Jump to ratings and reviews
Rate this book

நிலமும் பொழுதும்: Earth is Old and Time is Deep

Rate this book
இது "பூமியின் இயற்கை வரலாறு" பற்றி எழுதப்பட்ட புத்தகம் இது. வரலாற்றை வாசிப்பதன் மூலம் இன்றைய சூழலை புரிந்து கொள்ள உதவி செய்கிறது 'நிலமும் பொழுதும்'. அச்சுறுத்தும் பண்டிதர் நடையில் இல்லாமல், வாசகனை முட்டாளாக நினைத்து அடிமட்ட நடையிலும் இல்லாமல், தன் அறிவியல் பயணத்தை, தனது தேடலை, தன் சக நண்பனுடன் ஒரு மழைக்கால மாலையில் தேநீர் அருந்தியபடி இயல்பாக உரையாடும் பாணியில் எழுதப்பட்டுள்ளது இந்நூல். இந்த பேரண்டத்தின் ஒரே உயிர்க்கோளான நம் பூமியின் இயற்கை வரலாற்றை அனைவருக்கும் எளிதாக புரிய வைக்கிறது. அறிவியல் கொண்டு ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இயற்கையை தோழனாகவும் வரலாற்றை வழிகாட்டியாகவும் உங்கள் உணர்வில் கலக்க வைக்கிறது இப்புத்தகம்.

269 pages, Kindle Edition

Published December 21, 2020

Loading...
Loading...

About the author

நிர்மல்

6 books3 followers
நிர்மல் நிர்மல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் எனும் ஊருக்கு அருகில் இருக்கும் திருவழுதிவிளை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். வாசிப்பு, இசை, விளையாட்டு, அறிவியல், அரசியல் மற்றும் பறை வாசித்தலில் ஈடுபாடு கொண்டவர். வேதியல் பட்டதாரியான இவர், தற்பொழுது கத்தார் தேசத்தில் பெட்ரோகெமிக்கல் துறையில் வேலை செய்து வருகிறார். தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த மேற்படிப்பையும் முடித்தவர்.

"ஸ்மார்ட் உலகத்துக் கதைகள்", "காணாமல் போன தேசங்கள்", “நிலமும் பொழுதும்” ஆகிய புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (47%)
4 stars
7 (41%)
3 stars
2 (11%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Satheeshwaran.
73 reviews224 followers
January 5, 2021
நிர்மல் அவர்களின் ‘காணாமல் போன தேசங்கள்’ புத்தகத்தைப் போலவே, ‘நிலமும் பொழுதும்’ புத்தகமும் மிக அருமை.

புத்தகம் பற்றிய பதிவு:
youtu.be/PFVkD6b4Nu8

#booktagforum
Profile Image for Muthu.
27 reviews3 followers
May 21, 2022
இயற்கை எவ்வளவு உன்னதமானது தன்னைத் தானே புதுப்பித்து கொண்டே இருக்கிறது காலத்தின் ஆழம் நம்மை திக்குமுக்காட செய்யும் இப்படி மிகவும் பழமையான நினைத்துப் பார்க்க முடியாத தூரத்தில் இருக்கும் உலகம் உருவாகிய சில ஆயிரம் வருடங்களில் மனிதன் உருவாக்கிய அறிவியல் மாற்றங்கள் அவனுடைய பரிணாம வளர்ச்சி எல்லாமே அசுர வளர்ச்சி இயற்கை உருவாக்கிய மிக அற்புதமான படைப்பு மனிதன் இயற்கையை புரிந்து கொள்ளும்போது இந்த உலகத்தில் தன்னுடைய இடம் எது என்பதை மனிதன் புரிந்து கொள்வான்
Profile Image for Ratheesh Mahalingam.
2 reviews2 followers
June 2, 2021
புவியியல் பற்றிய தெளிவை/அறிவை நேர்தியாக பதிவிட்டுள்ளார் ஆசிரியர் நிர்மல்.
Profile Image for Ashok Chemarx.
52 reviews1 follower
May 23, 2021
நாம் வாழும் இந்த பூமி பழமையானது.
இதன் காலம் என்பது மிகவும் ஆழமானது.
மேல் கூறியவை பெரும்பான்மையானோர் தத்துவார்த்த ரீதியாக உணர்ந்ததே... ஆனால் இதை மிகவும் எளிமையான வகையில் அறிவியல் ரீதியாக புரியும் படி எழுதியுள்ளார்.. பூமியின் தோற்ற கதைகளில் தொடங்கி "Anthropocence" epoch வரை பல செய்திக்கள் தந்து... இன்னும் பலவற்றை நாம் தேடி தேடி வாசிக்க தூண்டும்படி செய்துஉள்ளார்.

""பூமியைக் குறித்த அறிவுத் தேடலும், விண்வெளியைக் குறித்த அறிவுத் தேடலும் இறைவனைத் தேடுவதற்குச் சமமானது. இதுவே மெய் ஞானமாக இருக்கக் கூடும் அல்லது இதுவும் மெய் ஞானத் தேடலாக இருக்க வாய்ப்புண்டு""
108 reviews2 followers
February 16, 2022
வாசிக்க துவங்கும் போது இந்த புத்தகம் ஒரு புவியியல் சார்ந்த குறியீடாக தான் இருக்கும் என்று எண்ணி வாசிக்க துவங்கினேன்!! ஆனால் வாசித்த பின்பு இது என்னிடம் புவி குறித்த எனது பார்வையை மாற்றி உள்ளது. எளிமை என்பதே இப்புத்தகம் தந்த கொடை.
Profile Image for C Umapathi.
1 review1 follower
June 2, 2021
புவியின் வரலாற்றை எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர் நிர்மல்
Displaying 1 - 6 of 6 reviews