'தென்னிந்திய திருமணச் சடங்குகள்' என்ற இந்தப் புத்தகம், 1903ல் எழுதப்பட்டு விட்டது. தனிப் புத்தகமாகவும், அவரது சகுனங்கள், மூட நம்பிக்கைகள் பற்றிய புத்தகத்தில் ஒரு பகுதியாகவும் இந்தப் புத்தகம் இருக்கிறது. தென்னிந்தியாவின் பல்வேறு சாதிகளில் நிலவும் திருமணச் சடங்குகளை மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார்.
புத்தகத்தைச் சாதிய ரீதியாக இல்லாமல், சடங்குகளின் வழியே புத்தகத்தை எடுத்து செல்கிறார். பல்வேறு பழக்கவழக்கங்களையும் , அவை சாதிகளின் இடையே எப்படி வேறுபடுகிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
வரலாறு என்பது பெரும்பாலும் வென்றவர்கள் பார்வையிலும், அதிகாரத்தில் இருப்பவர்களின் நோக்கிலும் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. எனவேதான் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் புத்தகங்கள் வரலாற்றின் இன்னொரு முக்கியமான பக்கத்தைக் காட்டுகின்றது.