#306
Book 67 of 2024- பூனை எழுதிய அறை
Author- கல்யாண்ஜி
“அசையும் இந்த மரத்தின் கீழ் புல்போல நிற்கும் என்னை சற்று நேரம் பார்த்துக்கொண்டு இருங்கள். அந்தச் சற்று நேரம் முக்கியமானது என்னை விட உங்களுக்கு.”
சென்ற மாதம் அடுத்தடுத்து இவரது கவிதை புத்தகங்களை வாசிக்க நேர்ந்தது எனக்கு. பொதுவாகவே கவிதை தொகுப்புகள் மட்டும் ஒரே ஆசிரியருடைய படைப்பை அடுத்தடுத்து படிக்கையில், இது அதுவோ,அது இதுவோ என்ற ஒரு யோசனை எனக்குள் ஓடும். ஒரே விஷயத்தைத் தான் வெவ்வேறு மாதிரியாக இரு புத்தகங்களிலும் எழுதியிருக்கிறார் என தோன்றும். ஆனால், இந்த படைப்பு அப்படி இல்லை.
அது என்ன பூனை எழுதிய அறை? இவருக்கு பூனை பிடிக்கும் என தெரியும், ஆனால் ஏன் இந்த தலைப்பு என்ற ஒரு ஆர்வத்தின் காரணமாகத் தான் இதை படிக்கத் தொடங்கினேன். இதில் மொத்தம் 56 கவிதைகள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் ஒரு ஜீவன் உண்டு, நிழலாக இருந்தாலும் சரி, கல்லாக இருந்தாலும் சரி, உலகில் உள்ள அனைத்திற்கும் ஜீவன் உள்ளது. அந்த ஜீவனைத் தான் எல்லா கவிதைகளிலும் நமக்கு அடையாளப் படுத்துகிறார்.
அவரின் அன்றாட வாழ்வு, சந்திக்கும் மக்கள், நேசிக்கும் விஷயங்கள், அவரது ஆழ் உணர்வுகளின் பிரதிபலிப்பே தான் இந்த புத்தகம். இதை எழுதி முடித்து அவர் ஒரே இரவில் வாசித்த போது அவருக்கு என்ன நிறைவை இந்த புத்தகம் தந்ததோ அதே நிறைவைத் தான் வாசிப்பவர்களுக்கும் இது தருகிறது.
Rating- ⭐️⭐️⭐️⭐️
Available on- Amazon