தன்னை அழகுனு நம்புற ஒரு நோஞ்சான் மாடர்ன் பொண்ணுக்கும், உன்னை மாதிரி, என்னை மாதிரி ஒரு பெண்ணை புரிந்துக்கிற, சில சமயம் புரிந்துக்கொள்ள விருப்பப்படாத, ஒரு சராசரி பையனுக்கும் இருக்குற ஒருவிதமான உறவை (அதை அவங்க காதல்னு நம்புறாங்க) ரொம்ப சினிமாதனமாக, ஜாலியாக, பொழுதுபோக்கு தன்மையோட சொல்ற கதைதான் இது DON’T TRY THIS AT HOME, OFFICE, LIFE. ......, ஓர் டாக்ஸி சாலையின் மையத்தில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.செல்போனை பாக்கெட்டிற்குள் திணித்தபடியே, வேகமாக டாக்ஸியை நோக்கி வந்தேன்.நொடிபொழுதில், தடாலடியாக அதன் இருபுறமிருக்கும் கதவுகள் திறக்கப்பட்டன.ஒருபுறம் திறந்தது– நான்,மறுபுறம்– என் காதல்.அப்ப தான், அவளை மொத மொதல்ல பார்க்கிறேன். பார்த்த செகண்ட்ல பிடிச்சு போகும் சில விஷயம்.