யசோதரா ஜஷ்டிஷ் டுடேவின் ஸ்டார் ரிப்போர்ட்டர் இரண்டு ஆண்டு கோமாவிற்கு பின்னர் மீண்டும் பணியில் சேரும் போது அவளுக்கும் பிரபல நடிகன் சித்தார்த்துக்கும் இடையே உண்டாகும் மோதல், சித்தார்த்தின் சகோதரன் இந்திரஜித்தின் காரணமாக பகையாக உருபெறுகிறது. இதற்கிடையே போதைப்பொருள் கும்பலை பற்றி விவரங்களை சேகரிக்கிறாள் இன்வெஸ்டிகேட்டிவ் ஜெர்னலிஸ்டான யசோதரா. அந்த நிகழ்வின் பின்னே அவளுக்கு கிடைக்கும் அதிர்ச்சிகரமான தகவல்கள் என்னென்ன? இவர்கள் இருவருடன் மாதவன், மயூரி, ஹேமலதா, கௌதம், சாருலதா மற்றும் ஜஸ்டிஷ் டுடேவின் விஷ்ணுபிரகாஷ், ஸ்ராவணி, ரகு (யாரென்று தெரிந்துகொள்ள கனிமொழியே மற்றும் மரம் தேடும் மழைத்துளி நாவல்களைப் படியுங்கள்) என மிகப்பெரிய குழுவே இணையும்