Jump to ratings and reviews
Rate this book

கடலுக்கு அப்பால்

Rate this book
தமிழகத்தில் வாழ வழியற்று, தென் கிழக்காசிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையைப் புரட்டிப்போட்ட உலகப் போர் பின்புலத்தில் ப.சிங்காரம் சொல்லியுள்ள கதையான கடலுக்கு அப்பால் நாவல், புதிய பிரதேசங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை’ என்ற தேறுதலுடன் முடியும் நாவலின் இறுதி வரிகள்தான் ப.சிங்காரம் சொல்ல விழைவதா? யோசிக்க வேண்டியுள்ளது.

200 pages, Paperback

First published January 1, 1959

36 people are currently reading
466 people want to read

About the author

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்
வட்டத்தைச் சேர்ந்த சிங்கம்புணரியில் கு.பழனிவேல் - உண்ணாமலை அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.

சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியும் மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பும் மேற்கொண்டார்.

தன்னுடைய 18வது வயதில் இந்தோனேசியாவில் உள்ள மைடனுக்கு கடல் பணியாளராகச் சென்றார். பின்னர் 1940இல் இந்தோனேசியா அரசின் மராமத்து துறையில் பணியாற்றினார்.

ப. சிங்காரம் இந்தோனேசியாவில் இருந்தபோது ஹெமிங்வேயின் பல நாவல்களை வாசித்திருக்கிறார். ஹெமிங்வேயின் "A Farewell to arms" இவருக்கு மிகவும் பிடித்த நாவல்.

ப. சிங்காரத்தின் நண்பர்கள் பலர் I.N.A.வில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மூலம் யுத்தம் பற்றி பல விவரங்களை அறிந்திருக்கிறார். பல ராணுவ முகாம்களுக்கு நேரடியாகவும் போயிருக்கிறார். இதெல்லாம் இவருக்கு நாவல் எழுத பெரிதும் உதவியிருக்கிறது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
122 (38%)
4 stars
134 (42%)
3 stars
50 (15%)
2 stars
7 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 30 of 49 reviews
Profile Image for Godwin.
36 reviews6 followers
November 11, 2020
"மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை"
Profile Image for Balaji M.
220 reviews14 followers
November 24, 2020
"கடலுக்கு அப்பால்" - ப.சிங்காரம்
================================

திரு ப.சிங்காரம் அவர்களின் நூற்றாண்டையொட்டி பலதரப்பட்ட தளங்களில் அவரை பற்றிய கட்டுரைகள் காணப்பெற்று, அவரது படைப்புகளை வாசிக்க தலைப்பட்டோம். அப்படி தேடியதில், அவரின் படைப்புக்கள் எனச் சொல்லப்படுவது, இரண்டு நாவல்கள் மட்டுமே. "கடலுக்கு அப்பால்" மற்றும் "புயலிலே ஒரு தோணி". மேலும், இரண்டாம் உலகப்போரில் இந்திய நிலப்பரப்பை தாண்டிய தமிழரின் வாழ்வியலை தழுவி எழுதப்பட்ட முதல் நாவல், "கடலுக்கு அப்பால்". இதுவே போதுமானதாக இருந்தது இப்புத்தகத்தை வாசிக்க.

கதை சுருக்கம் யாதெனில், கடல் கடந்த வாணிபம் என்பது பல நூற்றாண்டுகளாக தமிழரின் தொழில்முறைகளில் ஒன்று. அவ்வகையில், தமிழகத்திலிருந்து வட்டி தொழில் புரிய, மலேசிய - பர்மா பகுதிகளுக்கு கடல் கடந்து சென்றவர்கள் பலர். அதில் செல்லையா, வயிரமுத்து பிள்ளை, மரகதம், காமாட்சியம்மாள், மாணிக்கம், நாச்சப்பன் போன்ற கதைமாந்தர்களும் அடங்குவர். அப்படி சென்றதில் சில இளைஞர்கள் நேதாஜியின் இந்திய ராணுவத்திலும் சேர்ந்து போரிட்டுள்ளனர். கதைமாந்தர்களுக்குள் நடக்கும் பல அடுக்கு உணர்வுப்பூர்வமான மனவோட்டங்களின் கூறுகளையும், ஆங்கிலேயே, ஜப்பானிய, இந்திய துருப்புகளுக்குள் நடக்கும் போர்களையும் உணர்வுபூர்வமான வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. செல்லையா-மரகதம் இவர்களுக்குள்ளான அன்பும், அது பிடிக்காத மரகதத்தின் தந்தை வயிரமுத்து, அவர்களின் திருமணத்திற்கு தடங்கலாக இருப்பதும் என்கிற பின்கதை உணர்வுக் குவியலாக எழுதப்பட்டிருக்கிறது.

அதுபோக, அப்போதைய வட்டிக்கு விடும் தொழிலில் நடக்கும் நெளிவு சுளிவுகளும், கால்சராய் போட்டவன் அந்த தொழிலுக்கு சரிபடமாட்டான் போன்ற பத்தாம் பசலித்தனமான விஷயங்களும் அக்காலங்களில் இருந்து வந்ததை அறியமுடிகிறது. பக்கத்து ஊருக்கு சென்று வருவதை போன்று பினாங்(மலேசியா)/பர்மா /இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அக்காலங்களில் இவர்கள் சென்று வந்ததாக காட்டப்படுவது, வெகுவான உண்மையே ஆனாலும் ஆச்சரியத்தை தருகிறது.காரைக்குடி செட்டிநாடு வீடுகள் ஏன், எப்படி , எந்த வரும்படியை கொண்டு அரண்மனை அளவிற்கு கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு இந்நாவல் ஒரு சான்று.
மலாய்/ஜப்பானிய மொழி பயன்பாடு கணிசமான அளவில் நாவலில் காணலாம் . Batu Caves முருகக்கடவுளை, தண்ணிமலையான் என்றே அழைக்கின்றனர். இதெல்லாம் திரு ப.சிங்காரம் அவர்கள் இரண்டாம் உலகப்போர் காலங்களில் அங்கு பணியில் இருந்ததால் தெளிவாக படம்பிடித்து வர்ணித்திருக்கிறார்.
அக்காலம் தொட்டே, கிழக்காசிய நாடுகளில் புகைக்கும் பழக்கம், அம்மக்களிடையே பெருகி வந்திருப்பதை காணமுடிகிறது.
மூன்று பாகங்களாக இருந்தாலும் 200 பக்கங்களில் முடிந்த இந்நாவல் சற்று மெது நடையில் சென்றாதாகவே உணர்கிறோம்.
காலத்தை கடந்து நிற்கும் கதை என்பதால் வரலாற்று ஆவணம் என்ற முறையிலும் இந்நாவலை அணுகலாம்.

"கடலுக்கு அப்பால்" நாவலுக்கு பிறகு "புயலிலே ஒரு தோணி" படிக்க வேண்டும் என்று பல விமர்சன கட்டுரைகளில் படித்தேன். அதுபடியே அடுத்து, "புயலிலே ஒரு தோணி"!
Profile Image for Soundar Phil.
129 reviews12 followers
July 17, 2022
தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புக்காக, வியாபரத்திற்க்காக இன்றைய சிங்கபூர், மலேசியா, மியன்மார் போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வளமுடன், செழிப்பாக வாழ்ந்த தமிழர்களின் வாழ்வில் உலகப்போர் ஏற்படுத்திய மாற்றங்கள்.

புலம் பெயர்ந்து இருந்தாலும் அந்நாட்டினரை விட செல்வத்தில் மேம்பட்டு விளங்கிய ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சி பற்றியும் அதற்கு அவர்கள் உள்ளான துன்பங்கள் பற்றியும்.., அத்தருண்த்தில் பிழைப்புக்காக சென்ற தமிழ் இளைஞர்கள் எல்லாவற்றையும் உதறி நேதாஜி பின் சென்றதும் என பல கதைகள் பேசுகிறது..,

இதையனைத்தும் தாண்டி ஒரு இளைஞன், ஒரு பெண், அவர்களின் காதல்...,

இவை அனைத்தும் நாவலின் கடைசிப் பக்கத்தில், கடைசி நான்கு வரிகளில் முடித்து வைக்கப்படுகிறது.
Profile Image for Nagarajan.
76 reviews23 followers
December 21, 2021
A beautiful love story set against the backdrop of world war. Nostalgic time travel and I love சிங்காரம் style of writing.
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews26 followers
July 4, 2020
ப.சிங்காரம் என்ற பெயர் பொதுவாக புத்தகக்கண்காட்சிகளில் கேள்விப்பட்டேன்(2018 களில் தான் புத்தக வாசிப்பு ஆரம்பமான காலம்).பின்பு சாரு நிவேதிதாவின் 'பழுப்பநிற பக்கங்கள்' மற்றும் எஸ்.ராமகிருஷ்ணனின் 'வாசகபர்வம்' போன்ற கட்டுரைத்தொகுப்புகளின் மூலம் தான் அறிந்துகொண்டேன்.
புறக்கணிப்புகளின் காரணமாக ஏற்பட்ட வெறுப்புகளால் இலக்கிய உலகை விட்டு நீங்கியவர்.இன்று ஒரு அனைவராலும் தவிர்க்கமுடியாத ஒரு இலக்கிய ஆளுமையாக உள்ளது தான் தமிழ் எழுத்தாளர்களின் தலைவிதி போலும்.
இந்த புத்தகம் படிப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம்,அவர் வாழ்ந்த இடங்கள் எல்லாம் நான் மதுரையில் என் பதின்ம வயதுகளில் படித்தும் விளையாடியும் திரிந்த காலங்கள்(2005 முதல் 2009 வரை)
இந்த காரணமும் தான் என்னை இந்தப்புத்தகம் படிக்க உந்தியது.
தமிழின் புலம்பெயர் இலக்கியம் என்ற பெயருடன் அறியப்பட்ட 'கடலுக்கு அப்பால்'
இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் பினாங்குப்பகுதியில் சிறுது போர்ச்சூழலுடன் மற்றும் காதலுடன் புனையப்பட்டுள்ளது.
*செல்லையா தான் நாவலின் கதாநாயகன்.நேதாஜியின் இந்திய தேசியப்படையில் சேர்ந்து ஆயுதம் ஏந்திய தமிழர்களில் ஒருவன்.
*நேதாஜியின் இறப்புக்கு பின்னால் மற்றும் ஜப்பானின் தோல்வி போன்றவை போரில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் போர்ச்சூழலின் கோரமுகம் ஏற்படுத்தும் மாற்றங்கள்.
*ராணுவத்தில் இருந்து வேறுவழியின்றி குழுவாக வெளியேறும் தமிழர்கள் ஜப்பானியர்கள் மற்றும் சீன கொரில்லாக்களின் அட்டூழியங்கள் போன்றவை நாவலின் சுவாரசியமான கட்டங்கள்(The Great Escape திரைப்படத்தை நினைவுட்டியது)
*ஜப்பானியர்களின் ஹிராகிரி அல்லது செப்புக்கு (seppuku) என்ற தற்கொலை முறை
*சின்பெங்கின் சீன கொரில்லாப்படை மற்றும் அவர்களின் அட்டூழியங்கள்
*குழுவில் உள்ள தமிழர்கள் வீரமரணம் அடையும் பொழுது திருவாசகம் பாடியும்,இஸ்லாமிய முறையில் தொழுகை செய்து அடக்கம் செய்யும் காட்சிகள் சிலிர்ப்பூட்டுவதாய் இருந்தது.
*வியாபாரம் தொடர்பாக புலம்பெயரும் தமிழர்களின் லேவாதேவித்தொழிலில் (வட்டித்தொழில்)ஈடுபடும் செட்டியார்கள் மற்றும் தமிழர்களின் அன்றைய வாழ்வியலை நுட்பமாக விவரித்துள்ளார்.
*'தண்ணீர்மலையான்' பினாங்கு பகுதியில் இருக்கும் முருகனின் கோவில்,
மீகொரேங் என்ற உணவும்
*இன்ஸ்பெக்டர் குப்புசாமியின் கொஞ்சும் தமிழும் மற்றும் அவர் சொந்த மண்ணை பிரிந்து வாழும் வருத்தம்
"இந்தாங்ப்பா,நான் டாமில் படிக்கல,ஊர் பாக்கலே,ஆனாலும் நான் தம்லன்!" உடல் மின்னும் பின்னூமாக அசைந்தது.கண்கள் மேலெரிச் சொருகின."சொல்றது தெரியுமா? நான் தம்லன்,அசல் பத்தரெ மாத்து பாண்டி நாட்டுத் தம்லன்!" வலதுகை மார்பின் மேல் அடித்தது.அறைகூவல் விடுபவர் போல் முகங்களை மாறிமாறிப் பார்த்தார்"
*வானாயினா என்ற வைரமுத்துப் பிள்ளையின் வளர்ச்சி மற்றும் குடும்பத்தில் ஏற்படும் புத்திர இழப்புகள்.
*அவர் செல்லையாவை மருமகன் ஆக்க நினைக்கும் போது,செல்லையா ராணுவத்தில் சேருவதால் ஏற்படும் அதிருப்தி
*அதனால் செல்லையா மற்றும் மரகதத்தின் காதலைப் புறக்கணிப்பதும்,
*கைக்கூடாத காதலால் விரக்தியில் செல்லும் செல்லையாவுக்கு வாழ்வின் தத்துவத்தை தமிழ் இலக்கியம் மூலமாக விளக்கும் செல்லையாவின் நண்பன் மாணிக்கம்
“எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்"
"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த பினைப்பயன் -துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனுமாமே"
- திருமூலர்
*கடைசியாக வானயீனா மற்றும் செல்லையாவின் உணர்வுப்பூர்வமான உரையாடல்.

மொத்தத்தில் 'புயலிலே ஒரு தோணி'
நாவலை வாசிக்க விரும்புவர்கள் இக்குறு நாவல் சரியான மற்றும் சிறப்பான தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.அத்தோடு புயலிலே ஒரு தோனியின் நாயகன் பாண்டியனின் சிறு அறிமுகமும்(Cameo Appearance) இதில்
உள்ளதால் இந்நாவலைத் தொடங்குவது சாலச்சிறந்தது.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for GaneshPandian RK.
12 reviews3 followers
August 25, 2020
இந்த நாவல் நம்மை மலேசியாவிற்கு இரண்டாம் உலகப் போரின்போது அழைத்துச் செல்கிறது. சிங்காரம் நம்மை கதாபாத்திரங்களின் மனதின் ஆழமான இடைவெளிகளில் அழைத்துச் செல்கிறார். நான் கடினமாக உணர்ந்தது மலேஷியா தெரு மற்றும் ஊர் பெயர்களை உள்வாங்கியதில. இதற்கு சற்று பொறுமை அவசியம்.
Profile Image for Vadivel C.
24 reviews2 followers
August 10, 2022
"மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை"

மரகதம் - செல்லையா காதலையும் அவர்கள் இணைய முடியாத சூழலையும் 2ம் உலகப் போரின் பின்னணியில் அழகாக நகர்த்துகிறது கதை. வாசிக்க சிறிது சிரமாக இருக்கும். காரணம் கதைக்களம் பினாங்குவில் உள்ளதால். என்றாலும் மனத்தைத் தொட்ட கதை இது.

எத்தனையோ மரகதங்களும் செல்லையாக்களும் சூழல் கைதிகளாய், அறியப்படாத அறிய முடியாத அல்லது அறிவுக்கு எட்டாத காரணங்களால் பிடித்ததை வாழாமல் கிடைத்ததை வாழ்கிறார்கள்.

மரகதம் - செல்லையா சந்திப்பு; ரெஸ்டாரன்ட்ல மாணிக்கம் - செல்லையா விவாத உரையாடல்; வானாயினா குடும்பத்தாரின் பயணவிடை;
இந்தக் காட்சியெல்லாம் ஒரு வேற லெவல் சினிமா காட்சியையே மிஞ்சி விடும்....


Climax is heart touching ❤️
Profile Image for Vijay.
28 reviews15 followers
December 11, 2020
First my apologies for writing a review in English for a Tamil novel. Though I could have written in Tamil with some difficulty, I thought it would reach a wider audience if it was in English. Especially as there is an English translation of this novel which is now available. Beyond the Sea, Areca Books, translated by R. Karthigesu.

Though this novel was written back in the 1950s as a work of fiction, it now qualifies unquestionably as a notable work of historical fiction. This and the other novel by the same author, puyalilE oru thONi (புயலிலெ ஒரு தோணி) are the only Tamil novels which are set in the South Asian / Southeast Asian theatres of WWII. Both the stories talk about the Indian diaspora's—especially the Tamil diaspora's—involvement in Netaji Subhas Chandra Bose's Indian National Army. This novel is set during the Japanese occupation of Malaya and the protagonist and his friends are officers in the INA, allied with the Japanese, with some mention of fighting the British in Burma. This novel is worth reading for all who are interested in history just for this unique perspective of the Asian theatre of WWII. Apart from this there is a rich description of the Tamil diaspora's life and trade practices in Penang. Though there is a lot of the trading communities, mainly the Nagaraththaar Chettiyars and Pillai's slang in the book, it doesn't make it a difficult read. I was really impressed by how Singaram casually uses Malay, Chinese or Japanese phrases with no attempt at translation. In fact, there are only a handful of short explanatory footnotes in the entire novel. One other really impressive thing is Singaram's references to classical Tamil poetry ranging from Elango adigal's silappathikAram to thAyumAnavar. There is one particular chapter in which his Tamil chauvinism shines through without any apologies.
Profile Image for Saravanakumar S K.
60 reviews6 followers
December 30, 2018
தமிழில் முதல் புலம்பெயர் நாவல் என்று சொல்லப்படும் நாவல் இது. ஏற்கனவே நான் ப. சிங்காரம் அவர்களின் கடலிலே ஒரு தோணி படித்துவிட்டேன். அந்த நாவல் ஏற்படுத்திய ஆர்வத்தினால் இந்த நாவலையும் படித்தென். இந்த புத்தம் முதலில் வந்து இருந்தாலும் இரண்டு புத்தகங்களும் சம காலத்தில் நடப்பவைதான். படிக்க ஆரம்பிக்கும் கொஞ்ச நேரத்தில் ஆசிரியர் உங்களை அப்படியே தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடத்திவிடுவார் அதுவும் 1940களில் . தமிழர்களின் புலம் பெயர்வு, வட்டிக்கடை, செட்டி சமுதாய மக்களின் வாழ்க்கை, நேதாஜியின் இந்திய நேஷனல் ஆர்மியில் தமிழர்களின் பங்கு மற்றும் ஒரு மெல்லிய காதல் தோல்வி. இன்றைய தலைமுறைக்கு இப்படி ஒரு காதல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அந்த காலத்தில் இப்படித்தான் பல காதல்கள் பெற்றோரின் அனுமதி இல்லாமல் தோல்வியில் முடிந்தன என்பதை நாவல் ஆவணப்படுத்தி உள்ளது.
இப்போதும் நீங்கள் Penang Street, Penang , Malaysia என்று கூகிள் மேப்பில் தேடினீறென்றால் உங்களுக்கு நகரத்தாரின்(செட்டி சமுதாயம்) கோயில் வீடோ அல்லது மியூசியமோ தெறியும். நாவலில் ஒரு வரி வரும் 'சிங்கப்பூரில் அவ்வளவு வசதி கிடையாது என்று'. இது உண்மை நாவல் எழுதப்பட்டபோது சிங்கப்பூர் ஒரு சாதாரண நகரம்.

மலேசிய தோட்ட தொழிலார்கள் பற்றி எழுதிய ஆசிரியர் அவர்கள் பட்ட கொடுமைகளை நாவலாசிரியர் எழுதாமல் விட்டுவிட்டார் என்று முன்னுரை விமர்சகர் எழுதி இருந்தார். சையம் மரண ரயிலில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது இதே காலகட்டத்தில்தான் அதை எப்படி நாவலாசிரியர் குறிக்காமல் விட்டார் என்பது அதிசயமாக இருக்கின்றது.

பல வசனங்கள் மலாய் மொழில் உள்ளது. அதற்கு பொருள் சூழ்நிலையை பொறுத்து நாமே அர்த்தம் கொள்ளவேண்டி உள்ளது. மற்றும் பல வழக்கொழிந்த வார்த்தைகளும் நமக்கு புரியாது. நாவல் 1950ல் எழுதப்பட்டது. பதிப்பாசிரியர் இதுக்கு பொருளுடன் அங்கங்கே மேலும் குறிப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

எஸ். ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் இரண்டு நாவல்களுக்கு மேல் எழுத்தே வேண்டாம் என்று விலகிவிட்டார் ப. சிங்காரம் அவர்கள் தனக்கு ஏற்பட்ட நாவலை பதிப்பிட்டு வெளியிடும் மனக்கசப்பில். தமிழுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பு.
1 review
May 12, 2020
This novel is plotted on the subject of the people of Ramnad district mainly who have moved to Malaysia and other South East Asian Countries to do their Interest and other Businesses during WWII. The Author narrated the places, their socio-cultural activities in a beautiful way we could easily visualize. INA's role in WWII and Tamil People's role in INA are also explained very well to the fictional story. Underlying main plot of the story is the love between Chelliah and Maragatham, how it ends finally which is dealt in a small portion of the story is really good.
 
I liked the last lines quoted by Manickam.  "மனிதனால்  தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை . மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை ."

Manickam's character quotes many Tamil Sangha Literature lines by various poets which were fruitful and enlightening. 

Overall this novel illustrates migrated Tamil's lifestyle through an informative, interesting story line with historical war backgrounds. 
Profile Image for Satham Hussain.
13 reviews
May 5, 2022
I'm giving three stars only because I couldn't follow the stories behind the world War the way author describes. Some of the scenes are still blurry but the love of the protagonist was fabulous. Everyone can connect with the story one way or another
Profile Image for Pasupathi.
49 reviews3 followers
May 24, 2020
ப.சிங்காரம் த்தின் புயலிலே ஒரு தோணி க்குப் பிறகு கடலுக்கு அப்பால் என்னோட இரண்டாவது வாசிப்பு.

கடலுக்கு அப்பால் கதைக்களமும் இரண்டாம் உலகப்போரை ஒட்டி தான் அமைந்துள்ளது. இந்த இரண்டு கதைகளுக்கும் பெரியதாக வேறுபாடு இல்லை. புயலிலே ஒரு தோணி நான் இங்க சொன்ன மாதிரி பெரும்பாலும் போர், உளவு, வணிகம், இராணுவம் னு நம்மளை ஒரு வேறு ஒரு உலகுக்குக் கடத்தும். ஆனால் கடலுக்கு அப்பால் வேறு ஒரு கதாநாயகனோட, அவனுடைய போர் அனுபவம் மற்றும் காதல் வாழ்க்கை பற்றி விவரிக்கிறது.

புயலிலே ஒரு தோணி ல ஒரு அத்தியாயத்தில் பாண்டியன்-தங்கையா உரையாடல் போன்ற ஒன்று கடலுக்கு அப்பால் நாவலிலும் உள்ளது. இது செல்லையா-மாணிக்கம் இடையேயான உரையாடல். கதையின் ஒரு சில அத்தியாயத்தின் பிறகு செல்லையா, மாணிக்கம், வானாயீனா, மரகதம், கருப்பையா என நம்மள 1940s வாழ்க்கையை கண் முன் காட்டுகிறது. செல்லையா-மரகதம் இடையேயான காதல் சொல்லப்பட்ட விதமும் மிக அழகா இருந்தது.

மிகவும் பிடித்த இரு quotes from கடலுக்கு அப்பால்:
“மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை...”
“எல்லாம் யோசிக்கும்வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்”

ப.சிங்காரம் கடலுக்கு அப்பால் நாவல் தான் முதலில் எழுதி பல இன்னல்களுக்கு அப்புறம் வெளியிட முடிந்தது. பத்து வருட இடைவெளி விட்டு புயலிலே ஒரு தோணி வெளி வந்தது. புயலிலே ஒரு தோணி க்கு முன் கடலுக்கு அப்பால் வாசிக்க நேர்ந்தால் அதில் வரும் ந.முருகேச பாண்டியன் எழுதிய முன் குறிப்பைத் தவிர்க்கவும்.

இந்த இரண்டு புத்தகமும் மிக முக்கியமான கதைக்களத்தைக் கொண்டு எழுதப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றின வேறு நாவல்கள் இருக்கானு தெரியவில்லை. ஆனா எனக்கு தெரிஞ்சு இந்த இரண்டு நாவல்களும் தமிழ் classics. அந்த அளவுக்கு ஒரு நடை, பாத்திர அமைப்பு, சொல் வழக்குன்னு பல வகைகளில் தனித்து நிற்கின்றது. இப்படி ஒரு நல்ல எழுத்தாளர் இரண்டு புத்தகத்துக்கு மேல் எழுதவில்லை ன்றது வருத்தம். அதற்கான காரணமும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கு.
Profile Image for GenevieveAudrey.
398 reviews4 followers
October 23, 2019
I was eager to read this to learn more about Penang. And it was interesting to read the author's descriptions of a long ago Penang. But I think there was alot lost in translation. The words/dialogue felt disjointed. The writing seemed staccato to me. There was a lack of "flow". The characters were very one dimensional.
All this made it hard for me to really enjoy this book.
Profile Image for P..
528 reviews124 followers
June 14, 2020
தமிழ் நாவல்கள் பெரும்பாலும் தமிழக எல்லைகளைத் தாண்டாமலே அரங்கேறுபவை. காலமும் பெரும்பாலும் நிகழ்காலமாகவோ 60களுக்குப் பிறகான காலமாகவோ தான் இருக்கும். வரலாறு என்று போனால் அரசர்கள் அரியணையில் ஆண்ட காலத்திலேயோ, சுதந்திரப் போராட்ட காலத்திலேயோ தம்மைப் பொருத்திக் கொள்ளும். தமிழர்கள் திரைகடல் ஓடித் திரவியம் தேடும் போது அந்நாட்டில் ஏற்பட்ட அனுபவங்களையோ, உலக யுத்தங்களில் தமிழர்கள் ஆற்றிய பங்கைப் பற்றியோ நம் நாவல்கள் பெரிதாகப் பேசுவதில்லை. Richard Flanagan எழுதிய The Narrow Road to the Deep North நாவலை வாசித்த போது தான் இரண்டாம் உலக யுத்தத்தில் தமிழர்கள் பங்கு பெற்றிருந்தார்கள் என நான் அறிந்தேன். நம் பாடப்புத்தகங்களில் கூட இதைப் பற்றிய குறிப்புகள் இல்லை. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் நமக்கிருந்த வேர்களை நம் கலைகள் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டதாகவே தெரிகிறது.

இந்த நிசப்தத்தில், நாம் இதுவரை அறிந்திராத களத்தில் இந்த நாவல் நடைபெறுகிறது. இரண்டாம் உலகப் போரில் நேதாஜியின் INA வில் இணைந்து ஜப்பானுடன் போராடிய சில தமிழ் இளைஞர்களின் கதையிது. இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில், ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்ட பின்பு, நேதாஜியின் இறப்பை கேள்விப்பட்டு, தங்களின் தொழில்களுக்குத் திரும்ப முனையும் இந்த இளைஞர்கள் அடர்ந்த வனங்களைக் கடந்து தங்கள் ஊர்களை அடைய வேண்டும். பயணத்தின் போது அவர்கள் விட்டு வந்த INA சிப்பாய்களும், ஜப்பானியப் படைகளும், சீன கம்யூனிஸ்ட் படைகளும் எதிரிகளாய் மாற வாய்ப்பிருக்க, இன்னல்கள் அனைத்தையும் கடந்தால் தான் அவர்கள் வீடு திரும்ப முடியும். 150 பக்கங்களில் சிக்கனமாய் இந்த போரின் கதையும், கதாநாயகனின் காதல் கதையும் விரிகின்றன.

SPOILER ALERT

தமிழகத்தில் இருந்து மலேயாவிற்கு வந்து தன் கடும் உழைப்பால் முன்னேறிய வயிரமுத்துப் பிள்ளை என்பவரின் லேவாதேவிக் கடையில் (வட்டிக்கடை) வேலை பார்க்க வரும் செல்லையா, விடுதலைப் போராட்ட காலத்தில் இரண்டாம் உலகப்போரில் நேதாஜியின் ராணுவத்தில் பங்கு பெற அவரின் விருப்பத்தை மீறிச் செல்கிறான். அவரது மகளான மரகதத்தின் மீது காதல் கொண்ட அவன், போரிலிந்து வந்தவுடன் அவளை மணக்க முயல்கிறான். ஆனால், இராணுவத்தில் இருந்ததால் அவன் நடை உடை பாவனைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் அவன் வட்டி தொழிலுக்கு சரியானவன் இல்லை எனவும், அதனால் அவர் மகளுக்கு அவன் சரியான மாப்பிள்ளை இல்லை எனவும் முடிவு செய்து அவர்கள் காதலுக்கு வயிரமுத்து முற்றுப்புள்ளி வைக்கிறார்.

அக்காலத்தைய கலாசாரம், மலேயா தமிழ் என்று பல புதுமைகள் காணக் கிடைக்கின்றன. கதையில் எப்போதும் அலுப்பு தட்டாமல் நகர்கிறது. தலைமுறைகளுக்கு நடுவேயான வித்தியாசங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் நன்றாக ஆராயப்படுகின்றன . இறுதியில் வரும் காதல் காட்சிகள் மிகவும் நாடகத்தன்மையோடு எழுதப்பட்டுள்ளன. அதனால் மனதில் ஒட்டவில்லை. அவன் காதல் தோல்வியால் நமக்குப் பெரும் சோகம் எதுவும் ஏற்படவில்லை. அனால், காதல் தோல்வியால் ஏற்படும் சோகத்தை ஆராய்ந்து அவன் வந்தடையும் முடிவு புதிது.
Profile Image for Vikneshwaran Adakkalam.
3 reviews
February 15, 2022
மிகப் பெரும் ஆவணப் படுத்துதலை இந்த நாவல் நமக்கு அளித்திருக்கிறது. சொல்லாடல், வரலாற்று நிகழ்வு, வாழ்வியல் முறை, தொழில் என ஜப்பானிய-பிரிடிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜோர்ஜ் டவுன் (George Town) நம் கண் முன் விரிவடைகிறது.

முதலில் ஐ.என்.ஏ-வை (Indian National Army) பற்றி கூற வேண்டும். இந்த நாவல் தொடங்கும் இடமும் ஐ.என்.ஏவின் வீழ்ச்சியில் தான். ஐ.என்.ஏ ஜப்பான் கூட்டணியோடு இருந்தது. ஐ.என்.ஏவில் இந்தியர்கள் இருந்தார்கள். மலேய சூழலில் அதிகமான தமிழர்கள் அதில் செயல்பட்டார்கள். அதே போல் எதிர் பக்கம் இருந்த பிரிடீஷ் இராணுவத்திலும் இந்தியர்கள் இருந்தார்கள். ஜப்பானிய ஆதிக்கத்தின் போது சரணடைந்த இந்திய-பிரிடீஷ் வீரர்கள் வழுக்கட்டாயமாக ஐ.என்.ஏவின் இணைக்கப்பட்டார்கள். இவர்களை வளர்த்தெடுத்த பிரிடீஷுக்கு எதிராக போர் புரிய வைக்கப்பட்டனர்.

இப்படியாக இரணுவத்தில் இணைத்தவர்களையும் சரி, சயாம்-பர்மா தண்டவாளம் போட போன தமிழர்களையும் சரி சுபாஷ் சந்திர போஸ் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தான் நிதர்சனம். இந்நாவலில் அவரது மறைவினால் இங்குள்ள தமிழர்கள் தங்களது குடும்ப உறுபினரை இழந்தது போன்ற துயர் அடைகிறார்கள். ஐ.என்.ஏவிற்காக தங்களது குடும்பம், தொழில் என அனைத்தையும் இழந்தவர்கள் ஜப்பானிய தோல்விக்கும் ஐ.என்.ஏவின் வீழ்ச்சிக்குப் பின் அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எத்தனிக்கும் போது மேற்கொள்ளும் சவால்களையும் இந்நாவல் பேசுகிறது.

ஜப்பான் தோல்வி அடைந்த போது அவர்களுக்கே இந்தியர்கள் எந்தப் பக்கம் நிக்கிறார்கள் எனும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதே சமயம், சின் பேங்கின் கம்பூனிஸ்களிடம் இருந்தும், பிரிடீஷ் இராணுவத்திடம் இருந்தும் அவர்கள் எதிர்புகளை சந்திக்கிறார்கள். கூடுதலாக இந்திய துருப்புகளும் அவர்களுக்கு சவாலாகின்றனர். ஹிரோஷிமா-நாகாசாகி குண்டு வீழ்ச்சிக்குப் பிறகும் ஜப்பானிய கமிகாசே வீரர்கள் சரணடையாமல் போராடி உயிர் தியாகம் செய்து கொண்ட நிகழ்வை இநாவலின் சிம்பாங் தீகா போரின் வழி நமக்கு விளக்குகிறார் ப சிங்காரம். அதே சமயம் கம்பயூனிஸ்ட் எனும் சொல்லையும் அவர் இந்நாவலில் தவிர்த்துள்ளார். பாசிச எதிர்ப்பு சேனை என்றே பதிவு செய்திருக்கிறார். போர் பயிற்சி பெற்ற ஐ.என்.ஏ தமிழ்ர்களை தன் பக்கம் இழுக்க கம்பூனிஸ்டுகள் முயற்சித்ததும் அது நிறைவேறாமல் போனதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நாவலை மூன்று பாகங்களாக பிரித்து எழுதி இருக்கிறார் ஆசிரியர். முதல் பாகம் இரண்டாம் உலகப் போர் முடிவின் எச்சங்களை பேசுகிறது. இரண்டாம் பாகம் கதை நாயகன் செல்லையாவின் இயல்பு நிலை திரும்புதலையும், மூன்றாம் பாகம் செல்லையா தன் காதல் தோல்வியை ஏற்கும் படலத்திலும் முடிகிறது.

செல்லையாவின் தொழில் வழி பினாங்கு செட்டி தெருவை பற்றி நமக்கு விளக்குகிறார் ஆசிரியர். Chetty Lane இன்றும் பினாங்கில் உள்ளது ஆனால் நாவலில் விளக்கப்படும் இடம் இதுவா என்பதை என் ஜோகிராப்பிக்கல் அறிவை வைத்து அறிந்துக் கொள்ள முடியவில்லை. செட்டி தெரு மட்டும் இன்றி பினாங்கு தண்ணி மலை முருகன் கோவில், பினாங்கு துறைமுகம் ஈப்போ இந்தியர்களின் வியாபார தெரு, வடக்கு நோக்கிய பயணத்தின் போதான இடங்கள் என மிக நேர்த்தியாக பூகோல அமைப்பை நம் கண் முன் நிறுத்துகிறார் ப சிங்காரம். இவர் கூறி இருக்கும் இடங்களை முன் வைத்து ஒரு பயணம் மேற்கொண்டால் மேலும் அதிக நெருக்கத்தை இந்நாவலில் நாம் உணர முடியும்.

செட்டியார்கள் மலேயா, இந்தோனேசியா, கம்போடியா, வியட்நாம், பர்மா போன்ற நாடுகளில் வட்டி தொழில் நடத்தி வந்துள்ளார்கள். ஏ.கே செட்டியார் படைப்புகளின் வழி இந்தோனேசியா, பர்மா, மலேயாவில் இத்தொழில் பற்றிய குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன. செட்டியார்கள் பெரும் வியாபரிகள் மட்டும் அல்லாமல் சுல்தான்களுக்கும் வட்டிக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள். ப சிங்காரத்தின் புயலிலே ஒரு தோனியில் இதோனேசியாவில் நடக்கும் செட்டி தொழிலை குறித்து எழுதி இருப்பார். இதில் தாய்லாந்து மட்டும் விடுபடுகிறது. தாய்லாந்தில் புலம்பெயர்ந்த/ வியாபரம் செய்த தமிழர்கள் குறித்தான ஆவணங்களை நான் வாசித்ததில்லை. மலேய கம்பூனிஸ்ட் கட்சியில் இருந்த தமிழர்கள் சிலர் அதன் உடைவுக்குப் பின் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். இவர்களில் ஒருவரின் பேட்டியை அண்மையில் நாளிகை ஒன்றில் வாசித்தேன்.

மீண்டும் நாவலுக்கு திரும்புவோம். நாவலில் பினாங்கின் ரிக்ஷா வண்டிகளை பற்றி சில பதிவுகள் வருகின்றன. இந்நாளைய பினாங்கில் ரிக்ஷாக்கள், மலாக்காவில் இருக்கும் ரிஷாக்கள் போல சுற்றுளா பொருட்டு வணிக மயமாக்கப்பட்டுவிட்டன. அவை மக்களின் தேவைக்கான பொது வாகனமாக இல்லை. நாவலில் வரும் சீன ரிஷாகாரர் தமிழ் மலாய் சீனம் என கலந்துகட்டிய கெட்ட வார்த்தைகளை பிரயோகித்துக் கொண்டே வண்டியை செலுத்துகிறார். அவருடைய வாடிக்கையாளரை பொருத்து அப்பிரயோகம் மாறுபடும் என ஆசிரியர் பதிவு செய்கிறார். ஒரு மொழியை சரளமாக பேச தெரிகிறதோ இல்லையோ அதில் இருக்கும் வசைச் சொற்களை வேற்றினத்தவர்கள் மிக சுலபமாக கற்று வைத்துக் கொள்வார்கள்.

செட்டி தெரு வட்டிக் கடை பணியாளர்களின் படிநிலைகளை இந்நாவலில் விளக்கி இருக்கிறார்கள். பெட்டிப் பையன், அடுத்தாள், மேல்லாள் என இது விளக்கப்படுகிறது. இதன் அமைப்புமுறை, அவர்களின் பணிகள், வேலை இடத்தில் அவர்கள் அமரும் அல்லது அமைப்பு முறையை புரிந்துக் கொள்ள முடியவில்லை. சொல்லையா பணி புரிந்த கடை அளவில் மார்க்கா முதலாளி முதல் நிலை, அடுத்ததாக 1 மேலாள், அவருக்கு கீழ் 5 அடுத்தாட்கள், அடுத்ததாக பெட்டியடிப் பையன்கள் இருவர். இது போக 1 சமையல்காரர்.

நாவலின் படி சமையல்காரரை ஈப்போவில் இருந்து அழைந்து வருகிறார்கள். அவர் ஈப்போவில் ’கச்சாங் பூத்தே’ தொழில் செய்தவர் என குறிப்பிடப்படுகிறது. ஈப்போவில் ’கச்சாங் பூத்தே’ தொழில் செய்வோர் முன்பு கல்லுமலை முருகன் கோவில் அருகே வசித்தார்கள். கல்லுமலை மண் சரிவு ஏற்பட்டதில் அங்கு குடி இருந்தவர்களை ஈப்போ புத்தோங் பகுதிக்கு அரசாங்கம் மறுகுடியமர்வு செய்தது. இன்றும் ஈப்போ கச்சாங் பூத்தே மிக பிரபலம். செட்டி கடைகளில் பணி புரியும் சமையல்காரர்கள், அக்கடைகளில் 10 பேர் வேலை செய்தால் சுமார் 40 பேருக்கு சேர்த்து சமைப்பார்கள். மீத உணவை வெளி ஆட்களுக்கு விற்றுவிடுவார்கள். பணியாட்கள் மற்றும் வெளியாட்கள் இலை போட்டு சாப்பிடுவதற்கும் வாங்குகள் அடித்து தனியாக இடம் அமைத்திருப்பார்கள்.

அடுத்ததாக ஜோர்ஜ் டவுனின் டத்தோ கிராமாட் வீதியை ஆசிரியர் அதிகமாக பதிவு செய்துள்ளார். செல்லையாவின் முதலாளி வயிரமுத்துப் பிள்ளை கிராமாட் வீதியில் வசிப்பதாக நாவலில் வருகிறது. இச்சாலையில் உள்ள நகரத்தார் சிவன் கோவில் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. சொல்லையா ஜோர்ஜ் டவுனுக்கு வேலைக்கு வரும் ஆண்டு 1939. இரண்டாம் உலகப் போர், ஜப்பானிய ஆட்சி மீண்டும் பிரிடீஷின் வருகை என இந்நாவலின் கால கட்டம் அமைந்துள்ளது.

இந்நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை மட்டும் முன் வைத்து ஒருசில கட்டுரைகளை எழுத முடியும். தனித்துவமிக்க, அக்காலகட்டத்தின் நிதர்சனத்தை உணர்த்தும் வெவ்வேரு மனிதர்களின் நிலைபாடுகளை இக்கதைமாந்தர்கள் வாசகர்களுக்கு கடத்துகிறார்கள்..

ஐ.என்.ஏவில் இருந்து திரும்பும் மாணிக்கம், தோட்டத்தில் கிராணி வேலை பார்த்துக் கொண்டு தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறர். இக்கதாபாத்திரத்தின் வழி ப சிங்காரம் அவரது இலக்கிய கண்ணோட்டத்தை வாசகர்கள் முன் வைக்கிறார். செல்லையாவுக்கும் மாணிக்கத்திற்கும் ஏற்படும் உரையாடல் மிக சுவாரசியமான ஒன்று. அடுத்ததாக செல்லையாவுக்கும் வயிரமுத்துப் பிள்ளைக்கும் நடக்கும் உரையாடலும் மிக அசத்தலாக இருக்கும். வானா இனா ஒரு நிகரற்ற வியாபாரி என்பதை அந்த உரையாடல் வாசகனுக்கு உணர்த்தும்.

ப சிங்காரம் மொத்தம் மூன்று படைப்புகளை மட்டுமே தமிழ் வாசகர்களுக்கு அளித்துள்ளார். இரு நாவல்களும் ஒரு சிறுகதையும் ஆகும். கடலுக்கு அப்பால் எழுதும் போதே அவரது அடுத்த நாவலான புயலிலே ஒரு தோனிக்கு பிடி கொடுத்துள்ளார். புயலிலே ஒரு தோனியின் நாயகனான பாண்டியன் இந்நாவலில் செல்லையாவின் நினைவில் சாகசம் நிறைந்த வீரனாக வந்து போகிறார். புயலிலே ஒரு தோனியை கடந்த ஆண்டு வாசித்தேன். இப்போது மீண்டும் மீள் வாசிப்பு செய்ய வேண்டும் எனும் எண்ணம் துளிர்கிறது. 2020 ஜனவரியில் காலச்சுவடு பதிப்பகம் ப சிங்காரத்தின் தவளைகள் சிறுகதையை தேடி எடுத்து வெளியிட்டது.

இந்நாவலை வாசித்துவிட்டு என் நண்பர் முரளியை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் இந்நாவல் தொடர்பான சில தகவல்களை பகிர்ந்தார். முக்கியமாக அதன் மொழிபெயர்ப்பு பற்றி பேசினோம். பேராசிரியர் ரே கார்த்திகேசு கடலுக்கு அப்பால் நாவலை ஆங்கிலத்தில் "Beyond the Sea" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.

நாவல்: கடலுக்கு அப்பால்
ஆசிரியர்: ப சிங்காரம்
பக்கம்: 157

”மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை. - ப சிங்காரம்”

முற்றும்

விக்னேஷ்வரன் அடைக்கலம்
15.02.2022
Profile Image for Shanmugam Udhayan.
50 reviews10 followers
July 22, 2020
கடலுக்கு அப்பால் - ப. சிங்காரம்

புயலிலே ஒரு தோணி என்ற மகத்தான நாவலை எழுதிய ப. சிங்காரம் அவர்கள் எழுதிய இரண்டாவது நாவல் கடலுக்கு அப்பால். அவர் எழுதியது மொத்தம் இரண்டு நாவல்கள் தான். இரண்டும் ஒரே கதைக்களம் கொண்டதாக தோன்றுகிறது. இரண்டாம் உலகப்போர் பின்புலமாக, அதுவும் போரில் பங்கு பெற்ற INA படைவீரர்கள் கதாபாத்திரங்களாக கொண்ட கதை. போரில் ஜப்பான் சரணடைவது, நேதாஜி விமான விபத்தில் மறைவதெல்லாம் செய்தியாக கதையில் வருகிறது. நேத்தாஜியன் மறைவிற்குப் பிறகு தங்களை வழிநடத்த சரியான தலைமை இல்லாது, INA படையைச் சேர்ந்த தமிழர்கள் பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைய விரும்பாமல், மலேசிய நாட்டிற்கு சென்று தங்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்ப முயற்சிக்கிறார்கள். போர் மற்றும் நேதாஜியின் மறைவு கதாநாயகனான லெப்டினன்ட் செல்லப்பாவின் காதல் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் தான் இந்த நாவல். மேலும் மலேய நாட்டில் தமிழர்களின் நகர வாழ்க்கையையும், அன்று நிலவிய சூழலையும் விவரித்துள்ளார். சிலப்பதிகார கதையை பகடி செய்வதெல்லாம் அல்டிமேட். பூம்புகார் திரைப்படம் வருவதற்கு முன்பே, அதாவது தமிழன் கண்ணகியை கொண்டாடி தீர்பதற்கு முன்பே பகடி செய்திருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது. செட்டி என்றால் ஜாதியை குறிக்கும் சொல் அல்ல அது வெளிநாட்டில் லேவாதேவி தொழில் செய்யும் ஆட்களை குறிப்பது, மேலும் வேட்டி கட்டிய அனைவரும் சீனர்களின் பார்வையில் செட்டிகள் தான் என்ற முன்னுரை குறிப்புடன் ஆரம்பிக்கிறது. கதையில் வயிரமுத்துப்பிள்ளை என்ற லேவாதேவி தொழில் செய்யும் முதலாளியின் பாத்திரம், வாழ்க்கையில் செய்யும் தொழிலை பாதுகாக்க குடும்பம், காதல், விருப்பம், குடும்பம், உறவு என எதையும் பலியிட தயங்குவதில்லை. தமிழ் நாவல்கள் எதிலும் இல்லாத கதைவடிவம், விவரணை, பகடி என புது அனுபவமாக இருந்தது. ப.சிங்காரம் அவர்களின் இரண்டு நாவல்களையும் தவறாது படிக்க வேண்டும் 🙏
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books173 followers
April 3, 2024
#257
Book 18 of 2024- கடலுக்கு அப்பால்
Author- ப.சிங்காரம்

“மனிதனால் தாங்க முடியாத துயரமென்று சொல்வதற்கு எதுவுமே இல்லை..
மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை.”

ப.சிங்காரம் அவர்களின் முதல் புத்தகம் இது. அவருடைய “புயலிலே ஒரு தோணி” படித்தப் பின் இதை படிக்க நேர்ந்தது. அவர் இரண்டே நாவல்கள் தான் எழுதியுள்ளார்.இரண்டுமே பெருந் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. இதை படித்தப் பின் “புயலிலே ஒரு தோணி” புத்தகம் படிக்கவும்! அது தான் சரியான கதை வரிசை.

இவருடைய இரண்டு கதைகளுமே இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்டவை தான். தமிழகத்தில் இருந்து வாணிபத்திற்காக அங்கு செல்லும் இளைஞர்கள் நேதாஜியின் தலைமையில் இந்திய ராணுவத்திலும் சேர்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கும் ஜப்பானிற்கும் நடக்கும் போர்களைச் சுற்றியும்,போர் அரசியலை சுற்றியும் கதை நடக்கிறது. இவர்கள் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வர நேர்கிறது,அங்கு என்ன நடக்கிறது,அவர்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து எவ்வளவு தூரம் சென்றுவிட்டார்கள் என்பதை எல்லாம் உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார். இதில் ஒரு காதல் கதையும் உண்டு! அழகாகவும், ஆழமாகவும் ஒரு காதல்!

தமிழில் முதல் “புலம்பெயர்” பற்றிய நாவல் இது. இதன் கடைசி நான்கு வரிகள் பல கதைகளை சொல்லாமல் சொல்கிறது. அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம் இது.
Profile Image for Gowsihan N.
95 reviews1 follower
November 28, 2021
கடலுக்கு அப்பால் சென்று... படித்திருந்திருக்கலாம்...
Profile Image for Saran Kumar.
1 review5 followers
February 1, 2014
ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒர் வரலாறு உண்டு, அப்படி பார்க்கையில் கிட்டதட்ட 60 வருடங்களுக்கு முன்னர் வரை பழைய இராமநாதபுர ஜில்லா மக்களின் வாழ்க்கை இந்தோனிசியாவிலும்,மலையாவிலும் வட்டி தொழில் செய்வது,அதில் வேலை பார்ப்பது தான் முக்கிய அம்சமாக இருந்தது. இதனை எழுத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு நாவல். இரண்டாம் உலகப் போர் கால மலையாவில் கதை தொடங்குகிறது. நேதாஜி மீது இருந்த நம்பிக்கை, அவர் மரணத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள், போரின் இழப்புகள், சின்ன காதல் கதை, தத்துவங்கள்..என அனைத்தும் இராமநாதபுர,சிவகங்கை மாவட்ட வழக்கில் படிப்பது ஒரு தனி சுகமான அனுபவம்... (புயலிலே ஒரு தோனி இனிமே தான் ஆரம்பிக்கனும்)..
Profile Image for Dinoji Mahendradas.
7 reviews3 followers
September 18, 2021
இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் வணிக நிமித்தமாக கடலுக்கு அப்பால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களைப் பற்றிய கதை. புலம் பெயர் தமிழர்களைப் பற்றிய கதை இலங்கைத் தமிழர்களான எங்கள் மனதுக்கு நெருக்கமாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. கதையில் இருக்கும் ஆழமான உரையாடல்கள் அனைத்தும் மிகவும் அழகு. அதிலும் புத்தகத்தின் இறுதிக் கட்டங்களில் மாணிக்கத்திற்கும் செல்லையாவிற்கும் இடையில் நடக்கும் உரையாடல் மிகவும் பிடித்திருந்தது. சிலப்பதிகாரத்தில் தொடங்கி தாயுமானவரில் வந்து முடியும் ஒரு உரையாடல். அது வரையில் மாணிக்கம் எனும் கதாப்பாத்திரத்தை கண்டுகொள்ளாமல் இருந்த நான் இந்த உரையாடலில் பின் மாணிக்கத்தின் ரசிகையாகி விட்டேன். பொதுவாக தமிழையும் இலக்கியங்களையும் தத்துவங்களையும் திமிரோடு பேசும் ஆண்களை நான் ரசிக்கத்தொடங்கி விடுவேன். மாணிக்கம் அப்படியொரு கதாப்பாத்திரம். அடுத்ததாக மனதை வருடும் செல்லையாவிற்கும் மரகதத்திற்கும் இடையில் இருக்கும் காதல் கதை. நிறைய நாட்களுக்குப் பிறகு புத்தகத்தில் படித்த காதல் கதையொன்று மனதை வருடிச் சென்றது. காதலிப்பவர்களின் இயலாமைதான் அழகான காதல் கதைகளை மனதில் நிறுத்தும். இதுவும் அப்படியே. புத்தகத்தை படித்து மற்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.ஒரு புத்தகம் மிகச் சிறந்தது என்பது அந்தப் புத்தகத்தின் இறுதி வரி உங்களுக்குள் எந்தவிதமான தாக்கத்தை செலுத்தும் என்பதைப் பொறுத்துத்தான். இந்தப் புத்தகம் இப்படியாக முடியும். " மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை."
Profile Image for bharggavi.
27 reviews
January 23, 2025
This was an incredibly interesting read, primarily because of the book's subject matter. So few texts exist that give the reader a fly-on-the-wall type of look into the Tamil community of pre-independence Penang. Singaram effortlessly captures the multi-lingual and cultural setting of Penang, seamlessly shifting between Tamil, Malay, English, Mandarin and even Japanese. Moreover, pre-independence Penang had a significantly distinct cultural makeup to the rest of Malaysia, particularly concerning Indians in Malaysia. Even this is briefly touched on in the few scenes set outside of Penang, notably ones involving the army itself. Overall, it's an undoubtedly fascinating read.

However, having read the novel in English instead of the original Tamil, I do feel my opinion regarding issues with the book should be taken with a pinch of salt as they primarily revolve around the writing (in this case the translation). Given the few excerpts and quotes I have read in Tamil, the shortcomings I felt were present in the English translation seem to be rectified in the original - there's quite a noticeable difference in the writing and presentation. The Tamil writing is poetic and layered, characteristics I found desperately lacking in the translation.

This is certainly a text I look forward to reading in its original language if I can get my hands on a copy.
Profile Image for Dinesh Selvam.
Author 3 books2 followers
March 26, 2022
கடலுக்கு அப்பால் மலேசியாவை களமாகவும், இரண்டாம் உலகப்போரின் இறுதிப் பகுதியைக் காலமாகவும் கொண்ட நாவல். செல்லய்யா அடுத்தாளாக பினாங் எனும் செட்டி தெருவில் வேலைக்கு வந்து, போருக்கு��் பின் ���ேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து கொள்கிறான், போர் புரிகிறான். நேதாஜி இறந்தபின் அவரின் கீழ் இணைக்கப்பட்ட ராணுவதிலிருந்து தமிழ் வீரர்கள் திரண்டு பிரிந்து பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எண்ணி பயணம் கொள்கிறார்கள். வழியில் சீக்குடன் இறப்பு, ஜப்பானுடன் போர், சீனாவுடன் நட்பு. அதைபின் மெல்ல மெல்ல இயல்புக்குத் திரும்புதல். அதன்பின் தான் கடலுக்கு அப்பாலும் உள்ளது. மரகதம் மதிப்பிற்குரிய காதலுடன் வந்து நிலைக்கிறாள். அவள் தாயார் வாஞ்சுடையுடன்.
அனைத்தையும் அறிந்தவராக வரும் வானாஇனா எனும் வைரமுத்து பிள்ளைக்கு தொழிலே முதன்மை. மகள் மற்றும் செல்லய்யாவின் காதலை அறிந்தபோதும், அவர்கள் இருவர்மீதும் அன்பு பாராட்டும்போதும் தொழிலே முதன்மை. அவர் அனுபவத்திலிருந்து கூறும் தொழில் சார்ந்த சொற்கள் அவர் மனதைப் பளிச்சிடுகிறது. நண்பனாக மாணிக்கம் தமிழ���ிந்தவனாய், செல்லய்யா மற்றும் வைரமுத்துவையும் அறிந்தவனாய் உடன் நிற்கிறான்.
என்னைப் பொறுத்தவரை இது அழகான காதல் நாவல். நெஞ்சைக் கணத்து வருடும் காதலைக் கொண்டது. செல்லய்யாவைப் போலவே வைரமுத்து மீது கோவம் தோன்றாமல் அவரது அனுபவத்தையும் ஏற்று நகர்கிறேன்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Yadhu Nandhan.
257 reviews
May 4, 2021
போர்ச்சூழலில் வேறொரு நாட்டில் தமிழர்களின் வாழ்வு எப்படி இருந்தது என்பதற்கு இந்தப் புத்தகத்தை ஒரு கண்ணாடியாகவே கொள்ளலாம். அக்காலத்தில் பினாங்கில் குடியேறிய தமிழரின் வாழ்வுமுறை, பினாங்கின் (மலேசியாவின்) பல்கலாச்சார தன்மை ஆகிய அனைத்தையும் அழகாய் பதிவு செய்திருக்கிறது இந்தப் படைப்பு. புரட்சிகர சிந்தனைகளுடன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கு கொண்ட இளைஞர்கள் அதனால் பொதுவாழ்வில் பட்ட துயரைப்பற்றி உருக்கமாய் பதிவு செய்கிறது இன்னூல். புரட்சியும் பொதுவாழ்வும் எப்படி எதிர்மறையாய் இருந்திருக்கிறது என்பதை தெளிவாய் காட்டுகிறது. சங்க இலக்கியக் கருத்துகளும் மாணிக்கத்தின் வழியே மனதை நிரப்புகின்றன். கடலுக்கு அப்பால் நடந்தவற்றை நன்றாய் சொல்லுகிறது இந்தப் புத்தகம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ப.சிங்காரம் எனும் எழுத்தாளரை எனக்கு அறிமுகப்படுத்திய கமல் ஹாசன் அவர்களுக்கு நன்றி.
8 reviews1 follower
October 11, 2025
கடலுக்கு அப்பால் - தமிழின் முதல் புலம் பெயர் நாவல் என்ற சிறப்புக்குரியது. பா. சிங்காரம் அவர்கள் 1930 - 40 களில் இந்தோனேஷியா, மலேஷியா போன்ற நாடுகளில் வேலை செய்தவர். அது இரண்டாம் உலகப்போர் கால கட்டம். அந்த சமயத்தில் அவரின் அனுபவங்கள் மற்றும் அங்கு சந்தித்த மனிதர்களின் வெளிப்பாடே இந்த நாவல்.

தமிழ்நாட்டில் இருந்து மலேயாவிற்கு வட்டிக்கடை வேலைக்கு வரும் செல்லையா தான் இந்நாவலின் நாயகன். காலச் சூழலில் அவன் அந்த வேலையை விட்டு நேதாஜியின் ஐஎன்ஏ வில் சேர்ந்து இரண்டாம் போரில் ஈடுபடுகிறான், பிறகு போரிலிருந்து நாடு திரும்பும் செல்லையாவின் வாழ்க்கை, அவன் காதல், முதலாளி வயிரமுத்துப் பிள்ளையுடனான உறவு ஆகியவையே இந்த நாவல்.

இந்நாவலில் இறுதி கட்டத்தில் வரும் மாணிக்கத்ததுடன் நடக்கும் உரையாடலும், இறுதி அத்தியாயமும் மிக சிறப்பான இருந்தன.

இந்த மாதிரி ஒரு போர் சூழலில் ஒரு தமிழ் நாவல் படிப்பது ஒரு புதிய அனுபவம். இந்நாளில் நிறைய மலாய் மொழி பெயர்களும் வார்த்தைகளும் இருக்கின்றன, அது வாசிப்பு வேகத்தை சற்று குறைக்கிறது, மற்றபடி சிறப்பான நாவல் இது.
Profile Image for Devan.
47 reviews1 follower
February 14, 2020
ப. சிங்காரம் எழுதிய இரு நாவல்கள் "கடலுக்கு அப்பால் (1956)", "புயலிலே ஒரு தோணி(1963)" இரண்டும் ஒரே பின்புலத்தில் அமைந்தது. வாசகர்கள் "புயலிலே ஒரு தோணி"யை முதலில் வாசித்து விட்டு பின்னர் "கடலுக்கு அப்பால்" நாவலை வாசிப்பதன் மூலம் அவரின் கதை சொல்லும் பாணியை மேலும் ரசிக்க உதவும்.
அழகிய நடையும் கண் முன்னே நடப்பது போல் சொல்லும் திறமையும் அவரின் எழுத்துகளில் தெரிகிறது. அன்றைய காலகட்டங்களில், இரண்டாம் உலகப்போர் நடக்கும் சமயத்தில் மெடான் (இந்தோனேசியா), பெனாங் (மலாயா) போன்ற இடங்களில் அவர் வாழ்ந்த அனுபவங்களை வைத்து இவற்றை அவர் புனைந்த விதம் அருமையிலும் அருமை.
ஆனால், அன்று இவ்விரு நாவல்களும் அச்சில் வெளிவர முடியாதது மிகவும் வருந்ததக்கது. அதுவே அவரது எழுத்துக்கும் உண்டான முற்றுபுள்ளி!
192 reviews9 followers
November 22, 2025
lives of tamil people of chettiar community, specifically; some of whom joined the INA of Netaji, around the time of indian independence struggle; on the changes in their lives after the defeat of japan and the passing away of Netaji, the perspective of the girl's father

as usual with touch of tamil literature like kannagi and ...

how was kannagi's fate in the epic and that of Maragadam in this novel is under current... Kannagi speaks at the very last... Maragadam only a little in the intermittent...
Kannagi's loss was due to society's and her husband Kovalan's life; for Maragadam its her father, lover and their time...
Profile Image for Sanjeev Duglas.
89 reviews3 followers
September 9, 2022
முதல் நாவலை விட “கடலுக்கு அப்பால் “ மிக நன்றாக இருக்கிறது.அந்த காலத்து இந்திய தமிழர்கள் கடல் கடந்து வியாபாரம் செய்தமை ..கிழக்கு தேசங்களில் சுதந்திர போரில் பங்குபற்றியமை என பலரும் அறிந்திராத விடயங்கள் காட்டப்பட்டுள்ளன.ஒரு ஓய்வடைந்த இளம் போராளியின் வாழ்வும், அவன் சமூகத்தால் எப்படி சண்டை முடிந்ததும் கையாளப்படுகிறான் .எதிர்காலத்துக்கான கேள்விகள் அதில் அவன் எவ்வாறு சஞ்சல மனத்துடன் பயணித்து வாழ்வை புரிந்து ஏற்றுக்கொள்ளுகிறான் என்பது செல்லையாவின் பாத்திரம் காட்டுகிறது.
25 reviews9 followers
October 16, 2017
An average love story with a very vivid description of the environments.! That's about it.
Not the finest of books, but yet you can have a read though. But definitely not worth the hype that exists for this book.
The only constraint is that you need to be patient enough to memorise (or at least keep tabs) the Malayan (street) names and conventions.
4 reviews
March 18, 2020
சிங்காரத்தின் இப்படைப்பும் காலம் கடந்து நிலைத்து நிற்கும். வரலாற்றை மட்டுமின்றி ஒவ்வொரு சாமானிய மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் மகத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

உச்சகட்ட வாசிப்பு இன்றி இவ்வளவு அற்புதமான படைப்பைப் உருவாக்குவது என்பது இயலாத காரியம்.

தான் வாழ்ந்த காலத்தில் புறக்கணிப்பட்டதன் காரணமாக மனம் வருந்தி, தனது எழுத்துப் பணியைத் தொடராமல் போனது தமிழ் மொழிக்குப் பெரிய இழப்பே...
Displaying 1 - 30 of 49 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.