இந்த “மனமே! நினைவை மறந்து விடு!” என்ற நாவல் எனது இரண்டாம் முயற்சி. “எஸ்எம்எஸ் குழுமம்” நடத்திய “அழகிய சங்கமம்” என்ற நாவல் போட்டிக்காக மூன்று மாதங்கள் ஆன்லைன் தொடராக வெளி வந்து நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் சிறப்பு ஆறுதல் பரிசையும் பெற்றது இந்த நாவல். உலகம் முற்றும் சுற்றிய ஒரு வாலிபனையும் உலகமே அறியாத கள்ளம் கபடற்ற ஒரு குழந்தை மனம் கொண்ட பெண்ணையும் விதி இணைக்கிறது...அவர்கள் வாழ்வில் நடந்த மாற்றங்களின் தொகுப்பே இந்தக் கதை.
வசனம் , காட்சியமைப்பு , இயல்பான உரையாடல் என்று எங்கும் தோய்வில்லாமல் கதை நகர்கின்றது ...
நாயகன், விஜயன் தன் தவரை உணர்ந்து வருந்தி நிரஞ்சனாவை திருமணம் செய்வதும் காதலிப்பது அருமை .. நிரஞ்சனா விபத்தில் தன் பழைய நினைவை இழந்த நிலையையும் அருமையாக கையாண்டான் ... காதல் ...வலி ...பிரிவு... என்று நகரும் கதை இறுதியில் இனிதே நிறைவுறுகிறது ...