'அர்ச்சனாவுக்காக' என்ற ஒற்றை வார்த்தை அனைத்தையும் மாற்றியது.. தன்மானத்தைப் பெரிதாக நினைக்கும் சுந்தரமும், சித்தார்த்தனும் அர்ச்சனாவுக்காக அவளது மாளிகைக்கு குடிபோக சம்மதித்தார்கள்.. வனிதா வீட்டுப் பொறுப்பை எடுத்துக் கொள்ள சித்தார்த்தன் தொழில்களை சமாளித்துக் கொண்டான்.. அர்ச்சனாவைச் சூழ்ந்திருந்த தனிமை மாறி கலகலப்பான குடும்பச் சூழல் அந்த மாளிகைக்குள் வந்து விட்டது.. எப்பொழுதும் அவள் சொப்பனத்தில் நிறைந்திருந்த சித்தார்த்தனுடன் மனம் நிறைந்த வாழ்வை அவள் வாழ ஆரம்பித்தாள்.