சினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு KGB என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் KGBயின் உண்மை வரலாறு அந்தச் சினிமாக் கதைகளையெல்லாம்விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது. உண்மையில் கேஜிபி என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் இருந்தன, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்பட்டதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், கேஜிபி-ஐக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருந்தது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங்கள் நீண்டிருந்தன? அவர்களுடைய வெற்றி, தோல்விகள் என்னென்ன? அனைத்தையும் சான்றுகளுடனும் விறுவிறுப்பாகவும் பேசுகிறது இ&#
வரலாறு படிக்க ஒரு சரியான சூழல் வேண்டும், ஒரு கதை படிப்பது போல படிக்க முடியாது என்ற வாதங்களை எல்லாம் மாற்றி விடுகிறது என். சொக்கன் அவர்கள் எழுதும் புத்தகங்கள். இந்த KGB ஒரு மர்ம நாவல் போல, ஒரு ஹாலிவுட் திரைப்படம் போல சுவரஸ்யமாக, அதே நேரம் நிறைய வரலாற்று தகவல்களுடன் படிப்பவர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை தருகிறது. ஒரு தேசத்தின் உளவு நிறுவனம் எப்படி ஆரம்பமாகிறது என்பது தேவைகளின் அடிப்படையில். அதன் வளர்ச்சிக்கு ஏராளம் பாடுபட்டவர்கள், பின்னர் அவர்களே அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படுகிறார்கள். சாகஸங்களும், சாதனைகளும் செய்தாலும் அரசியல் தலைவர்கள் எல்லாவற்றையும் தங்கள் வசதிக்கு மாற்றி கொள்கிறார்கள். உளவு நிறுவனத்தின் எழுச்சி, வளர்ச்சி, வீழ்ச்சி என நிறைய பேசுகிறது இந்த புத்தகம். பிறசேர்க்கை பகுதிகள் இன்னும் நிறைய விஷயம் தேடுபவர்களுக்கு உபயோகம். சொக்கன் அவர்களின் எழுத்து புத்தகத்தை மூடி வைக்க விடுவதில்லை. சுலபமான மொழிநடை, வாயில் வராத பெயர்களையும், சம்பவங்களையும் பரிச்சயமாக்கி விடுகிறது. நிச்சயம் ஒரு நல்ல வாசிப்பு அனுபவம்.