காதலும் காற்றும் கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே வருவதில்லை. காற்று நுழையாத இடத்தில்கூட காதல் நுழைந்துவிடும். ஒரு வழிப்போக்கன்போல் வரும் காதல், உரிமையாளன்போல் வீட்டுக்குள் தங்கிவிடுகிறது. காலம்காலமாக இந்த மண்ணில், ஜெயித்த காதலைவிட தோல்வியுற்ற காதலும் ஒருதலைக் காதலுமே காவியமாகி நம் மனதில் இடம்பெற்றிருக்கின்றன. நான் சென்றபோது அந்த ஊரில் ஒரு கல்யாண வரவேற்பு நடந்து கொண்டு இருந்தது. தோடர்கள் வீட்டுக் கல்யாணம். கன்னடம் கலந்த சடங்குப் பாடலும், கல்யாண விருந்துமாக அந்த இடம் இன்றும் எனக்குள் ஒரு அமானுஷ்யமான பரவசத்துடன் தங்கியிருக்கிறது. இந்தப் பயணமே ஏழு வருடங்கள் கழித்து 'கண் பேசும் வார்த்தைகள்' பாடலில் “காட்டிலே காயும் நிலவைக் கண்டுகொள்ள யாருமில்லை. தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை” என ஒருதலைக்காதலுக்கு இரண்டு உருவகங்களை எனக்குக் கொடுத்தது. (நூலிலிருந்து)
Nagarajan Muthukumar (12 July 1975 – 14 August 2016) was a Tamil poet, lyricist, and author. Best known for his Tamil language film songs, he received the most Filmfare Awards for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National Film Award for Best Lyrics for his works in Thanga Meenkal (2013) and Saivam (2014).
Muthukumar grew up in Kannikapuram village in Kancheepuram, India in a middle-class family. He has a brother Ramesh Kumar. At the age of six and a half, he lost his mother. At a young age, he acquired an interest in reading. He began his career working under Balu Mahendra for four years. He was later offered to write lyrics in the film Veera Nadai, directed by Seeman. He has been credited as a dialogue writer in a few films, including Kireedam (2007) and Vaaranam Aayiram (2008). His last movie as a lyricist is Sarvam Thaala Mayam with A.R. Rahman.
Na. Muthukumar was born at Kannikapuram, Kancheepuram on 12 July 1975. He did his graduation in Physics at Kancheepuram Pachaippa college. He pursued his master's degree in Tamil at Chennai Pachaippa college. With the aim of becoming a director, he joined as an assistant director to the legendary Balumahendra. His Poem 'Thoor' took him to great heights. On 14 June 2006, he married Jeevalakshmi in Vadapalani, Chennai.
Muthukumar, who had been suffering from jaundice for a long time, died on the morning of 14 August 2016, at his Chennai residence, of cardiac arrest. He is survived by his wife, son and daughter.
- Book 61 of 2022- கண் பேசும் வார்த்தைகள் Author- நா.முத்துக்குமார்
இப்போ வரைக்கும் நல்ல இசை கேட்டா,“சே..இந்தப் பாட்டுக்குலாம் நா.முத்துக்குமார் எழுதியிருந்தா செமயா இருந்துருக்கும்ல” என்று நினைக்காத நாளே இல்லை. கண்ணதாசன்,வாலிக்கு அப்றம் நான் ரொம்ப ரசிச்ச ஒரு தமிழ் சினிமா கவிஞர்னா அது நா.மு தான். அவர் எழுதின எல்லாவற்றிலும் நிறைய அழகு இருக்கும்,நிறைய எதார்த்தம் இருக்கும். பாடல் கேட்கும் எல்லாருக்கும் அவரோட வரிகளோட ஒரு பந்தம் ஏற்படும்-ஒரு உறவு அது. சொல்ல முடியாது,உணர மட்டுமே முடியும் அந்த உறவால். இப்படி ஊரே கொண்டாடிக் கொண்டிருந்த மனிதர் திடீரென இல்லாமல் போனால் என்ன ஆகும்? சோகமும்,ஏக்கமும்,வெற்றிடமும் தான் மிஞ்சும்.
இந்த எழுத்துக்கு இருக்கிற சக்தியே தனி! மறைந்து போனவரை நாம் மறக்க முடியாமல் இன்று தவிப்பதும் இந்த எழுத்தால் தான். ஆறுதல் தேடி ஓடுவதும் அவர் விட்டுச் சென்ற அந்த எழுத்திடம் தான். இந்த புத்தகத்தில் தான் எழுதிய பாடலுக்கு பின் இருக்கும் பின்கதையை கூறுகிறார் நா.மு. அவருக்கே நேர்த்தியான எதார்த்த நடையில் அவரது வாழ்வில் நடந்த அவர் எழுதுவதற்கு ஏதுவாய் இருந்த நினைவுகளை எல்லாம் நம்மோடு பகிற்கிறார். 25 பாடல்கள்! 25 கதைகள்! இன்னும் நெறைய எழுதி இருக்கலாமே என ஏங்க வைக்கும் அளவிற்கு இயல்பாய் அழகாய் ஒரு படைப்பு. அவர் இல்லாத வெறுமையை ஆழமாக நினைவு படுத்தியது இந்த புத்தகம்.
“தேநீர் குடிப்பதை போல்” என்ற அத்தியாயத்தில் நா.மு எழுதி இருப்பார்- “மரணம் ஒரு மலர். உதிர்ந்த பிறகும் காற்றில் அதன் வாசனை கசிந்துக் கொண்டிருக்கிறது.” இவரது மரணம் ஒரு நந்தவனம், உதிர்ந்த பின்னாலும் அதன் வாசனை உலகம் அழியும் வரை கசிந்துக் கொண்டே இருக்கும்.
“உன்னால் தானே நானே வாழ்கிறேன்”என்று அவர் பாடல் வரி போல-வாழ்க்கையில் துவண்டு போகும் போது அவரது வரிகள் தான் மீட்டெடுத்துக் கொண்டே இருக்கிறது.
“மடையா... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்த உலகத்துல மனுஷங்க யாரும் சாகறதே இல்ல. காலம்தான் செத்துப்போகுது. நீ இருக்கிற வரைக்கும் நான் உயிரோட தான் இருப்பேன்.” இப்படி அவர் வரிகளுள் தான் ஆறுதல் தேடி புகலிடம் கொள்கிறேன்.
நா.மு என்னும் சகாப்தம் நம்மோடு எப்போதுமே பயணித்துக் கொண்டே தான் இருக்கும்🤎 இந்த புத்தகம் நிறைய சொல்லிக் கொடுத்தது-அதில் முக்கியமான ஒன்று-அன்பையும் மனிதர்களையும் நேசத்தையும் கொண்டாடுவது. நா.மு தனக்கு கிடைத்த எல்லா வாய்ப்புகளிலும் யாரோ ஒருவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பார் இந்த புத்தகத்தில்! வாழ்க்கையை கொண்டாட கற்றுக் கொடுத்த இவருக்கு எப்படி என் நன்றியை சொல்லுவேன்?🥺😭
புத்தகம் : கண் பேசும் வார்த்தைகள் எழுத்தாளர் : நா.முத்துக்குமார் பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள் : 118 நூலங்காடி : Bookwards
🔆சிலர் இருக்கும் போது , நமக்கு அவர்களின் அருமை தெரிவதில்லை . அவர்களின் மறைவுக்குப் பிறகே அவர்களின் சாதனைகளை நாம் அறிந்து , வியந்து கொள்கிறோம் .
🔆கதைச்சொல்லி பவா செல்லத்துரை , அவர்கள் நா.முத்துக்குமார் அவர்களின் மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றிய கானொலியை வெளியிட்டு இருந்தார். அவர் பாடலாசிரியர் என்று தெரிந்தவுடன் , அவரைப் பற்றி இணையதளத்தில் தேடினேன் . எனக்கு விருப்பமான பல பாடல்களை அவர் தான் எழுதியுள்ளார் என்பதை தெரிந்து கொண்டேன்.
🔆மேலும் அவரின் நேர்கானல்களை, பார்த்த போது அவர் எவ்வளவு பண்பட்ட மனிதர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது . ஏனென்றால் அவர் ஒரு திவீர வாசிப்பாளர் .
🔆“கண் பேசும் வார்த்தைகள் “ என்னும் இந்தப் புத்தகத்தில் , அவர் எழுதிய பாடல்களுக்கான சூழ்நிலைகள், அவர் அந்தப் பாடல்களை எவ்வாறு எழுதினார் ?, யார் அதற்கு காரணம் என்பன பற்றி கூறியுள்ளார்.
🔆நா.முத்துக்குமார், இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வுக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பற்றிய கட்டுரையே கண் பேசும் வார்த்தைகள் . மூவர் கூட்டணியில் வெளிவந்த பாடல்களே அதற்கான சான்று .
🔆“தேரடி வீதி “ பாடலில் , ஐயர் பொன்னு மீன் வாங்க வந்தால் … என்னும் வரிகள் , உண்மையாகவே அவர் சந்தித்த காதல் ஜோடியின் கதை தான் .
🔆அவரைப் பற்றி அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் பெரிதும் உதவிற்று . அவருடைய பிற புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் . அந்த மகத்தான கலைஞனுக்கு என் சமர்ப்பணங்கள் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
தான் வரிகள் எழுதிய 25 பாடல்களின் பின் உள்ள காரண, கதைகளை மிக அழகாக தொகுத்த புத்தகம். ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் பாடல் வரிகள் குறிப்பிட்ட விதம், சிறுவயதில் கடையில் வாங்கும் திரைப்பட பாடல் புத்தகங்களை நினைவுறுத்துகிறது. வரிகளை படித்து கொண்டே பாடல்களை கேட்பது ஒரு புது அனுபவம் மிகவும் ரசித்து படிக்கமுடிந்த ஒரு புத்தகம். முதலில் முடிவு செய்த வரிகளையும் அதன் மாற்றங்களை அறிவது இன்பமாக உள்ளது.
புத்தகத்தில் இடம் பெற்ற 25 பாடல்கள் கீழ்வருமாறு:
கண் பேசும் வார்த்தைகள் காதல் வளர்த்தேன் தண்தட்டி கருப்பாயி லஜ்ஜாவதியே சென்னை செந்தமிழ் தேரடி வீதியில் செல்லமே செல்லம் புடிச்சிருக்கு கொக்கு பற பற விழாமலே இருக்க முடியுமா திட்ராங்க திட்ரான்க ரகசியமாய் எனக்கு பிடித்த பாடல் ஓராயிரம் யானை கொன்றால் முத்து முத்தா தேவதையை கண்டேன் பார்த்தாலே பரவசம் காதல் யானை உனக்கென இருப்பேன் கண்மூடி திறக்கும் சொன்னது அருவா மீசை சுற்றும் விழி நினைத்து நினைத்து
Fantastic read, has lot of touch in his writing, this book is collection of lyrics of his popular songs and how he wrote them, really interesting, I compiled the songs into spotify playlist :-)
மீண்டும் நா.முத்து அண்ணன்💙... இவரை பற்றியும்..இவருடைய எழுத்துக்களையும் படிக்க படிக்க இவர் மீதான மரியாதையும், அன்பும், அதிகம் ஆகிகொண்டு தான் இருக்கிறது...
ஒரு பாடலை, வெறும் பாடலாக கேட்டு ரசித்து, கடந்து சென்று விடுகிறோம்.. ஆனால் அந்த பாடலை எழுத ஒரு பாடலாசிரியர் மெனக்கெட்டு, நேரம் செலவழிப்பது பற்றி யாரும் பேசுவது இல்லை...
திரைப்படத்தின் கதைக்களத்தையும் , பாடல் எழுதப்பட வேண்டிய பின்னணியும் கூறிய ஒரு நாளிலே பாடலை எழுதி முடிப்பது என்பது அவ்வளவு சுலபமான செயல் இல்லை...
புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் வரிகளை வாசிக்கும் பொழுது, மனதில் நம்மை அறியாமலே அந்த பாடலின் இசை நுழைந்துவிடுகிறது...அதிலும் பல பாடல்கள் இவர் தான் எழுதியதா!! என்று ஆச்சர்யப்பட வைத்தது.
புத்தகத்தை வாசிக்கும் பொழுது அவரை நிஜத்திலே நேர்காணல் எடுப்பது போலவே உணர்வு ஏற்பட்டது...
🦋நா.முத்து அண்ணனோடு இந்த பயணமும் மனநிறைவு அளித்தது...🦋
“அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்!” என்ற பாடலாசிரியர் தாமரை அவர்களின் வரிகளைப் போல செல்வராகவன்,யுவன்ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவான காவியமான “7/G ரெயின்போ காலனி” திரைப்படத்தின் “கண்பேசும் வார்த்தைகள்” என்னும் பாடலில் தொடங்கி அதே கூட்டணியின் அதே படத்தில் வரும் “நினைத்து நினைத்து பார்த்தேன்” என்னும் பாடலில் முடியும் இப்புத்தகத்தில் நா.முத்துக்குமார் தான் எழுதியுள்ள பல்லாயிரக்கணக்கான பாடல்களிலிருந்து 25 பாடல்களை,அவை உருவான வரலாறை,அவ்வரிகள் நெஞ்சில் உதித்த கணங்களை தேர்வு செய்து பதிவு செய்தது போல 25 கட்டுரைகளின் தொகுப்பே இது!
Fantastic book about how he wrote a song in a film. The poet explains the situation of the song in the movie and his situation how he consumed that particular lines from his life. Surely miss this guy.
புத்தகம்: கண்பேசும் வார்த்தைகள் எழுத்தாளர்: நா.முத்துக்குமார்
வணக்கம் மக்களே, இயல்பாகவே நா.முவின் தீவிர ரசிகன், குறிப்பாக அவரின் உருவகங்களுக்கு (அட அதாங்க அந்த Metaphor...) அதை தேடி தேடி வாசிச்ச எனக்கு, கெடச்ச புத்தகம் தான் இது, இத பத்தி நிறய பதிவு போட்டுட்டேன் ஆனாலும் இன்னும் இந்த புத்தகத்த உங்களுக்கு கொண்டு சேர்க்கணும்னு தோணுச்சி, ஆனா இது புத்தகம் இல்லைங்க, இது நா.முவின் டைரி குறிப்புகள், இதை வாசிக்கும் பொழுது ஏதோ நானும் நா.முவும் ஒருவரை ஒருவர் பல நாள் தெரிந்து அறிந்து அந்த பேருந்து பயணத்தில், அந்த டீக்கடை பெஞ்சில்,அந்த மரத்தடி நிழலில், தூரத்து கல்லறையில், நண்பனின் திருமணத்தில், கோயில் வாசலில், அந்த சடங்கு வீட்டில்,கல்லூரி கேண்டீனில் இப்படி நிறைய இடத்துல பேசி கொள்வதை போலவே உணர்ந்தேன். பேச பேச "ப்ப்ப்பா உனக்கு மட்டும் எப்படியா இவ்ளோ அனுபவம்னு கேட்க தோணுச்சு", பாவம் அந்த மனுசன் தான் இல்ல.
கண் பேசும் வார்த்தைகள். இது இந்த வருடத்தில் நான் வாசித்த 4-வது நா.முத்துக்குமார் புத்தகம். அணிலாடும் முன்றிலில் கண்ணீர்க் கடலில் நீந்த வைத்தார். வேடிக்கை பார்ப்பவன் மூலம் நானும் அவர் வாழ்க்கையை அவருடன் சேர்ந்து வேடிக்கைப் பார்த்தேன். நா.மு கவிதைகள் தொகுப்பில் நான் படித்த "தூர்" கவிதை என்னை இன்று வரை ஆச்சர்யப் படுத்திக் கொண்டு இருக்கிறது. இன்று கண் பேசும் வார்த்தைகள் மூலம் மீண்டும் அவர் என்னை ஆச்சர்யப் படுத்தினார். எனக்கு நா.மு அவர்களின் வரிகள் தெரியும் ஆனால் அந்த வரிகளுக்குப் பின்னால் உள்ள வலிகளும் பல சுவாரசியமான கதைகளும் இந்த புத்தகத்தை வாசித்து முடித்த பின் தான் தெரிந்தது. பல வருடங்களாக கேட்ட அதே பாடல்கள் தான் ஆனால் இதை வாசித்த பிறகு கேட்கும் போது வேறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மிக மிக எளிமையான வார்த்தைகள் தான் ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கமோ மிக கனமானது. பாடல்களின் மெட்டை மட்டுமே ரசித்து வந்த என்னை வரிகள் மீது கவனம் செலுத்த வைத்தது நா.மு அவர்கள் தான்.
நா. முத்துக்குமாரின் வரிகள் பட்டாம்பூச்சி மீது படர்ந்த வண்ணம் போல, அது பறந்து அதன் சிறகு உதிந்தாலும், நம்மை தொட்டு போன வர்ணம் விரல் ஒட்டிக்கொள்ளும். பட்டாம்பூச்சி விற்பவனின் வர்ணம் நம் விரல்களில் எப்போதும் ஒட்டிக்கொண்டுள்ளது.
நா. முத்துக்குமாரின் ஒவ்வொரு பாடலின் பின் ஒரு கதையும் அதன் சுவரசியமும், அதன் காதலும், அதன் அழகியலும், அதன் ரகசியமும் படிக்க படிக்க திகட்டாத தேன் சுவை.
Great book depicting the life experiences which made Na.Muthukumar pen impressive lyrics for Tamil Cinema. A book to know some beautiful Tamil songs with his intense lyrics which makes the Tamil language more magical.
இலக்கியத்தையும் இசையையும் ஓரே தட்டில் வைத்து ரசித்த அனுபவம் தான் கண் பேசும் வார்த்தைகள். இலக்கியத்தில் மட்டும் இருந்த ஆர்வத்தை இசையின் பாலும் ஈர்த்து பாடல்களை புதிய கோட்டத்தில் காண செய்துவிட்டது. இசையின் ரசிகனும் ஆகிறேன் இன்றிலிருந்து......