மே 22, 1908இல் வங்காள பத்திரிகையாளர் , தாரகநாத் தாஸ் என்பவர் கனடாவில் இருந்து கடிதம் ஒன்றை எழுதி , டால்ஸ்டாயை இந்திய மக்களின் நிலை குறித்து கவனம் கொள்ள கேட்கிறார். உலகில் போரில் இறப்பவர்களை விட அதிகமானோர் இந்தியாவில் பசியால் இறக்கிறார்கள் என்று எழுதுகிறார். இந்தக் கடிதத்திற்கு டால்ஸ்டாய் உடனே பதில் எழுத ஆரம்பிக்கிறார்.ஆனால் , மேலும் இந்தியா பற்றிய சமூக , வரலாற்று செய்திகளை வாசித்து , பல முறை எழுதி , திருத்தி முடிக்க 6 மாதங்கள் ஆகிறது. தனது பதிலை அவர் டிசம்பர் மாதம் அனுப்புகிறார். தனிப்பட்ட கடிதமாக இல்லாமல் , தனது பதிலை பதிப்பிக்கிறார். இது குறித்து காந்தியும் , டால்ஸ்டாயும் பரிமாறிக் கொண்ட மூன்று கடிதங்களையும் இந்த புத்தகத்தில் மொழிபெயர்த்து இருக்கிறேன்.
Tolstoy's world view in 1908. His advice to get rid of unjust rulers is valid today, always. Interestingly, he clubs religion and (false) science together! Eschew both!
மோ.க.காந்தியின் முன்னுரையுடன் ஆரம்பித்த இப்புத்தகம், காந்திக்கும் லியோ டால்ஸ்டாய்க்கும்(யஸ்நயா போல்யானாவில் இருந்த) இடையே நடந்த(1909) கடித போக்குவரத்தை கொண்டுள்ளது. டால்ஸ்டாயஅன் கடிதம் “ஃப்ரி இந்தூஸ்தான்” பத்திரிக்கையில் ரஷ்ய மொழியில் வெளியானது.
இந்திய சுதந்திரத்திற்கு அகிம்சைக்கான உந்துதலையும், ஒத்துழையாமை வித்தையும் காந்தி யாரிடமருந்து பெற்றார் என்பதை இக்கடித போக்குவரத்து மூலம் அறியமுடிகிறது.
மதங்களையும், போலி அறிவியலையும் தவிர்த்து, அன்பையும் அகிம்சை வழியையும் கொண்டு சுதந்திரத்தை நோக்கி பயணிக்க ஊக்கமளித்த கடிதம்.
“20கோடி பேர் கொண்டவர்களை உள்ள நாடு, வெறும் 30000பேர் கொண்டு, வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயேன் அடக்கி ஆட்சி செய்கிறான் என்றால், தவறு அவனிடம் இல்லை, இந்தியர்களாகிய உங்களிடமே” என்று ஒட்டுமொத்த இந்தியர்களையும் இந்துக்கள் எனக் கருதி எழுதப்பட்ட கடிதம்!
காந்தியின் கடிதத்தை மிகவும் பிடித்திருந்தது. அவர் ஒரு மிகப்பெரிய எழுத்தாளரை தனது எழுத்துக்களின் மூலம் அணுகிய விதமும், மறுபிறவியில் தனக்கு நம்பிக்கை இல்லை என்ற டால்ஸ்டாயின் கருத்துக்கு அவர் முழுவதுமாக எதிர்ப்பு தெரிவிக்காமல் அதற்கான விளக்கத்தை அவர் கேட்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதேபோல் போராட்ட வீரர்களுக்கு மறுபிறவி என்ற ஒன்று எவ்வளவு முக்கியமானது என்றும், அது போராட்ட வீரர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பது அவர் கூறியதில் இருந்து மறுபிறவி என்ற ஒன்றால் போராட்ட வீரர்கள் தங்கள் உயிர் துறப்பதில் ஒரு அர்த்தம் இருப்பதாகவும் உணர்ந்து வந்திருக்கிறார்கள். அது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.
நாம் சாதாரணமாக மறுபிறவி மூடநம்பிக்கையா இல்லை உண்மையா என்று சிந்தித்துக் கொண்டிருக்கும், ஆனால் மறுபிறவி பலர் உயிர் துறப்பதற்கும் எவ்வளவு முக்கியமாக இருந்தது என்று தெரியும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது.
அன்பு தான் ஆன்ம விளக்கம் என்ற LEO Tolstoy யின் வரிகள், வள்ளுவர் முதல் வள்ளலார் வரை சொல்லும் கருத் தோடு ஒத்திருக்கிறது. அன்பின் வழிந்து உயர்நிலை - வள்ளுவர்