இன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங்கோட்டை நகரம் ‘ஸ்ரீ வல்லப மங்கலம்’ என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகி பின்வந்த காலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென்பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில் இடம்பிடித்த வரலாற்றைச் சொல்லும் அறிமுக நூல் இது. பண்டைய காலம், இடைக்காலம், ஆங்கிலேயர்காலம் என்ற மூன்று காலகட்டங்களிலும் இடரீதியாகவும் சமூக கலாச்சார ரீதியாகவும் பெற்ற மாற்றங்களைக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், அறியத்தருகிறது. வருங்கால ஆய்வாளர்களுக்கு இந்நகரம் பற்றிய ஆய்வுக்கான தொடக்கப்புள்ளியாக இச்சிறு நூலைக் கொள்ளலாம்.
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.
Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.
பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.
அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.
பாளையங்கோட்டை, திருநெல்வேலி பக்கத்தில் இருக்கும் ஒரு நகரம், கிறித்துவச் சமயம் ஓங்கி இருக்கும் ஒர் ஊர், அங்கு ஒரு மத்திய சிறை உள்ளது, அங்கு தாமிரபரணி ஆறு ஓடுகிறது இவை மட்டுமே நான் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் முன் பாளையங்கோட்டை பற்றி அறிந்தது. தொ.ப. ஐயாவின் இந்தப் புத்தகத்தின் வழியாகத் தான் தொன்மையான வரலாற்று சிறப்பு உள்ள நகரம் பாளையங்கோட்டை என்பது தெரிய வந்தது
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையங்கோட்டையின் பழைய பெயர் ஸ்ரீவல்லப மங்கலம் ஆகும். பராந்தக வீரநாராயணன் என்ற மன்னன் கி.பி. 863 இல் முடிசூடி ஸ்ரீவல்லப மங்கலத்தை ஆண்டதால் இந்நகரின் பழைய கோயிலான கோபாலன் கோயிலிற்கு 'வீர நாராயண விண்ணகரம்' என்ற பெயர் வந்திருக்கக்கூடும் என்று யூகிக்கிறார் தொ.ப. தமிழ்நாட்டு கோயில்களில் இருக்கும் கல்வெட்டுகளில் பெருவாரியாகப் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட தானங்களை விவரித்தாலும் இந்தக் கோயில் கல்வெட்டில் கோயில் புகுந்து ஓர் அரசின் படை பிராமணர்களைத் தாக்கி பிராமணப் பெண்களின் தாலியையும், காதுகளையும் அறுக்கப்பட்ட செய்தி ஆச்சரியமமூட்டும் வகையில் அமைந்ததால் அதை நேரில் சென்று பார்த்து உறுதிப்படுத்தியிருக்கிறார் தொ.ப. தன் பெயரிலே கோட்டையைக் கொண்ட இந்த நகரத்தில் கோட்டை இருந்ததற்கான தடயங்கள் மட்டுமே இப்பொழுது எஞ்சி இருப்பதாகக் கோட்டை அழிவதற்கு முன் எப்படி இருந்தது என்பதும், தற்போது இருக்கும் நிலையையும், அதைச் சுற்றி வீற்றிருக்கும் இப்பொழுது இருக்கும் கட்டிடங்களையும், சிலைகளையும் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது 'கோட்டையும் நகரமும்' என்ற பகுதியில்.
பாளையங்கோட்டையின் அரசியல் நிகழ்வுகளைப் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து விளக்குகிறார் தொ.ப. பதினெட்டாம் நூற்றாண்டில் கான்சாகிப் பிடியில் இருந்த பாளையங்கோட்டை பத்தொன்பதாம் நூற்றாண்டில் எப்படி ஆங்கிலேயர் கைவசமாக மாறியது என்ற வரலாறு வாசிப்பதற்குச் சுவாரஸ்யமாக இருந்தது. கிறித்துவச் சமயம் பாளையங்கோட்டையில் காலூன்றியதும் இந்தக் காலமே.
இரேனியஸ் அடிகளைப் பற்றி அறிந்து கொள்ளாமல் பாளையங்கோட்டை வரலாறு முழுமை பெறாது என்பது இந்த நூலை வாசித்தால் தெரிய வரும். 1822இல் இரேனியஸ் அடிகள் பேச்சுத் தமிழையும், பழந்தமிழ் இலக்கியங்களையும் நன்கு கற்றுக் கொண்டு கிறித்துவப் போதகர்களுக்கென்ன தன் முதல் நூலான 'ஞானோபதேச வினா விடை' யை பாளையங்கோட்டை வந்த மூன்று ஆண்டுகளில் வெளியிடுகிறார். மேலும் இவர் ஆற்றியுள்ள அறிவியல் தமிழ் கலைச்சொல்லாக்கம் தமிழ் மொழிக்கு ஆற்றிய பெரிய தொண்டாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக: Circumference- சுற்றளவு, daiameter-மத்திய அளவு, meridian-நடுவரை போன்ற அறிவியற் சொற்கள்.
நெல்லையில் இரேனியஸ் அடிகள் அவர்களால் தொடங்கப்பட்ட பள்ளிகள் மொத்தம் 168. அவர் திருச்சபைக்குள் சாதி வேறுபாடுகளைக் கடுமையாகக் கண்டித்து 'சீர் தூக்கல்' என்ற பிரசுரத்தை வெளியிட்டு இருக்கிறார்.
பாளையங்கோட்டைக்கு 'Oxford of South India' என்ற பெயர் உண்டு என்பதை இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் சில குறிப்புகள் எடுக்கும்போது தெரிய வந்தது. 1822இல் வெறும் அறுநூறு ரூபாய்க்கு சில நிலங்களை வாங்கி பாளையங்கோட்டையில் முதல் பள்ளியாக 'மேரி சார்ஜெண்ட் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி'யை தொடங்குகிறார் இரேனியஸ். 1823 இல் இரேனியஸ் அவர்களின் மனைவி ஒரு பள்ளிக்கூடம் தொடங்குகிறார். இரேனியஸ் அடிகளில் காலத்திற்குப் பின்பு 'இரேனியஸ் அம்மா பள்ளிக்கூடம்' என்ற பெயர் கொண்ட இந்தப் பள்ளிக்கூடத்தைப் பேராயர் எட்வர்ட் சார்ஜெண்ட் அவர்களின் மனைவி மேரி சார்ஜெண்ட் பொறுப்பேற்று நடத்தி வந்திருக்கிறர். மேலும் அவர் இந்த பள்ளிக்கூடத்திற்கு வரும் பிள்ளைகளுக்கு ஒரு துண்டு கருப்புக்கட்டியும், நிலக்கடலையும் வாங்கிக்கொள்ளத் தினமும் ஒரு பைசா வழங்கியிருக்கிறார். இப்பள்ளிக்கூடமே தமிழ்நாட்டில் பெண்களுக்கென்று தொடங்கபட்ட இரண்டாம் உறைவிடப் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. madras christian college school பெண்களுக்கான தொடங்கப்பட்ட முதல் உறைவிடப் பள்ளி ஆகும். கண் தெரியாதவர்களுக்கும், காது கேளாதவர்களுக்கும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கல்விச் செல்வத்தை அளித்த முதல் நகரம் பாளையங்கோட்டையே ஆகும். ஆஸ்க்வித் அம்மையார் என்பவரே இந்த மகத்தான தொண்டை ஆற்றிய நபராவர். 1880 இல் இங்கிலாந்திற்குச் சென்ற ஆஸ்க்வித் அம்மையார் பிரெய்லி வடிவில் தமிழ் உயிர் எழுத்துக்களையும், மெய் எழுத்துக்களையும் மாற்றி பாளையங்கோட்டையில் கண் தெரியாத சிறுவனான சுப்புவிற்கு கற்றுக் கொடுக்கிறார். சுப்புவே பின்னாளில் ஆசிரியராகப் பொறுப்பேற்று கண் தெரியாத பிள்ளைகளுக்கு பிரெய்லி வழியாகக் கல்வி கற்றுக் கொடுத்திருக்கிறார். 1903 இல் இந்திய மொழிகளிலே தமிழ் மொழியில் முதல் பிரெய்லி புத்தகம் வெளியிடப்பட்ட பெருமை ஆஸ்க்வித் அம்மையாரையே சேரும். அதன் பிறகு மாற்றுத் திறனாளிகளுக்கென்று தனிப் பள்ளிகள் என்று நிறையப் பள்ளிகள் உருவாகி பலயங்ககோட்டையை கல்விக்குப் பெயர் போன நகரமாக மாற்றி இருக்கிறது.
இந்நகரின் மற்றுமொரு பெருமை இந்நூலின் ஆசிரியரான தொ.பரமசிவன் ஐயாவைப் பெற்று எடுத்து வளர்த்தது. கல்வியில் சிறந்து விளங்கிய இந்த நகரத்தில் இருந்த நூலகங்களே அவரின் சமூக அரசியல் அறிவை வளர்த்தெடுக்கப் பெரிய காரணமாக இருந்தது என்பதை இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதை வாசிக்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் போல பாளையங்கோட்டை இதுவரையிலும் செல்லாத நபர்களுக்கு இந்த நூல் ஒரு நல்ல அறிமுகம்.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அக்டோபர் 2 , 1986 ல் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமானது தான் எங்கள் தூத்துக்குடி மாவட்டம். ஆனால் எங்கள் ஊர்களில் பலரும் நீங்கள் எந்த மாவட்டம் என்று கேட்டால் திருநெல்வேலி என்று தான் இன்று வரை சொல்லுவார்கள். நானும் பள்ளி நாட்களில் அவ்வாறே சொல்வதுண்டு.
பாளையங்கோட்டை எனக்கு நன்கு பரிட்சையமான இடமே.
ஒரு நிகழ்ச்சிக்காக அகில இந்திய வானொளி நிலையத்திற்கு பள்ளியிலிருந்து சென்றிருக்கிறேன்.
நுழைவுத்தேர்வுகாக ஒரு மாதம் ஒரு தனியார் விடுதியில் தங்கி படித்தபோது, அங்குள்ள பல இடங்களை காலார நடந்து கடந்திருக்கிறேன்.
படித்து முடித்து முதலில் வேலைக்குச் சென்றதும் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் தான்.
'ஊர் பெயர் பாளையங்கோட்டை ஆனால் கோட்டையே இல்ல'
என்று நண்பர்களிடம் விளையாட்டாக சொன்னது நினைவிலிருக்கிறது. ஆனால் அங்கு இருந்து, மறைந்த ஒரு கோட்டையின் அடையாளம், வரலாறு நான் அறிந்திருக்கவில்லை.
புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கிட்டத்தட்ட எல்லா இடங்களுக்கும் சென்றிருந்தும் அதன் வரலாறு அறியாததால் அவற்றின் அருமை தெரியாமல் கடந்த வந்திருக்கிறேன்.
பாளையங்கோட்டையின் பழைய பெயர் 'கீழ்களக்கூற்றத்து ௵ வல்லப மங்கலம்'. 10 நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னரின் பெயரைத் தழுவியது. இன்று வழங்கப்படும் பெயர் ஆங்கிலேயர் காலத்தில் அங்கு அமைந்திருந்த கோட்டையை தழுவி அமைந்த பெயர்.
தாமிரபரணியின் பழைய பெயர் 'தண் பொருத்தம்' என்று 12 ஆம் நூற்றாண்டு முதலாம் ராசராசன் காலத்துக் கோவில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
நான் அதிகம் வியந்தது அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையைப் பார்த்துதான்.
'தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட்' என்ற பெயர் கேள்விப்பட்டருந்தாலும், அது 19 ஆம் நூற்றாண்டில் அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டதாலும் தமிழ்நாட்டில் முதல் முறையாக பார்வையற்றவர் மற்றும் காதுகேளாதோர் பள்ளி துவங்கப்பட்டதாலும் தான் அந்த பெயர் என்று இந்த புத்தகம் மூலம் அறிந்து கொண்டேன். தமிழ் மொழியே இந்திய மொழிகளில் முதலில் பிரைலி எழுத்துக்களில் எழுதப்பட்ட புத்தகம்.
வெவ்வேறு மன்னர்கள் காலத்தில் பல போர்களை, படையெடுப்புகளைக் கடந்து, பின் வெள்ளையர்கள் காலத்தில் கிருஸ்துவ மதபோதனைகள், கல்வி மேம்பாடு என்று கிடைத்த கல்வெட்டுகள் மற்றும் ஆங்கிலேயர்கள் எழுதிய புத்தகங்கள் மற்றும் கடிதத்தின் குறிப்புகள் மூலம் நான் நன்கு அறிந்த ஊரின் அறியாத வரலாற்றுப் பக்கங்களை வாசிக்க முடிந்தது .
சில தகவல்கள் புத்தகத்தில் திரும்பத் திரும்ப இடம் பெற்றுள்ளன. ஆனால் இப்போது உள்ள ஊர்களின் பழைய பெயர்கள் பல தெரிந்த கொள்ள முடிந்தது.
அடுத்த முறை பாளையங்கோட்டைக்குச் செல்லும் போது நிச்சயம் அதை புதுக் கண்ணோட்டதுடன் பார்ப்பேன் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
"பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு" by தொ. பரமசிவன் and Navaneetha Krishnan is a concise exploration of the history of Palayamkottai. The book primarily looks at the fort, its remnants, notable temples in and around the area, the arrival of the British, and the subsequent arrival of missionaries and their educational reforms.
Having completed my higher secondary education in Palayamkottai, reading this book takes me back and makes me want to revisit the places where the fort once stood. The book seems to be a compilation of essays and interviews and it could have benefitted from a more cohesive structure, perhaps in a chronological format, as some information felt repetitive.
Overall, this book could be a worthwhile read for those interested in the history of Palayamkottai and willing to overlook some redundancy. I'd also recommend keeping a map open on your phone or laptop to help visualize the locations discussed in the book.
Inspired from an interview of Tho.Pa about Palayankottai's History in DD National - Tamil channel (Pothigai), bought this book and it didn't disappoint. Tho.pa & co-writer Navaneetha Krishnan have taken valid efforts in conveying the history in a interesting way. But on the negative side, the book has many repetitive part. I assume, it has been composed from series of essays/notes written by Tho.pa and has been compiled as a book. Ignoring that, the book is a good source to understand basic history of Palyankottai and neighboring regions. Me being part of Nellai region, found it interesting to understand the Local history.
சிறிய நூல்.ஒரு கோட்டை நகரம் பற்றி கல்வெட்டு ஆதாரங்கள்,மற்றும் ஆங்கிலேயர் சுவடுகளைக்கொண்டும் கள ஆய்வகளை எடுத்தும் எழுதப்பட்ட நூல்.ஒரு கோட்டை நகரம் காலத்துக்கு காலம், ஆட்சியாளர்களால் எப்படி பயன்பட்டது மற்றும் ஊர்க்கார்ர்களுன் வாழ்க்கை எப்படி மாறியது என்று கூறுகிறது.ஆங்கிலேயர் ஆரம்பித்த பள்ளிகள் மற்றும் கண் தெரியாதார் காது கேளாதார் முதல் முதல் ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் என்னபன ஆச்சர்ய தரவுகள்.