான் என்னால் சமாளித்துக்கொண்டு போக முடியும். வயிற்றில் அடித்தால் மனிதன் பொறுத்துக் கொள்வான். ஆனால் அவன் கனவுகளைத் தட்டிப் பறிக்க ஒரு நாளும் விடமாட்டான். "
ஜே.ஜேயினை சமகால எழுத்தாளர்களில் ஒருவனாக நினைத்து என் மனம் பிதற்றுகிறது.

ஜே.ஜேவை பொறுத்த வரையில் ஒரு தத்துவத்தை அடிப்படையாக வைத்து இயங்கும் மனிதன், கொஞ்சம் பெயர் வாங்கிய மனிதன், அவன் தான் அரசியல்வாதி மற்றும் பலர் ஏமாற்றியும், ஏமாற்றப்பட்டும் கிடப்பதை நினைத்து வருத்தம் கலந்த சினத்தினை வெளிப்படுத்துகிறான். ஜே.ஜேவுக்கு என இருக்கும் கொள்கை, சித்தாந்தம் பற்றி பேச நினைத்தால், " மறுபக்கம் பார்க்காது ஒன்றைப் பார்ப்பதால் கிடைக்கும் தெளிவு எனக்கு வேண்டாம். இரண்டையும், இருபதையும், முடிந்தால் அவற்றுக்கு மேற்பட்ட பக்கங்களையும் பார்த்துக் குழம்பி, அவஸ்தைப்பட்டு, அழிந்துப் போக பிறந்தவன் நான் " எனக் கூறி நம் வாயை அடைத்து விடுவான்.

இது தமிழில் பின்நவீனத்துவ யுத்தியில் எழுதப்பட்ட நாவல் என்று இதனை வாசிக்கும் முன் பலர் என்னிடம் கூறியிருந்தார்கள். ஒரு வகையில் இதனை பின்நவீனத்துவ வரிசையில் சேர்க்கலாம். கதையின் ஓட்டம், கதையே இன்றி வயலில் பாய்ச்சப்பட்ட தண்ணீர் எழுப்பப்பட்ட மணல்கட்டிகளை இடித்து உடைத்து நினைத்த போக்கில் நின்று நிதானமாயும், சற்று வேகமாகவும் போய்க் கொண்டிருக்கிறது. கதையே புலப்பபடவில்லை என்பதால் மட்டும் இது ஒரு பின்நவீனத்துவத்தில் சேர்ந்துவிடாது மற்றும் இது ஒரு குறையும் இல்லை்.
உதாரணத்திற்கு, Synecdoche, New York என்னும் ஆங்கில படத்தினை கண்டிப்பான முறையில் பின்நவீனத்துவ வரிசையில் சேர்க்கலாம். இதிலும், ஒரு நாடகாசிரியரின் வாழ்க்கையை நிஜம், புனைவு, கனவு என நிறைய அம்சங்களுடன் பின்னி பிணைந்து ��ன்றாக சிறப்பான முறையில் எடுக்கப்பட்டிருக்கும்.
ஜே.ஜே வேறுபடுவது, இவனைப் பற்றி இவன் பேசுவதை விட, மற்றவர்கள் இவனைப் பற்றி நிறைய சிந்தனைகளை ஆக்கப்பூர்வமாக முன்வைக்கிறார்கள். இதுவெல்லாம், பல விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இப்புத்தகத்தை முதன் முதலில் வாசிக்க தொடங்கிய போதே நான் இதனால் ஈர்க்கப்பட்டேன். ஒரு எழுத்தாளனை நேசிக்கும், விமர்சிக்கும், அளவு கடந்து ஸ்பரிசத்தோடு பார்க்கும் ஒரு ரசிகனை, ரசிகனின் ரசனையை இதில் நன்கு உணர முடிகிறது. பாலு என்கிற ரசிகன், தீவிர வாசகன்; ஜே.ஜேவிற்கும் தனக்குமான உறவை பத்து வயதில் இருந்து சொல்ல ஆரம்பிக்கிறான். ஜே.ஜேயின் கடைசி தருணங்களில் அவனுக்கு ஏற்படும் மனக்கசப்புகள், மனப்போராட்டங்களை படிக்கும் போது ஆழ்மனது எனக்குள்ளும் பதறி துடிக்கிறது.
ஏனெனில், நானும் ஒரு எழுத்தாளனை அளவு கடந்து நேசிப்பவன் தானே. இன்னும் சொல்லாப்போனால், Oscar Wilde, Albert Camus, Dostoyevsky, பிரபஞ்சன் அவர்களின் கதைகளில் உலாவும் ஒரு பாத்திரமாக நான் இருக்க வேண்டும் என நினைத்ததுண்டு.

ஜே.ஜே வளர்ந்த விதத்தில் எளியவனே, சொல்லால், கேள்விகளால், தத்துவங்களை உடைத்து பேசுவதில் நம்மை ஒரு வழி ஆக்கிவடுவான்.

#சிவசங்கரன்
Profile Image for Sakthi Santhosh.
10 reviews
February 17, 2025
Though this book discusses many thoughts and philosophies, it is boring most of the times. Some ideas discussed are really interesting and thought provoking. Few incidents are explained very well in the book. But i will not recommend this book for the few good things in the book. I kind of got a reading slump while reading this book. First 150 pages was good and manageable but after that comes the notes of the esteemed writer mentioned in the book. The notes will touch many topics, ideas and situations. Sometimes interesting, sometimes it will take time to understand. Even after we understand the things that are told, it is not worth to go through this full book for that.
Profile Image for Sathiyendran Rajamani .
18 reviews1 follower
April 27, 2023
ஆகச்சிறந்த படைப்பு...

மறுபக்கம் பார்க்காது ஒன்றைப் பார்ப்பதால் கிடைக்கும் தெளிவெனக்கு வேண்டாம்.இரண்டையும் இருபதையும் முடிந்தால் அவற்றுக்கு மேற்பட்ட பக்கங்களையும் பார்த்துக் குழம்பி அவஸ்தைப்பட்டு அழிந்துபோகப் பிறந்தவன் நான்.
Page 29

ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும்.சில சமயம் காலத்தின் இடைவெளி.சில சமயம் தூரத்தின் இடைவெளி.
Page 77

மௌனம் உன்னதமானது.அது கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது.கேள்வியைச் சீரழிக்காமல் பார்த்துக்கொள்கிறது.பதில் உளறல்கள் கேள்வியைத் துவம்சம் செய்து விடுகின்றன. சரியான கேள்விகள் அபத்தமான விடைகளின் குவியல்களில் அகப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிறுமாய்ப் போய்விட்டன.நான் ஒரு போதும் அதைச் செய்ய மாட்டேன்.
Page 93

உண்மை பயங்கரமானது.அது மனிதனைத் தனிமைப்படுத்திவிடுகிறது.உறவுகளை ஈவிரக்கமின்றி துண்டித்துவிடுகிறது.
Page 112

ஒருவன் கைமாற்றி வைத்த பொருளைத் தேட ஆரம்பிக்கும் போது, என்னால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை.
Page 133

கனவுகளுக்கான விளக்கங்கள் கூறும் புத்தகங்களைப் படித்துப் பார்த்தேன்.ஒன்றும் தெளிவாக இல்லை.நனவுகள் பற்றிய விளக்கங்களே குழம்பிக்கொண்டிருக்கும்போது கனவுகள் பற்றிச் சொல்வானேன்.
Page 135

உட்கார இடம் பிடிக்கும் முயற்சிகளில்,பேருந்துகளில்,விருந்துகளில் பெரிய மனிதர்கள் சீரழிந்து சிறுத்துப் போவதைப் பார்க்கிறேன்.
Page 195

தூங்க முடியாத இரவுகள் அளிக்கும் தண்டனையின் கொடுமை போல் வேறொன்றுமில்லை.
Page 200

21072018.
Profile Image for Moulidharan.
95 reviews18 followers
June 5, 2024
ஜே .ஜே. சில குறிப்புக்கள்

ஆசிரியர் : சுந்தரராமசாமி
புனைவின் உண்மை
224 பக்கங்கள்
காலச்சுவடு பதிப்பகம்

ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையிலும் சரி , தன் வேலையிலும் சரி ஒரு நாள் சலிப்பு தட்டிவிடும் . இதற்கு இலக்கியவாதிகளும் , ஞானிகளும் , கலைஞனும் கூட விதிவிலக்கு அல்ல . அந்த சலிப்புகளில் இருந்து மனிதன் தன்னை விடுவித்துக்கொள்ள ஒரு விருப்பமான துணையை இயற்கையின் வழியோ , கலையின் வழியோ , பயணத்தின் வழியோ ஒரு பற்றுதலை ஏற்படுத்திக்கொள்கிறான் . இதில் தவறியவர்களுக்கு வாழ்க்கை சுமையாக மாறி தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு அந்த சுமையை உறவுச்சிடுக்குகளின் வழி பரவச்செய்கிறான் அல்லது அனைத்து சுமைகளையும் தன் மனதில் மேல் ஒரு பெரும் அழுத்தமாக அடுக்கி மனதிற்கே மூச்சுமுட்ட வைத்து ஒரு இறுக்கத்துக்குள் அடைபட்டு தன்னை தானே அழித்துக்கொள்கிறான் . எழுத்தாளனுக்கும் இதே அளவு மூச்சு முட்டலும் , புழுக்கமும் , சலிப்பும் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான் இதற்கு பிறகு சிலர் எழுதுவதை நிறுத்திவிடுகின்றனர் , சிலர் தன் எழுத்துலகிற்குள்ளாகவே தன்னை தொலைத்துவிடுகின்றனர் , ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய எழுத்தில் புதுமைகளை புகுத்தி , பரிசோதனைகளை மேற்கொண்டு தொடர்ந்து செயல்படுகின்றனர் . இதில் அவர் வெற்றியடைவாரோ , தோல்வியுறுவாரோ தெரியாது, அந்த விளைவுகளும் அவர்களுக்கு முக்கியமில்லை , அந்த விளைவை நோக்கிய வினையும் , பயணமும் அவர்களை தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் முன்நகர்த்தி செல்கிறது . அப்படி புனைவுலகில் ஒரு புது முயற்சியாகவும் , பரிசோதனையாகவும் தான் சுந்தரராமசாமியின் இந்த ஜே.ஜே . சில குறிப்புகளை நான் பார்க்கிறேன் .

சுந்தரராமசாமி - தன் மனதில் நீண்ட நாள் கொதித்துக்கொண்டிருந்த ஒரு கொதிநிலையை இந்த புத்தகத்தின் மூலம் சற்று ஆற்றுவதற்காக இறக்கிவைத்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது . உலக இலக்கியங்களை பெரிதாக போற்றி எக்காளமிடும் நம் நாட்டில் ஏன் நம் தேசத்து பிற மொழி இலக்கியங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை . மொழிதான் தடை என்றால் ! சு ரா பாஷயை ஒரு சுவர், மனிதனை பிளவுபடுத்தும் சுவர் என்கிறார் , அதனை சுக்குநூறாக உடைத்தெறியுங்கள் என்கிறார் , அறியவும் அறிவிக்கவும் மனிதன் கொள்ளும் பேராசையின் முன் தூள்தூளாக பறந்துபோகும் என்கிறார் . இந்த ஆற்றாமைதான் சுரா வின் இந்த புதிய புனைவு வடிவின் முதற்புள்ளி .

யார் இந்த ஜே ஜே . ? அவரை பற்றி இக்கதையில் வரும் பாலு என்ற இளம் எழுத்தாளன் ஏன் ஒரு புத்தகம் வழி குறிப்புகளாக எழுத துடிக்கிறான் ? இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்துகொண்டு இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்குவது நன்று . அதற்கு முதலில் சுகுமாரன் அவர்கள் எழுதிய பின்னுரையை முதலில் வாசிக்க சொல்லி நான் கூறுவேன் . இங்கு எழுதப்படும் புனைவுகள் முழுமையாக கற்பனையின் அஸ்திவாரத்தின் மேல் எழுப்பப்படுகிறதா ? ஆமென்றால் , புனைவுகள் ஏன் மனதின் ஆழம் வரை சென்றடைகின்றன ? இல்லையென்றால் , உண்மையை வெளிப்பூச்சில்லாமல் உரக்க சொல்வதில் அப்படி என்ன இடறு ? இவ்வாறு ஒத்த மனநிலையில் இருவரும் சஞ்சாரிப்பதால்தான் இளம் எழுத்தாளன் பாலு -ஜே .ஜே வை பற்றி இந்த உலகம் அறிந்துகொள்ள இந்த புத்தகத்தை எழுதுவது போல சு ரா தன் படைப்பை உருவாக்கியுள்ளார் .

கேரள இலக்கிய உலகில் வாழ்ந்த சி ஜே தாமஸ் என்ற தத்துவ எழுத்தாளருக்கும் இந்த ஜே ஜே விற்கும் உள்ள பொருத்தத்தையும் , சு ரா ஏன் ஒரு மலையாள எழுத்தாளரை வியந்து தேடிச்செல்லும் ஒரு தமிழ் எழுத்தாளன் போல இந்த புனைவை அமைத்தார் என்பதையும் சுகுமாரன் தெளிவாக விவரிக்கிறார் . சி ஜே தாமஸ் - வாழ்வின் நிஜம் , ஜே ஜே - புனைவின் உண்மை என்று கூறுவதும் அவரேதான் . புனைவின் உண்மை - எத்தனை அர்த்தமுள்ள வார்த்தைகள் இவை . இக்கதையில் வரும் ஜே ஜே , பாலு, மேலும் , பேராசிரியர் மேனன் , சம்பத் , சாரம்மா ,இன்னும் எண்ணற்ற கதைமாந்தர்கள் சுற்றியலைந்தாலும் , அவர்கள் எந்த மொழி பேசினாலும் , வேறு பெயர் கொண்டு பேசினாலும் இந்த புனைவில் எந்த ஒரு மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை . மேலும் , இந்த நூலை எந்த காலத்திலும் , எந்த நிலத்திலும் கொண்டு பொருத்திப்பார்த்தாலும் இதன் வடிவமும் , இதன் தாக்கமும் , இதில் நிகழ்த்தப்பட்டுள்ள தர்க்க நிலைகளும் எந்த மாறுதலும் ஏற்படாது . இப்படி ஒரு படைப்பு ஒரு எழுத்தாளனுக்கும் சரி , ஒரு மொழிக்கும் சரி நிகழ்வது அரிது . மேலும் இந்த நிகழ்வை தொடங்கிய புள்ளியின் ஊற்று சுரா விடம் இருந்து பிறந்திருக்கலாம் ஆனால் அது பேரருவியாக தன்னை தானே மாற்றி உருக்கொண்டது அது தனக்குள் கொண்ட வீரியத்தாலும் , அது தனக்குள் அடங்கியுள்ள பொதுநலமிக்க கருத்தியலாலும் தான் .

யார் வாசிக்க வேண்டும் ? யாரெல்லாம் வாசிக்க வேண்டாம் ? - முதல் பத்தியில் கூறியதுபோல மனநிலையில் உள்ள அனைவரும் நிச்சயம் வாசிக்கலாம் , வாசித்தால் நீங்கள் ஜே ஜே கரங்களை பற்றிக்கொண்டு அவன் ஸ்பரிசத்தின் மூலம் அவன் உணர்வுகளை புரிந்துகொள்வீர்கள் . இக்கதை புனைவென்றாலும் கூட அவனை புரிந்துகொண்டவர்கள் வெகு சிலரே . இத்தனை ஆண்டுகள் கழித்தாவது நாம் புரிந்துகொள்வோம் , வெளியுலகில் பல ஜே ஜே க்களை இந்த உலகம் தன் கையில் ஒரு சாட்டையை சுழற்றிக்கொண்டு 9-5 மணி என்ற கூண்டுக்குள் ஒரு முக்காலியில் அமரச்செய்ய கணந்தோறும் துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது . கூண்டுகளிலிருந்து விடுவிக்க முடியாவிடினும் அந்த சாட்டையை சுழற்றும் ஆளாக நீங்கள் மாறாமல் இருக்கலாம் . ஏற்கனவே அந்த கூண்டுக்குள் விருப்பத்தோடு அடைபட்டவராக நீங்கள் இருக்குமாயின் , மேலும் இந்த கூண்டு விளையாட்டை ஆமோதித்து அமர்ந்து ரசிக்கும் ஒரு பார்வையாளனாக நீங்கள் இருக்குமாயின் உங்களுக்கான படைப்பு இதுவல்ல .

இந்த புத்தகத்தை இனிமேல் வாசிக்க தொடங்குபவர்களுக்கு என் வேண்டுகோள் - இரண்டாம் பகுதியை முதலில் வாசியுங்கள் . ஜே ஜே வின் நாட்குறிப்புகள் அவை . அத்தனை தத்துவார்த்தமான ஒரு குறிப்பை நான் இதுவரை வாசித்ததில்லை . இவ்வளவு தெளிவான ஒருவனைத் தான் இந்த உலகம் புரிந்துகொள்ள கடினப்பட்டு வெறுத்து ஒதுக்கியதா . காலம் , வாழ்கை , நட்பு , இறப்பு , பிறப்பு , அன்பு , தாய்ப்பாசம் , இலக்கியம் , எழுத்து , மொழி , உறவுகள் இன்னும் எண்ணற்றவைகளை பற்றி அத்தனை தெளிவான புரிதலும் , விவரினைகளும் அடங்கிய ஒரு குறிப்பு . தான் வாழ நினைக்கும் ஒரு வாழ்க்கைக்கும் , தன்னை வாழ நிர்பந்தித்த ஒரு வாழ்க்கைக்கும் நடுவே சிக்கி வெளி வர இயலாமல் திணறிய ஒரு மனதின் பக்கங்கள் தான் அவை . "இந்த நிமிஷம் அடுத்த நிமிஷத்தில் உதிர்ந்து விடும் ஒரு வாழ்கை ", "அருமைக்கும் அளவு முக்கியம் ", "மரணம்தான் சகல உன்னதங்களுக்கும் காரணம் ","நான் உயிர் வாழ அவ்வப்போது தற்கொலைகள் அவசியமாகின்றன "

மறுவாசிப்புக்கு ஏற்புடையதல்லாத ஒரு படைப்பு சிறந்த ஒன்றாக ஏற்றுக்கொள்வது கடினம் . அந்த வகையில் ஜே .ஜே சில குறிப்புக்கள் நிச்சயம் தமிழ் இலக்கிய உலகின் ஒரு நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பு என்று கூறலாம் . இதன் பல பகுதிகளை வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் நாம் வாசித்து பார்க்கலாம் . அதன் தோள்களின் மேல் சாய்ந்து நாம் சற்று இளைப்பாறலாம் , பாரங்களை இறக்கிவைக்கலாம் , வழிதவறிய காலங்களில் விடை தேடலாம் , தேங்கிய கண்ணீரின் கனத்தை குறைத்துக்கொள்ளலாம் . ஒரு படைப்பு இத்தனையும் செய்யுமா ? என்றால் , இப்படைப்பு அதற்கு மேலும் செய்யும் திறன் கொண்டது .

---இர.மௌலிதரன்
5-6-24
8.38pm
251 reviews38 followers
November 10, 2024
Book 38 of 2024
புத்தகம் : ஜே ஜே சில குறிப்புகள்
எழுத்தாளர் : சுந்தர ராமசாமி
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 224
நூலங்காடி: சப்னா புக் ஹவுஸ்
விலை : 220


🔆 புத்தகங்களை படிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து தமிழ் இலக்கியத்தில் நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று ஒரு ஆசை, அப்போது வாங்கிய புத்தகம்.

🔆 மலையாள எழுத்தாளரான ஜே ஜே அவர்களின் சிறு வயது முதல் மறையும் வரையிலான அவர் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்களை இந்த புத்தகத்தில் காணலாம். அதிகமான பணம் சம்பாதிக்கும் நிலையில் அவர் இல்லை என்றாலும் அவரைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் இருந்தது.

🔆 இலக்கிய கூட்டத்திற்கு அவர் வரும் போது எப்போதும் அவரைச் சுற்றி பல மனிதர்கள் இருந்தனர். ஒன்று இரண்டு இடங்களில் JJயின் பார்வை மிக பிடித்ததாக இருந்தாலும் கூட, முழுமையான புத்தகமாக இது எனக்கு பிடித்தமானதாக இல்லை. ஒருவேளை இந்தப் புத்தகத்தை படிப்பதற்கான ஆற்றல் இல்லையா என்று தெரியவில்லை.


புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for Prakash Rajendran.
41 reviews1 follower
March 8, 2023
பித்து பிடித்தது போல் நீண்ட நாள்களுக்கு என்னுள் தாக்கம் ஏற்படுத்திய படைப்பு!

>>
இப்போது நான் எதையும் சொல்லப்போவதில்லை. சொல்ல எனக்கு எதுவுமில்லை. அபத்தத்தின் கலப்படத்தைத் தவிர்த்த ஒரு சொல் எனக்கில்லை. நான் இப்போது மௌனம் சாதிக்கிறேன். ஜே. ஜே. எவ்வளவு தான் உரக்கக் கத்தினாலும் நான் மௌனமே சாதிப்பேன். மௌனம் உன்னதமானது. அது கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது. கேள்வியைச் சீரழிக்காமல் பார்த்துக்கொள்கிறது. பதில் உளறல்கள் கேள்வியைத் துவம்சம் செய்துவிடுகின்றன. சப்பி உருக்குலைத்து விடுகின்றன. சரியான கேள்விகள் அபத்தமான விடைகளின் குவியல்களில் அகப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாய்ப் போய்விட்டன. நான் ஒரு போதும் அதைச் செய்ய மாட்டேன்.
Profile Image for Shankar.
3 reviews8 followers
August 27, 2013
அருமையான புத்தகம்.கீழே புத்தகத்திலிருந்து சில குறிப்புக்கள்.

"என் வாழ்கையில் எனக்கு எப்பொதுமே திட்டம் என்று ஒன்று இருந்ததேயில்லை. சொந்த வாழ்வில் நாளை பற்றி நான் யோசித்ததே இல்லை.ஆற்றில் விழுந்து விட்ட ஒரு கட்டை சுழிபுகளில் சுழன்று , சம வெளிகளில் ஓடி ஏற்ற இறக்கங்களில் தத்தளிகின்றது என் போக்கை எப்போதும் இப்படித்தான் நினைத்து பார்கிறேன்".

"இவர்கள் கொண்டாடும் வெற்றி மீது நான் வெறுபடைகிறேன்"

"இவர்கள் சொந்தம் பாராட்டிகொள்வது அனைத்தையும் நான் மறுக்கிறேன்"

Profile Image for v.siva v.siva.
6 reviews1 follower
March 23, 2020
ஹஜ்

ஜே.ஜே.சிலகுறிப்புகள் இதுவரை நம்பி வந்த கதை மரபிலிருந்து விலகி புதுமையான அனுபவம் தருகிறது.புதிய பின்புலமுள்ள படைப்புகள் வாசிக்க உந்தும் சக்தியாக இருந்து வ��ுகிறது.புதிய கருத்துக்கள் அனுமானங்களை இருந்து உருவாக்கிக் கொள்ளலாம். கற்பனை கதையாக வளராமல் சுயமான கருத்துகள் உருவாக்கிக் கொண்டு விரிவடையும் நாவல்.வாசிப்பு கணல் உழன்று சொல்லும் வாசிப்பு. வாழ்க்கையுடன் கருத்தை ஆய்வு செய்கிறது இதுவே இந்த நாவலின் நோக்கமாக உள்ளது வாசிப்பின் மனத்தடையை விலக்குகிறது .



Displaying 1 - 30 of 66 reviews

Join the discussion

Can't find what you're looking for?

Get help and learn more about the design.