இந்தக் கதை 1980'ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி 2060'ஆம் ஆண்டு வரை நிகழ்கிறது. எனவே தொலைபேசியில் தொடங்கி, செல்பேசிக்கு சென்று படிப்படியாக திறன்பேசி, மின்னீ வரை செல்கிறது. அதனால் படிப்பவர்களுக்கு அவர்களே பல காலக்கட்டங்களுக்கு பயணிப்பது போன்ற உணர்வு கிடைக்கும். நட்பு, காதல், பெற்றோர்களின் அன்பு என்று பலவிதமான மனித உணர்வுகளைத் தொடுவது மட்டுமின்றி ஒருவனுக்கு நேரத்தைக் கடக்கும் திறன் கிடைத்தால் என்ன ஆகும் என்ற கோணத்தில் மொத்த கதையும் செல்கிறது. பேச்சுத் தமிழும் தூய தமிழ் மொழி நடையும் சரியான அளவில் கலந்து இருப்பதால் படிப்பதற்கு எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கும்.
திரைக்கதைக்குரிய விறுவிறுப்பும், ஓட்டையில்லாத கதையும் ஓர் அறிவியற் புதினத்தில் அமைவது அரிது. இந்த நூல் அப்படியொன்று. மாறுபட்ட கதையை நல்ல தமிழில் கலைச்சொற்களோடு எழுதியிருக்கிறார். ஆங்காங்கே பெயர்களிலும் சொல்லாட்சியிலும் குறியீடுகளைத் தெளித்திருப்பது நன்று. மணி என்ற பாத்திரத்தின் பெயரும் அப்படி வந்ததே. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் வரவேற்க வேண்டியவை. இதைத் திரைப்படமாகவும் எடுக்கலாம். கதை முடிந்தபின்னும் அதன் நீட்சியொன்றைத் தனியாக வெளியிட்டுள்ளார். அதுவும் ஒரு மாறுபட்ட அணுகுமுறை. அந்தப்பகுதியில் நாயகனின் பார்வையையும் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆங்காங்கே சில ஒற்றுப்பிழைகள் மட்டும் இருந்தன, ஆசிரியருக்கு அனுப்பியுள்ளேன்.
பி.கு. இந்தக்கதையை எழுதியது என் தம்பி என்பதாலும் நல்ல தமிழ்ச்சொற்களின் பயன்பாடு என்னை ஈர்க்கும் என்பதாலும் எனது மதிப்பீடு சாய்வுடையதுதான். இருப்பினும் இந்த நூல் எந்த வகையிலும் படிக்கக்கூடிய நல்ல நூலே.
2021 ல் வெளிவந்த இந்நாவலை Kindleல் வாசிக்க தொடங்கும்போது, இப்படியான ஒரு புது அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கவில்லை.
1980 முதல் 2060ஆம் ஆண்டு வரை, கனவையும் காலம் கடந்த பயணங்களையும்(Time travel) ஒருமாதிரி கலந்த யுத்தியை பயன்படுத்தி, முன்னும் பின்னுமாக(non-linear), நாவலின் முதன்மை கதைமாந்தரான மணி, தூங்கி விழிக்கும்போதெல்லாம் பயணிக்கிறான். கூடவே, வாசிப்பவராகிய நாமும் பயணிக்கிறோம்.
குறிப்பாக, வாசிப்பவருக்கு எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாமல், கதையில் விவரிக்கப்பட்ட சம்பவங்களை, முன்னும் பின்னுமாக சொன்னாலும், மிகச்சரியாக புள்ளிகளை இணைத்து தொடர்புபடுத்திக் கொள்ளமுடிகிறது.
தாய்தந்தை பாசம், நட்பு, காதல், துரோகம் போன்ற உணர்வுகளையும், Sci-fiction, Time travel என தற்கால ரசனைகளுக்கு ஏற்றபடி உள்ள விடயங்களையும் கொண்டுள்ளது இந்நாவல். எழுத்து நடையில் சுஜாதா(எழுத்தாளர்) வாசம் பரவியிருக்கிறது . குறிப்பாக இந்நாவலில், தற்போதைய புழக்கத்தில் உள்ள Smartphone, Sanitizer போன்ற பல சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் கையாளப்பட்டுள்ளது.
இக்கதையை ஒரு தோதான திரைப்பட இயக்குநரிடம் தந்தால்., சர்வ நிச்சயமாய் பந்தயம் அடிக்கும்.
இந்நாவலை எழுதிய திரு எறுழ்வலி பலராமன் பெங்களூரு வாழ் தமிழர் என அறியமுடிகிறது. மென்மேலும் இதுபோன்ற Gen Z வகையறா படைப்புகளை வாசகர்களுக்கு ஏற்ற வகையில் வெளிக்கொணர வாழ்த்துக்கள்.
X சமூக வலைதளத்தில் @BalaramanL என்ற கணக்கிலும் இயங்குகிறார். இந்நாவலை பற்றி மேலதிக விமர்சங்களை X சமூக வலைதளத்தில் பலர் எழுதியுள்ளனர்.
புத்தகத்திலிருந்து....
\ அடைந்து கிடக்கும் வாழ்க்கையில் நமது கற்பனையைத் திறந்து வேறோர் உலகத்துக்கு கூட்டிச்செல்லும் வல்லமை கொண்டது நூல்கள். /
\ உதாரணத்துக்கு, லீனியர் டைம்ல முந்துன நாள் நீங்க ஒரு பெரிய அவார்டு வாங்கியிருந்தா, நீங்க அதுக்கு அடுத்த நாள்ல முழிக்கும் போது உங்கள அறியாமலேயே சந்தோசமா இருப்பீங்க. உங்களோட இந்தப் பிரச்சனைய உங்க கூட இருக்கவங்ககிட்ட சொல்றது உங்களுக்கு நல்லதுன்னு தோணுது. பார்த்துக்கோங்க தம்பி!" என்று ஆறுதல் கூறினார் நவிலன் /
\ "உங்களுக்கு நேரம் தான் எதிரி" என்று மருத்துவர் நவிலன் கூறிய சொற்கள் இவன் காதுகளுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. /
தமிழில் இது ஒரு புதுமையான முயற்சி. கதையைப் படிக்கும் போதே வியப்பாக இருந்தது. கதை தொடங்கியதிலிருந்து முடிவு வரை விறுவிறுப்பாக சென்றதால் ஒரே முறையிலையே முழுக்கதையையும் படித்து முடித்துவிட்டேன். அதுபோக இந்தப் புத்தகம் மூலமாக பல புதிய சொற்களை கற்றேன். மிகவும் சிக்கலான திரைக்கதையைக் குழப்பமில்லாத நடையில் கொடுத்ததே பாராட்டத்தக்கது.
Different story line in Tamil self published ebook category, maybe because of the length of the book you feel to finish it fast, writing was simple yet beautifully, just to make it look more "Tamil" the author has not spoiled the sentences or used mumbo jumbo words, good that he has included the meaning of words that he has used, most of these are modern translated words that we would have never thought existed. There is karthik subbaraj style twist at the ending which you will not expect at all.
(3.5 stars) An interesting sci-fi read on a person living a non-linear life. It is definitely a good first attempt at this kind of writing in Tamil. The book has no pretensions and philosophies to explore. A simple, thrilling narrative and it's done well. Good luck and all the best for Balaraman to bring more such attempts.
(Disclaimer: I got this book from a friend for a read and request for review)
I met the author a few years ago. At that moment I had no idea of this beautiful upcoming story. Everyone have some story in ourselves. But not everyone good at developing it. Even if we develop, narration is an art! Not everyone can afford a good narration. Kumaran, Valli, Mani, Yazhini, Muthu and Wooden Wall Clock.. with such few characters the author did a wonder in narration. Non linear narration was very good and mesmerizing.. Lovely one. Loved it!
This is a very good attempt in Tamil. I thoroughly enjoyed the non-linear, thriller narrative. This can be read at a single stretch. Also, kudos to the author for using the exact Tamil words for the things we use/see daily and it got stuck to me by the repeated usage of it. Definitely, a must-read, and I will highly recommend this to my friends.