Jump to ratings and reviews
Rate this book

மனசிலாயோ?

Rate this book
திருவனந்தபுரம் உலகப்பட விழாவில் வைத்து நவீனின் இந்தக்குறிப்புக்களை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கலைப்படத்திற்குண்டான களமும் கருவும் என்று பட்டது. மணமுறிவு பெற்ற கதைத்தலைவன். அவனுக்கு கழுத்துவலி. அது உள்ளத்தின் வலியாகவும் இருக்கலாம். அவன் எழுத்தாளனும்கூட. ஒரு அன்னியநாட்டில் அறியா நிலத்தில் சிகிழ்ச்சைக்காக வருகிறான். அங்கே விடுதியில் தங்கியிருக்கிறான். பலரை சந்திக்கிறான். பயணம் செய்கிறான். உடலும் உள்ளமும் மெல்ல மீள்கின்றன. அது ஒருவகை தன்மீட்பாகவும் அமைகிறது.

திருவனந்தபுரம் ஆயுர்வேத சிகிழ்ச்சைக்குச் செல்வதற்கு முன் நவீன் என்னைப்பார்க்க வந்திருந்தார். புதிய இடம் அளிக்கும் உற்சாகம் தெரிந்தது. என் வீட்டுக்கு அவர் வருவது அதுதான் முதல்தடவை. சிகிழ்ச்சையில் புத்தகம் வாசிக்கலாமா என்று தெரியாததனால் நூல் எதுவும் கொடுக்கவில்லை. [அசைவ உணவு சாப்பிடக்கூடாதென்று தெரியும். அப்படியென்றால் நவீன இலக்கியமும் விலக்குதானே?]

மனசலாயோ என்னும் சொல்லை நவீன் கற்றுக்கொண்டிருக்கிறார். அவர் மலையாளத்தில் கற்றுக்கொண்ட ஒரே சொல்லாக இருக்கலாம். ‘புரிகிறதா?’ என்று பொருள். எந்த மொழிச்சூழலுக்குச் சென்றாலும் இந்தச்சொல்லின் வேறுவடிவங்களையே கற்றுக்கொள்வார்போலும். உலகை நோக்கி அவருக்கு கேட்கவிருப்பதே இச்சொல்தான். எந்த எழுத்தாளனுக்கும் அப்படித்தான்.

‘மனதில்-ஆகியதா?’ என்ற தமிழ்ச் சொல்தான் அது. மனஸில் – ஆயோ என மலையாளம். மலையாளமொழியின் தனித்தன்மை இச்சொல்லில் உள்ளது. தலை சம்ஸ்கிருதம், வால் தமிழ். அல்லது தலைகீழாக.

-ஜெயமோகன்

Unknown Binding

About the author

M. Navin

9 books5 followers
M. Navin is a Malaysian Tamil writer with MA in Tamil Literature. His works speak the lives of Malaysian Tamils and their daily struggles and 39 books have been published to date. He established Vallinam, a magazine for alternative literary endeavors in 2007, which has gone digital in 2009. He supervised the publication of Parai, a compilation of research papers such as Malay/Chinese Literature, Riverine and Eelam Literature in 2014. He has also worked in various fields of the arts and has directed documentaries on 14 Malaysian-Singaporean personalities and worked in films such as Jerantut Ninaivugal and Maounam and screenplays for films such as Jagat (Malaysia), and Kabali (Tamil Nadu). He started the Yazl Publication for students of Tamil schools. He is the recipient of the Young Talent Award from the Malaysian state of Selangor (2010) and Special Recognition at Tamil Literary Garden of Canada Award (2019).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
January 13, 2024
வாங்கிய நாள்: 10-ஜனவரி-2023

ம.நவீன் எழுதிய இந்த பயண கட்டுரையை பற்றிய விமர்சனத்தை ஜெயமோகன் அவர்களின் வலைதளத்தில் பார்த்த முதல் இந்த புத்தகத்தின் மேல் ஈர்ப்பு உண்டாக்கியது. ஆனால் 2022 சென்னை புத்தக கண்காட்சியில் கிட்டவில்லை.
பின்பு யாவரும் பதிப்பக அரங்கில் வாங்கினேன்.

தன் கழுத்து வலிக்கான சிகிச்சைக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் இறங்கியது முதல் நவீனின் பயண கட்டுரை தொடங்குகிறது. தான் தங்கிய ஆயுர்வேத சிகிச்சை மய்யம், அதனை சுற்றி இருக்கும் இயற்கை சூழல், அங்கே பணிபுரியும் ஊழியர்கள், யோகா கற்க வந்த அயல்நாட்டு பெண்மணி என தனது 10 நாள் பயணத்தை மிக நேர்த்தியாகவும் சுவாரசியமாகவும் ஆவணப் படுத்தியது மட்டும் இல்லாமல், இவரின் கண்ணோட்டமும் நமக்கு கிடைக்கிறது.

ஆலப்புழாவில் டைசி இவருக்கு செய்யும் அந்த பரோபகாரம் மற்றும் நவீன் அதற்கு கைமாறாக செய்தது மனிதர்கள் மேலும் மனிதத்தின் மீதான ஒரு பிடிப்பை உயிர்தெழச் செய்தது.
சக மனிதனின் தேவை அறிந்து அதனை பூர்த்தி செய்த ஆட்டோ ஓட்டுநர் நாம் கடக்கும் பொழுது இந்த பயண கட்டுரை இரண்டாம் உச்சம் தொடுகிறது.

பின்வரும் அவதானிப்புகளை நான் ரசித்தேன் "என்ன உடை அணிந்தாலும் ஒரு நேர்த்தியோடு வரும் கேரள பெண்கள் அம்மனுக்கு உயிர்க் கவர்ச்சி கொடுக்கின்றனர். சாப்பிடுபவர்களை ஏமாற்றி இருப்பதையெல்லாம் தலையில் கட்டிவிட வேண்டும் என்று நினைக்காத உணவுக் கடைக்காரர்கள் தமிழ்நாட்டு ஊழியர்களிடம் காணப்படும் அளவுக்கதிகமான பணிவோ கூலைக் கும்பிடோ இல்லாத விடுதி சிப்பந்திகள் கேரளாவின் மதிப்பை உயர்த்தினார்கள். உணவு பரிமாறுகையில் கேள்விக்கு பதில் சொல்லுகையில், சந்தேகங்களை தெளிவு படுத்துகையில் என ஒரு சந்தர்ப்பத்தில் கூட அலட்சியமான குரலையே அசவுகர்யமான பார்வையையோ யாரும் செலுத்தவில்லை."

திருவனந்தபுரம் சென்று திரும்பி வந்தவுடன் இதை வாசிப்பதற்கான நிமித்தம் அமைந்தது. 84 பக்கங்களே உள்ள இந்த புத்தகம் மிக எளிய நடையில் எழுதப்பட்ட கச்சிதமான புத்தகமும் கூட.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.