Jump to ratings and reviews
Rate this book

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

Rate this book
சிறார்களுக்காக எழுதப்பட்ட கதை.

அரசுப் பள்ளி ஒன்று மாணவர்களுக்காக பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்க முயற்சிக்கிறது. அதில் ஏற்படும் சிக்கல்கள், வேடிக்கையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது.

ஓவியர் ராஜன் படங்கள் வரைந்திருக்கிறார்.

72 pages, Paperback

Published December 25, 2020

13 people want to read

About the author

S. Ramakrishnan

163 books663 followers
S. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)

is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.

Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.

His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (29%)
4 stars
15 (44%)
3 stars
8 (23%)
2 stars
1 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Gautami Raghu.
229 reviews22 followers
May 13, 2023
அழகான எளியதொரு குறுங்கதை. Definitely going to narrate this cute story to my niece! :)

கிராமத்தில் வாழும் மாணவர்களுக்கு பள்ளிப்பேருந்து எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். நகரத்தில் என்போல் இருக்கும் பலபேருக்கு இந்த யோசனை கண்டிப்பாக வந்திருக்காது. அரசுப்பள்ளியில் கணினி வாங்கவே வருடங்கள் ஆகும் என்ற ஒற்றை வரி ஏனோ மனதை கணக்கச் செய்கிறது. அரசுப்பள்ளிகளில் தேவைகள் கிடைக்கவே ஆசிரியர்களும், மற்றவர்களும் கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டியதாக இருக்கிறது.

எஸ். ரா'வின் நூல்களை வாசிக்கத் துவங்கிய எனக்கு அவரது மொழி வளமும், எளிய உரைநடையும் மிகவும் பிடித்துப்போய் விட்டன! தூய தமிழில் எழுதிய அவரின் நூல்கள் மேலும் பற்பல தமிழ்ப் படைப்புகளை வாசிக்கத் தூண்டுகின்றன :)
251 reviews38 followers
September 15, 2021
Book 35 of 2021
புத்தகம் : நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
எழுத்தாளர் :  எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : தேசாந்திரி  பதிப்பகம்
பக்கங்கள் :  72
நூலங்காடி   :  @desanthiripathippagam

💥 அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதைக் கண்டு, சேர்க்கை அதிகரிக்க என்ன செய்வது என்று யோசனை செய்கிறார், தலைமை ஆசிரியர் பழனியப்பன்.
💥 பள்ளிக்கென்று ஒரு பேருந்து இருந்தால், சுற்றுப்புற கிராமங்களிலிருந்து மாணவர்களை அழைத்து வர எளிதாக இருக்கும் என்று முடிவு செய்கிறார்.
💥 பல வித போரட்டங்களுக்குப் பிறகு , தணிகைப் பள்ளிக்கு வந்தது , நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து.
பேருந்து வந்த பிறகு என்ன நடந்தது ? மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தா? என்பதே மீதி கதை.

புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால்  இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
Happy reading …..
Profile Image for Sruthi.
24 reviews
January 30, 2024
✨ நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து - எஸ். ராமகிருஷ்ணன் ✨

🚌 இது குழந்தைகளுக்கான ஒரு அழகான கதை.

"எந்தப் பையனுக்கும் அவனது முதல் ஆசிரியர் அவனது தாய். அவனது இரண்டாவது தாய் பள்ளி ஆசிரியர்."

🚌 மேக்கரை என்ற கிராமத்திலுள்ள தணிகை அரசுப் பள்ளியில், மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்குவத்தை எண்ணி அதன் தலைமை ஆசிரியர் பழனியப்பன் மிகவும் கவலை கொள்கிறார்.

🚌 இதற்குக் காரணம் விக்டோரியா என்னும் தனியார் ஆங்கிலப் பள்ளி தான். அந்தப் பள்ளியில் உள்ள வசதிகள் இந்த அரசு பள்ளியில் இல்லை.

🚌 மாணவர்களுக்குச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மற்றும் வெகு தொலைவிலிருந்தும் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை. மழைக் காலங்களின் போது பள்ளிக்குச் செல்ல மேலும் அவதிப்படுகிறார்கள். எனவே ஒரு பேருந்து இருந்தால் மாணவர்களின் எண்ணிக்கைக் கூடும் என்று பழனியப்பன் நினைக்கிறார்.

🚌 பழனியப்பன் பள்ளிக்குப் பேருந்து வாங்கினாரா? பேருந்திற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்ன? மாணவர்களின் எண்ணிக்கை கூடியதா? என்பதே மீதிக்கதை.

🚌 இது ஒரு சிறிய கதையானாலும் இதில் ஒரு ஆழ்ந்த கருத்து உள்ளது. நமக்கு சாதாரணமாக தெரியும் ஒரு பள்ளி பேருந்து, கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு பெரிய கனவாகவும் உதவியவும் இருக்கிறது.

"பள்ளிக்கூடத்துக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கி குடுங்கன்னு கேட்டாலே கிடைக்க வருஷமாகும். இதுல பேருந்து எப்படி வாங்குறது?"
Profile Image for Saranya Raghavan.
190 reviews17 followers
September 28, 2021
✨நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து குழந்தைகளுக்கான ஒரு அருமையான புத்தகம்.
✨அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன் தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை எண்ணி கவலையில் இருக்கிறார். மாணவர் எண்ணிக்கை உயர என்ன செய்யலாம் என்று யோசிக்க துவங்குகிறார்.
✨மாணவர்கள் சுற்றி உள்ள கிராமங்களில் வெகு தொலைவில் இருந்து வருவதற்கு பல சமயங்களில் இயலவில்லை. எனவே எப்படியாவது பள்ளிக்கு ஒரு பேருந்து வாங்கி விடுவது என்று தலைமை ஆசிரியர் முடிவெடுக்கிறார்.
✨பல போராட்டங்களுக்கு பின் மஞ்சள் நிறத்தில் ஒரு பேருந்து தணிகை பள்ளிக்கு வந்து சேருகிறது.
✨பேருந்தின் வருகைக்கு பின் என்னவெல்லாம் நடக்கிறது. மாணவர்கள் பேருந்தின் மூலம் பயன் பெறுகிறார்களா? தணிகை அரசு பள்ளியில் சேர்க்கை அதிகரிக்கிறதா ? அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பதே இக்கதை.
5 reviews
February 1, 2022
This book is a simple story about a government school trying to buy a bus for the students by the fund collected from the former students and includes the fun, problems and difficulties because of the second hand bus they bought and also the faith of the village people in the government school because of the efforts of the school principal Mr.Pazhaniyappan.
Profile Image for நிவி.
10 reviews2 followers
February 27, 2021
எந்தப் பையனுக்கும் அவனது முதல் ஆசிரியர் அவனது தாய். அவனது இரண்டாவது தாய் பள்ளி ஆசிரியர்.
Profile Image for Dr. Johnson B.
20 reviews
March 14, 2021
குழந்தைகளுக்கான சிறப்பு நூல்
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.