Jump to ratings and reviews

நல்லம்மா: நிஜம் + புனைவு

PEN TO PUBLISH போட்டிக்காக எழுதப்பட்ட கதை. உங்களின் ஸ்டார் ரேட்டிங்கும் ஆங்கில ரெவ்யூவும் அவசியம் வேண்டும். 1800களின் பிற்பகுதியில் இருந்து 1900ங்களின் நடுப்படுகுதி வரை வாழ்ந்த வைராக்கியப் பெண்மணி ஒருவரின் வாழ்நிகழ் சம்பவங்களின் தொகுப்பே இது. இது தொடர்புடைய சிலர் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நிஜமாக வாழ்ந்த பெண்மணியுடன் வாழ்க்கையுடன் புனைவும் சேர்த்து நெய்யப்பட்ட மனதிற்கு நெருக்கமான மகிழ்நெகிழ் தொகுப்பே இந்த நாவல். இந்த நல்லம்மாவில் நீங்கள் பார்த்தவர்களோ, பழகியவர்களோ அல்லது நீங்களோகூட இருக்கலாம். நேசித்து வாசித்துப் பாருங்கள்.

79 pages, Kindle Edition

Published January 4, 2021

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (73%)
4 stars
2 (13%)
3 stars
1 (6%)
2 stars
0 (0%)
1 star
1 (6%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Saran Saru.
Author 2 books4 followers
January 8, 2022
'நல்லம்மா' இந்திய சுதந்திரத்தை ஒட்டி வாழ்ந்த ஒரு ஆளுமையான பெண்மணி. அவரது வாழ்வியலை பற்றி சிறு கற்பனை கலந்து எழுதிய கதை.

மனம் ஒத்த தம்பதியராக நல்லம்மா - பெருமாள்,
பெருமாளின் கிறங்கடிக்கும் வசனம் “போடீ கிறுக்கி… ஒன்னைய மட்டுமில்ல ஒனக்குப் புடிச்ச எல்லாத்தையும் எனக்கும் புடிக்கும்டி…”
இவர்களையே அப்படி ரசிக்க வைத்தது, என்ன ஒரு காதல்!!

இல்லற வாழ்வின் பூர்ணத்தை உவமை காட்டும் “சட்டைப் பையில் மடித்துவைத்த வானத்தை சட்டென்று எடுத்து உதறும்போது நட்சத்திரங்கள் கொட்டுவதுபோல.” வரிகள்.

'சின்னராசு' - மனித குழந்தைகள் குழந்தை பருவம் தாண்டிய பின் தாயிடம் கொஞ்சலில் ஈடுபடுவது சிறிது சிறிதாக குறையும். ஆனால், பிற செல்ல பிராணிகள் எத்தனை வயதானாலும் நம்மிடம் அதே கொஞ்சல் மொழியில்தான் உறவாடும். சின்னராசு மற்றும் கொஞ்சல்கள், ஆறுதல்கள் மனதை அப்படி நிறைத்தது. அதும் இருவரும் நடந்து வரும் அழகை ‘இடமாறு தோற்றப்பிழையாக’ வர்ணித்தது அருமையான எழுத்துநடை.

அப்போதைய வட்டார மொழியிலேயே பெரும்பாலும் கதை பயணிக்கின்றது. அன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் ஒருவரை அடையாள படுத்துவது அவர்களது சமூகப் பெயரை கொண்டுதான், அதே சமூகப்பெயருடம் சில குணாதிசயங்களும் பிணைக்க படும். அதையும் கதையின் போக்கில் எதார்த்தமாகா நகர்த்திருக்கிறார் எழுத்தாளர்.

சமுதாயத்திற்காக போராடும் பெண்களை போலவே குடும்பத்துக்காக போராடும் பெண்களின் போராட்டமும். இந்தக் கதை பெண்களில் ஆளுமை உள்ளவர்கள் தெருவிற்கேனும் ஒருவர் உண்டென கூற்றை சொல்வது போல்.

நல்லம்மாவின் முதற்சியுடனான அனுபவமும், நிதானமும், தைரியமும் அவளது 4வது பிரசவத்தை அவளே பார்த்துக் கொள்வதும், அவளது வலிகளுக்கு கண்ணீர் சிந்தி உறுதுணையாக ‘பெருமாள்’ இருந்து பிள்ளை பெற்றதும். நல்லம்மா பிள்ளை பெற்றதும் எழுந்து மற்ற பிள்ளைகளுக்கு சமையல் செய்வதும் புல்லரிக்க வைத்தது.

நமக்கு குறிப்பிட்ட இறுதி நாளை கடவுள் எப்படியோ நமக்கு உணர்த்திவர்னு சொல்லுற மாதிரி 'மண்கரட்டுக்காரர்' ஜோசியர் கணிப்பதும், அதற்கு தான் தயார் என “எண்பது  வயசாச்சும் இருக்கும்னு எல்லாரும் சொல்றாங்க… நேரம் வந்தா போவாம நின்னுகிட்டா இருக்கமுடியும்… நானும் எங்க மாமன போயி சீக்கிரம் பாப்பேன்ல…” அவளது பதிலும், அவள் இறைவனடி சேர்வதும், நிறைவையே தந்தது.

நல்லம்மாவின் உறுதிக்கான வரிகள் சில :

⁃ ஒசரத்துல என்ன இருக்கு?... உள்ளுக்குள்ள என்ன இருக்குங்கறதுதானே முக்கியம்… அப்புடிப் பாத்தா வெளியில பாக்கத்தான் நீங்கல்லாம் ஒசரம்… ஆனா உள்ளுக்குள்ள நெலத்தோட நெலமா ஒட்டிக்கிட்டு கல்லுக்கு அடியில கெடக்குற தேர மாதிரிதானே நீங்க… நான் அப்டியா?... வெளியிலத்தான் குள்ளம்… ஆனா உள்ளுக்குள்ள இருக்க என் ஒசரத்த இந்த ஊரே அண்ணாந்துதானே பாக்கணும்…
⁃ பிரசவத்தின் வலிகளின் வேதனையை நல்லமா உணரும் ‘தவிர்க்கமுடியாத வன்முறைத் தாலாட்டு போல’ உவமையும, உணர்வும்.
⁃ கடவுளு மனுசன படைச்சான்னுதானே கையெடுத்துக் கும்பிடுறோம்… ஆனா அத ஆரு கண்ணாலப் பாத்திருக்கா?... ஒரு பொம்பளதான் தான் உசுருல இருந்து இன்னொரு உசுர இந்த பூமிக்குக் கொண்டுவர்றா… பொம்பளதான் கையெடுத்துக் கும்புடுற கடவுளவிட ஒசத்தி…
⁃ ஆளுக்கு வயசானா தளந்துபோவாங்க... ஆனா அவமானத்துக்கு வயசே ஆவாது... அது தளந்தும் போவாது…
⁃ பொம்பளப் பிள்ளையே பொறுப்பான செல்வம்தான்… அதுக்கு ஈடா இந்த ஒலகத்துல என்னப்பா இருக்கு…
Profile Image for ஜ.சிவகுரு Jambulingam.
Author 1 book5 followers
January 22, 2021
Elegant Story

A simple elegant story with convincing narration and story flow. The story telling and the conversation between characters and dialects are casual and not forced.
Author 14 books
January 27, 2021
Good story

Women
Nallamma is a ordinary women with extraordinary boldness. We hear stories like this about our old grannies. Such a wonderful story to read
Displaying 1 - 4 of 4 reviews