Jump to ratings and reviews
Rate this book

சாதியும் நானும் (Saathiyum Naanum) (Essays on experience of caste)

Rate this book
சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்டதில்லை. சாதி ஆதிக்கத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் பதிவாகியுள்ளன. குற்றச்சாட்டுகளைப் போலவே, சாதி மனோபாவம் கொண்டிருந்த காரணத்தாலும் அதற்குத் துணைபோன காரணத்தாலும் உண்டான குற்றவுணர்ச்சிகளும் ஏக்கங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. சமாதானம் காணும் கட்டுரைகளும் நியாயம் கற்பிக்கும் கட்டுரைகளும் உள்ளன. கூச்சத்தால் அல்லது அச்சத்தால் தன்மையைப் படர்க்கையாக்கிப் பதுங்கிக்கொண்ட பதிவுகளும் உண்டு. ஒப்புதல் வாக்குமூலங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. சுய வரலாற்றுத் தன்மை மிகுந்தவையும் உள்ளன. எழுதுவதற்குப் பூரண சுதந்திரம் கொடுத்தும் சாதி ஆதரவுக் குரல் எந்தக் கட்டுரையிலும் வெளிப்படவில்லை என்பது எனக்குப் பெரிய ஆறுதலாக இருக்கிறது. எதிர்காலம் பற்றிய குறைந்தபட்ச நம்பிக்கையைத் தருகிறது.

334 pages, Kindle Edition

Published January 1, 2012

9 people are currently reading
116 people want to read

About the author

Perumal Murugan

97 books385 followers
Primary profile for this author.

Do NOT merge author profiles in different languages/spelling.

Per GR policy, books published in another language/script should have the name on that book as secondary author, with Perumal Murugan as primary author.

Perumal Murugan is a well-known contemporary Tamil writer and poet. He was written six novels, four collections of short stories and four anthologies of poetry. Three of his novels have been translated into English to wide acclaim: Seasons of the Palm, which was shortlisted for the prestigious Kiriyama Award in 2005, Current Show, and most recently, One Part Woman. He has received awards from the Tamil Nadu government as well as from Katha Books.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (29%)
4 stars
14 (41%)
3 stars
8 (23%)
2 stars
0 (0%)
1 star
2 (5%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for muthuvel.
256 reviews143 followers
December 26, 2020
The Existential essays of 32 people, mostly by Tamil Professors who happen to be the close colleagues, students and friends of the Tamil author Perumal Murugan from Tamil cultural society individually penning down their personal opinions, ideologies, biases towards the casteism and the influencial circumstances with which they have been brought up. Some even indicated their inabilities to ignore the system under certain situations as most of us are living delusionally under the influence of Casteism with or without knowledge.

Some have been poignant, some witty, some hilarious, some heavy bounding, some even dumbfounding. Every Essays has a story to tell about casteism and their rituals and practices.

Such a light read with heavy insightful ideas and deep down, it pities our ignorance regarding our system.





The author who declared himself “dead” couple of years ago, has been judicially resurrected recently. Under intense pressure from conservative religious and caste groups against his book One Part Woman exploring the tyranny of caste and pathologies of a community in tearing the couple apart and destroying their marriage, this Tamil writer Perumal Murugan had announced his death in a literary sense but glad things got favor for him and us. He's written many wonderful novels and a professor of Tamil at the Government Arts College in Namakkal, Tamil Nadu.
Profile Image for Karthick.
371 reviews123 followers
February 20, 2020
"படிச்சவன் சாதி பாக்குறது, கோட்டு சூட்டுப் போட்டுக்கிட்டு பீ திங்குற மாதிரி" - எழுத்தாளர் போ.வேல்சாமியின் பொன்னான வார்த்தைகளே இந்த புத்தகத்தின் சாராம்சம்.

32 நபர்கள் தங்களின் சாதியையும் சத்யகட்டமைப்பும் சார்ந்த அனுபவங்களை 32 அத்தியாயங்களாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

இதில் கவனிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால், இந்த கட்டுரைகள் முழுக்க முழுக்க இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தை பற்றியே. (ஒரு அத்தியாயம் மட்டுமே பிராமணியம் பற்றி).

சாதியப் படிநிலைகளில் இடைநிலையில் உள்ள கவுண்டர், நாயக்கர், வன்னியர் போன்றவர்கள் பள்ளர், பறையர், அருந்ததியர்கள் மீது எழுப்பிய ஆதிக்கச்சுவடுகள் இந்த புத்தகத்தில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.
Profile Image for Gowtham.
249 reviews50 followers
May 1, 2022
“Turn any direction you like, caste is the monster that crosses your path. You cannot have political reform, you cannot have economic reform, unless you kill the monster” - Dr. B.R. Ambedkar

"சாதியும் நானும்" -எழுத்தாளர் திரு.பெருமாள்முருகனின் வீட்டில் 2005 முதல், மாதம் ஒருமுறை நடக்கும் "கூடு ஆய்வுச் சந்திப்பின்" 50ஆம் நிகழ்வின் நிமித்தகமாக 32 நபர்களால் எழுதப்பட்ட அனுபவ கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. 2013 இல் வெளியாகியுள்ளது.


கட்டுரையாளர்கள் அனைவரும் பட்டதாரிகள். பெரும்பாலானவர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள். கல்வி தான் சாதியை விமர்சனபூர்வமாக அணுகும் பக்குவத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பது திண்ணம்.


இதில் பலர் தங்கள் சாதியை குறிப்பிட்டும், சிலர் குறிப்பிடாமலும், சிலர் மறைமுகமாக குறிப்பிட்டுமே தங்களின் அனுபவங்களை எழுதியுள்ளார்கள். சாதியை விமர்சனபூர்வமாக எழுதியதே வரவேற்கத்தக்கது. பார்ப்பனர்களில் தொடங்கி இடைநிலைசாதிகள், தலித்துகள் என அனைவரும் ஏதோ ஒரு வகையில் சாதியால் தாக்கம் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். சிலர் ஒடுக்குபவராக இருந்து தங்களின் குற்றஉணர்வுகளை பகிர்ந்துள்ளார்கள், பலர் ஒடுக்கப்பட்டவர்களா இருந்து வலிகளையும் அதிலிருந்து மீண்டு வந்த அனுபவங்களையும் பதிவுசெய்துள்ளார்கள்.


ஒரு சில கட்டுரைகளை படித்துவிட்டு, மேலும் படிக்கமுடியாமல் புத்தகத்தை மூடிவைத்து விட்டு சாதியை திட்டிக்கொண்டதும் உண்டு. எனக்கு நேர்ந்த சில அனுபவங்களையும் இக்கட்டுரை தொகுப்பு நினைவூட்டியது.



1990களுக்கு பிறகான தலைமுறையை சேர்ந்தவன் என்பதால் முன்பை விட சொற்ப அளவிலேனும் சாதியின் புற தாக்கம் குறைந்த சமூகத்தில் தான் நான் வளர்ந்தேன். 21ஆம் நூற்றாண்டின் தலைமுறைகள் அதன் தாக்கத்தை மேலும் குறைவாக உணரக்கூடும். ஆனால் இந்த தாக்கத்தின் குறைபாடு என்பது சாதியின் ஒழிந்து வரும் தன்மையாக நாம் சொல்லிவிட முடியாது, சாதி தண்ணீரை போல் அதன் பண்பினை சூழலுக்கேற்றார் போல் மாற்றிக்கொண்டே வருகிறது, நவீன சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்து கொள்கிறது. புரிந்துகொள்ளளவே சிக்கலான ஒரு அக காரணியாக தான் சாதி தன்னை நிலைநிறுத்தி கொண்டிருக்கிறது.


பிறப்பு என்பதே ஒரு விபத்து என்றெடுத்துக்கொண்டால், அந்த விபத்தில் ஏற்பட்ட வடு தான் சாதி, இறக்கும் வரை இந்த சமுகத்தில் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அதை வலியுடன் தூக்கி சுமந்தக வேண்டி இருக்கிறது.



சாதி பற்றிய எதிர்மறையான உரையாடலுக்கு நாம் தயாராக இருக்கிறோமா? என்ற கேள்வியை நாம் நமக்கே கேட்டு கொள்ளவேண்டும், சுய சாதி அடையாளத்தை விடுத்து சாதியை நாம் அறிவுபூர்வமாக அணுக வேண்டும்.


இந்த கட்டுரைகள் அதை தான் வலியுறுத்துகின்றன, கசப்பான அனுபவங்களுக்கான அடிப்படை காரணம் சாதி தான், அதை உதிர்ப்பது கடினம் தான். ஆனால் சாதியை பின்னுக்கு தள்ள முடியும். பிற ஆக்கபூர்வமான விஷயங்களை முதன்மைப்படுத்துவதன் மூலம் சாதியை நம்மால் நிச்சயம் பின்னுக்கு தள்ள முடியும். முற்றிலும் ஒழிக்க முடியுமா என்பதை சாதியின் பின்னேற்றத்தை வைத்து தீர்மானிக்கலாம். அதற்கும் கல்வியின் வாசத்தை நுகர்ந்த அனைவரும் முன்னுக்கு வர வேண்டும்.


இந்த கட்டுரைகள் எல்லாம் வலிகளின், குற்றஉணர்வுகளின், சாதிக்கு எதிரான ஆற்றாமையின் விளைவுகள் தான். அனுபவக்கட்டுரை என்ற காரணத்தால் நமக்கு நடந்த நினைவுகளையும் அது கிளறிவிட்ட வண்ணமே இருக்கிறது. வாசித்துவிட்டு, பித்துபிடித்த நிலையில் தான் இருக்கிறேன், என்ன செய்வது இந்த சாதியை!!!!


மனிதனின் அழிவு சாதியை நிச்சயம் அழித்து விடும், அதுவரை என்ன செய்வது?





சாதியும் நானும்

காலச்சுவடு
Profile Image for Amara Bharathy.
46 reviews6 followers
August 16, 2021
"சாதியும் நானும்" என்னும் நூல், எழுத்தாளர் பெருமாள் முருகன் உள்ளிட்ட 30 பேரின் சாதி குறித்த அனுபவங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு. சாதி ஆதிக்கத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் இதில் பதிவாகியுள்ளன. குற்றச்சாட்டுகளைப் போலவே, சாதி மனோபாவம் கொண்டிருந்த காரணத்தாலும், அதற்குத் துணைபோன காரணத்தாலும் உண்டான குற்றவுணர்ச்சிகளும் ஏக்கங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. சமாதானம் காணும் கட்டுரைகளும் நியாயம் கற்பிக்கும் கட்டுரைகளும் உள்ளன. ஒப்புதல் வாக்குமூலங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. சுயவரலாற்றுத் தன்மை மிகுந்தவையும் உள்ளன.

இங்கு நிற்க. இன்னுமா ப்ரோ சாதி எல்லாம் பார்க்குறாங்க என்பாருக்கு:

"நீங்க நான்வெஜ் சாப்பிடுவீங்கதானே?"

"உன் சொந்த ஊர் எது?", "அப்பா தாத்தாலாம் வாழ்ந்த ஊரா அது?", "குலசாமி எது?", என்று மறைமுகமாகத் தொடங்கி, "நீங்க எந்த ஆளுங்க?" என்று நேரடியாகவே கேட்கும் வரைக்கும் சாதி அறியும் கேள்விகள் நீளும். ஊர்க்காரத் தாத்தாவில் இருந்து, கூட வேலை செய்து மாதம் லட்சக்கணக்கில் சமபளம் வாங்கும் அலுவலக மேனேஜர் வரை சாதி அறியாமல் யாரும் வேலை செய்வது இல்லை; அந்தக் குறுகுறுப்புக்கு பின்னிருப்பது ஈராயிரம் ஆண்டுகால சாதிய சமூகம்!

பல அனுபவக் கட்டுரைகளில் கல்வி நிலையங்களில் சாதி சார்ந்த நிகழ்வுகள் எப்படி கசப்பாக அமைந்தன என்று வாசிக்கும்போது, அறிவை வளர்க்கும் கல்வி நிறுவனங்களிலும் பரவி உள்ள சாதி மனநிலையைக் காணமுடிகிறது. உதவித்தொகை தருவதில் சுணக்கம் காட்டுவத���, கோட்டாவில் வந்தவன்/ள் என்று சொல்லிக்காட்டுதல், நிறத்தையும் பேச்சையும் வைத்தே சாதியைக் கணிக்கிறேன் என்று ஆசிரியர்கள் இதுவரை செய்த கொடுமைகள், எத்தனை பிஞ்சுகளின் மனதில் விதைக்கப்படும் நஞ்சோ!

இது தவிர நூலின் பெரும்பாலான சம்பவங்களில் சாதி பெண்களை வைத்திருக்கும் நிலை என்ன என்பது குறித்ததே. மண்ணும் பொண்ணும் ஒண்ணு என்று இன்று ஆண்ட சாதிகள் சொல்லித் திரிவது நடைமுறையில் எத்தகைய பிற்போக்கு நிலையில் பெண்களை வைத்திருக்கிறது என்று அறிகிறோம். ஓரிரண்டு கதைகளில் மட்டுமே பிராமணர் வீட்டின் சாதி நிலையும், அவர்கள் தம் வீட்டுப் பெண்களை அணுகும் விதமும் பதிவாகி உள்ளது. குறிப்பாக மாதவிலக்கு என்னும் இயற்கை நிகழ்வு, எவ்வகையில் அனைத்து சாதிகளிலும் ஒரு தீண்டாமை (தீட்டு) நோக்கில் வழங்கி வருகிறது என்பதை பலரது அனுபவங்கள் ஊடாக அறிகிறோம்.

பெரும்பாலும் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர்களின் அனுபவத்தை சொல்லி இருப்பதால், கவுண்டர், நாயக்கர், நாயுடு என்ற ஆண்ட சாதிகள் எவ்வாறு ஆதிக்கத்தை செலுத்தின என்பதும், அவ்வாதிக்கத்தை செலுத்திய சாதிகளைச் சேர்ந்தோர் அதையெண்ணி வருந்தும் கதைகளும் உண்டு. விவசாயத்தில் தொடங்கி, கோயில் வழிபாடு, கல்வி முன்னேற்றம் ஆகியவற்றில் ஆண்டைகள் செலுத்தி வரும் ஆதிக்கம், "பண்பாடு", "கலாச்சாரம்" என்ற பேரில் இன்றும் நிலவுவது அருவருப்பை அளிக்கும் ஒன்று!

தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் கதைகளே இப்படி என்றால், சாதி என்பதன் முழு கோர முகத்தை அறிய மக்களிடையே சென்று அனுபவங்கள் கேட்பதே சிறந்த முயற்சியாக இருக்க முடியும். இத்தகைய முயற்சிகள் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் செய்யப்பட்டால், மேலும் பல சாதிகளையும், அவற்றின் பிற்போக்குக் கட்டமைப்புகளையும் கண்டறியலாம்! மற்றவர்களின் அனுபவ வாயிலாக, நம்மை சுய விமர்சனம் செய்துகொள்ளவும் இந்நூல் ஒரு வாய்ப்பாக அமைவது சிறப்பு!

சில அனுபவங்களில் இப்படியெல்லாமா சாதியை நிலைநாட்டுவார்கள் என்று அதிர்ச்சி அடைந்தேன்; சாதிக்கு படித்தவர், படிக்காதவர் பேதம் இருப்பதில்லை; கல்லூரி முதல்வரே தன் சாதிக்கு முன்னுரிமை தந்த சம்பவங்கள் இவற்றில் உண்டு!

இலக்கிய விமர்சகர் பொ. வேல்சாமி சொல்வது போலத் தான்: "படிச்சவன் சாதி பாக்குறது, கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு பீ திங்கிற மாதிரி!"
2 reviews
April 3, 2024
சாதி பற்றிய ஒரு யதார்த்த பார்வை

சாதி எப்படி நம் இளவயதில் நமக்கு அறிமுகமாகிறது என்று தொடங்கி நாம் வளர வளர அதுனுடனான நம் உறவு எவ்வாறு தொடர்கிறது என ஒவ்வொரு கட்டுரையாளர்களின் பார்வை வழி நமக்கு காட்டப்படுகிறது. விருப்பு வெறுப்பு எதுவும் இல்லாமல் சார்பின்றிப் படித்தால் இதன் உண்மைத் தன்மை புலப்படும்.
Profile Image for Nallasivan V..
Author 2 books44 followers
May 7, 2021
One of the best books I have read on caste. I learned so much about how caste works in Tamilnadu. Brilliant collection. Only complaint is that it could have had more stories from women. The gender-caste intersection seems to be less explored in Tamil literature
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
May 14, 2018
‘கூடு’ என ஒரு குழுவில் உள்ளவர்கள் ஒன்றினைந்து தமது வாழ்வில் நிகழ்ந்த சாதிய தாக்கங்கள் குறித்து எழுதிய 32 கட்டுரைகளின் தொகுப்பே ‘சாதியும் நானும்’. கூடு குழு/அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பெருமாள் முருகன் ,அவர்களே இந்த நுலின் தொகுப்பு ஆசிரியர்.

சாதியின் ஆதிக்கம் சமூகத்துல எப்புடி இருக்கிறது என பெரியர் கூறியுள்ளார். இந்த நுல் தனி மனிதனின் சாதிய அனுபவங்களை கூறுகிறது.

சாதியமைப்பு பிரமிட் முக்கோண அமைப்பில் இருக்கிறது என்று சொன்ன அம்பேத்கர், ஒவ்வொரு சாதிக்காரனும் தன்னை மேலே இருந்து அழுத்துகிறவன் மீது கோபப்படுவதில்லை. ஏனெனில், அவன் அடிமைப்படுத்துவதற்குக் கீழே ஒரு சாதி இருக்கிறது. இந்த உளவியல் திருப்தி, சாதியமைப்பை வலுவாகத் தக்கவைத்துக்கொள்வதைக் கண்டுபிடித்துச் சொன்னார்.

சாதியும் நானும் நுலில் இருந்து சில வரிகளை இங்கு பதிவு செய்கிறேன்.

( 1. நகரச்சூழலில் சாதிய அடையாளம்,சாதி அபிமானம் மிக வெளிப்படையாகத் தெரிவதில்லை. நுட்பமாக அது வெளிப்படும். ஆனால் கிராமியச் சூழலில் சாதிதான் மக்களை அடைளப்படுத்துகிறது. சொந்த ஊர்ப் பாசம், மண்்ட வாசம் என்பதெல்லாம் சாதியைப் பாதுகாக்கும் மரபான விடயமே. - பழைய தோசை - மா. வெங்கடேசன்)

( 2. என் அனுபவத்தில் சாதியைக் கடவுள் போலவே உணர்கிறேன். கிராமம், நகரம், மலை என்றெல்லாம் பேதமில்லை. படித்தவர் படிக்காதவர் என்றும் பிரித்துப் பாரக்கக்கூடாது. கடவுள் எங்கும் நிறைந்திருப்பார். சாதியும் அப்படித்தான். கடவுளைச் சிந்திக்காத நாள் உண்டா? சாதியை நினைக்காத நாளும் இல்லை. ஒரே வித்தியாசம் சொல்லலாம். கடவுளைக் கண்டவர் விண்டிலார்; விண்டவர் கண்டிலார். ஆனால் அன்றாடத்தின் கணங்கள் சாதியை நமக்குக் காட்சியாக்கிக் கொண்டேயிருக்கின்றன. - அன்றாடத்தின் கணங்கள் - பெருமாள் முருகன்.)

(3. சாதியை எதிர்ப்பின் மூலம் வேரறுக்க இயலாது.அது வேறுவேறு வடிவங்கள் எடுத்துக்கொண்டே இருக்கும். அதைக் கண்டுகொள்ளாமல் மனிதர்கள் வாழப் பழக வேண்டும். அதை உலர வைக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் சாதியிலிருந்து விலகி நின்றால் மட்டுமே அது சாத்தியம். - சாகும் போதும் ஜம்பம்- கோவிந்தராஜ்)

(4. நீங்க என்ன ஆளு தம்பி?
நான் கொஞ்சம் விவரமான ஆளு தாத்தா. இல்லண்ணா இந்த உலகத்துல பொழைக்க முடியுமா..?

நீங்க எந்த குலத்துல பொழங்குவீங்க?(தாத்தாவின் சாதியில் குலமெல்லாம் உண்டு போல)
நாங்களா தாத்தா. வீட்டுல போர் போடற வரைக்கும் ஊர்ப் பொதுக்குளத்துலதான் பொழங்கனோம். இப்போ குளமெல்லாம் சாக்கடையா மாறிப்போச்சி. அதனால குளத்துல எல்லாம் இப்பப் பொழங்கறதில்ல தாத்தா.

நீங்க எந்த குலசாமியக் கும்பிடுவீங்க..?
நான் கும்பிடுற குலசாமி என் அப்பனப் பெத்த தாத்தாதான். இந்த பேராண்டி படிப்புக்காக்க் கொஞ்ச நிலமும் ரெண்டு சோடி செவல மாடும் விட்டுட்டுப் போன என் தாத்தாதான் நான் கும்பிடுற குலசாமி தாத்தா...

நீங்க அர்ஜினா? (ஹரிஜன்)
எனக்கு அர்ஜுன் புடிக்காது தாத்தா... சின்ன வயதிலிருந்தே ரஜினியைத்தான் பிடிக்கும். ரஜினி படம்தான் விரும்பிப் பார்ப்பேன்.

இல்ல தம்பி நீங்க என்ன சாதின்னு கேட்டேன்?
ஓ... அதுவா.., நாங்க யாரையும் ஏச்சிப் பொழைக்கிற சாதி இல்ல தாத்தா. உழைப்ப மட்டுமே நம்பி பொழைக்கிற சாதி. - பீத் திங்கற மாதிரி - சி.சந்திரன்)

- கலைச்செல்வன் செல்வராஜ்
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.