Jump to ratings and reviews
Rate this book

புயலிலே ஒரு தோணி [Puyalilae Oru Thoni]

Rate this book
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது...

ப. சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடிவரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்துகொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன.

புயலிலே ஒரு தோணி ஒரு மகத்தான படைப்பு. நம் மொழியின் நவீனப் பொக்கிஷம்.

- சி. மோகன்

323 pages, Paperback

First published January 1, 1972

237 people are currently reading
2159 people want to read

About the author

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்
வட்டத்தைச் சேர்ந்த சிங்கம்புணரியில் கு.பழனிவேல் - உண்ணாமலை அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.

சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியும் மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பும் மேற்கொண்டார்.

தன்னுடைய 18வது வயதில் இந்தோனேசியாவில் உள்ள மைடனுக்கு கடல் பணியாளராகச் சென்றார். பின்னர் 1940இல் இந்தோனேசியா அரசின் மராமத்து துறையில் பணியாற்றினார்.

ப. சிங்காரம் இந்தோனேசியாவில் இருந்தபோது ஹெமிங்வேயின் பல நாவல்களை வாசித்திருக்கிறார். ஹெமிங்வேயின் "A Farewell to arms" இவருக்கு மிகவும் பிடித்த நாவல்.

ப. சிங்காரத்தின் நண்பர்கள் பலர் I.N.A.வில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மூலம் யுத்தம் பற்றி பல விவரங்களை அறிந்திருக்கிறார். பல ராணுவ முகாம்களுக்கு நேரடியாகவும் போயிருக்கிறார். இதெல்லாம் இவருக்கு நாவல் எழுத பெரிதும் உதவியிருக்கிறது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
227 (41%)
4 stars
201 (36%)
3 stars
95 (17%)
2 stars
17 (3%)
1 star
10 (1%)
Displaying 1 - 30 of 63 reviews
Profile Image for Bharathwaj.
15 reviews8 followers
October 28, 2015
P.Singaram, in my extremely limited opinion, is probably the only writer in Tamil that has so effortlessly put into paper, the random stream of thoughts that course through our heads. In a memorable scene, as the inebriated protagonist sets off in search of a whore, the present bleeds into the past and historic figures from Silappathikaram burst into life on the streets of 1940s Sumatra. Another scene in the middle of a raging storm in the sea, Singaram’ s words flow with consummate ease as he weaves through the description of the storm and the state of the hero’s mind. This is wizardry with a pen.

The novel, published with much difficulty in 1972, begins in the 1940s and follows Pandyan, a young Tamil expat working in Indonesia. Japanese forces invade Indonesia, as Pandyan moves to Penang and joins the Indian National Army. Singaram apparently had many friends working in the INA, and he gathered material for the book from them. And yes, Subash Chandra Bose does make an appearance. There is no wide eyed, star struck caricature, though. Pandyan meets him just the way he goes through life; with a strange detachment. That is not to say he is numb; He is extremely involved and strong in his convictions, yet the titular raft in the raging storm around him. And that I guess that is the point of the story.

Singaram must have had astounding knowledge in Tamil literature and it shows. The novel is abundantly filled with parodies and references to Tamil poetry; several of which even I could spot with my sparse knowledge. This is the work of an artist at his peak. I would gladly sell my soul to the devil to write a chapter like the Chinnamangalam chapters in this book. This is definitely a book that would reward multiple reads but also a book that would not translate well. That sucks because I feel this is one of the best that contemporary Tamil literature has to offer. What also sucks is that not many Tamil speaking people know about this book. (I was introduced to the novel when I chanced upon an interview of Vetrimaran in which he said he could never make this into a movie)

In Philip Pullman’s His Dark Materials trilogy, there was a knife that you could use to cut through your reality and step into another. He was probably thinking of books like Puyalilae oru thoni. They are neat book shaped holes in our reality that transport us to another time and place. Books like these remind me why I read; they also remind me why I’ll never stop.
Profile Image for Balaji M.
220 reviews14 followers
December 4, 2020
"புயலிலே ஒரு தோணி" - ப.சிங்காரம்

இரண்டாம் உலகப் போரின் போது தென்கிழக்காசிய நாடுகளில் நடந்த போர்சூழலில் கதை நடைபெற்றதாக புனையப்பட்டிருக்கிறது. ஜப்பான் படை மலேசிய "மெடான்" நகரில் இறங்குவதிலிருந்து கதை தொடங்குகிறது. கதை 'பாண்டியன்' என்ற கதைமாந்தரின் வழியே செல்கிறது. இருப்பினும்
கதையாக இல்லாமல், கணக்கற்ற கதைமாந்தர்களின் பேச்சுகளின் ஊடாக நாமும் அவர்களுடன் பயணப்பட்டு, அவர்களது கடல் கடந்து திரவியம் தேடும் பாட்டினையம், யுத்தத்தில் தமிழர்களின் பங்கினையும், அருகிலிருந்து கவனித்து வருவதாகவே இருக்கிறது.

சுமத்ராவிலிருந்து(பெலாவன், மெடான்) மலேயா(பினாங்கு) போகும் குமாஸ்தா வேலைபார்க்கும் பாண்டியன் தொங்கானில் கூட இருந்தவர்களான ஆண்டியப்ப பிள்ளை, நல்லதம்பி கோனார், சண்முகப் பிள்ளை போன்றவர்களுடன் செல்லும்போது கூத்தியாள்களின் சேர்க்கையினால் அழிந்த மார்க்கா(வட்டிகடை)கள் பற்றி நடத்தும் உரையாடல்களாக...

ஜப்பானியர் போர்திறம் பற்றி, தமிழர்களின் உண்மையான வீரம்(!) பற்றி தில்லைமுத்துவிடம் தர்க்கம் புரிவதாக...

மாணிக்கம், செல்லையா போன்றோருடன் தமிழ் மொழிப்பற்று, தமிழர் முன்னேற்றம், சீர்திருத்த கொள்கைகள், இலக்கியம் தொடர்பான தர்க்கங்கள் என பன்முக விடயங்கள், பாண்டியன் தங்களுக்குள் விவாதிக்கும் வண்ணம் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

கோவலன்-கண்ணகி செட்டிகளின் முன்னோர்களே என்றும், கார்(bus) ஸ்டாண்டு கதைகள், ப்ளசர்(car) வண்டி கதைகள், தங்களது இளமை காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்ததை அசைபோடும் விதமான உரையாடல்கள் எனக் கிளைக்கதைகளாக பாண்டியனின் பார்வையில் செல்கிறது.

இந்திய ராணுவத்தில் சேர்ந்த குமாஸ்தாவாக பாண்டியன், போர் புரியும் திறன்களின் மூலமாக எப்படி உயர்பொறுப்புக்கு வந்ததையும், அந்த உரையடல்களின் மூலம் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன், ரஷியாவிடம் வீழ்ந்த கதையும், பிரித்தானியரிடமும் சீனகொரில்லாக்களிடமும் ஜப்பானியர் அடிவாங்கி சென்ற போர் நிகழ்வுகளும் விவரித்து சொல்லப்பட்டிருக்கிறது.

"கடலுக்கு அப்பால்"நாவலில் வரும் முக்கிய கதைமாந்தர்களான 'செல்லையா' மற்றும் 'மாணிக்கம்', இந்நாவலில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டருக்கின்றனர். நேதாஜி முதற்கொண்டு பல நிஜவுலக மனிதர்களை கதைமாந்தர்களாக புனைந்து எழுதப்பட்டிருக்கிறது இந்நாவலில்.

தென்கிழக்காசிய புவியியல் சற்று தெரிந்து வைத்திருப்பது நாவலின் போக்கில் நன்றாக பயன்படும். ஒரு சில அத்தியாயங்களை தவிர, சற்றே மென்னடையில் சென்றதாகவே உணர்கிறோம். இடையிடையே மலாய், சீன, ஜப்பானிய மொழி உரையாடல்களும் கலந்திருப்பதால் தொடர்வாசிப்பு தடைபடுகிறது.

ந.முருகேசபாண்டியன் அவர்களின் முன்னுரையே, நாவலின் முழுப்போக்கையும் விளக்கிச்சொல்கிறது. Spoiler வேண்டாம் என கருதுபவர்கள் புத்தகத்தின் அப்பகுதியை தவிர்த்திடலாம்.
Profile Image for Vairamayil.
Author 0 books22 followers
February 16, 2022
Overall a good closure. In the beginning I wanted to stop the book as it had too many decorated details. I’m glad I haven’t stopped. Especially Two chapters (breaking your boundaries and why we believe) with its quotes and tamil literature was 💭 🔥. It has a lot of historical details from south east Asia from a Tamils view :)
July 10, 2024
‘பாண்டியன்’ என்கிற தோணி, ‘இரண்டாம் உலகப்போர்’ என்னும் புயலிலே எவ்வாறு ஆட்டம் காண்கிறது, தனக்கென்ற பாதையை தேர்வு செய்து தகுந்த தர்கத்துடன் பயணிக்கிறது, கடைசியில் பயணம் நிறைவாகிறதா என்பது தான் கதைசுருக்கம். A brilliant masterpiece!!! My second time read.
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews27 followers
September 7, 2020
மிக அற்புதமான புதினம்.அனைவரும் படிக்க வேண்டிய புதினம்
Profile Image for P..
528 reviews124 followers
June 14, 2020
'கடலுக்கு அப்பால்' நாவலைத் தொடர்ந்து ஒரே மூச்சில் இதை வாசிக்கலானேன். ப. சிங்காரத்தின் அனைத்து நாவல்களையும் வாசித்ததாக இப்போது மார்தட்டிக் கொள்ளலாம். இதை அதன் இரண்டாம் பாகம் என்று கூற முடியாவிட்டாலும், கடலுக்கு அப்பால் நிகழ்ந்த அதே காலத்திலும் களத்திலும் தான் இந்தக் கதையும் நிகழ்கிறது. கடலுக்கு அப்பால் கதையில் வந்த பாத்திரங்கள் இங்கேயும் வருகிறார்கள். சிலர் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். கடலுக்கு அப்பால் நாயகனின் கதைக்கு ஒரு மாற்று முடிவு இங்கே தென்படுகிறது. எனவே, இதை வாசிக்கும் முன் 'கடலுக்கு அப்பால்' வாசித்தல் better.

ப. சிங்காரத்தை வாசிக்க இரண்டு முக்கிய உந்துதல்கள்: 1) தமிழின் சிறந்த நாவல்களின் வரிசையில் எப்போதும் புயலிலே ஒரு தோணி தவறாமல் இடம்பெறும் . 2) புத்தகத்தில் இடம்பெறும் அவரது வாழ்வைப் பற்றிய குறிப்பு. இரண்டாம் உலகப் போர் காலத்தில் இந்தோனேசியாவில் வசித்த இவரது விசித்திரமான பின்னணி. இவரது நாவல்களைப் பிரசுரிக்க இவர் பட்ட பாடு. ஜான் கென்னடி டூல்-ஐ ஞாபகப்படுத்தும் இந்த போராட்டம்.

நுனை, அரும்பு, முகை, மலர் என நாவல் நான்கு பாகங்களாய் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் இரு பாகங்களும் பெரிதும் தெளிவில்லாமல் தட்டுத் தடுமாறி பல பாத்திரங்களையும் இடங்களையும் அறிமுகப்படுத்துகின்றன. படிக்க சவாலான பகுதிகள் இவை. மலாய்/இந்தோனேசியா நாட்டு இடங்களும் சில பழக்கவழக்கங்களும் பெரிதும் விளக்கப்படாமல் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுக்கின்றன. சில வார்த்தைகளுக்குக் கீழே விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பினும், பலவற்றிற்கு நாமே அர்த்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. கதைக்குப் பெரிதும் பலமோ பொருளோ சே��்க்காமல் நம்மை குழப்பி அலைக்கழிக்கும் இந்த இரு பாகங்களும் முற்றிலும் நீக்கப்படவோ நீளம் குறைக்கப்பட்டிருக்கவோ வேண்டும். கடலுக்கு அப்பால் படித்ததால் எனக்கு இப்படிப் பட வாய்ப்புண்டு. ஆனால், இந்த பாகங்களின் readability மிக மோசம். அந்த காலத்தில் மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் இருந்த புலம்பெயர் தமிழரின் வாழ்க்கையை, மொழியை, பழக்கவழக்கங்களை, தாய்நாட்டின் பால் அவர்க்கிருந்த ஏக்கத்தை, இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட மாற்றங்களை உள்ளதை உள்ளபடியே ஆவணப்படுத்தியதைத் தவிர முதல் 150 பக்கங்களுக்குப் பெரிதும் வேலை இல்லை. அடுத்த 150 பக்கங்களில் தான் கதை மொத்தமும் நிகழ்கிறது.

இரண்டாம் உலகப்போரின் கதை அவ்வப்போது அத்தியாயங்களுக்கிடையே மேலெழும்பி கதையின் போக்கை மாற்றுகிறது. மதுரையில் ஒரு கிராமத்தில் இருந்து பிழைப்புக்காக இந்தோனேசியாவிற்கு வந்த பாண்டியன் என்னும் இளைஞன் நேதாஜியின் INA வில் சேர்வதும், உயர்வதும், போர்கள் புரிவதும், போருக்குப் பின் அவன் வாழ்வில் ஏற்படும் வெறுமையும் அதைப் போக்க அவன் மேற்கொள்ளும் முயற்சிகளுமாக கதை நகர்கிறது. அவன் சந்திக்கும் மனிதர்களும் (அவர்களுடன் இவன் ஏற்படுத்திக்கொள்ளும் நட்பும், அவர்களின் உரையாடலும் விவாதங்களும்), காணும் இடங்களும் கதையில் பெருமளவை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

சோர்வூட்டிய முதல் பகுதிக்குப் பிறகு இரண்டாம் பகுதி சற்று விறுவிறுப்புடனும் சுவாரஸ்யத்துடனும் செல்கிறது. மனித வரலாற்றையும் இந்திய சமூகத்தையும் இந்தியாவின்/தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் பற்றிய சில விவாதங்கள் மிகவும் சிந்திக்கச் செய்பவை. ருசிகரமானதும் கூட. இந்திய சுதந்திரம், சுதந்திரத்திற்குப் பிந்தைய நிலைமை, பொருள் வளர்ச்சி, வரலாறு, நாத்திகம், இலக்கியம், சாதி ஒழிப்பு, மனித முன்னேற்றம் ஆகியவை இவர்களின் விருப்பத்தலைப்புகள். யுத்த அத்தியாயங்களின் செயல் விறுவிறுப்பை இந்த விவாதங்களின் சிந்தனை விறுவிறுப்பு மிஞ்சுகின்றது. சங்க இலக்கியத்திலிருந்தும் பக்தி இலக்கியத்திலிருந்தும் அவ்வப்போது மேற்கோள்கள் பறந்து இந்த உரையாடல்களில் விழுகின்றன. எப்போதுமே புரியாவிட்டாலும், இந்த நூல்களின் மீது ஒரு விருப்பத்தை ஏற்படுத்துகின்றன. 1940களில் உரையாடல்கள் இந்த தரத்தில் இருந்திருப்பின் நாம் வெட்கப்பட வேண்டும் இப்போது. 36-வது அத்தியாயத்தில் வாழ்வைப் பற்றி ஒரு விவாதம் எழுகிறது. அந்த காலத்தில் வந்த மற்ற நாவல்களையும் திரைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், இங்கே எழுப்பப்பட்ட கருத்துக்களின் சிந்தனை முதிர்ச்சி ஆச்சரியப்பட வைக்கிறது.

பெரும்பாலான விஷயங்களில் முற்போக்காக இந்த பாத்திரங்கள் தென்பட்டாலும், பெண்களை மிகவும் கீழ்த்தரமாக தான் எண்ணுகிறார்கள்/நடத்துகிறார்கள். ஒரு நல்ல பெண் எப்படி இருக்க வேண்டும், அவள் ஒழுக்கத்தோடு நடக்கவில்லையெனின் எப்படி வன்முறையைப் பிரவகிக்க வேண்டும் என்று 23வது அத்தியாயத்தில் வரும் பகுதிகள் மிகவும் அருவறுக்கத்தக்கவை. திடுக்கிடச் செய்பவை. 60களில் எழுதப்பட்ட ஒரே காரணத்தால் தான் இதை சகித்துக் கொள்ள முடிகிறது.

அழகு, அறிவு, திறமை எல்லாம் பெற்று சிறப்பாக விளங்கும் பாண்டியன் என்னும் கதாநாயகனின் வாழ்க்கையின் மூலம் இரண்டாம் உலகப்போரின் சரித்திரமும், மலாய் பகுதிகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையும், போர் சராசரி மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாபெரும் மாற்றங்களும் திறம்பட ப. சிங்காரத்தால் இந்த நாவலில் எடுத்துரைக்கப்படுகிறது. தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று என்ற அளவுக்கு சிறப்பாக இல்லாவிட்டாலும், தமிழில் முதலில் எழுதப்பட்ட ஒழுங்கான நாவல்களில் ஒன்று.
8 reviews
September 16, 2024
What a book! Why I missed reading it for long … , the quotes from Tamil literature was a flow along with story line ! It’s a gem !
Profile Image for MJV.
92 reviews39 followers
March 22, 2020
புயலிலே ஒரு தோணி:

இப்போதெல்லாம் புதிய எழுத்தாளர்களை அதிகம் தேடி படிக்கிறேன். அந்த வரிசையில் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகம் ஆன பா.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி நாவலை வாசித்தேன். இரு நாவல்கள் எழுதியுள்ளார். இன்னொன்று கடலுக்கு அப்பால். இவர் எழுதிய நாவல்கள் இரண்டுமே தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்து சென்று 1940களில் இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறை, அன்றைய சூழல், போர்கால அல்லல்கள் என்று பயணிக்கிறது.

சரி புயலிலே ஒரு தோணி நாவலின் கதாநாயகன் பாண்டியன் என்ற இளைஞன். சின்னமங்கலத்தில் பிறந்த பாண்டியன் வேலை நிமித்தம், இந்தோனேசியாவின் மெடான் நகரத்தில் வேலை பார்க்கின்ற தருணம், இரண்டாம் உலகப்போர் தலை தூக்கி உலகின் வெகுவான இடங்களை சின்னாபின்னம் ஆக்கி கொண்டிருந்த நேரம். பாண்டியன், மாணிக்கம், தங்கையா என்று மூன்று நண்பர்கள் சேர்ந்து இருக்கின்ற தருணங்கள் வெகுவாக கவர்கிறது.

இந்த புத்தகம் உண்மையை உரைப்பின், புயலில் ஆடுகின்ற தோணி போன்றே பயணிக்கிறது. ஒரு புறம் போரின் கொடுமைகளை உணர்த்தும் முதல் சில அத்தியாயங்கள், பின்பு பாண்டியன் தன நண்பர்கள் பலரோடு நிகழ்த்தும் தமிழ் மீதான விமர்சன உரைகள், ஆயிஷா என்ற வேசையின் மீதிருந்த அன்பு, இந்திய தேசிய ராணுவத்தின் அங்கமாக திகழ்ந்து நேதாஜிக்காக நடத்தும் வீர செயல், தனக்கான நேரத்தை, தனது வாழ்வின் அசைபோடுதலை எப்போதும் மற்றவர்களிடம் சொல்லாமல், கடலின் காற்றோசையோடும், ரிக்சாவில் பயணிக்கும் பொழுதும் எண்ணி திளைத்தல், இறுதியில் இந்தோனேசிய விடுதலை படையில் அங்கம் வகித்தல் என்று அதீத வேகத்திலும், ஆர்பாட்டத்திலுமே பயணிக்கிறது.

உண்மையில் பாண்டியனின் மனமே இந்த புத்தகத்தின் கதாநாயகன் என்று உணர்ந்தேன். பாண்டியனை ஒரு தீர்க்கதரிசியாக, சமூக பொறுப்பாளனாக, நண்பர்களை அரவணைக்கும் அன்புடையவனாக, தமிழை விமர்சித்து அதன் மூலம் உண்மை உரைக்கும் தமிழ் பற்றாளனாக, அடிமை முறைகளை உடைத்தெறிய துடிக்கும் வீரனாக, புரட்சியாளனாக, பல பெண்களின் உறவுக்காரனாக, சமூகத்தின் கட்டமைப்புகளை எளிதில் தூக்கி எறியும் சுய சிந்தனையாளனாக, கோபக்காரனாக, வாழ்வின் மீது அதீத பற்றாளனாக, சின்னமங்கலத்தின் வாழ்வை மிக வாஞ்சையுடன் நினைவு கொள்ளும் மனிதனாக சிங்காரம் சித்தரித்துள்ளார்.

என்னடா, 1000 முறை பாண்டியன், பாண்டியன் என்றே சொல்லி கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? நிறைய பேர் வருகிறார்கள் இந்த புயலில் தத்தளிக்கும் தொனியில், ஆனால் எல்லாமுமே, எல்லோருமே பாண்டியனை சுற்றித்தான் நடக்கிறது, நடக்கிறார்கள். ஆதலினால் தான் என்னுடைய வாசிப்பனுபவமும் அவ்வாறே இருக்கிறது. செட்டியார்களின் வட்டி கடையில் தொடங்கி, சாய்புகளின் கடைகள், சிற்றுண்டி விடுதிகள் என்று பல நுணுக்கமான விஷயங்கள் புத்தகம் முழுக்க பேசப்பட்டு இருக்கிறது. எவ்வாறு மெடான் நகர் வாழ் தமிழ் மக்கள் வேலை செயகிறார்கள், மலேயா நாட்டின் பினாங்கு நகரம் எப்படி இருந்தது, ஜப்பானிய, ஆங்கிலேய, டச்சு படைகளின் ஆதிக்கங்கள் என்று நாவல் முழுக்க அந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை ஆசிரியர் விளக்கியுள்ளார்.

" புல்லாந்தரையில் பிறந்தமே��ிக் கோலத்தில், மல்லாந்த உருவங்கள், சுற்றிலும் வேற்று மானிடர். சூரியனின் பட்டப் பகலில் ஊரறிய உலகறியக் காதறியக் கண்ணரியகே கட்டாய உடலாட்டு...

"ஆயயவோவ்! ஓ மரியா! ஆயயவோவ்"

பகலவன் பார்த்திருந்தான். நிலநங்கை சுமந்திருந்தாள்; ஊரார் உற்று நோக்கிக் களித்து நின்றனர்.

பாண்டியன் முகத்தை திருப்பினான். ஆ... "மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால் .."
"பாண்டி! தங்கையா இடக்கையால் முதுகைத் தொட்டான். இப்படிக் காட்சியை இங்கு பார்ப்போம் என்று கனவிலாவது நினைத்திருக்க முடியுமா?"

"எல்லாம் இடங்கால வாய��ப்புகளின் விளைவு. கிளம்பலாம்".
எப்போதும் போர்களின் கோரக் கைகள் பாய்ந்தோடி பிடிப்பது பெண்களின் கொத்து முடியைத்தான். எல்லாப் பேரிலக்கியங்களும், உண்மை நிகழ்வும் இப்படியே இதை தான் சொல்கிறது. பெண்களும் சிறார்களுமே போர்க்களத்தின் முத்திரைகளாய் எப்போதும் நிற்கின்றனர். Kite runner என்ற புத்தகத்தின் வரிகள்: ஆப்கானிஸ்தான் முழுதும் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் எங்கேயும் குழந்தைப்பருவங்கள் தான் இல்லை.

பாண்டியனின் இளவயது சின்னமங்கலத்து கதைகள், அப்படியே ஒரு கிராமத்து சந்தையின் அக்கால நிலையை கண் முன்னே நிறுத்தி செல்கிறது. மொச்சை கடை, வெள்ளை சீலை, விபூதி பட்டை, இட்லி, மல்லிக் காப்பி, பூக்கள், பொடி, வெற்றிலை, அயல் சிகிரெட்டு, குரங்கு மார்க் மண்ணெண்ணெய், தாராவரம் போயிலை என்று கலகலக்கிறது. இந்த பகுதியில் வரும் பாடல்கள் மனதை நெருடி செல்கிறது. இவை அனைத்தும் பாண்டியன் தொங்கானில் (சிறு படகு) பினாங்கு நகர் நோக்கி செல்லும் பொழுந்தினில் மனதில் அசைபோடுபவை.

டாமி ரக துப்பாக்கிகள், எறி குண்டுகள், கெம்பித்தாய் மேஜரின் கதை, சுந்தரத்தின் துரோகம், தமிழின் வரலாறு முக்கியம்தான், எனினும் உணர்வுகளை தாண்டி அவை இன்றும் நம்மை வழி நடத்துகிறதா? என்பதனை தர்க்கங்கள், ஆயிரம் கலகங்கள் செய்தாலும், பல எதிர் சமூக கருத்தில் நின்றாலும், பாண்டியன் நாவல் முழுதும் தன் கருத்தின் ஆழத்தை, அதன் நியாயத்தை சொல்லி கொண்டே கதை முடிகிறது. எனக்கு இது இரு புது வாசிப்பனுபவம். படித்துப் பாருங்கள்...
Profile Image for Godwin.
36 reviews6 followers
January 15, 2021
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு தென்கிழக்காசிய நாடுகளுக்கு பிழைப்புக்காகப் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை குறித்த ஆவணமா? அப்படி புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களில் பலர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றியதை மையமாகக் கொண்ட வரலாற்றுப் புனைவா?
இல்லை, சுதந்திர - சமத்துவ - சகோதரத்துவ விழுமியங்களின் மீது பெருங்காதல் கொண்டு திரியும் ஒரு இளைஞனின் வாழ்க்கைக் கதையா?
இந்த எல்லா கேள்விகளுக்கும் ஆம் என்றே பதில் சொல்லி விடலாம்.

ஒரு வாசகனாக எனக்குச் சவாலாக இருந்தது இந்நாவலின் மொழிநடை. சில இடங்களில் வெகுவாக நீளும் வாக்கியங்களும், மீண்டும், மீண்டும் தோன்றி மறையும் சொற்றொடர்களும் ஒரு வாசகனுக்குள் ஏற்படுத்தும் உணர்வெழுச்சிகள் புதுமையானவை.

இன்னொரு சிறப்பம்சம், புலம்பெயர்ந்த தமிழர்களின் வலியை பதிவு செய்திருக்கும் விதம். பணம், வசதியான வாழ்க்கை என எல்லாம் இருந்தும் வீடு திரும்புதலும், சொந்த ஊர் நினைவுகளும் கடலலை போல் நாவல் முழுவதும் எழும்பியபடியே இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை நாவலின் இதயம் என்று நான்யாங் ஹோட்டல் அறையில் நண்பர்களிடையே நடக்கும் விவாதத்தைச் சொல்வேன்.

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான எழுத்தாளரான காஃப்கா தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் நாம் வாசிக்கும் புத்தகங்கள் நமக்குள் உறைந்திருக்கும் கடலுக்கான கோடாரியாக இருக்க வேண்டும் ( A book must be the axe for the frozen sea inside us) என்று குறிப்பிட்டிருப்பார். நாம் உருவாக்கி வைத்திருக்கும் போலி பெருமைகளை நுட்பமாக பகடி செய்வதன் மூலம் புயலிலே ஒரு தோணி தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு கோடாரியாகவே தோன்றுகிறது.

நீசூன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் பாண்டியன், ரேசன், மாணிக்கம் என்ற நண்பர்கள் மூவருக்கும் நம்பிக்கைக் கனவுகள் இருக்கின்றன. இந்தியா விடுதலை பெற்றதும் எல்லாருக்கும் உணவு, உடை, வீடு என்பது அந்த மகத்தான கனவுகளில் ஒன்று. சுதந்திரம் கிடைத்ததுமே, எவ்வித சிக்கலுமின்றி அந்த மூன்றும் எல்லாருக்கும் கிட்டிவிடுமென அவர்கள் நம்புகிறார்கள். ஓர் உத்தரவு; எல்லாருக்கும் உணவு, உடை, வீடு !
அதிகார மையங்களில் இருந்து உத்தரவுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. கனவுகளோடு காத்திருக்கிறார்கள் ப.சிங்காரம் உருவாக்கிய கதாப்பாத்திரங்கள்.
Profile Image for Vadivel C.
24 reviews2 followers
September 24, 2022
புயலிலே ஒரு தோணி....


தமிழில் முற்றிலும் மாறுபட்ட உரைநடை கொண்ட நாவல். கடலுக்கு அப்பால் மற்றும் புயலிலே ஒரு தோணி இரண்டும் ஆகச் சிறந்த படைப்புகள் ( Masterpieces). இப்படி 2 நாவல்களைத் தந்தமைக்கு திரு.ப.சிங்காரம் அவர்களுக்கு, தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் நன்றி உரைக்கும்.

கதைக்களம் இந்தோனேசியா - பினாங்கு நகர வீதிகளில் 1940 களில் கதாநாயகன் பாண்டியனுடன் பயணிக்கிறது. படிப்பதற்கு சற்று சிரமாமாய் இருந்தாலும் ஆர்வம் குறைக்காத வகையில் நகர்த்திச் செல்கிறார் சிங்காரம் அவர்கள். 2ஆம் உலகப் போரின் பின்னணியில், உலக வரலாற்றையும் அறிய முடிகிறது.


பண்பாட்டு பெருமைகளையும், பழைமைவாதங்களையும் பேசித் திரியும் தமிழர்களின் தற்பெருமையை எல்லாம் அவ்வப்போது கேள்விக்கு உள்ளாக்குகிறான் பாண்டியன், ஏற்க்கத் தகும் காரணங்களுடன்.

...…...........................…........................
"

ஒவ்வொரு செயலுக்கும் நெஞ்சின் தீர்ப்பு என்ற நங்கூரம் வேண்டும், இல்லையா?”

“தன் மனமே தன்னைச் சுடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடே அது.”

“அந்தப் பாதுகாப்புடன் எதுவும் செய்யலாம்-கொல்லலாம். எரிக்கலாம், நொறுக்கலாம்?”


"
...…...........................…........................
"
இன்றுளார் நாளை மாள்வார் புகழுக்கும் இறுதி உண்டோ..
"

...…...........................…........................

மொத்தத்தில் இரு சிறந்த படைப்பு!
Profile Image for Pasupathi.
49 reviews3 followers
May 16, 2020
கதைக்களம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளான மலேயா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள், சீனர்கள், மலேயர்கள், இந்தோனேசியர்களின் அக்கால வாழ்வியலை போர்க்காலத்தின் ஊடாக இயல்பாகவும் அழகாகவும் விவரிக்கிறார் ஆசிரியர் ப.சிங்காரம்.

கதை முழுவதும் கதாநாயகன் பாண்டியன் வழியே நகர்கிறது. கதைமாந்தர்கள் பெரும்பாலும் தமிழர்களாயினும் அவர்களின் அக்கால மலேய கலந்த தமிழ் வழக்கு சற்று சிரமமாகவே இருக்கிறது வாசிக்க. ஆனாலும் அதற்க்குத் தக்க சண்மாணமாய் கதையின் பல சிறப்பம்சம்சங்கள் காத்திருக்கின்றன.

புத்தகத்தின் தலைப்பிற்க்கு ஏதுவாய் கதைக்களமும் புயலில் அகப்பட்ட தோணியாய் தான் பயணிக்கின்றது. மதுரை-சின்னமங்கலம், மலேய தமிழர்களின் அன்றைய வணிகம், ஜப்பானிய படைகள், டச்சு படைகள், கொரில்லா படைகள், பிரிட்டிஷ் இராணுவம், இந்திய தேசிய இராணுவம், நேதாஜி மற்றும் பல முக்கிய அதிகாரிகளின் ஈடுபாடு என பின்னிப் பிணைந்த ஒரு கதைக்களம் முற்றிலும் வேறுபட்ட வாசிப்பு அனுபவம். அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என ஔவையார் சொன்னது ஞாபகம் வருகின்றது.

தமிழ்ப் பேரவை எனும் அத்தியாயத்தில் பாண்டியன் மற்றும் அவன் நண்பர்கள் கூடியமர்ந்து உரையாற்றும் தமிழ் மீதான விமர்சனம், சமுதாய ரீதியான தத்துவ விவாதங்கள் சுவாரசியமான ஒன்று. மற்றொரு அத்தியாய���்தில் பாண்டியனும் தங்கையாவும் நிகழ்த்தும் மானிட அறிவு பற்றிய விவாதம் குறிப்பிடத்தக்க ஒன்று.

சாதிய ஒழிப்பு பற்றிய விவாதத்தில் பாண்டியன் கருத்து: “நம் முதற்கடமை - மக்களிடையே பரந்த பனப்பான்மையை வளர்ப்பதே. அறிவு வளர்ச்சி காரணமாகத் தோன்றும் பரந்த மனப்பான்மைக்கு, ஜாதி சமய இனமொழிப் பிரிவுகள் யாவுமே வெறும் விளையாட்டு வேலிகள்.”

“எந்த ஒரு இனம் செல்வச் செருக்கால் வரம்பு கடந்து போக நுகர்ச்சியில் திளைக்கிறதோ, அது சீரழிவது திண்ஂணம்.”

“இயற்கை வாழ்வில் மனிதன் அப்பழுக்கில்லாத விலங்கு. செயற்கைச் சமுதாயத்தில்தான் மானிடன் வேட்டி கட்டி மறைக்கும் பிராணி. வேட்டிக்கற்பனை தோன்றியபின் அதன் விளைவான கற்புக் கற்பனை, உடைமைக் கற்பனை, தெய்வக் கற்பனை எல்லாம் தோன்றியே தீரும். கற்பனைகள் இல்லாவிடின் சமுதாயப் பண்பே கிடையாது.”

விவாதத்திலும், மற்ற வர்ணணைகளிலும் வரும் பல சங்க இலக்கிய பாடல்கள் சிறிது புரியவில்லையென்றாலும், அதன் வர்ணணைகள் அழகே. தமிழ் நூல்களில் இது ஒரு classic.
Profile Image for Santhosh Guru.
180 reviews52 followers
December 13, 2020
My best fiction read of 2020. It was published in the 1970s, just that I am discovering it now. It's a thrilling story of an India-born Tamil, spending time in Netaji Subhas' army, experience in living with Tamil diaspora in Indonesia/Malaya/Singapore, and also Madurai.

I was reminded of two things when I finished the book. The Tamil movie Chennai 600028 and the phrase "Pet the dog". First, like Chennai 600028, this novel is authentically irreverent. Many holy cows of Tamil culture are ridiculed in a delightfully hilarious manner. There were so many LOL moments in this fiction. Second, the screenwriters use the technique called "Pet the dog". Instead of writing in length about the context, you paint the picture by vividly describing the action. Singaram's writing is full of such images. The landscape of Madurai, Medan(Sumatra) , Penang, war, and seafaring comes live in his lucid writing.

If you can understand Tamil, but cannot read, I highly recommend Storytel's audiobook. It is a great novel that you shouldn't miss.
Profile Image for வெங்கட் பீமசேனன்.
86 reviews1 follower
February 26, 2024
மிகவும் அழகான புதினம். இதில் வரும் ஒவ்வொரு காட்சியும் நாம் நம்மை சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்று தலையை சுற்றி நோட்டம் விடுவது போலவே ஐயா சிங்காரம் அந்த காட்சியை விவரித்து நமக்குள்ளேயும் அதே உணர்வை கடத்துவார். நாம் இந்த புதினத்தை முடிக்கும் சமயத்தில் கிழக்கு ஆசிய நாடுகளில் விடுதலை சமயத்தில் ஒரு சிறு பயணம் சென்ற உணர்வு ஏற்படும். கிழக்கு ஆசியாவில் தமிழர்களின் வாழ்வும் அவர்களின் தமிழ் பற்று மற்றும் ஆழ்ந்த இலக்கிய தமிழ் அறிவையும் அறிய முடிந்தது அதோடு அவர்களின் வாழ்வியலையும் அறிய முடிந்தது. இந்த புதினம் பாண்டியனுடன் செல்லும் ஒரு சாகச பயணம் என்றே சொல்லுவேன்.
Profile Image for Sindhu.
44 reviews32 followers
January 16, 2021
The writing is very different. Usage of other language words makes it difficult to connect. It’s all about the journey of person from tamil during world war 2 and there is no story line as such. Over all not a bad read!
Profile Image for Sudharsan srinivasan.
37 reviews4 followers
November 7, 2021
After lot of positive reviews and suggestion from many people I bought this book. It was story of Pandian, the lead character and his travel in south Asian countries around second world war and start of 1950s. It all starts with slow paced chit chats between his friends and his sweet memories of his home (Tamil Nadu, India). Once he joined the INA with the legend Subhash Ji the story turns to take its pace carrying till the end. The memories which he recollects of old Tamil Nadu, India was wonderful. Especially about Madurai on chapter 10. The readers can feel the old way of living habits and old norms.The dialect to read was bit difficult for me but you will get used to it for sure. And it was holding the life of the novel to be practical. The author has written only two books and he himself was ex INA member which was evident in his write-up. Irony is this book released in 1970s that too after great struggle of 10 years which forced the author to quit writing novels. Anyhow he continued to write articles for Tamil Daily newspaper. Now it is trending among readers. He will be happy if he was alive now. This man and his works deserved to be celebrated. And It should to translated to most of the Indian languages.

"Puyalile oru thoni" - you will land shore without trouble. Go for it!
Profile Image for Nagarajan.
76 reviews23 followers
January 16, 2022
புயலிலே ஒரு தோணி தமிழின் ஆகச்சிறந்த ஒரு கிளாசிக் நாவல். அழகியல் மற்றும் தத்துவ கலவை. சிங்காரத்தின் எழுத்துநடை சொக்க வைக்கிறது. அந்த இடத்தை நேரில் சென்று பார்க்க தூண்டுகிறது. தமிழ் இலக்கிய வர்ணனை மேலும் அழகூட்டுவது. மொத்தத்தில் காலத்தை வென்ற படைப்பு
Profile Image for Manikandan Jayakumar.
94 reviews19 followers
May 7, 2025
This is my first read of this novel, overwhelmed by the sheer number of characters and their names. After attending the novel discussion realised that these very thing is what novels are ment to be and also Jeyamohan's "Novel" essay will give a different perspective about novel in general and also about this novel. Should reread sometimes in near future.
Profile Image for Selva.
6 reviews21 followers
December 29, 2020
Among the best novels in Tamil. It would make a great movie or webseries! I doubt any book in Tamil handles World War II involvement of Tamils like this one. Singaram's Kadalukku Appaal is another
Profile Image for Siva Prasath T R.
76 reviews4 followers
April 6, 2020
புயலிலே ஓர் தோணி !!

2016 ஆம் ஆண்டு ஓர் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது நீயாநானா #கோபிநாத் அவர்கள் நடிகர் #தனுஷ் அவர்களுக்கு பரிசாக இப்புத்தகத்தை வழங்கினார். அப்போது அவர் கூறியது " இப்புத்தகதம் தமிழில் முதல் 10 புத்தகத்தில் ஒன்று அனைவரும் வாசிக்க வேண்டியது" என்றார். அப்போது தோன்றிய வேட்கை தற்போது நிறைவுற்றது.அனைவரும் கூறுவதைப்போல தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓர் அதி அற்புதமான படைப்பு.

புயலிலே ஓர் தோணி இரண்டாம் உலகப்போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவத்தையும் மிகத் துள்ளியமாக தெளிவாக நம்பகத்தன்மையுடன் 'சித்தரித்த' நாவல். கதாநாயகன் #பாண்டியன் #இந்தோனேசியாவில் கடையில் வேலை செய்யும் தொழிலாளிக அறிமுகமாகி போரின் போது இந்திய இராணுவத்தின் இரகசிய அதிகாரியாக ,தலைவர் #நேதாஜியின் கட்டளைக்கு இணங்க பல்வேறு முக்கியமான செயல்களைச் செய்து இறுதியில் மாவீரனாக புகழ் பெற்றார்.

ஆசிரியர் ப. #சிங்காரம், இந்தோனேசியாவில் #சோழர்களைத் தொடங்கி பல்வேறு நாட்டார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் எவ்வாறு குடிபெயர்ந்து தமது வாழ்க்கை முறையை கட்டமைத்துள்ளனர் என்பதன் வரலாற்றை மிக அழகாக தொகுத்துள்ளமை சிறப்பு.
கடலில் பயணம் செய்பவர்களின் பயண அனுபவத்தையும் இடைஇடையே எதிர்கொள்ளும் இடர்பாடுகள் இன்னல்களை பற்றி மிக ஆழமாக எடுத்துரைத்துள்ளார்.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வுலகம் #பெண்களை எவ்வாறு #காட்சிப்பொருளாக நடத்தியுள்ளது போர்களின் போது ஆண்கள் பெண்களை நடத்திய விதத்தையும் #மதுசூது முதலான பழக்கங்கள் கொடிகட்டி பறந்துள்ளமையையும் போரினால் ஏற்பட்ட துன்பங்களையும் , பெண்களை இழிவாக நடத்தும் விதிமுறைகளை மிக விரிவாக விளக்கியுள்ளார்.
#கடல்பயணம் கொண்டு தங்களது பிழைப்புக்காக தூரதேசம் போகும் தொழிலாழிகளின் மனவேதனையை அவர்களின் தமிழ் பற்றினை தங்களது ஊரின்பால் கொண்ட காதலினையும் கிராமத்து நகரத்து வாழ்வியலையும் கிராமத்து வாசனையோடு மிக சிறப்பாக படம் போட்டு காட்டியுள்ளமை வியக்குமே வண்ணம் உள்ளது.

நாளை என்ன நடக்கும் என்று தெறியாமல் பரிதவித்து நிற்கும் மக்கள் , #ஜப்பானின் போர்த் தந்திரம் , அவர்களின் வீரம் #சிங்கப்��ூர் இந்தோனேசியாவைக் கைப்பற்றும் விதம் , #அமெரிக்க உடனான பகைமை பின்பு அவர்களிடம் தோற்று சரணடைந்த்து,ஆங்கிலேயர்களின் பின்வாங்கள், இந்திய தேசிய இராணும் உருவான விதம் நேதாஜியின் பங்களிப்பு, #ஜெர்மனி #இரஷியாவிடம் கண்ட தோல்வி போன்ற பல்வேறு நிகழ்வுகளை நேரில் சென்று காணும் வண்ணம் அமைத்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் சாதாரணமாக #சாதிகள் எவ்வாறு நம் பெயர்களோடு ஒட்டிப்பிறந்தது முதலாளி-தொழிலாளியின் பண்புநலன்கள் இவற்றை இடையிடையே பாடல்வரிகளுடன் இணைத்து தமிழ் மலாய் ஜப்பானிய ஆங்கிலம் வங்காள மொழிகளையும் இடையிடையி தொகுத்தே அமைத்துள்ளமை புது அனுபவத்தை அளிக்கும் என நம்புகிறேன்.

#தந்தைபெரியாரே தாங்கள் இல்லை என்றால் இன்றும் நம் தமிழக சமூகம் இக்கதையினில் கூறியுள்ளதைப் போலவே இன்றும் இருந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தாங்கள் சமுதாயத்திற்காக ஆற்றியத் தொண்டுகள் மகத்தானது நம்மை செம்மைப்படுத்தி நல்வழிப்படுத்த உதவியது,பொருளாதார சமுதாய முன்னேற்றத்தை உருவாக்க வகைசெய்தது.

'முடிசார்ந்த மன்னனும் முடிவிலொடு பிடிசாம்பல்'
Profile Image for Bavya Krishnan.
57 reviews2 followers
June 17, 2020
புயலிலே ஒரு தோணி - ப சிங்காரம்
.
Puyalilae oru thoni by Pa Singaram..
.
.
When I read it somewhere that it is one of the must read books in Tamil they didn't hype it around.. A must read .. but maybe a bit complicated read.. if you were of the idea that reading ancient tamil is difficult well welcome to Singaram world and just read the hardcore plain spoken tamil at different countries in the world war II era..
.
.
Initially when someone mentioned a simple name Pandian as various modulations of their own native languages you feel like less connected but as the speed takes on its like you enter the same people and start to understand them with thier own languages and their own slang.. You actually feel like you have read a multi language book..
.
.
The voyage starts with Pandian in the streets of Medang with the entry of Japanese troops and then we see the stage of world war and how it involved even the not so involved territories.. This is the firsthand experience of the author.. so the trueness and the rawness of the streets, people and the story remains so intact till the end.. Then the story travels to Malay, Singapore, even Madurai (just through the thoughts of protogonist) .
.
.
The best part for me was the entry of Nethaji.. and he didn't hype the fact that he is a national leader.. The journey moves on as if he is just another character in just another scene.. That really would stand apart when you read..
.
.
And the final scenes when it felt like we were revisiting the places which we travelled along the book, pre war and post war.. ❤️❤️❤️..
.
.
Loved it ❤️❤️❤️.
Profile Image for Rubi Sindhika.
20 reviews4 followers
August 18, 2020
அவ்வளவாக தமிழ் புத்தகங்கள் வாசித்து எனக்கு பழக்கமில்லை. வாசித்து பார்போம் என்று வாங்கி ஆராம்பித்தேன். கதை களம் வேறு நாட்டில் வெவ்வேறு நகரங்களில் அமைந்திருக்கிறது. கதை மாந்தர்கள் ஆங்காங்கே புதிதாய் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். முதல் பாதி வாசிப்பதற்கு சிறிது தடுமாற்றமாக இருந்தது. பிற்பகுதி அருமை. கதை முழுவதும் பாண்டியன் மற்றும் அவனது நண்பர்களின் சிந்தனைகள் ரசிக்கும்படியகவும், நான் இதுவரை சிந்திக்காத வகையிலும் இருந்தது. அதுவே எனக்கு கதையை மேலும் தொடரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. முடிவாக புயலிலே ஒரு தோணி படித்தது நல்ல அனுபவம்.
152 reviews31 followers
November 30, 2012
This novel has lots of information about the life of Tamil people in the far east Asia - Sumatra/Malaya/Singapore during the World War II era.
Interestingly woven with Nethaji SubashChandraBose and INA.
I am happy that I was exposed to many of the Tamil words used in this story.
8 reviews
November 15, 2019
Unique experience

A very unique novel set in WW - 2 period, gives a different style of narrative. The conversations and the inner discussions of the characters are great. But the novel is but difficult to read.
4 reviews8 followers
January 21, 2022
Overrated novel. It is difficult to cross the first 20 pages. More so because of the use of other language words in Tamil. In the end it feels like non fiction.
6 reviews1 follower
October 9, 2021
"என்ன ஜி இந்த புக்கையா எல்லாரும் இவ்வளவு பெருமையா பேசுறாங்க. பாதி புக்க தாண்டிட்டேன் ஊர பத்தின வெறும் டிஸ்கிரிப்ஷன் தவிர வேற ஒண்ணுமே இல்லையே ஜி." புயலிலே ஒரு தோணி புத்தகத்தின் முதல் 150 பக்கங்களை தாண்டிய பின்பு நண்பரிடம் நொந்து கொண்டு இருந்தேன். இந்த 150 பக்கங்களை படிக்க எனக்கு 2 மாதங்கள் ஆனது; அதுவும் பஹீரத பிரயத்தனப் பட்டுதான் படித்து முடித்தேன். சேர்ந்தாற்போல் 5 பக்கங்களை தடையில்லாமல் வாசிக்க முடியவில்லை அவ்வளவு கஷ்டமான எழுத்துநடை. இந்தோனேஷியா, மலாய், டச்சு , சீனம் என்று பல மொழிச் சொற்கள் மொழிபெயர்க்கப் படாமல் அப்படியே எழுதப்பட்டிருந்தன. அவற்றை புரிந்து கொள்வதற்குள் வாசிப்பு ஓட்டம் தடைப்பட்டு கடுப்பாகி விட்டது.

சரி இவ்வளவு பேர் சொல்றாங்களே படித்துதான் பார்ப்போம் என்று தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அடுத்த 150 பக்கங்களை மூன்று நாட்களுக்குள்ளாக படித்துவிட்டேன். பொதுவாக முதல் நூறு பக்கங்களில் என்னைக் கவரவில்லை என்றால் பெரும்பாலும் அந்த புத்தகம் சுமாரான புத்தகமாகவே இருக்கும் ஆனால் புயலிலே ஒரு தோணி இதற்கு விதிவிலக்கு. பழைய பாகவதர் பாட்டிலிருந்து திடீரென்று ஏ. ஆர். ரகுமான் இசையைக் கேட்டது போல் உருமாறி வேகம் பிடித்து விட்டது இரண்டாம் பாதி.

இரண்டாம் உலகப்போர் சமயம் ஜப்பானியர்கள் இந்தோனேசியாவை கைப்பற்றுகிறார்கள். வட்டிக்கடை மேளாலாக இருந்த பாண்டியன் மெடானில் இருந்து கடல்வழியாக பினாங்கு புறப்படுகிறான். பயணத்தின்போது அவன்சொந்த ஊரின் நினைவலைகள் அவனைத் தாலாட்டுகின்றன. அவனோடு சேர்ந்து நாமும் மதுரையின் தெருக்களில் சுற்றி வருகிறோம். புயலின் காரணமாக சரக்குகளை இழந்து பினாங்கில் இறங்குகிறான். இங்கிருந்து பாண்டியன் எப்படித் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பயணப்பட்டான்; மீண்டும் தனது சொந்த ஊரைப் பார்க்கத் திரும்பிப் போனானா ? என்பது மீதிக்கதை.

மூன்று விஷயங்களுக்காக புயலிலே ஒரு தோணியை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை,
1. இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் , உண்மைக்கு மிக மிக நெருக்கமாகவும் துல்லியமாகவும் எழுதப்பட்ட தமிழ் நாவல்.
2. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், வாழும் மனிதர்கள், அவர்களின் மொழி , வசிக்கும் ஊர் என மிகக் கூர்மையாகக் கவனித்து அதை ஒரு செழுமையான நாவலாக கொடுத்திருக்கும் பா.சிங்காரம் அவர்களின் படைப்பாற்றல்
3. புத்தகம் முன்வைக்கும் ஞாயமான சில தர்க்கங்களுக்காக. உதாரணமாக,
a) தமிழர் பழம் பெருமை பேசுவதை விடுத்து எல்லா மொழிகளிலும் அவற்றிற்கானச் சிறந்த இலக்கியங்களும் நீதிகளும் அறமும் இருப்பதை அங்கீகரிக்க வேண்டுமென்ற பறந்த மனப்பான்மையை முன்வைக்கிறது. (30000 யானைகளை கப்பலில் கொண்டு போன போலிப் பெருமை எல்லாம் பேசாதிங்கப்பானு சொல்றாரு 😂)
b) வலியோருக்கு எதிராய் போராடும் எளியோருக்கு உதவி செய்வதே அறம் என பாண்டியன் முடிவெடுப்பது. (இன்றைய நிலவரப்படி இலங்கையில், பர்மாவில், பாலஸ்த��னத்தில் etc. etc.)
c) மொழி , தேசம் , இனம் போன்றவற்றிற்கு உணர்வுதான் அடிநாதமாக இருக்க வேண்டுமே அன்றி புறக் காரணங்கள் அல்ல என்ற கருத்து இன்றைய அரசியல் சூழலிற்கும் பொருந்திப் போகிறது. (தமிழ் அகராதி தந்த வீரமாமுனிவரைக் கூட பிறப்பால் நீ தமிழனா என்று கேள்வி கேட்போர் சிந்தனைக்கு 😁 )

இன்னும் நிறைய அருமையான கருத்துக்களை கதையின் போக்கிலேயே ப. சிங்காரம் அவர்கள் முன்வைக்கிறார்; நிச்சயம் படித்துப் பாருங்கள். புதிதாக புத்தகம் வாசிக்க தொடங்கியிருந்தால் தயவுசெய்து இந்தப் புத்தகத்தை இப்போது படிக்க வேண்டாம். குறைந்தது 30 , 40 புத்தகங்கள் படித்து அனுபவம் பெற்ற பிறகு படிக்கவேண்டிய மிகச்சிறந்த பொக்கிஷம் இது. என்னைப் பொருத்தவரை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழின் நவீன இலக்கிய படைப்புகளுக்கு புயலிலே ஒரு தோணி ஒரு முன்னோடியாகவே இருக்கும்.


அன்புடன்,
நௌஷாத்
8 reviews1 follower
October 18, 2025
"புயலிலே ஒரு தோணி" - ப.சிங்காரம் அவர்களின் இரண்டாவது நாவல். அவரின் இரண்டாவது புலம் பெயர் நாவல். பா. சிங்காரம் அவர்கள் 1930 - 40 களில் இந்தோனேஷியா, மலேஷியா போன்ற நாடுகளில் வேலை செய்தவர். அது இரண்டாம் உலகப்போர் கால கட்டம். அ���்த சமயத்தில் அவரின் அனுபவங்கள் மற்றும் அங்கு சந்தித்த மனிதர்களின் வெளிப்பாடே இந்த நாவல்.

இது ஒரு புது வகையான நாவலாக பட்டது எனக்கு, கதையை விட, கதைமாந்தர்கள் மற்றும் உரையாடல்களே பிரதானமாக உள்ளன. ஏகப்பட்ட கதைமாந்தர்கள், தமிழ் இலக்கியம், தமிழர்களின் வீரம், தமிழர்களின் முன்னேற்றத்திற்கான யோசனை, ஜப்பானியனிரின் போர் திறன் என்று பரந்துபட்ட உரையாடல்கள் இருக்கின்றன.

கதையின் நாயகன் பாண்டியன் சின்னமங்கலம் என்ற தமிழ்நாட்டில் ஒரு ஊரிலிருந்து வேலைக்காக சுமத்ரா வந்த பாண்டியன், இரண்டாம் உலக போர் சூழலில் சுமத்ராவிலிருந்து மலேயா சென்று திரும்பவும் சுமத்ரா வருவது தான் கதை என்று வைத்துக்கொள்ளலாம்.

நாவல் நான்கு பாகங்களாக இருக்கின்றன, அதில் முதல் இரண்டில் சுமத்ராவிலிருந்து கப்பலில் மலேயா செல்வதும் அங்கு பாண்டியன் சந்திக்கும் நபர்களும், கப்பலில் உடன் வந்தவர்களின் கதைகளும், உரையாடல்களும், பாண்டியனின் தமிழ்நாட்டு நினைவுகளும் தான் நிறைந்திருக்கின்றன.

மூன்று மற்றும் நான்காவது பாகங்களில் பாண்டியன் ஐ என் ஏ வில் சேர்வது, ஐ என் ஏ வில் பாண்டியனின் வளர்ச்சியும், அவன் நபர்களின் உரையாடல் மூலம் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன், ரஷியாவிடம் வீழ்ந்த கதையும், பிரிட்டனிடமும் சீனர்களிடம் ஜப்பானியர் அடிவாங்கி சென்ற நிகழ்வுகளும் விவரிக்கப்படுகிறது. இந்த பகுதியில் பாண்டியன் நேதாஜி அவர்களை சந்திக்கும் நிகழ்வும் நடக்கிறது.

நேதாஜியின் மறைவிற்கு பிறகு ஐ என் ஏ வில் இருந்து சுமத்ரா திரும்பும் பாண்டியன், பிறகு நடப்பதே கதையின் முடிவு.

பா.சிங்காரத்தின் முதல் நாவலான கடலுக்கு அப்பாலில் வரும் மாணிக்கமும், செல்லையாவும் வருகிறார்கள்.

இந்நாவலின் எதிர்பாராத போக்கு மற்றும் சுமத்ரா, மலேயா, சிங்கப்பூர் போன்ற புது நிலப்பரப்பு, மலாய், சீன, ஜப்பானிய பெயர்கள் மற்றும் அந்த மொழியில் இருக்கும் உரையாடைகள் போன்றவை தொடர் வாசிப்புக்கு தடையாக இருக்கிறது, சற்று மெனக்கெட்டு படிக்க வேண்டிய நாவல் இது.

கதைக்களம், சூழல், நிலப்பரப்பு, கதைமாந்தர்கள் என அனைத்தும் தமிழ் வாசகர்களுக்கு தரும் புது அனுபவம் போன்ற காரணங்களுக்காக "கடலுக்கு அப்பால்" மற்றும் "புயலிலே ஒரு தோணி" இரண்டும் தமிழின் மிக முக்கிய நாவல்கள், கண்டிப்பாக படித்து பாதுகாக்கப்பட வேண்டிய நாவல்கள்.
Profile Image for Sangamithra.
58 reviews26 followers
April 27, 2022
🛶கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது இப்புத்தகத்தை வாசித்து முடிக்க. பாதி புத்தகம் வரை எதற்கு இப்புத்தகம் வாசிக்கிறேன்? என்ற உணர்வோடு விருப்பம் இல்லாமலேயே வாசித்தேன். கொஞ்சம் கடினமான நடை.

🛶இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் இக்கதை நடைபெறுவதாய் அமைந்துள்ளது. பெரும்பாலான அத்தியாயங்கள் இந்தோனேஷியாவை கதைக்களமாக கொண்டிருக்கும். ஆசிய வரைபடத்தை மேலோட்டமாக ஒரு முறை பார்த்துக் கொள்வது இப்புத்தகத்தை வாசிக்க உதவியாக இருக்கும். இப்புத்தகம் கதை என்ற வகையை விட திரைக்கதை என்ற வகையில் அதிகம் பொருந்திப் போகும் என்று எண்ணுகிறேன்.

ஆரம்பத்தில் புத்தகம் பிடிக்காததற்கு காரணம்:
1) வேற்று மொழிச் சொற்கள், அர்த்தம் தெரியாத தெற்கத்திய வட்டாரச் சொற்கள் வாசிப்பைக் கடினமாக்கின.
2) நிறைய உரையாடல்களில் எந்த கதாபாத்திரம் எந்த வசனத்தை பேசுகிறது என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது.

பிடித்ததற்கு காரணம்:
1) உளவியல் சார்ந்த, தத்துவங்கள் சார்ந்த எழுத்துக்கள் கொண்ட சில அத்தியாயங்கள்
2) ஆங்காங்கே வரும் இலக்கிய மேற்கோள்கள்
3) மொழி, இனம், தேசியம் சார்ந்து இருக்கும் பற்றுகளை எதிர்க்கும்/கேள்வி கேட்கும் படைப்புகள் எனக்கு பிடித்தமானவை. இப்புத்தகம் அவற்றுள் ஒன்று. மிக முக்கியமான ஒன்று என்றே கருதுகிறேன்.

யாரெல்லாம் தவிர்க்கலாம்:
1) புதிதாய் புத்தகம் வாசிக்க ஆரம்பித்து இருப்பவர்கள்
2) கடினமான நடையை அறவே விரும்பாதவர்கள் (திரைப்படமாய் எடுக்கும் போது நிச்சயம் பாருங்கள்)

யாரெல்லாம் வாசிக்கலாம்:
1) திரைப்பட இயக்குனர்கள்
2) போர்கள், தமிழ் இலக்கியங்கள், தெற்கத்திய வட்டாரச் சொற்கள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்வோர்கள்
3) முக்கியமாய், முதலில் உள்ள சில அத்தியாயங்கள் மட்டும் படித்துவிட்டு புத்தகம் பிடிக்காததால் மீதி புத்தகத்தை வாசிக்காத தேர்ந்த வாசகர்கள்

🛶இப்புத்தகத்தைத் திரைப்படமாக பார்க்க ஆவலாக உள்ளது. நீங்கள் இப்புத்தகத்தை ஏற்கனவே வாசித்து உள்ளீர்களா? பாண்டியன் கதாபாத்திரத்திற்கு எந்த நடிகர் பொருத்தமானவராக இருப்பார் என நினைக்கிறீர்கள்?
78 reviews3 followers
March 2, 2023
பா.சிங்காரம் தன் வாழ்வில் எழுதிய இரண்டே இரண்டு நாவல் இதுதான் நான் படித்த முதல் நாவல், நவீன இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்பாக இன்னுலை பற்றி பேசாத இலக்கியவாதியே கிடையாது தமிழில்.

இக்கதை இடம்பெறும் காலம் இரண்டாம் உலகம் போரின் காலம், நிகழும் இடங்கள் இந்தோனேசியா மலேசியா சிங்கப்பூர் மியான்மர் இப்படி ஆசிய தென்கிழக்கு நாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலே இந்நூல். இரண்டாம் உலகப் போரில் தமிழக மக்களுக்கு எந்த அளவுக்கு பங்கிருந்திருக்கிறது, பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார்கள் என இக்கதையின் மூலம் உணரலாம்.

படிக்கத் தொடங்கியபோது வாக்கியங்கள் சற்று கடினமாகவே இருந்தது, மொழி(வட்டார மொழி) பல நாடுகளின் மொழி புழக்கத்தினால் பல நாட்டு மொழியும் நம் மொழியும் கலந்திருந்ததால் வாக்கியங்களை வாசிக்க சற்று சிரமமாக இருந்தது. போக போக கதையின் சுவாரசியும் நம்மை படிக்கத் தூண்டியது.

கதையின் கதாநாயகன் பாண்டியன் - யார் - எங்கே பிறந்தான் - எங்கே வளர்ந்தான் - எங்கே வாழ்கிறான்- அவனுடைய பயண வாழ்க்கையை இந்நூல். இந்நாவலில் பலவிதமான உரையாடலை காணலாம் குறிப்பாக கூறுவதென்றால் பாண்டியனுக்கும்b அவனுடைய நண்பர்களுக்கும் இடையே நடக்கும் உரையாடல், பாண்டியனுக்கும் கர்ணலுக்கும், பாண்டியனுக்கும் ஆயிஷாவுக்கும், பாண்டியனுக்கும் நேதாஜிக்கும், பாண்டியனுக்கும் இருத்தியலுக்கும் இப்படி பல பல உரையாடல்கள் அற்புதமாக வடிவமைத்து இருப்பார். வாசிக்கும் போது கற்பனையில் தெரியும் படத்தை எதிரில் பார்த்தால் இன்னும் அற்புதமாக இருக்குமே என்று எண்ணம் வரும். இந்திய மொழி படங்களில் குறிப்பாக தமிழில் இரண்டாம் உலகப்போரை கருவாக வைத்து எடுத்த படம் ஒன்றும் என் நினைவில் இல்லை அப்போர்களில் தமிழர்களுடைய பங்களிப்பு அதிகமாகவே இருந்திருக்கிறது அப்படி இருந்தும் யாரும் எந்த படமும் எடுத்ததில்ல இந்நாவலை ஒரு படமாகவோ ஒரு சீரிசாகவோ எடுத்தால் அற்புதமாக இருக்கும்.
Profile Image for Arun Prakash.
153 reviews
June 10, 2025
தமிழில் படித்த ஒரு புதினத்துக்கு ஒரு புள்ளி கொடுக்கும் நிலை வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை!

இந்தப் புதினத்தின் தலைப்பு என்னைக் கவர்ந்தது, அதைத் தொடர்ந்து, விமர்சனங்களையும் நம்பி வாங்கினேன். மோசம் போனது தான் மிச்சம்!

ஒரு வாக்கியத்தில் கூற வேண்டுமாயின், நானே என்னை தண்டித்து கொண்டது போல் ஆகிவிட்டது இந்தப் புதினம் வாசிக்கையில். கதியோட்டம், கதாப்பாத்திரங்கள் என எதுவும் விளங்கவில்லை. கதையின் ஓட்டம் எதோவோரு வெளிநாட்டு தமிழ் அகதி ஒருவனின் வீரதீர வாழ்க்கை விஷயங்களை மனம் போன போக்கில், சற்றும் வாசகர்களை மனதில் வைக்காமல் எழுதி அனுப்பிவிட்ட மாதிரி இருந்தது!

இதைப் படித்து முடிப்பதற்குள் அரைப் பைத்தியமாக மாறிவிடுவெனோ என்று அச்சம் கூட தோன்றிற்று. முக்கால் வாசி புதனித்தில் தமிழே காணோம்! இது எப்படி தலை சிறந்த புதினம் என்கிறார்களே?!

-----

This is the first Tamil book that I'm extremely disappointed in. Can't believe how much strain I had to endure to go through this random strangers' diary entries, summed up as a novel. Not one character was appealing or even remotely understandable.

Pandiyan goes to several countries and in the end dies. That's all I understood from this book. Every thing was chaotic and incoherent. Nearly seventy percent of the book has Indonesian/Thai/Japanese dialogues and writings that made no sense and was extremely difficult to read. This quickly turned into a punishment rather than an experience. Why did I go for unknown author!

I need two days just to recover from this disorder!
Displaying 1 - 30 of 63 reviews

Join the discussion

Can't find what you're looking for?

Get help and learn more about the design.