காமுத்துரையின் கதைகளில் நுழையும் போது, மனதிற்குள் கதாபாத்திரங்களின் நிழல் படிமமாக படிவதை நீங்களும் உணர்வீர்கள். காமுத்துரை கதைகளில் நாம் சந்திக்கும் மாந்தர்கள் எதார்த்தமானவர்கள். கதையின் போக்கு உங்களை ஒரு முடிவுக்கு வரவிடாது. ஒரு கதையின் முடிவில் இருந்து நீங்களாகவே வேறொரு கதையை தொடங்குவீர்கள். அதன் கிளை கதைகள் உங்களின் மனதை ஆக்கிரமிக்கும்.