S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
புத்தகம் : அவளது வீடு எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன் பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் பக்கங்கள் : 271 நூலங்காடி : தேசாந்திரி
🔆எழுத்தாளர் எஸ்.ராவின் 200 கதைகளிலிருந்து வாசகர்கள் மூலமாக 20 கதைகளைத் தேர்வு செய்து , அதை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார் . நமக்கு பிடித்த எழுத்தாளராக நம் மனதில் ஒருவர் இருப்பார் . அவர் எழுதும் அனைத்து புத்தகங்களும் , வரிகளும் நமக்கு விருப்பமானதாக இருக்கும் . எஸ்.ரா அப்படியான எழுத்தாளர் . ஈரோடு புத்தக கண்காட்சியில் அவரை சந்திக்க முடியாது பெரும் வருத்தம் .
20 கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த 2 கதைகளைப் பற்றி சில வரிகள் . 1.அவளது வீடு : புத்தகத்தின் அணிந்துரையிலே குறிப்பிட்டிருந்தது , இந்த சிறுகதை பலரின் விருப்பமான ஒன்று என்று . எனக்கும் அப்படியே . பெண்கள் எந்த ஊரில் இருந்தாலும் , எந்த கல்வி நிலையில் இருந்தாலும் , எந்த வயதில் இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் பொதுவான ஆசைகளுள் ஒன்று , சொந்த வீடு . (வீடு படத்தில் வரும் சுதா போல) . அந்தப் பெண்களுள் அகல்யாவும் ஒன்று . தனக்கு மிகவும் பிடித்த மாதிரி விசாலாமான வீடு , அகல்யாவின் கனவு , நடந்தது என்னவோ , புறாக் கூண்டு போல ஒன்று . அலுவலகம் ஒன்றில் வேலைப் பார்க்கும் அகல்யாவிற்கு , பொழுது போக்கே வாடகைக்கு வீடு பார்ப்பது தான் . வீட்டின் அழகை ரசித்து , அமர்ந்து , தன் மனதிற்குள் ஆனந்தம் பட்டுக்கொள்வாள் . இறுதியாக அவள் மனதிற்கு பிடித்த மாதிரியான வீடு கிடைத்தது (ஊஞ்சல் எல்லாம் வைத்தது ) . இறுதியாக என்ன நடந்தது என்பதே கதை .
2.எம்பாவாய் : 70’களில் நடந்தது . பெண் என்பவள் வீட்டு வேலை மட்டுமே செய்ய வேண்டும் . வெளியே செல்ல பல கட்டுபாடுகள் இருக்கும் . அப்படிப்பட்ட வீட்டிற்கு மாட்டுப் பெண்ணாக வந்தவள் , நன்மதி . நூலக புத்தகங்கள் மூலமாக , எழுத்தாளர் வாஹிணி சுப்ரமணியத்தின் வரிகள் நன்மதிக்கு அறிமுகமாயின . அவர் எழுதிய வரிகளின் மூலமாக இருவருக்கும் , மானசீகமான ஒரு நட்பு உருவானது . ஒரு நாள் , வாஹிணியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . நன்மதியின் மகிழ்ச்சியான நாள் அது . வாஹிணியோ நன்மதியைப் போல் புடவைக் கட்டிக் கொண்டு அடுப்படியில் கிடக்கவில்லை , கிராப் தலையுடன் சட்டை அணிந்துக் கொண்டு கையில் கரண்டிக்குப் பதில் பேனாவைப் பிடித்திருந்தாள் . அவளை நன்மதி வீட்டிற்கு அழைத்துதுதான் விளைவு . நன்மதியின் புத்தகங்கள் தீக்கிரையாகியது . இருவருக்குமான நட்பு என்ன ஆனது என்பதே - எம்பாவாய்.
இந்த வருடம் , நான் வாசித்த பல நல்ல நூல்களில் இதுவும் ஒன்று . அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் புத்தகம் இது .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகங்களில் இது நான் வாசிக்கும் மூன்றாவது புத்தகம். அவரின் சிறுகதை தொகுப்பில் "அவளது வீடு" நான் வாசிக்கும் முதல் புத்தகம்.
எனது இனிய டால்ஸ்டாய், பதேர் பாஞ்சாலி என்ற 2 கட்டுரைத் தொகுப்புகள் கிட்டத்தட்ட ஒரு கதை கேட்பது போலத்தான் மிக சுவாரசியமாக இருக்கும். இப்படி பட்ட ஒரு படைப்பாளியின் புனைவுக் கதைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்த படைப்புதான் "அவளது வீடு" என்ற சிறு கதை தொகுப்பு.
நாவல் வாசிப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு தவம் போன்றது, அதை தொடர்ந்து வாசிக்காவிட்டால், அந்த கதையுலகில் நாம் சஞ்சரிப்பது கடினம் என்று நான் உணர்ந்ததாலோ என்னவோ, சிறு கதை புத்தகங்கள் என்னை ஈர்க்கின்றன.
எழுத்தாளர் கே.வி ஷைலஜா அவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆற்றிய உரையில் "அவளது வீடு" என்ற ஒரு கதையை அவையோருக்கு சொன்ன காணொளியை யூடூபில் நான் ஒரு முறை எனது மகிழுந்தை ஒட்டியப்படியே கேட்டிருக்கிறேன். பின்பு புத்தகங்களே துணை! என்ற தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களே இந்த கதையை விவரித்தார்.பெண்களின் அடிப்படை தேவைகள் இது தான், அவர்களுக்கு இது போதும் என்ற கருத்துப்படிவம் நிறைந்த நடுத்தர ஆண்வர்கத்தினரின் மூர்க்கத்தனமான உளவியல் வன்முறையை சொல்லாமல் சொல்லும் கதை இது.
இந்த கதையை கேட்டபோது ஒரு பேருந்து பயணத்தில் இரு தோழிகளின் உரையாடல் எனக்கு நினைவுக்கு வந்தது. அதில் ஒரு தோழி சொல்கிறாள் "நான் வெகுநாட்களாக ஒரு இருசக்கர வாகனம் வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன், ஆனால் வீட்டிலோ அந்த செலவுக்கு நகை வாங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் ". அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் மற்றோரு தோழி "ஆண்களுக்கு என்று வரும் பொழுது, அவர்களுக்கு வண்டி, வீடு என்று அவர்களுக்கென வாங்கிக்கொள்கிறார்கள், நமக்கு என்று வரும் பொழுது நகை, புடவை கல்யாணம் என்பதோடு முடிந்து விடுகிறது. ஒரு ஆண்மகனாக எனக்கு வாய்த்திருக்கும் சுதந்திரத்தை நினைத்து பெருமை கொள்வதா அல்லது அவர்களின் நிலையை நினைத்து அனுதாபப்படுவதா? தெரியவில்லை. இவை இரண்டுமே அந்த பேருந்து பயணம் முடிவடையும் வரைதான்.
அவளது வீடு கதையை கேட்டவுடனேயே இந்த சிறுகதையை எழுத்து வடிவத்தில் வாசிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. இதற்கு ஏற்றாற்போல் டிசம்பர் 2020 தேசாந்திரி பதிப்பகத்தில் "அவளது வீடு" என்று தலைப்பிலேயே ஒரு சிறுகதை தொகுப்பை வெளியிட்டு அசத்திவிட்டார்கள். சென்னை புத்தக கணக்காட்சிற்கு முன்னதாக சிறிய அளவில் 40 பதிப்பகங்கள் கலந்து கொண்ட ஒரு புத்தக கண்காட்சியில் இந்த புத்தகம் என் கண்களில் பட்டதும் அளவில்லா மகிழ்ச்சியுடன் அதை என் வசப்படுத்திக்கொண்டேன்.
இந்த கதைகளை தேர்ந்தெடுத்தது வாசகர்கள்தான்.
20 சிறு கதைகள் அடங்கிய தொகுப்பில் ஒரு கதை கூட எனக்கு சலிப்பு தரவில்லை. பரவலாக இந்த சமூகத்தில் இணக்கமான ஒரு வாழ்க்கையை வாழும் மனிதர்களின் நடுவில் சிலர் சில விசித்திர பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்து மறைக்கின்றனர். இந்த சிறுகதை தொகுப்பில் பெருவாரியான கதைகள் இவர்களின் வாழ்க்கையை சற்று எட்டி பார்த்து நமக்கு பரவலாக கிடைக்கும் பொது ஞானம் அல்லாது வழக்கத்திற்கு மாறான ஞானத்தை தருவதாக உணர்கிறேன்.
வாடகை வீட்டிற்கான விளம்பரங்களை பார்த்து அந்த வீடுகளை தேடி போகும் ஒரு பெண்மணி, பெய்யும் மழையின் அளவுகளை ஒரு குறிப்பேட்டில் குறிப்பெடுக்கும் ஒரு தந்தை,ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்ற இலக்கிய கூட்டத்தில் ஒற்றை பெண்மணியாய் போய் தன் மனம் கவர்ந்த எழுத்தாளரை தரிசிக்கும் ஒரு இல்லத்தரசி, சேவலுக்காக தன் குடும்பத்தை துச்சமாக மதிக்கும் ஒரு கிராமத்து கிழவர், ஒரு ஆயுதத்தை பரிசுப் பொருளாக தன்வசம் எப்போதும் வைத்திருக்கும் ஒரு மனைவி, டயரிகள் எழுதும் பழக்க முடையவர் அதை கடைசியாக புரட்டிப்பார்க்கும் ஒரு முதியவர், செகாவை காணவரும் வினோதமான விருந்தாளி, பாம்பை தன் கட்டுப்பாட்டில் வைப்பதை ஒரு போதையாகக் கொண்ட ஒரு பாம்பாட்டி, பின்னோக்கி செல்லும் ஒரு மனிதர்,வீட்டில் எப்பொழுதும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள ஒரு அப்பா என்று பட்டியல் சற்று நீளம் தான்.
20 கதை���ளில் பெரும்பாலான கதைகள் என்னை கவர்ந்தன. வெறும் இருட்டு மற்றும் பனாரஸ் என்னை வெகுவாக கவரவில்லை. ஒரு வேளை இதற்கு சற்றும் ஒவ்வாத கருக்களை கொண்ட மற்ற கதைகளோடு சேர்த்து இதை வாசித்ததன் காரணமாக இருக்கலாம்.
இதில் என் மனதுக்கு நெருக்கமான கதைகள் "அவளது வீடு", "ஆண் மழை", "எம்பாவாய்", "தனலக்ஷ்மியின் துப்பாக்கி" , "பதினாறு டயரிகள்", "இன்னும் சில கிளிகள் ", "நீரிலும் நடக்கலாம்", "அப்பா புகைக்கிறார்", "சௌ ந்தரவள்ளியின் மீசை".
மிகச் சிறிய கதையான வானோர் என்ற கதை , எஸ்.ராமகிருஷ்ணனின் பிரசுரிக்கப்படாத உப்பு என்ற சிறுகதையை நினைவுப் படுத்தியது.
சௌந்தரவள்ளியின் மீசை உளவியல் ரீதியாக ஒரு மாணவியின் பாதிப்பை சித்தரித்தாலும் அதற்கு மாறாக எனக்கு இரு இனிய தருணங்களை நினைவூட்டியது. 1. போப்பின்ஸ் என்ற ஒரு மலையாள திரைப்படத்தில் கண்ணாடியை முதல்முதலாக பார்க்கும் ஒரு தம்பதியினரின் எதிர்வினை 2. என் கல்லூரி பருவத்தில் கேரளாவில் உள்ள தன் சொந்த ஊருக்கு சென்று திரும்பிய சக மாணவியின் கையை பார்த்து ஆர்வத்தினால் மலையாளத்தில் ஒரு கேள்வியை கேட்டு அவளை நாணச் செய்தது. அந்த கேள்வியின் தமிழாக்கம் "உன் கைகளில் உள்ள முடியை காணவில்லை". அதற்கு அவள் வெட்கம் கலந்த சிரிப்புடன் அளித்த பதில் "பிரேமிடம் நல்ல கவனிக்கும் திறன் உள்ளது "
இந்த சிறுகதை வாசிப்பில் மற்றொன்று புலன் படுகிறது. யாருக்கும் தீங்கில்லாமல் ஏதோ ஒரு விதத்தில் தங்கள் தோற்றத்தினாலோ, மனரீதியாகவோ, பழக்கத்தினாலோ மாறுமட்டு இருப்பவர்களை நாம் ஏற்று கொண்டதே இல்லை. மாறாக பரவலாக உலவும் இணக்கமானவர்களின் செயற்பாடுகளாக "புகைப்பிடித்தல், மனைவியை அடித்தல், பெண்களை பின் தொடர்தல், ஏதோ ஒரு மயக்கத்தில் தன்னை அடிமையாக்கி குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல்" என ஈரமில்லாமல் வாழ்கின்ற ஆண்வர்கத்தினரை பெரும்பாலான பெண்கள் சகித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆக்க பூர்வமாக ஒரு இலக்கியத்தை ரசிப்பது, திருமணப் பரிசாக ஒரு பொருளை தன் வசம் பாதுகாத்து வைப்பது, வசிப்பதற்கு விசாலமான வீடு வேண்டி இருக்கும் பெண்மணி என நியாயமாக யாருக்கும் தீங்கில்லாத பழக்கங்களை கொண்டிருக்கும் பெண்மணிகளை எதிரியாக கருதும் சமூகம் வருத்தத்திற்குரியது.
கல்வி போராளிகளுக்கு நன்றிக்கடன் செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம் நாம். இல்லையேல் பண்பாட்டு தொடர்ச்சி என்ற பேரில் ஆண்களின் அட்டூழியங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
எஸ்.ராவின் சிறந்த சிறுகதைகள் புத்தகத்தில் இருப்பதால் நிச்சயமாக நன்றாக இருக்கும். அவர் தனது கதாபாத்திரங்களை எழுதுவதில் தனித்துவமான பாணியைக் கொண்டுள்ளார். ஒவ்வொரு கதையும் கதாப்பாத்திரங்கள் பற்றிய ஆழமான விளக்கத்தைக் கொண்டிருப்பதால், மேலும் படிக்க ஆர்வமூட்டியது.
S.Ramakrishnan introduces his readers to an universe of interesting characters in this curated collection of his short stories : A woman who rents a spacious house and lives a parallel life alone without informing her family, A husband who expresses his anger with the world by walking backwards, A woman who scares her husband by safeguarding her father's pistol under the pillow all the time , A school girl who is teased by classmates for her "mustache", among others. The best story has to be "Empaavaai" which relates to how a woman oppressed in a patriarchal household finds joy for a brief time when her favorite writer comes to the town for a program. Another noteworthy one is where he makes Anton Chekhov as a character in his story showcasing his love for Russian Literature. When noble thoughts meet lyrical writing skills, the universe of S.Ramakrishnan's fiction is created.
சிறுகதை தொகுப்பு என்றால் நம்மில் ஒரு சுவடை எளிதாக இட்டு செல்ல எளிதாக. நாம் அவற்றுடன் பயணிக்கும் பயணம் சிறிய கால வெளியால்.
தனக்கு என்று ஒரு வீடு சொந்த வீடு கட்டி அதில் என்ன எல்லாம் வேண்டும் என்று ஆசை கொள்ளும் பெண்! அவள் நினைத்தது போல நடவாமல் போக, அவள் வாடகை வீடுகளை கண்டு எவ்வாறு தன்னை சமாதானம் செய்து கொள்ள முயல்கிறாள்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண், அவள் காதலை கொஞ்சம் கூட ஏற்காத சமூகம். யார் இங்கே உண்மையில் தண்டிக்க படுகிறார்கள் என்ற கேள்வி எண்ணில் எழுகிறது. இது நாள் வரை நானும் அதை ஒரு துண்டு செய்தி ஆக தான் பார்த்தேன். இதை வாசித்த பின்பு அதை இனி அவ்வாறு கடக்க முடியாது.இமயம் எழுதிய ' செல்லாத பணம்' எனோ எனக்கு நினைவு படுத்தியது.
எம்பாவாய் என்ற கதை, 1970 களில் நடப்பது போன்ற களம். வீட்டில் இருக்கும் பெண் தன்னை அறியாமல் அவள் புத்தகம் வழியாக ஒரு எழுத்தாளர் மேல் நட்பு கொள்கிறாள். வாஹினி என்று அந்த ஆளுமையை அவள் காண ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவள் புத்தகம் வாசிக்க தடைகள், வாஹினியின் தோற்றம் அவளுக்கு ஒரு ஆச்சர்யம்!! தன் தனிமையை அவள் வாஹினின் நாவல்கள் வாயிலாக ஆற்றுவது போன்ற உணர்வு!!
துப்பாக்கியை தனது அப்பாவின் நினைவாக எடுத்து வரும். அதனால் அவள் சந்திக்கும் விளைவுகள். மிக அருமையான ஒரு கதை, எளிய மனிதனிடம் எதுக்கு அந்த துப்பாக்கி?? ஆனால் ஏன் இருக்க கூடாது??
ஆண் மழை,வியந்து ரசித்த கதை. மழை போல எப்படி நம்மை வசியம் செய்யும் இந்த கதை... மழையை அளக்கும் மனிதன்... மேலும் பல மனித ஓட்டங்கள்!!!
கற்பனை சேவல், கருப்பன் சேவல் சண்டை போதையால் எவ்வாறு இருக்கிறான்... என்னை சுற்றி இந்த மனிதர்கள் என்றும் இருக்கிறார்கள்... நான் எளிதாக உணர, பயணிக்க முடிந்த ஒன்று...
இன்னும் சில, தனிமையின் துயரம் தான் இன்னும் சில கிளிகள். பதினாறு டைரிகள் நாம் ஏன் அவைகளை எழுத நினைக்கிறோம்? ஆண்டுகள் போன பின்பு நாம் அவைகளை பின் நின்று பார்கும் போது இப்படி தானே இருந்தேன் என்ற கேள்வி!!!
இளம் பெண் குழந்தையின் மீசை தந்த வலிகள், புகை பிடிக்கும் அப்பாதந்த சிகரெட் வாங்கும் பழக்கம் அதுவும் பெண் பிள்ளைகளுக்கு, பம்பாய் வைத்து வித்தைகாட்டும் பிடாரன் வாழ்வு, அடுத்த மனிதனுக்கு ஆன உணவு, Kafka போல் செண்பக வள்ளி ஒரு பூனை போல மாறி வாழ்வின் மீது இருந்த பார்வை மாற்றம்.
இவையாவும் பெண்கள் மீது ஏதோ ஒரு முறையில் நடத்தபடும் ஒடுக்குமுறை!
இறைவி அவள் ஒரு தனித்துவம்.. சிறு சிறு பழக்கம், கொள்கை தான் அவளை மேன்பட செய்யும். அவளது சிறு வாழ்வை நீ சிதைக்காதே.....
20 short stories compilation, mostly about women and their life struggles. It also contains a supernatural story. The stories revolves around the extraordinary lives of the ordinary people around us. It's a different perspective. At the end you will ask so many unanswered questions to yourself. One of my favourite books of S. Ramakrishnan.
கதைகளில் வரும் பெண்கள் அனைவரும் ஒரே மாதிரி இருக்கின்றனர். பெயர்கள் மட்டுமே வேறுபடுகின்றன. சலிப்புத்தட்டும் நடை, சுவாரசியமில்லா கதைகள். இராமணி சந்திரன் இரசிகர்களுக்கு வேண்டுமானாலும் பிடிக்கலாம்.