தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது. தி.ஜா.வின் முதல் நாவல் என்ற தகுதியை மீறி அவரது பிந்திய நாவல்களில் வெளிப்படும் கலை நுட்பங்களின் ஆரம்பச் சாயல்களைக் கொண்டது என்ற பெருமையும் இந்த நாவலுக்கு உண்டு. ஆண் - பெண் உறவில் சக மதிப்பு, பரஸ்பர விழைவு, பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தோழமை என்ற உறவுநிலைச் சித்திரிப்புகளுடன் தஞ்சை வட்டார மொழி, கிராமியப் பின்னணி, இயற்கையின் மானுடத் தோற்றம் என்று பிற்கால நாவல்களில் வெளிப்பட்ட இயல்புகளின் மூல உதாரணங்களை ‘அமிர்த’த்தில் காணலாம். கூறு மொழியால் பழையதாகத் தென்பட்டாலும் பேசு பொருளால் என்றும் புதிதாகத் தொனிக்கும் நாவல் இது.
Thi . Janakiraman (also known as Thi Jaa, or T. Janakiraman ) is one of the major figures of 20th century Tamil fiction. He worked as a civil servant. His writing included accounts of his travels in Japan and the Crimea.
His best-known novel is Mogamul (Thorn of Desire), in which feminine emotions are explored with a story spun around delicate feelings. His short stories such as "Langdadevi" (a lame horse) and "Mulmudi" (Crown of Thorns) follow the same style. Thi Jaa wrote about one hundred short stories and a dozen novels. Two of his novels, Amma Vandhaal and Marappasu, were translated into English as "Sins of Appu's Mother" and "Wooden Cow" respectively. In 1979, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his short story collection Sakthi Vaidhiyam. Some of his other notable works are Malar Manjam, Uyirthen and Sembaruthi.
மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசுக்கு அடுத்ததாக நான் வாசிக்கும் நாவல் அமிர்தம்.
ஆசைக்கு கௌரவத்துக்கும் இடையில் நடக்கும் போராட்டமே இந்நாவல்.
கௌரவத்தை விட்டு இயங்கி வர முடியாத சபேச முதலியார், தன் குலத்தை விட்டு வெளில போகத் துடிக்கும் அமிர்தம், இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நடேசன், குலத்தொழில் தன் மகளையும் இழுத்து விடும் குசலம், எதையும் பட்டு தெறித்தார் போல் கூறும் துளசி, அமிர்தத்தின் நல விரும்பியான ராஜூப்பிள்ளை
Spoiler:.
தாசி குலத்தில் பிறந்த அமிர்தத்தை தாலிக் கட்டி மனைவியாக ஆக்கி கொள்ளலாம் என்று முடிவு செய்யும் சபேசமுதலியாரின் முடிவை அவரது கௌரவம் ஏற்றுக் கொள்ளாமல், பணம் கொடுத்து அரங்கேற்றி யாரும் அறியாமல் இரண்டாம் தரமாக வைத்தக் கொள்ள முடிவு செய்கிறார், ஆனால் தன் குல தொழிலை விட்டு வெளில வர துடிக்கும் அமிர்தத்தால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை, இறுதியில் சபேச முதலியார் மகன் நடேசன், அமிர்தமும் காதல் கொள்கிறார்கள், அதை சபேச முதலியார் ஏற்று கொண்டாரா இருவரும் இணைந்தார் என்பதே கதை
சுதந்திரத்தையும், அதே சமயத்தில் அன்பின் அரவனைப்பில் அடைகலம் தேடும் அமிர்தத்தின் நகல் தான் மரப்பசு வின் அம்மணி, மோகமுள் ளின் யமுனா.
📝 இன்பத்தின் இறுதி எல்லை மௌனம் தான்.
📝 தற்கொலை செய்துகொண்ட யாரையும் உலகம் பரிதாபத்தோடு பார்ப்பது இல்லை. மனித சமுகத்திலேயே சேர்ப்பதுமில்லை அருவருப்போடு பேடியைப் பார்க்கிற மாதிரியே தற்கொலை செய்து கொண்டவனை உலகம் பார்க்கிறது
📝 உணர்ச்சி வசப்பட்டவனுக்கு உண்மை ஒரு போதும் புலப்படாது.
'Amirtham' is T. Janakiraman's first book. It is named after the main character in the book. Amirtham is the daughter of a courtesan. Her mother has trained her in music and philosophy and Amirtham is intelligent and well read. At some point her mom decides to induct Amirtham into the family business and make her a successful courtesan. She tries getting Amirtham a rich patron. But Amirtham is not interested in that life. She wants to lead a normal life, fall in love with a regular person, get married, start a family. Her mom feels that Amirtham will end up poor and in misery if she pursues her dream. What happens to Amirtham and whether she is able to realize her dream forms the rest of the story.
I enjoyed reading 'Amirtham'. I didn't love it as much as Janakiraman's other books, but I still liked it. It was interesting to see how it all started for him and how his initial story and characters looked like, and how they transformed and changed across his writing career. There were multiple possible endings to the story, and I prayed that the author will opt for my favourite one, but he springs up a surprise in the end, and delivers an ending which is totally unexpected. I was sad at the end, because I didn't get the ending I wanted, but it is what it is.
Have you read 'Amirtham'? What do you think about it?
தி. ஜானகிராமனின் எழுத்தில் நான் படிக்கும் முதல் புத்தகம் இது. எளிய எழுத்து நடையில் எளியதோர் கதை. ஆரம்பத்தில் இது ஒரு heavy subject கதையாக இருக்குமோ என்று நினைத்தேன். பின்னர், எளிய கதைத்தான் என்று தெரிந்தது. ஒரு தாஸி தன் மனத்திற்குகந்த கணவனை அடைய நினைக்கிறாள். ஆனால், அவள் அந்த ஆடவனை அடைந்தாளா? திருமணம் பண்ணினாளா? என்பதுதான் கதை.
தி. ஜா வின் முதல் நாவல். சில இடங்கள் மிக அருமையாக இருந்தது. கதை தேவதாசி பற்றிய கதை. மிக நுணுக்கமாக கதை முடிக்கபட்டிருக்கிறது. எப்படியென்றாலும் கதை ஒரு விதமான லட்சிய கதைபோல முடிவது கொஞ்சம் சரியாக இல்லை.
அபிதாவிற்கு அடுத்தபடியாக என் மனதை கலங்கச் செய்த புத்தகம்! இப்படி ஒரு விருவிருப்பான, மூச்சை நிறுத்தி மனதைப் பிழியும் கதைக்களம்! கலங்கமற்ற அமிர்தம்!
தாய் குஜலத்திற்கு தன் குலப்பணி தன்னோடு முடிந்து விடாமல் தன் மகளும் தாசியாக வேண்டும் என்ற எண்ணம். எப்போதும் பணம் பணம் என்ற வேட்கை. எந்த குலத்தில் பிறந்தால் என்ன மானத்தோடும் மரியாதையோடும் வாழ வேண்டும் என்பது மகள் அமிர்தத்தின் கனவு. முக்கால் லட்சம் கொடுத்து தன்னை அடைய நினைக்கும் வயோதிக முதலியாரை என்னென்னமோ பேசி தட்டிக் கழிக்கிறாள். தாய் திடீரென்று இறந்து போக முதலாளியாரின் மானமும் அந்த வீட்டு வாசலை மிதிக்கத் தடைபோடுகிறது.
முதலியாரின் மகன் என்று தெரியாமல் இரண்டு மாதமாக கோவிலில் கண்டு கணவனாகிக்கொள்ள விரும்பும் நடேசன் மீது காதல் அமிர்தத்திற்கு. திருமணம் செய்து கொண்டு நல்வாழ்வான லட்சியத்தை அடைய வேண்டும் என்று கனவு காண்கிறாள். தன்னுடைய நிலைமையை ஒளிவு மறைவு இல்லாமல் அவனிடம் சொல்லி அவனும் இவளை மணக்க சம்மதிக்கும் போது முதலியார் அமிர்தத்தின் வீட்டிற்குள் வர, இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கிறதா இல்லையா, முதலியாரின் காதலும் காமமும் அமிர்தத்தின் மீது தீராத மோகமும் அவரை என்னென்ன செய்கின்றன, இறுதியில் அமிர்தம் குலத்தை காக்கிறாளா தனது லட்சியத்தை காக்கிறாளா என்பதை மீதி கதை.
1944ல் தொடராக எழுதி 1948ல் பெண் விடுதலை என்ற பேச்சு தரக்குறைவானது என்ற எண்ணம் இருந்த காலத்தில் இப்படி ஒரு படைப்பை தி.ஜானகிராமன் அவர்கள் புத்தகமாக எழுதியுள்ளது வியப்பளிக்கிறது. அமிர்தம், குஜலம், அவர்கள் வீட்டு வேலைக்காரி துளசி, முதலியார், அவரது மகன், முதலியாரின் ஆசிரியர், ராசு பிள்ளை என வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்டிருக்கும் விதம் அவ்வளவு அழகானது. தி.ஜா.ரா தான் சொல்ல வேண்டிய கருத்தை ஒவ்வொரு பக்கத்திலும் ஆணித்தரமாகச் சொல்லுகிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்ச்சியையும் வெளிப்பாடுகளையும் அவர் சொல்லியிருக்கும் விதம் கண்ணுக்கு நேரே அந்த கதையை படமாக்கி காட்டுவது போல உள்ளது.