ஆத்மாநாமின் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், கடிதங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு இது. இதுவரை தொகுக்கப்படாத அச்சிடப்படாத பல படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.1984ஆம் ஆண்டு தனது 33 ஆம் வயதில் அகால மரணமடைந்த ஆத்மாநாமின் படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான இடத்தைப் பெற்றள்ளன. இலக்கியவாதிகள் முதல் தீவிர இடதுசாரிகள்வரை அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் பெற்றுள்ள ஒரு அபூர்வமான இலக்கியவாதி ஆத்மாநாம்.பதிப்பாசிரியர் பிரம்மராஜனின் பல ஆண்டு கால முயற்சியில் உருவாகியுள்ள தொகுப்புஇது.
264 பக்கங்கள் மட்டுமே உள்ள இந்த புத்தகத்தைப் படிப்தற்கு 2 ஆண்டுகள் ஆயிற்று. காரணம், 1. 95% புத்தகம் கவிதை தொகுப்பு. கவிதை தொகுப்புகளை ஒரே மூச்சில் படித்தல் சுவை இருக்காது என்பது என் நம்பிக்கை (அதுக்குன்னு 2 வருசமா!!) 2. பல கவிதைகள் எனக்குப் புரியாமல் பல சமயம் கடுப்பாகி மூடி வைத்திருக்கிறேன். 'புரிதல் என்பது தனிப்பட்ட நபரின் விஷயமாகும். கவிதை புரியவில்லை எனும் பொழுது கவிதையிலோ வாசகனிடமோ குற்றம் உள்ளது என்று சொல்லமுடியாது' என்று ஆத்மாநாமே சொல்லியிருக்கிறார். மேலும், காலமும் அனுபவமும் கவிதையைப் புரியவைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். காத்திருப்பேன். புரியாத கவிதைகளை ஏதோ பிதற்றுகிறான் என்று புறந்தள்ள என்னால் முடியவில்லை. புரிந்த கவிதைகள் தந்த தாக்கமும், சந்தோசமும் தான் காரணம். காலம் கடந்த எழுத்து தான் காரணம். 'முத்தம்' எனக்கு பிடித்த, புரிந்த கவிதைகளில் ஒன்று. இந்த ஒன்று - பதம் பார்பதற்கான ஒரு சோறு. 'இவள்'-இல் உண்மையை உரக்க சொல்வதாகட்டும், 'உலக மகா யுத்தம்'-இல் எதிர்பார்ப்பையும் ஆச்சர்யத்தையும் கலந்து தத்துவம் பேசுவதாகட்டும், 'செய்திகள் வாசிப்பது கமலா பத்மநாபன்'-இல் காலத்தை கசக்கி எறிந்திருப்பதாகட்டும் ஆத்மாநாம் சலிப்பு தட்டாத கவிஞன். கடைசி பக்கங்களில் வரும் கட்டுரைகளும், நேர்காணலும் மேலும் பலம். தேடலை விரும்புபவர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.
பிரம்மராஜன் தொகுத்த இத்தொகுப்பில் ஆத்மாநாம் கவிதைகள், கட்டுரைகள் அடங்கியுள்ளன. நண்பரது பரிந்துரைத்து வாசித்தேன். மிகப்பிடித்தது. எனவே புத்தகக் கண்காட்சியின் முதல் கொள்முதலே இந்தப்புத்தகம்தான். அவசியம் அறையில் இருக்கவேண்டிய புத்தகப் பட்டியலில் நிரந்தர இடம் பிடித்துள்ளது.