கோவை மாநகரிலிருந்து வெளிவந்த ரசனை எனும் திங்கள் இதழில் 2006ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை திங்கள்தோறும் தமிழின் இன் சுவையோடு கலையியலின் கவினுறு படைப்புக்கள் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தேன். அக்கட்டுரைகளிலிருந்து முப்பது கட்டுரைகளை எடுத்து தஞ்சையிலிருந்து அருந்தமிழ் நூல்களை வெளியிட்டு வரும் அன்னம் அகரம் பதிப்பகத்தினர் “கலையியல் ரசனைக் கட்டுரைகள்” என்ற தொகுப்பு நூலை 2014ஆம் ஆண்டில் வெளியிட்டனர். கலையியல் ரசிகர்களின் நல்லாதரவினைக் கண்ட அகரம் பதிப்பகத்தினர் ரசனை இதழில் வெளிவந்த மேலும் முப்பது கட்டுரைகளைத் தொகுத்து “முப்பது கட்டுரைகள் என்ற தலைப்பில் இந்நாலாகப் பதிப்பித்துள்ளனர். தமிழின் பாலும் கலைகளின் மீதும் பற்று கொண்ட அன்பர்கள் இதனை வரவேற்று ஏற்பர் என நம்புகிறேன்.
Kudavayil Balasubramanian (born Kudavayil, Tiruvarur district) is an archaeologist from Tamil Nadu, India. He is former curator and publication manager at Saraswathi Mahal Library located at Thanjavur. He is credited with discovering more than 100 inscriptions, coins, copper plates, sculptures, and paintings now in museums and temples in that state.
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் 1948 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்து குடவாசலில் பிறந்தவர், விலங்கியல் துறையில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் வரலாற்றுத்துறையில் எம்.ஏ, எம்ஃபில் பட்டங்களையும் கோயிற் கட்டடக் கலையில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
2016 ஆம் ஆண்டில் சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் முதுமுனைவர் பட்டமும் பெற்றவர். சிறந்த நூல் படைப்புகளுக்கான அரசின் பரிசுகளை 110ன்று முறை பெற்றவர்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அனந்தக்குமாரசாமி கவின் கலை விருதினை இவருக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளது.
தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான உ.வே.சாமிநாதய்யர் தமிழறிஞர் விருதினை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். இதுவரை 50 நூல்களையும் 500க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் படைத்தவர்.