நரேந்திரன் என்னும் அந்த இளைஞன், தெய்வ பக்தி உள்ளவன், யோகப் பயிற்சி, தியானம் என நாள் முழுவதும் அதே சிந்தனை கொண்டவர். தியானத்தில் உட்கார்ந்தால் தொடர்ந்து பல மணி நேரம், அந்த பரவச நிலைக்கு சென்றுவிடுவார். அவர் மனதிற்குள் ஏற்பட்ட ஒரு கேள்வி, அந்த கேள்விக்கு அவர் பதில் தேட முயற்ச்சித்தார். பகவான் இராமகிருஷ்ணனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னை காண வந்த நரேந்திரனிடம், இருந்த ஆன்மீக ஞானம் , பக்தி அதற்கும் மேல் அவரை இறைவனின் அவதாரமாகவே இராமகிருஷ்ணர் எண்ணினார். நரேந்திரனும் அவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார். குருவின் மறைவுக்குப் பிறகு அவரின் வழியியை பின்பற்றி, அவருடைய கொள்கையை உலகெங்கும் பரப்ப ஈடுபட்டார்.அதன் பிரதிபலிப்பே உலகெங்கும் பரவியிற்கும் “ஸ்ரீ இராமகிருஷ்ணர் மடம் “ சந்நியாச வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு, தன்னுடைய பெற்றோர் வைத்த பெயரை விடுத்து சந்நியாச தர்மப்படி ஒரு பெயரை வைத்து கொள்ள விரும்பினார். முதலில் “விவிதி சானந்தர்” என்ற பெயரை தேர்வு செய்தார், இறுதியில் “விவேகானந்தர்” என்ற பெயரை தேர்வு செய்தார். விவேகானந்தர் கூறிய 149 வாக்குகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. எனக்கு பிடித்த சில………….
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . Happy reading …..