(குறிப்பு: ஆழியான் ஒரு கற்பனை கதாபாத்திரம்) 1970 களில் தமிழகத்தைத் தூக்கம் இல்லாமல் அலற வைத்த ஒரு சீரியல் கில்லர் தான் ஆழியான். இந்தியாவை மட்டும் அல்ல, உலகையே தமிழகத்தின் மீது பார்வையைச் செழுத்த வைத்தவன் ஆழியான். ஒன்று அல்ல, இரண்டு அல்ல, மொத்தமாக பதினேழு கொலைகள். அதிலும், அனைத்துக் கொலைகளையும் செய்யும் முன் காவல் துறைக்கும் , பத்திரிக்கைக்கும் குறிப்புகள் அனுப்பி வைத்துக் கொல்லும் சைக்கோ கொலைகாரன் தான், இந்த ஆழியான். இதில் இன்னும் அதிர்ச்சியான விசயம் என்னவென்றால், இறுதி வரை அந்த ஆழியானைத் தமிழக காவல் துறையால் கைது செய்ய முடியவில்லை என்பது தான். குறிப்புகள் கொடுத்து விட்டே இத்தனை கொலைகள் செய்த ஒரு கொலைகாரனை எப்படி தமிழக காவல் துறை தவற விட்டது எ
1970 களில் தமிழகத்தைத் தூக்கம் இல்லாமல் அலற வைத்த ஒரு சீரியல் கில்லர் தான் ஆழியான். இந்தியாவை மட்டும் அல்ல, உலகையே தமிழகத்தின் மீது பார்வையைச் செலுத்த வைத்தவன் ஆழியான்.
ஒன்று அல்ல, இரண்டு அல்ல, மொத்தமாக பதினேழு கொலைகள். அதிலும், அனைத்துக் கொலைகளையும் செய்யும் முன் காவல் துறைக்கும் , பத்திரிக்கைக்கும் குறிப்புகள் அனுப்பி வைத்துக் கொல்லும் சைக்கோ கொலைகாரன் தான், இந்த ஆழியான்.
யார் இந்த ஆழியான்? எப்படி கொலைகள் செய்தான்? அதுவும் காவல் துறைக்கும் , பத்திரிக்கைக்கும் குறிப்புகள் அனுப்பி வைத்து? 17 கொலைகளுக்கு பின் பிடிபட்டானா? எப்படி பிடிபட்டான் ஏன் கொலை செய்தான் என்பதை விறுவிறுப்புடன் கூறி இருக்கிறார் தமிழன் பிரபாகரன்.
நான் ரொம்ப நாட்களாகவே இந்த மாதிரி ஒரு புத்தகத்தை வாசிகனும் என்று எதிர் பார்த்து கொண்டு இருந்தேன். என்னுடைய பசிக்கு தீனி போட்டது போல் அமைந்துள்ளது இந்த புத்தகம். தமிழில் ஓர் சிறந்த சீரியல் கில்லர் நாவல்
வாசித்து முடித்த பின்னரும் தொடர்ந்து சதுரங்க ஆட்டத்திலே வாசகனை வைத்திருக்கிறார் "தமிழன் பிரபாகரன்" எந்த ஒரு இடத்திலும் அலுப்பு தட்டாத வகையில் வாசகர்களின் மனவோட்டத்தை புரிந்து கதை சொல்லியாக கைதேர்ந்திருக்கிறார்