உச்சந்தலை தொடங்கி, பிறை நெற்றி, மோகத்திருவிழி, பவளச்செவ்வாய், செங்கன்னம், தாளாதனம், உந்திச்சுழி, அல்குல் அடிபாதமென எல்லாமும்மெல்லாமுமாக அவள் பெண்ணம்சத்தை மொத்தமாக ஒப்புக்கொடுத்தவளிடம் உயிர் திரியாகி, தீயில் கருகி, புழுதியாகி காற்றில் கலக்கும் சாம்பலென வாழுங்கள். அதுவே நித்திய பூரணம்...