“பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல.பெரியாரைத் தோற்கடிக்க முடியாது.ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர்.அவர் மனித குலத்தின் விடுதலைக்காக இந்தியாவின் தென்பகுதியில் முன் வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான்.எனவே அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்ல முடியாது.”
பெரியார் மீதான எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்கு காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான்.பெரியாரைக் கொண்டாடியது அறிவுலகத்துக்கு ஒரு அடையாளம் என்று கருதப்பட்டதுபோல இந்த பத்தாண்டுகளில் பெரியாரை பழிப்பது என்பது அறிவுலகத்துக்கு அடையாளம் ஆகிப்போய்விட்டது.
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.
Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.
பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.
அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.
வியப்பு, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, இப்புத்தகத்தை வாசிக்கும் பொழுது நீங்கள் கட்டாயம் ஆட்படுத்தப்படும் உணர்வு தொகுதிகள் இவை. திரவைடக் கலாச்சார கூறுகளை பகுப்பாய்வு செய்தவர்களில் தனிப்பெரும் இடம் ஐயன் தொ. பரமசிவனுக்கு உண்டு. ஒரு புதிய வெளியை காட்டியிருக்கிறார். வாசிப்பதற்கும், அறிந்துகொள்வதற்கு உள்ள விடயங்கள் ஏராளம் ஏராளம்.
தொ.ப அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்கானல்கள் சிலவற்றின் தொகுப்பு இது.
இதில் பல்வேறு தலைப்புக்களில் அவரின் ஆராய்ச்சிகளின் பலனாக கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் நமக்கு விளக்கம் கொடுக்கிறார். தற்போது தமிழர்கள் பலர் ஆராயாமல் இருக்கும் தலைப்புகளில் இவர் ஆராய்ச்சிகள் இருக்கிறது. இவர் படைப்புகளை தமிழர் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.
பேராசிரியர் தொ.பரமசிவன் ஐயா அவர்களின் மற்றுமொரு நேர்காணல் புத்தகம் 'செவ்வி'. இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பதினொன்று தலைப்புகளில் ஏழு தலைப்புகள் 'நேர்காணல்' புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கும். மீதம் இருக்கும் நான்கு தலைப்புகளில் தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டுகளிலுள்ள அரசியல் தொடங்கி, ஆன்மிகம், ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகள், தொல் தமிழர்களின் சுற்றுச்சூழல் அறிவியல், சாதி, திராவிடம், பெரியாரை ஏன் யாராலும் தோற்கடிக்க முடியாது என்ற கேள்வி வரை விளக்கமாகப் பதிலளித்திருக்கிறார் தொ.ப.
நம் பாரம்பரிய விளையாட்டான பாண்டியாட்டம் நாம் மற்றவருக்குச் சொந்தமான நிலத்தை மிதிக்கக் கூடாது என்ற நிலப்பரிமாற்றம், நிலப்பங்கீட்டினைக் குறிக்கும் கருத்துள்ள விளையாட்டு என்கிறார் தொ.ப. பல்லாங்குழி அரசுருவாக்கத்தின் தோற்றத்தை நியாயப்படுத்தும் ஒரு விளையாட்டு என்று அவர் எழுதிய கட்டுரையைத் தமிழ்நாட்டில் இருக்கும் மார்க்சிசவாதிகளில் ஒருவரைத் தவிர யாரும் பாராட்டவில்லை என்று அவர் வருத்தத்தைத் தெரிவிக்கிறார். வேட்டைச் சமூகத்தைச் சார்ந்த விளையாட்டான ஜல்லிக்கட்டை தான் ஏன் ஆதரிக்கிறேன் என்பதைப் பற்றியும், ஜல்லிக்கட்டை 'மாடு அடக்குதல்' என்று சொல்வதை விடுத்து 'மாட்டை அணைத்தல்' என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
"ஒரு பெரியாரியவாதியாக இருந்தும் ஆன்மீகம் பற்றிப் பேசுகிறீர்களே?" என்ற கேள்விக்கு அவர் சிறுதெய்வ வழிபாட்டையும், நாட்டார் வழக்காற்றுக்களையும் பற்றித் தான் பேசுகிறதாகவும் ஆபத்தில்லாத ஆன்மிகம் மற்றும் நம்பிக்கைகள் யாரையும் காயப்படுத்தாத, ஆபத்தில்லாத ஆன்மிகம் என்றும் குத்துவிளக்கு ஆன்மிகம் தொ.ப.விற்கு பிடித்த ஓர் ஆன்மீகம் என்று கூறியிருக்கிறார்.
சாதிகளைப் பேணும் ஆன்மீகமே ஆபத்தான ஆன்மீகம் என்றும், சாதிகளை அழிக்க முடியாது கரைக்கத் தான் முடியும் என்று கூறுகிறார். ஜோதிடம் பற்றிய கேள்விகளுக்கு அவரின் பதில் "வான சாஸ்திரம் என்பது உண்மை, ஆனால் ஜோதிடம் என்பது பொய் என்றும் எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் கிரகங்கள் நம்மை இயக்கவில்லை!"
திணைகளை வகுத்தது இயற்கை என்றும் ஒவ்வொரு திணையும் பொருளாதார மண்டலங்களாக வகுக்கப்பட்டிருப்பது என்றும் நம் திணைகளில் முல்லை தினை தான் நாகரிகத்தின் தொட்டில் என்பதைச் சில அழகான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டிருக்கிறது. பசுமைப்புரட்சிக்கு முன்னால் சங்க இலக்கியக் காலத்தில் வரப்புகளில் மாற்றுப்பயிர்களைப் பூச்சிக்கொல்லிகளாகப் பயன்படுத்தி முறையில் ஒரு Ecosystem balance இருந்திருப்பதை நாம் அறியமுடிகிறது. 'சிலப்பதிகாரம் ஒரு சூழலியல் இலக்கியம்' என்றும் அந்தக் கடலில் நுழைவதற்கு முன் நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொ.ப. ஐயா கூறியிருப்பது இந்த வருடம் நான் தவறவிட்ட சிலப்பதிகார வாசிப்பைஅடுத்த வருடமாவது தொடர வேண்டும் என்ற எண்ணத்தை நினைவூட்டியது.
திராவிடக் கட்சிகளின் ஒரே வெற்றி தமிழ்நாட்டில் பெரிய மதச்சண்டைகளை ஏற்படவிடாதது மட்டுமே தவிர அன்றைய நிலையில் தன் கட்சியின் கொள்கைகளை மறந்து மத்திய அரசிடம் பேரம் பேசும் கட்சிகளாக மாறியிருக்கிறது என்பதை வருத்தத்துடன் பகிர்கிறார் தொ.ப. அது இன்றைக்கும் பொருந்துகிறது என்பதுதான் நானும் உணர்ந்தது.
பாண்டியர் வரலாறு ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுமட்டுமில்லாமல் ஆராய்வதற்கு ஆட்கள் தான் இல்லை என்பதைக் கவலையுடன் பகிர்கிறார்.பெரியார், வாக்கு வாங்கி அரசியலோடு தன்னை இணைத்துக்கொள்ளாமல் மனிதக் குல விடுதலைக்காகச் சாதி புழங்குகிற இடம் கோயில்கள் என்றாலும் சரி, இலக்கியங்கள் என்றாலும் சரி, மொழி என்றாலும் சரி அனைத்தையும் எதிர்த்ததால் தான் அவரை என்றுமே தோற்கடிக்க முடியாது என்பதை தெளிவுபடுத்திகிறார் தொ. ப.
தமிழ் நாட்டவர்க்கே இருக்கத் தகிக்கும் இடையான்குடியில் ஐரோப்பியரான கால்டுவெல்லார் ஐம்பதாண்டுகட்கும் மேலாய் எதற்கு இருந்தார்? பெரியார் எதனால் நாட்டார்த் தெய்வங்களை எதிர்க்கவில்லை ? பண்பாட்டு ஆய்வு என்பது மக்களை ஒட்டியதாய் எப்படி அமைய வேண்டும்? கடவுளுக்கும் தெய்வத்திற்குமான வேறுபாடு என்ன? அழகர் கோயில் எனும் தன் கல்லூரி ஆய்வினை எப்படி மேற்கொண்டார் ?
என்பன போன்ற பல கேள்விகட்கு விடை தருகிறார் ஐயா தொ பரமசிவனார். உரையாடல் வடிவில் ஆர்வமூட்டும்படி அமைந்திருக்கிறது இந்நூல்.