பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவில். 108 வைணவத் தலங்களில் முதன்மையான தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இந்த ஆலயத்தை “பெரியகோவில்” என்று அழைக்கிறார்கள். வைணவத்தைப் போற்றி வளர்த்த 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட ஒரே தலம் இது மட்டுமே என்பது மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. ஸ்ரீரங்கம் ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 156 ஏக்கர். உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் ஸ்ரீரங்கம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினாலே, இத்தலத்துக்கு நேரில் வந்து இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், நவக்கிரகங்களில் ஒன்றான சுக்ர பரிகார தலமாக கருதப்படுகி