சினிமா பின்னணியில் சினிமா போன்ற நாவல். ஒரு வெற்றிகரமான இயக்குநர் , உதவி இயக்குநர் மற்றும் சில நடிகைகள் உலாவும் இந்த நாவல் சினிமா பின்னணியில் இருந்தாலும் சினிமாவைத் தாண்டி செல்கிறது. சினிமா உலகம் என்றாலே மாய உலகம், உல்லாசமும் உற்சாகமும் நிறைந்த உலகம் என்பது பொதுவான எண்ணம். இதுவரை சினிமா உலகைப்பற்றி தமிழில் வெகு சில நாவல்களே வந்துள்ளன. அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் சினிமா உலகையும் அதன் மாந்தர்களையும் வெகு அருகில் இருந்து காட்டியது .சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையும் ஒரு முக்கியமான ஆக்கம் .அராத்துவின் ஓப்பன் பண்ணா இந்த இரண்டு நாவல்களிலும் இருந்து முற்றிலும் விலகி வேறொரு தளத்தில் செயல்படுகிறது. தற்போதைய சினிமா உலகின் இயக்குநர்கள்,ஹீரோயின் , ஹீரோ , உதவி இயக்குநர் , தயாரிப்பாளர்கள் என தாவித்தாவிச் சுழல்ன்றாலும் , சினிமா உலகின் துறை சார்ந்த தகவல்களுக்கு முக்கியத்துவம் தராமல் அதில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகளோடு இந்த நாவல் தானும் ஒரு கதாபாத்திரமாகப் பழகிப்பழகி வாசகர்கள் முன்னே படையல் போடுகிறது.உச்சகட்ட புகழில் இருக்கும் சினிமா கதாபாத்திரங்கள் எப்படி காதலை காமத்தை அணுகுகிறார்கள் ? அவர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள்? திடீர் வீழ்ச்சிகளை எப்படிக் கடக்கிறார்கள் ? என்றெல்லாம் வெளிப்படைத் தன்மையோடு ஜாலியாக சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறது. மது மாது மட்டுமே அதிகம் ஆக்கிரமித்து இருக்கும் சினிமா , ஃப்ரீ செக்ஸ் என்றெல்லாம் சினிமாவைப்பற்றி பொதுத்தளத்தில் பேசிக்கொண்டிருக்க , நிஜத்தில் என்ன நடக்கிறது என்பதை ஒரு கேரக்டரே சினிமா உலகில் நுழைந்துப் பார்த்து வாசகர்களிடம் சொல்வது போலச் சொல்லிச் செல்வது இதன் சிறப்பு.
இதுவரை பயன்படுத்தி வந்த கதை சொல்லல் முறையை முற்றாக புறந்தள்ளி விட்டு , நவீன வாழ்க்கைக்கும் , நவீன சினிமாவிற்குமான புது விதமான கதை சொல்லும் பாணியில் பயணித்து வாசகர்கள் மூளைக்குப் புது ரத்தம் பாய்ச்சுகிறது. முற்றிலும் புதிதான , வெளிப்படைத்தனமை அதிகம் கொண்ட ஒரு அனுபவத்திற்குத் தயாராகலாம். pentopublish4 போட்டியில் பங்கு பெறும் இந்த நாவலை அராத்து araathu எழுதியிருக்கிறார்.
Writeroda uyir mei 1&2, pondatti lam padichurukaen..its unfair to compare two different books.. But his writing continue to impress me.. I didn't expect theevira illakiyam from araathu sir.. So this book made me to sit.. And never bored me.. மசாலா padathukula iruntha mathiri thonuchu.. I like this book.. He is creating different style of writing... Books has some letters error issue.. But my mind made me to ignore and pushed me through flow.. Keep it up araathu sir
An interesting story type novel , will keep us glue , until we finish . Araathu kept the pace fast and the story line tight. It speaks a different angle of the cinema people , and their feelings.
Story speaks about how an individual from cinema industry taking their ups and downs .
தமிழ் சினிமா உலகின் பின்புலத்தில் எழுதப்பட்ட முக்கியமான ஒரு படைப்பு. சினிமாவைப் பற்றிய எந்த தமிழ் நாவலும் அட்ரஸ் செய்யாத நிகழ்வுகள், மனிதர்கள், அவர்களுக்கிடையேயான சமகால உறவுச் சிக்கல்களை ஆகியவற்றை விறுவிறுப்பாகவும், தன் சிக்னேச்சர் பகடியோடும் அராத்து கையாண்டிருக்கிறார்.
கதை சொல்லல் முறை மற்றும் மொழி ஆகியவற்றிலும் புதுமையாக முயற்சித்திருக்கிறார்.
Very unique neo-linguistic work. The director sri reminded me of a famous director and the whole storyline is elegantly intertwined with truth and fiction. Drinking and sex as usual are galore and author seems to use it as a took to hook the reader. Liked it
நாம் பல சினிமா செய்திகளை அன்றாடம் கடப்போம். அதில் வரும் நட்சத்திரங்களை ஒரு காலத்தில் கொண்டாடி இருப்போம். அவர்களின் தோல்வியை அந்தரங்கங்களை படிக்கும் போது, என்னா ஆட்டம் போட்டான் பாரு, இதெல்லாம் ஒரு பொழப்பு?,என்று கடப்போம். இந்த மாதிரி வரும் அனைத்துச் செய்திகளுக்கும் பிரதிநிதி ஸ்ரீனி. இதுபோல் செய்தி ஆகப்போகிறோம் என்று சினிமாவை நோக்கி எடுத்து வைக்கப்படும் பல லட்சம் காலடித் தடத்தின் பிரிதிநிதி அறிவு. இவர்கள் வாழ்வின் பல கட்டங்களுக்கு துணையாகப் பல பெண்கள் வருகிறார்கள். வெறும் காம சல்லாபத்தை வைத்து இந்த நாவலை அணுகினால் பெறுவதற்கு ஒன்றும் இல்லை. கிழவனும் கடலும் நாவலில் கிழவன் பல நாட்கள் மீன் கிடைக்காமல் இருந்து ஒரு நாள் பெரிய மீன் கிடைக்கும். பல அலைக்கழிப்பிற்கு பிறகு அதைப் பிடிப்பான் ஆனால் கரை சேரும் முன்னர் அந்த மீனை சுறாக்களோடு போரிட்டு வெறும் கூடுடன் கரை சேருவான் கிழவன்.அவன் மேல் பிரியாமுள்ள சிறுவன், உணவு வாங்க வரும் பொழுது அந்தப் பெரிய எழும்புக் கூடுடன் கட்டப்பட்டு இருக்கும் கிழவனின் கப்பலை அச்சரியத்துடன் பார்ப்பான். இந்தக் கிழவன் போலத்தான் ஸ்ரீனி, தோல்விகளுக்குப் பிறகு வெற்றியைத் தேடி செல்கிறான், அது அவனை அலைக்கழிக்கிறது. ஒரு சமயத்தில் வெற்றி கிடைக்க வாய்ப்பு அமையும் போது,அவனது தவறிய சமநிலை, புரிந்துக் கொள்ளாத மனிதர்கள் , வேறு வழியின்றி கிடைக்கும் உறவுகள் என்று பல சுறாக்களோடு சண்டையிட வேண்டிருக்கிறது. இந்த சண்டையில் அவனது வெற்றி காப்பாற்றப்பட்டாலும் அவன் கிட்டதட்ட இரையாகிறான். கிழவனோடு செல்ல ஆசைப்படும் சிறுவன் போல அறிவு அனைத்தையும் பொறுத்து அவனது குருவை அடைகிறான். இந்தப் பார்வையில் இந்நாவலை வாசித்தால் நாம் பெறுவது அதிகம். நான் தான் எழுத்தாளன் என்ற சர்வாதிகாரம் இல்லாமல் கதை நாயகர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த நேரம் தோன்றி நம்மோடு உரையாடிவிட்டு சகஜமாக செல்ல அனுமத்திருக்கிறார் அராத்து. அதனால் தான் ஒரு உயிருள்ள மீன் மீது கைப்படும் பொழுது எப்படி உடல் சிலிர்க்குமோ அத்தகைய உயிர்த்தன்மை இந்தப் படைப்பில் இருக்கிறது. அராத்துவின் கட்டுரைகளுக்கு பெரிய ரசிகன் நான். இதே புத்தகத்தை ஆறு மாதங்களுக்கு முன்னால் படிக்க முயன்று மூடிவிட்டேன். நம்மால் படிக்க முடியாமல் போவது நமது இயலாமையே அன்றி புத்தகத்தின் குறையன்று என்பதை நான் நம்புவது உண்டு. அது மிகச்சரி என்று 'ஓப்பன் பண்ணா' எனது இரண்டாவது முயற்சியில் உணர்த்தியது.
இது ஒரு காட்சி நாவல். கதைக்குள் உங்களை விரைவில் இழுத்துவிடும். அறிவோடும், ஸ்ரீனியோடும் அப்படியே ஒரு ஜாலியான பயணம் இந்த நாவல். மிகச்சில இடங்களில் தொய்வு வந்தது அதையை விரைவாக தாண்டிவிடலாம். ஆண்,பெண் உறவின் அவலங்களை அவலமில்லாமல் சொல்லியிருக்கிறார். ஓப்பன் பண்ணா வாழ்வே 'குறி'கோள் தான்.
ஒரே மூச்சியாக தொடர்ந்து படிக்க தூண்டும் எழுத்து வசியம். புது விதமான கதை சொல்லல். ஒழுங்கற்று இங்கும் அங்கும் தொடங்கும் நடை. மொத்தத்தில் கதையில் தனையே ஒரு பாத்திரமாக மாற்றும் ஆரத்துவின் சாதூர்யத்தை பார்த்து வரும் ஆச்சிர்ய புன்னகை. சினிமா மற்றும் அதன் வட்டாரத்தின் மேல் நமக்கு இருக்கும் ஈர்ப்பே இந்த நாவலின் முக்கிய selling point.
After a long time reading 300+ Page book in a single sitting and reading one of Arathus Books for the first time. The flow is very similar to what used to be Sujatha's style. A Non linear story which tells how two people cross paths and the women they come across in their lives with lots of curse, booze, sex and impressive narration.
கடைசியில் இருக்கும் twist.. எதிர்பாராத ஒன்று😉. இப்படிப்பட்ட சினிமா சார்ந்த நாவல் படித்ததில்லை. சுவாரஸ்யமான எழுத்து நடையில் அழகாக நாவலுடனே கூட்டி செல்கிறார் அராத்து.
நிறைய இடத்தில் படிப்பவரிகளிடம் எழுத்தாளான் உரையாடுவது போன்ற வாக்கியங்கள் என்னை அதிகமாகவே ஈர்த்தது.
It's a good page turner. The characterization are very good. Especially Nugalya, Shree and Arivu. Interesting climax and ending. One time read. Lots and lots of witty punch lines to laugh at.
Great read. I don't know any literary terms to write a scholarly review. I enjoyed it. After a long time I read a killer page turner. It was like a meditation.